Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Geethodhayam
Geethodhayam
Geethodhayam
Ebook1,121 pages6 hours

Geethodhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580131106620
Geethodhayam

Read more from Jayadhaarini Trust

Related to Geethodhayam

Related ebooks

Reviews for Geethodhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Geethodhayam - Jayadhaarini Trust

    https://www.pustaka.co.in

    கீதோதயம்

    Geethodhayam

    Author:

    புலவர் சீனி. கிருஷ்ணஸ்வாமி

    Pulavar Seeni. Krishnaswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூல் வரலாறு

    குருக்ஷேத்திரம் பற்றிய குறிப்புகள்

    நூலாசிரியரின் தன்னிலை விளக்கம்

    1. பக்தியில் பண்பட்ட மனம் பகவானையே சேரும்

    2. பகவானை அடைவதற்குப் பக்திமார்க்கமே சிறந்தது

    3. எல்லாருக்கும் பாப விமோசனம் உண்டு

    4. அறிய வேண்டிய பொருள்

    5. வாசகர்களின் சிந்தனைக்குச் சில

    புகுமுகம்

    பகவானின் முதல் உரையாடல்

    கீதாசாரம் என்ன?

    ஸ்ரீகீதோதய விஷயஸூசிகை....

    அணிந்துரை

    வாழ்த்துரை

    1. அர்ஜுன விஷாத யோகம்

    2. சாங்கியயோகம்

    3. கர்மயோகம்

    4. ஞானகர்ம ஸந்யாஸயோகம்

    5. ஸந்யாஸயோகம்

    6. ஆத்மஸம்யமயோகம்

    7. ஞானவிக்ஞானயோகம்

    8. அக்ஷரப்ரம்மயோகம்

    9. ராஜவித்யா ராஜகுஹ்யயோகம்

    10. விபூதியோகம்

    11. விஸ்வரூபதர்ஸந யோகம்

    12. பக்தி யோகம்

    13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

    14. குணத்ரய விபாக யோகம்

    15. புருஷோத்தம யோகம்

    16. தைவாஸுர சம்பத் விபாக யோகம்

    17. ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்

    18. மோக்ஷ ஸந்நியாஸ யோகம்

    || ஸ்ரீ ||

    ஸ்ரீமதே லக்ஷ்மீந்ருஸிம்ஹபரப்ரஹ்மணே நம:

    ஸ்ரீரங்கநாயகீ ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரஹ்மணே நம:

    ஸ்ரீமதே ராமாநுஜாயநம:

    ஸ்ரீரங்கராமாநுஜமஹா தேசிகாயநம:

    ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம் ஹதிவ்ய பாதுகா

    ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீலக்ஷ்மீநாராயணயதீந்த்ர மஹாதேசிகாயநம:

    நூல் வரலாறு

    வாசகர்களே வணக்கம்

    உலகின் ‘தர்மக்ஷேத்திரம்' என்னும் சொல் நமக்கும், உலகவர்க்கும் மிக முக்கியமான சொல்.

    விண்ணுலகத் தேவாதி தேவர்களுக்கும் கூட வந்தனத்திற்கு உரிய முக்கிய ஸ்தலம் 'குருக்ஷேத்திரம்' என்னும், பூமண்டலத்தின் ஒரு நிலப்பகுதி.

    இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தின் - உண்மையான புனிதத்தை உணர்ந்துதான் மிகமிகப் பயந்தார் திருதராஷ்டிர மன்னர்.

    மதச்சடங்குகளும், போர்க்களமும் நடைபெறும் யுத்தபூமி 'குருக்ஷேத்திரம்' என்ற புண்ணிய ஸ்தலம்.

    இங்கே காண்டீபனின் தரப்பில் எம்பெருமான் ஸ்ரீபரமாத்மா கண்ணனிருந்தார். எங்கே யோகேஸ்வரக் கிருஷ்ணனோ.... அங்கே வலிமையும் வெற்றியும் நிச்சயம்.

    அப்படியே வில்லாளிகளுள் மிகச் சிறந்தவனான காண்டீபன் எங்கிருக்கிறானோ - அங்கே உறுதியான செல்வமும், வெற்றியும் நிச்சயமாக இருக்கும்.

    குருவம்சத்து மன்னன் திருதராஷ்டிரன் பிறவிக் குருடன். பாண்டு மன்னனின் மறைவுக்குப்பின் தருமன் முதலான இளவரசர்கள் சிறுவர்களாயிருந்தமையால் சந்தர்ப்பவசத்தால் திருதராஷ்டிரன் அஸ்தினாபுர மன்னனானான். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் பகையுணர்வு வளர்ந்தது. இறுதியில் அது போராய் வெடித்தது.

    இருபக்கத்தவரும் போர் புரிய குருக்ஷேத்திரத்தையே போர்க்களமாகத் தேர்ந்தெடுத்தனர். குருக்ஷேத்திரம் போர்க்களமாயிற்று.

    பிரஸ்த்தானத்திரயம்

    ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் பின்பற்ற வேண்டிய சாஸ்திரங்கள் உண்டு. கிருஸ்து மதத்தினருக்கு சாஸ்திரம் பைபிள். இஸ்லாமிய மதத்தினருக்கு சாஸ்திரம் குர்ஆன். புத்தமதத்தினருக்கு சாஸ்திரம் 'தர்மபதா'. ஆனால் ஹிந்துக்களுக்கு அப்படி ஒரே நிலை இல்லை. ஹிந்து மதம் உலகில் பரந்து விரிந்த தூயமதம். நம் மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. அனைத்திற்கும் பொதுவான சான்றாய் விளங்குவது வேதங்களே. 'வேதங்களிலும் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன' என்று சொல்லுகிறார்கள்.

    ஆயினும் வேதங்கள் அனைத்தினின்றும் தெள்ளி எடுத்த உபநிஷதங்கள் நம்மவரால் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. ‘ருக், யஜுர், ஸாமம், அதர்வணம்' என்ற நால்வகை வேதங்களும், இன்றும் ஹிந்துக்களால் அன்றாடம் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன.

    உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை ஆகிய இம்மூன்று நூல்களும், 'பிரஸ்த்தானத்திரயம்' என்று பெயர் பெறுகின்றன. இறுதியான பிரமாணங்கள் அடங்கிய நூல்கள் இவை மூன்றும் எனப் பொருள்படும்.

    இம்மூன்றனுள் கருத்து வேற்றுமைகளே இல்லை! அர்த்தமுள்ள ஹிந்து மதத்திற்கு சாஸ்திரம் எது? என்று கேட்டால் - 'பிரஸ்த்தானத்திரயம்' என்றே கூறலாம்.

    இம்மூன்றனுள் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லை என்று உறுதியாக நம் பெரியோர்கள் கூறுவார்கள். முரண்படுகின்ற சாஸ்திரங்களை நம்மவர் புறக்கணிக்க வேண்டும்.

    பூலோகத்தில் பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணனுடைய அவதாரம் அலாதியான மஹிமை வாய்ந்தது. பூவுலகில் கண்ணனின் வாழ்க்கையே ஒரு நாடகம். 'பாரதப்போர்' என்னும் நாடகத்தின் கதாநாயகனே கண்ணன் தான். கண்ணனின் லீலைகள் அநந்தம்.

    குருமாமன்னனால் பாதுகாக்கப்பட்டு, பரிபாலனம் பண்ணப்பட்டு வந்தமையாலும், புனிதம் காக்கப்பட்டமையாலும், அந்தப் புண்ணிய பூமிக்கு 'குருக்ஷேத்ரம்' என்றும், பல்வேறு யாகாதி யக்ஞங்கள் பண்ணப்பட்டமையால், அந்தப் பூமிக்கு ‘தர்மக்ஷேத்ரம்' என்றும் பெயர் வழங்கலாயிற்று. எனவே தான் குருட்டு அரசன் திருதராஷ்டிரனுக்கு, பயமும் அச்சமும் ஏற்பட்டன.

    வேதகாலத்தின் நினைவுக்கு எட்டாத போதிலிருந்தே புண்ணிய யாத்திரைப் புனிதத்தலமான அந்தப் பூமியானது - 'குருக்ஷேத்ரம்' எனப் பெயர் பெற்றது.

    குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் காண்டீபனின் கட்சியில் கண்ணன் இருந்தமையால் தான் திருதராஷ்டிர மன்னன் அச்சமடைந்தான்.

    பகவான் வேதவியாசர் திருதராஷ்டிரனின் இரதசாரதி ஸஞ்சயனுக்கு ஞானக்கண்களைக் கொடுத்திருந்தார். அதனால் குருட்டரசன் தன் இருப்பிடத்திலிருந்தே குருக்ஷேத்ரப் போக்கைக் காணமுடிந்தது.

    பாண்டவர்களும் கௌரவர்களும் ஒரே குடும்பத்தவர்களே! இருப்பினும் திருதராஷ்டிரனின் எண்ணம் இங்கே வெளிப்படுகிறது. குருட்டரசன் தன் பிள்ளைகளை மட்டுமே குருவம்சத்தினர் எனப் பேசுகிறான். பாண்டுவின் புத்திரர்களை வம்ச மரபுகளிலிருந்து பிரித்துப் பேசுகிறான். இது தர்ம விரோதச் செயல்.

    குருக்ஷேத்திரம் பற்றிய குறிப்புகள்

    அடியேன் நேரில் கண்ட காட்சிகள்

    குருக்ஷேத்திரம், புதுடில்லியிலிருந்து ஒரு நாள் பயணமாகப் புறப்பட்டால், அனைத்திடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு 10 மணிக்குள்ளாக மீண்டும் புதுடில்லிக்குத் திரும்பிவிடலாம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறை சென்று வாருங்கள். பாபங்கள் நீங்கிப் பெரும் புண்ணியம் சேரும். அற்புதமான காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

    நைமிசாரண்யம், திரு அயோத்யா, சரயூ நதிஸ்நானம், சனோலி, கோரக்பூர், நேப்பாளம், முக்திநாத் (சாளிக்ராமம் மலைமேல் திருக்கோயில்), காட்மாண்டு, பசுபதிநாத், ஸ்ரீரங்கநாதர் கோயில், புத்தவிஹார், காசி க்ஷேத்ரம், தீபநாத், கங்கா நதியில் பயணித்து, கங்கைக்கரை மலைமேல் ஸ்ரீகேசவப் பெருமாள் திருக்கோயில் சேவித்து அலகாபாத் திரிவேணி ஸங்கம ஸ்நானம் பண்ணி, புதுடெல்லி வந்தடைந்தோம். ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில் தங்கினோம்.

    இவ்வட தேச யாத்திரையை 25-10-1999 அன்று டில்லியிலிருந்து தொடங்கினோம். 08-11-1999 அன்று டில்லி வந்து சேர்ந்தோம். இத்துடன் அடியேனுக்கு பூவுலகில் 106 வைணவ திவ்விய தேச சேவை பூர்த்தியாயிற்று. மேலும் 2 திவ்விய தேச சேவைக்குப் பகவான் தான் அழைக்க வேண்டும். காத்திருக்கிறேன். வயது 71.

    09-11-1999 அன்று அதிகாலையில், அறுவர் மட்டும் தனி டாக்ஸி அமர்த்திக் கொண்டோம். பகல் 11 மணிக்கு ‘குருக்ஷேத்ரம்' சென்றோம். பிரம்மதீர்த்தம், பிராகாரங்கள் வியப்பளித்தன. திருக்குளத்தின் நடுவில் திருக்கோயில் உள்ளது. கரையிலிருந்து நீண்ட பாலம் அமைத்திருக்கிறார்கள். பக்கச்சுவர் பலமானது.

    திருக்குளத்தின் நீளம் 3600 அடி. அகலம் 1200 அடி. ஆழம் 15 அடி. திருக்குளம் முழுவதும் மிகச் சுத்தமான நீர் நிறைந்து, கடல் போல் காட்சியளிக்கிறது. நீர்நிலையில் 10 அடிக்கு மேல் போக முடியாது. நான்கு பக்கமும் மிகக் கனமான உருட்டு இரும்புத் தண்டுகள் வேலியாக அமைந்திருக்கின்றன. குளத்தில் இடுப்பளவு ஆழத்தில் ஆனந்தமாக நீராடினோம். உடல் மாசு நீங்கியது.

    மாற்றுடை தரித்து, அனுஷ்டானங்களை முடித்து, கரையின் மேல் படிக்கட்டிலமர்ந்து, ஓய்வெடுத்தோம்.

    மஹாபாரதப்போர் முடிந்தது. கௌரவர் தரப்பில் அனைவரும் அழிந்து மாண்டனர். துரியோதனன் மட்டும் உயிருடன் இருந்தான். உயிர்ப்பயம் வந்தது. போர்க்களத்தினுள் ஓடினான். இந்தப் பிரம்மதீர்த்தம் திருக்குளத்தின் நடுவிடத்திற்குச் சென்று மூழ்கி அப்படியே தரையில் ஜலஸ்தம்பத்தில் மூச்சடக்கி யோகநிலையில் அமர்ந்து விட்டான்.

    பாண்டவர் ஐவரும், ஸ்ரீகிருஷ்ணனும் போர்க்களமெங்கும் துரியோதனனைத் தேடி அலைந்தனர். முடிவில் பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணன் குளத்தின் நடுவில் ஜலஸ்தம்பத்தில் அமர்ந்திருக்கும் துரியோதனனைக் கண்டறிந்து வாய்விட்டுச் சிரித்தார்.

    பரமாத்மா சொன்னார்: 'ஜலத்தினுள் கோழைத்தனமாய் ஒளிந்திருக்காதே. இப்போது உன்னைப் பாண்டவர்கள் கொல்ல மாட்டார்கள்! ஜலத்தினுள் பதுங்கியிருப்பவனைக் கொல்லக்கூடாது. இது தர்மசாஸ்திரம். நீ மகாரதன், க்ஷத்ரிய தர்மத்தைக் கடைப்பிடி, கோழையாய் ஓடி ஒளியாதே! கரைக்குவா! பஞ்சவருள் நீ விரும்பும் ஒருவருடன் மட்டும் போரிடு! அதுதான் வீரனுக்கழகு! வெளியே. வா. இருவர் போரில் வெற்றி, தோல்வியை, இந்தத் தர்மக்ஷேத்திரம் நிர்ணயிக்கட்டும். இருவர் போரில் நீ வென்றால்..... ஹஸ்த்தினாபுர ராஜ்யம் உனக்கே சொந்தம்! அரசனாய் முடிசூட்டிக் கொண்டு ராஜ்யமாள்க! நீ தோற்றாலும் பெருமை உனக்கே! மேலுலகில் வீரசொர்க்கம் புகுவாய்' என்றார் பரமாத்மா.

    துரியோதனன் கண்ணனின் சொல் கேட்டு, ஜலத்திலிருந்து உடலைச் சிலிர்த்துக் கொண்டு, சிம்மம் போல் கர்ஜனை செய்து குளக்கரை மேல் வந்து நின்றான். பாண்டவர் ஐவரையும் வீரத்துடன் பார்த்தான்.

    தனக்குச் சமமான பீமனையே யுத்தத்திற்கழைத்தான். இருவரும் போரிட்டனர். என்னே வியப்பு! போர் நீண்ட நேரம் நடைபெற்றது.

    இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டு கதாயுத்தம் பண்ணினர். யுத்தபூமியே அதிர்ந்தது! வெற்றி, தோல்வி நிர்ணயமாகவில்லை!! இருவரிடையே நடந்தது ஜீவமரணப்போர்!!!

    பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணனே அச்சம் அடைந்தார்! சூரியன் மேற்கே ஆஸ்தகிரிப்பக்கம் சாயத் தொடங்கினான். சிந்தித்தார் கண்ணன். சிரித்துக் கொண்டே பீமனை நோக்கி 'சபாஷ் பீமா... சபாஷ்' என்று வலது தொடையைத் தட்டிப் பீமனுக்குச் சமிக்ஞை செய்தார்.

    கண்ணனின் சமிக்ஞையைப் புரிந்து கொண்டான் பீமன். மீண்டும் போர்! சிம்மம் போல் கர்ஜித்துக் கொண்டே துரியோதனனின் வலது தொடையில் தன் வலிமை முழுவதையும் ஒன்று திரட்டிக் கதாயுதத்தால் அடித்தான் பீமன்! யுத்த பூமியில் வீழ்ந்தான் துரியோதனன்!! மேற்கே சூரியாஸ்தமனத்தால் சிவந்தது அடிவானம். போர் நின்றது! துரியோதனன் வீரஸ்வர்க்கம் புகுந்தான்.

    இங்கே யுத்த தர்மம் மீறப்பட்டது. இடுப்பிற்குக் கீழே கதாயுத்தத்தில் வீரன் தாக்கக் கூடாது. பீமன் தாக்கியது சரியா? வாசகர்களே! சிந்தியுங்கள்! புரியும்.

    இது குருக்ஷேத்திர வரலாறு. வரலாற்றுச் சிறப்பு மிக்க யுத்த பூமி குருக்ஷேத்ரம். திருக்குளத்தில் நீராடினோம். மனம் சாந்தியடைந்தது. அடுத்து, தடாகத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மகாதேவரின் கோயிலில் சிவதரிசன: ஸ்கூப் நாராயணரின் கோயிலில் எம்பெருமானின் தரிசனம். ஸ்ரீமந்நாராயணனுக்குத் தனியாகவே ஸந்நதி இருக்கிறது. பகவானைச் சேவித்தோம். பிறகு பிரம்மசரோவர் கோயிலில் தரிசனம்.

    அங்கே ஒரு சந்நித் குளம் உள்ளது. நான்கு பக்கங்களிலும் சலவைக் கற்களால் ஆனது. தெளிவான நல்லநீர். இங்கே எல்லாம் புண்ணிய நதிகளும் சங்கமிப்பதாக ஐதீகம். பிரம்மசரோவர் கோயிலும் இருக்கிறது.

    அங்குள்ளோர் கூறுகிறார்கள். இத்திருக்குளம் த்வைபாயனர்குளம். இதுதான் பராசரர் பித்ருக்குளம். இங்குதான் துரியோதனன் ஒளிந்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.

    குருக்ஷேத்திர பூமியில் கண்ணன் காண்டீபனுக்கு கீதோபதேசம் செய்வதைச் சிற்பவடிவில் அமைத்திருக்கிறார்கள். அதனை முழுமையாகக் கண்ணாடியால் மூடியிருக்கிறார்கள். நல்ல பராமரிப்பு, பாதுகாப்பு.

    அதன் பக்கத்தில் மிகப்பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. இவ்விடமே கீதோபதேசம் நிகழ்ந்த இடம் என்கின்றனர். பக்க இடங்கள் எல்லாமே மிக அழகுடன் மிளிர்கின்றன.

    யுத்த பூமியில் பஞ்சபாண்டவர்களுக்குச் சிலைகள். ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சிலை. அம்புப் படுக்கையில் பீஷ்மர். அர்ச்சுனன் பிதாமஹருக்கு தாகசாந்தி செய்ய கங்கை நீர் வரவழைத்தல், யாவும் தத்ரூபங்களாக அமைந்து இருக்கின்றன.

    அடுத்து - மிகப் பெரிய உயரமான கண்ணாடிப் பெட்டிக்குள், நின்ற கோலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அழகான திருஉருவச்சிலை. பஞ்சமுக விஸ்வரூபமெடுத்த ஸ்ரீஆஞ்சநேயரின் அற்புதச்சிலை. இராமாயண கால நினைவாகவே அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

    குருக்ஷேத்ரப் பூமியில் பிர்லாமந்திர். சலவைக்கல் சிற்பங்கள். இராமாயண நிகழ்ச்சிகளை அப்படியே சிலைவடிவில் அமைத்திருக்கிறார்கள். கண்களை விட்டு அகலவில்லையே! நுழைவுக்கட்டணம் ரூ. 3.00

    இங்குதான் அடியேனுக்கு ஓர் ஆசை எழுந்தது. நம் ஆயுட்காலம் முடிவதற்குள் எப்படியாவது, 'கீதோதயம்' என்ற தலைப்பில் ஸ்ரீமத் பகவத்கீதையை, கண்ணன் - காண்டீபன் உரையாடல்களாக, பதினெட்டு அத்தியாயங்கட்கும் வியாக்யானமாக நூல் எழுதவேண்டும் என்றெண்ணமிட்டேன். அதை இப்போது நிறைவேற்றுகிறேன்.

    யாத்திரையை முடித்து இரவு 9 மணியளவில் புதுடில்லி வந்தடைந்தோம். ஆண்டவன் ஆசிரமத்தில் உணவு தயாராக இருந்தது. உண்டு உறங்கினோம்.

    10-11-1999 இரவு டில்லியிலிருந்து ரயிலில் புறப்பட்டு, 12-11-1999 அன்று சென்னை வந்தடைந்தோம். அந்த யோகேஸ்வரக் கிருஷ்ணன் தான் அடியேனை இனி அழைத்துச் செல்ல வேண்டும். அடியேனின் எஞ்சிய காலத்திருப்பணிகளைச் செய்து முடிக்க எம்பெருமானின் திருவருளையே நாடி நிற்கிறேன்.

    பாரதப்போர் பல உண்மைகளை நமக்கு விளக்குகிறது. யுத்தம் தொடங்குவதற்கு முன் காண்டீபனின் மனம் திடமாக இருந்தது உண்மை. ஆனால் அவனுடைய மனோதிடம் எப்படி மாறுகிறது பாருங்கள். இருபக்கத்துச் சேனைகளையும் நடுவில் நின்று பார்க்க விரும்பினான். அந்தச் சமயத்தில் கண்ணனைச் சரண தேரோட்டியாகவே பாவித்து உத்தரவிடுகிறான்.

    'ஹே கிருஷ்ணா! இரதத்தை இருபக்கச் சேனைகளையும் பார்க்க வசதியாக நடுவில் நிற்க விரைந்து செலுத்து' என்றான். பகவான் ‘உன் விருப்பப்படியே தேரைச் செலுத்துகிறேன். என்ன செய்யப் போகிறாய்? பார்த்தா’ என்று காண்டீபனிடம் புன்னகையுடன் கேட்டார்.

    'ஹே கிருஷ்ணா, நீ அவ்வாறு தேரைச் செலுத்தினால், நம்மவர் திறனையும், கௌவர் திறனையும் கணித்துச் செயல்படுவேன்! விரைந்து தேரைச் செலுத்து' என்று தற்பெருமையுடன் கண்ணனிடம் சொன்னான் காண்டேன். அப்படியே தேரைச் செலுத்துகிறேன். எதிர்பக்கச் சேனா வீரர்களை நன்றாகவே உற்றுநோக்கு' என்றார் பகவான்.

    இரதம் இருதிறத்துச் சேனைகளுக்கும் நடுவில் போய் நின்றது. தன் எதிரே நின்றவர்களை ஒவ்வொருவராகக் கவனித்து மகாரதன் காண்டீபன் திகைத்து நின்றான். அவன் மனம் சுழன்றது! அனைவரையும் ஒவ்வொருவராக உற்று நோக்கினான். போரிட வந்தவன் கோழையானான்.

    எதிரணியில் அணிவகுத்து நின்றவர்கள் பாட்டனார் மகாரதர் பிதாமகர் பீஷ்மர். அவரே கௌரவசேனைக்குத் தலைமை ஏற்று நின்றார்! அடுத்து ஆச்சாரியர் துரோணர், கிருபாச்சாரியர், தாய் மாமன் சல்லியன் ஆகியோரையும் உற்றுப் பார்த்தான் பார்த்தன். பகவான் நகைத்தார்.

    ஐயகோ! புஷ்பங்களால் திருவடிகளைப் பூஜிக்கத்தக்கவர்களைப் பாணங்களால் அடிப்பதா? என விக்கித்துப் போனான் பார்த்தன். அறிவழிந்தான். 'ஹே கிருஷ்ணா! இப்பெரியவர்களுடனா நான் போரிட வேண்டும்? இப்பெரியார்களை மலர் தூவியன்றோ பூஜிக்க வேண்டும்! பாணங்களால் அடித்துக் கொன்று யான் என்ன பலனை அடையப்போகிறேன். இராஜ்யம் வேண்டாம்! என் காண்டீபம் என்னை விட்டு நழுவுகிறது! யுத்தம் செய்ய மனமில்லை! நான் போரிடவே மாட்டேன்' என்று கூறியவாறே தேர்த்தட்டில் மண்டியிட்டுக் கண்ணனை வணங்கினான்.

    பரமாத்மா கிருஷ்ணன் அர்ஜுனனின் அஞ்ஞானத்தைப் போக்க அவனுக்கு உபதேசம் பண்ணினார். தன் விஸ்வரூபத்தையும் காண்பித்தார். மெய்ஞானத்தைப் போதிப்பதே ஸ்ரீமத்பகவத்கீதை.

    இத்துடன் நூல் வரலாறு முற்றும்.

    நூலாசிரியரின் தன்னிலை விளக்கம்

    வாசகர்களே! வணக்கம்.

    அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, அறிஞர் பெருமக்களே, பன்மொழிப் புலமைமிக்க மகாவித்வான்களே, ஞானபண்டிதர்களே, உங்களனைவருக்கும் அடியேனின் சென்னி தாழ்ந்த வணக்கம். அனைவரின் நல்லாதரவுகளையும் வேண்டுகிறேன். ஏற்றருளாசி வழங்குங்கள்.

    அடியேன் மஹாபண்டிதன் அல்லன். கொஞ்சம் தமிழும், சம்ஸ்கிருதமும் பயின்ற மாநகராட்சி மேனிலைப் பள்ளியின் எளிய தமிழாசிரியன். இவ்வளவே அடியேனின் கல்வித்தகுதி.

    எனினும் அடியேனையும் அறியாத உள்ளுணர்வினால் இப்படியொரு பெரும் ஆன்மீகப் பணியினைச் செய்ய முன்வந்துள்ளேன். இது பகவத் சங்கல்பமே.

    இப்பணியினை எவ்வித இடையூறுமின்றி முடித்து வைக்கப் போகிறவன், எல்லாம்வல்ல அந்த யோகேஸ்வர, கிருஷ்ண பரமாத்மாவே என அடியேன் நம்புகிறேன்.

    'பவ' வருஷம், ஆவணிமாதம், ரோகிணி நட்சத்திரம், ஸ்ரீஜெயந்தி தினத்தில், ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தில் அடியேன் பிறந்தேன். ஆங்கில ஆண்டு 1934. மூன்றாவது வயதில் தாயார் மறைந்தார். ஆறாவது வயதில் தந்தையும் காலமானார். அடியேனை மூத்த சகோதரர் எடுத்து வளர்த்து வந்தார். சிறிது காலம் எனக்கும், தமையனாருக்கும் மூத்தவரான சகோதரி வளர்த்து வந்தார். அடியேனின் வயது அப்போது பத்து. பள்ளிப்படிப்பு இல்லை.

    1944 ஆம் ஆண்டு இராஜமன்னார் குடியில் கோட்டூர் அரங்கசாமி முதலியாரின் பாடசாலையில் சேர்ந்து, சம்ஸ்கிருத பாடங்களைப் பயின்றேன். சம்ஸ்கிருத காவியங்களைக் கற்பித்தார்கள். பின்னர் அடியேனின் தமையனாருடன் 1947 இல் புதுக்கோட்டைக்கு வந்தேன். புதுக்கோட்டை மகாராஜா பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்றேன். 1949 இல் சென்னைக்கு வந்தேன்.

    ஸ்ரீகாகுமானி ஆதிகேசவலு செட்டியார் ஓரியண்டல் பள்ளியில் சேர்ந்து, நான்காண்டுகள் சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் முதலான பாடங்களும், பிரபந்த அத்யயனமும் பயின்றேன். 1953 ஆம் ஆண்டு அரசின் நுழைவுத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன்.

    பிறகு 1953 ஆம் ஆண்டிலேயே மதுரையில், இராமேஸ்வரம் தேவஸ்தான ஓரியண்டல் கல்லூரியில் சேர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நான்காண்டு பட்டப்படிப்பு வகுப்பில் பயின்றேன். 1957ல் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் பட்டத்தேர்வு எழுதினேன்.

    அந்த ஆண்டிலேயே திருநெல்வேலி, பாளையங்கோட்டை டயோசிஷன் உயர்நிலைப் பள்ளியில், டோனாவூரில், தமிழாசிரியர் பணி கிடைத்தது. அங்கு ஓராண்டு மட்டுமே பணியாற்றினேன்.

    1958 இல் மீண்டும் சென்னை வந்தேன். ஸ்ரீபெரும்புதூரில், ஸம்ஸ்கிருத கல்லூரியில் சேர்ந்தேன், 1959 ஆம் ஆண்டு 2-ஏ வித்வான் பட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றேன். 1961 இல் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது.

    1962 இல் சென்னை, பல்லவபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளிக்குப் பணிமாற்றம் பெற்றேன். 1967 இல் சென்னை -சைதை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், தமிழாசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்றேன். 1968 வரை மீண்டும் பல்லாவரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி ஏற்றேன்.

    1969 இல் அப்பணியை விடுத்து, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினேன். 1993 இல் சென்னை -சைதை உயர்நிலைப் பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றேன்.

    33 ஆண்டுகள் இடைவெளி இன்றித் தமிழாசிரியராகவே பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவன்.

    இக்கால கட்டங்களில் அடியேனடைந்த துயரங்கள் அனந்தம். பலநிலையிலும் வறுமை எளியேனை வாட்டியது.

    எல்லாம் வல்ல எம்பெருமானே அடியேனைக் காத்து நின்றார். மேலும் பகவானையே முழுமையாக நம்பி இன்றும் வாழ்ந்து வருகிறேன். அந்த யோகேஸ்வரக் கிருஷ்ணனே இனியும் எளியேனைக் காப்பாற்றுவார்.

    இவை என் நிலை விளக்கம். இந்நிலையில் 'கீதோதயம்' என்னும் தலைப்பில், வியாக்கியான நூல் எழுத முன்வந்த செயல் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்றதே. இச்செயல் பகவத் சங்கல்பமே என்று கருதுகிறேன். பல்வேறு நூல்களை ஆய்ந்தாராய்ந்து எழுதுகிறேன். குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    சகல கல்யாண குணங்களும் பொருந்திய, எம்பெருமானாகிய ஸ்ரீயோகேஸ்வரக் கிருஷ்ணனால் உலக மக்களுக்குக் கருணையோடு உவந்து உபதேசம் செய்யப்பட்ட ஸ்ரீமத் பகவத்கீதைக்கு, எத்தனையோ மகா வித்வான்கள், தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் வேறு பிற மொழிகளிலும் விரிவான விளக்கங்களை நூல் வடிவில் எழுதியிருக்கிறார்கள். மக்களிடையே இன்றும் உபந்நியாசம் செய்து வருகிறார்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக மகான்களான, ஸ்ரீராமநுஜாச்சாரியார், ஸ்ரீசங்கராச்சாரியார் முதலான அவதார புருஷர்களும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு ஸ்ரீபாஷ்யங்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அவதார புருஷர்கள் எழுதி வைத்த தீபாவங்கள் அனைத்தும் எடுக்க எடுக்கக் குறையாத தங்கச் சுரங்கங்கள்.

    சம்ஸ்கிருத மொழி பயின்றவர்களுக்கு மட்டுமே ஸ்ரீபாஷ்யங்களின் உட்பொருள் புரியும். சாதாரண எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்னும் கருத்தில், தற்காலத்தில் பல வித்துவான்கள் தமிழாக்க நூல்களை எழுதி வருகிறார்கள். அடியேன் அந்நூல்களையும் படித்துணர்ந்தேன். எல்லாரும் உணர்ந்து கொள்ளும் வகையில் 'கீதோதயம்' என்னும் நூலை எழுத முன்வந்த அடியேனை அனைவரும் ஏற்றருளுங்கள்.

    கீதா தத்துவத்தைத் தமிழ் அறிந்த சாதாரண எளியவர்களும் படிக்க வேண்டும்; அவரவர் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாய் நடத்தினால் நம் பாரத சமுதாயம் உய்வு பெறும் என்பது அடியேனின் மனக்கருத்து.

    ஒரு நல்ல தெய்வீகப் பணியினைச் செய்ய எத்தனிப்பது குற்றமாகாது என்றும் நம்புகிறேன். இந்த முயற்சிக்குப் பயனில்லாது போகாது. இறைவனை முழுமையாக நம்புகிறேன்.

    தர்மசாஸ்திர ஞானமுள்ள பண்டிதர்களும், தமிழ்ப் புலமை மிக்க பெரும் புலவர்களும், உபந்நியாசங்கள் பண்ணும் மகான்களும், சிற்றறிவாளனாகிய எளியேனின் இந்த நன்முயற்சியில் ஏற்படும் குற்றம் குறைகளை யெல்லாம் மன்னித்து, நல்லனவற்றையே கருத்தில் கொண்டு, வாசகப் பெருமக்களுக்காகச் செய்யும் இப்பணி தொடர ஆசி கூறி ஊக்குவிப்பார்கள் என்றும் முழுமையாக நம்புகிறேன்.

    'கீதோதயம்' தொடங்குவதற்கு முன்னர் ஒருசில தலைப்புகளில் வாசகப் பெருமக்களுக்குச் சில அபிப்பிராயங்களைச் சொல்லுகிறேன். இப்போது சொல்லும் அபிப்பிராயங்களை எல்லாம் வாசகர்கள் முழுமையாகக் கிரகித்துக் கொண்டு அடுத்து 'புகுமுகம்' என்னும் தலைப்பில், சொல்லப் போகும் கருத்துகளையும் கிரகித்துக் கொண்டு, அதன் பிறகு 'கீதோதயம்' நூலைப் படிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். வணக்கம்.

    1. பக்தியில் பண்பட்ட மனம் பகவானையே சேரும்

    நம்முடைய 'ஹிந்து மதம், மிகப் பெரிய மக்கள் சமுதாயத்தைப் பெற்ற தர்ம மதம். ஹிந்து சமுதாயத்தில் அடங்கிய எல்லா சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களும், ஸ்ரீமத் பகவத்கீதையைச் சாஸ்திரமாகவும், பிரமாணமாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இனியும் கீதா தத்துவத்தையே பிரமாணமாக ஏற்று, அவரவர் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதே அடியேனின் பணிவான வேண்டுகோள்.’

    வாசகர்கள் பக்தியில் மனத்தைப் பண்படுத்தப் பழக வேண்டும். ஈஸ்வர பக்தியால் - பண்பட்ட மனம் பகவானைச் சேரும், என்ற உறுதியோடு அந்தச் சர்வ வல்லமை. பொருந்திய யோகேஸ்வரக் கிருஷ்ணனை நாள்தோறும் வழிபட வேண்டும் என்பது அடியேனின் வேண்டுகோள்.

    பகவான் எங்கே இருக்கிறார்? கடவுள் நம் உள்ளத்திலேயே இருக்கிறார். நம் உள்ளமே கோயில். மனக்கோயிலே மாண்புடையது. நம் மனம் தீய எண்ணங்களால் மாசுபடாமலிருந்தால் மட்டுமே - மனம் என்னும் உள்ளக் கோயிலில் இறைவன் - இருப்பார்! நம்புங்கள்.

    மனக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நாம் காண முடியுமா? கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்? பண்பட்ட மனத்தோடு, நாம் இறைவன் மேல் பக்தி செலுத்தினால், அவனை நிச்சயமாகக் காணமுடியும்! நம்புங்கள்.

    அறிவும் மனமும் ஒன்றிணைய வேண்டும். மனம் இறைவனிடத்திலேயே லயித்திருக்க வேண்டும். 'ஏகாக்கிரசித்தம்' ஒன்றிலேயே மனத்தைச் சலனமின்றி ஒன்றுபடச் செய்தல் வேண்டும். இஃது அவ்வளவு எளிதன்று! அதற்குப் பலமுறை பலநாள்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

    இப்பயிற்சியை எப்போது மேற்கொள்ளலாம்? அதற்கு உரிய காலம் எது? பிரதி தினமும் உஷஸ் காலத்தில் அதிகாலையில் (41/2 - 6 மணிக்குள்) (3/4 + 3/4 = 1/2) - மணி நேரம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பகவன் நாமா ஒன்று மட்டுமே மனத்தில் மேலோங்கியிருக்க வேண்டும்.

    'ஓம் நமோ நாராயணாய, அஷ்டாக்ஷரம், ஓம் நமசிவாய பஞ்சாட்சரம் ஆகிய மந்திரங்களை உதடுகள் அசையாமல் மனத்தினுள்ளேயே நம் இருகண்களையும் மூடிப் பார்வையை உள்நோக்கிச் செலுத்தி, இருபுருவங்களுக்கும் மத்தியில் நிலைபெறச் செய்து, ஜபிக்க வேண்டும். அப்போது இரு புருவங்களுக்கு மத்தியில் இளஞ்சிவப்பாக ஓர் ஒளிவட்டம் தோன்றும். அதனுள் நாம் விரும்பும் தெய்வத்தின் வடிவம் தோன்றும்! அந்தத் தெய்வத்திடம் நம் ஆத்மாவைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆத்ம சமர்ப்பணம் செய்பவனை ஆண்டவன் நேசிக்கின்றார்! நம்பிக்கையுடன் தியானம் பண்ணுங்கள்.’

    கீதா தத்துவமே - கர்மாவைக் கடமையுணர்வுடன் செய். பலனை நோக்காதே! பலன் தானாகவே வரும் என்பது தான்.

    பக்தியில் பண்பட்ட மனமே பகவானைச் சென்றடையும். ஆத்மா முக்தி அடைய பக்தியோகம் ஒன்றே சிறந்த மார்க்கம். ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவரவர் ஆச்சார்யனிடம் பரண்நியாஸம் செய்து கொள்ள வேண்டும்.

    இறைவன் 'பரமாத்மா', நாம் 'ஜீவாத்மாக்கள்'. ஜீவாத்மா பரமாத்மாவுடன் கூடினால் சுகம்; பிரிந்தால் துக்கம். இறைவனையே சிந்தித்து, அவன் விஷயமாகவே பக்தியோகத்தைக் கடைப்பிடித்து, அவனது திருநாமங்களையே ஜபித்தல், வந்தித்தல், துதித்தல், குணகீர்த்தனம் செய்தல் ஆகிய இவற்றைக் கொண்டு ஆத்மாவைத் தரிசித்து, பிராணன் -மனம்; பக்தி; இந்திரியம்; கிரியை; ஆகிய எல்லாவற்றையும் அவ்விறைவனுக்கே உடைமை ஆக்கி, தனக்கென்று வகுத்த-கர்மம் முதல் பக்தி வரை அனைத்தையும் அந்தப் பரம்பொருளுக்கே அர்ப்பணித்து விடவேண்டும்.

    ஞானிகளும், யோகிகளும் தவமியற்றுவர். லௌகிகர்களாகிய நமக்கு, அது சாத்தியமில்லை. நாம சங்கீர்த்தனம், பகவன் நாமாவை ஜபித்தல் மூலமே நாம் பகவானைச் சென்றடைய முடியும். காலை, மாலை இருவேளைகளிலும், பக்தியை ஒருமுகப்படுத்தி, பகவன் நாமாவை ஜபித்து வந்தாலே நாம் மறுபிறவியின்றிப் பகவானைச் சேரமுடியும்.

    அஷ்டாக்ஷர மந்திரம் 'ஓம்நமோநாராயணாய' என்பதை அனைவரும் ஜபித்து வந்தால் நலம் பயக்கும்.

    மழைநீர் மேட்டு நிலத்தில் நிற்காது - பள்ளத்தை நோக்கி ஓடிவிடும். ஈஸ்வர கிருபை தற்பெருமையும், கர்வமும் உள்ளவனுடைய உள்ளத்தில் நிற்காது. பணிவுள்ளவர்களிடம் மட்டுமே நிற்கும்.

    கீதா சாஸ்திரத்தைப் பக்தி சிரத்தையுடன் படியுங்கள். மேலான பரம்பொருளை, நாடுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றமடையுங்கள்.

    மகரிஷிகளும், பூர்வாச்சாரியர்களும், நம் ஹிந்து மதத்தை ஸ்தாபிதம் பண்ணினார்கள். நவீன கல்பதரு நூல், 'ஏ யம் நிந்தா தீதி ஹிந்து' என்று சொல்லுகிறது! பொருள் - எவனொருவன் பிறரை நிந்தியாமல் வாழ்கிறானோ அவனே ஹிந்து எனப்படுவான். உலகமக்கள் அனைவரும் இதில் அடங்கி விடுகிறார்கள். திருக்கோயில் பத்திரிகையில் காலஞ்சென்ற பெரியவர் ந.ரா. முருகவேள் இவ்வாறு எழுதியிருக்கிறார். பிறரை நிந்தியாமல் ஹிந்துவாக வாழுங்கள்.

    இன்னின்னவை ஹிந்து தர்மங்கள் என நாம் முதலில் உணரவேண்டும். பூர்வாச்சாரியர்கள் வகுத்துத் தந்த நெறிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.

    ஹிந்து தர்மமாகிய, மிக மிக ஆழமான அஸ்திவாரத்தின் மேல்தான் இந்தப் பாரத மக்களின் கலாச்சாரம், சகலவிதமான நாகரிகங்கள், இலக்கியங்கள், பிற கலைச்செல்வங்கள் ஆகிய எல்லாச் சிறப்புகளும் மிகப் பெரிய வைரங்கள் பதித்த எழில்மிகு ஸ்வர்ண மாளிகைகளாக, உயரமாக எழும்பி நின்று அகில உலகத்திலும், நம் இந்தியாவைப் பெருமை கொள்ளச் செய்கின்றன.

    நம் ஹிந்து தர்மத்தை உள்ளபடி உணரச் சிறிதளவாவது முயற்சி செய்வது நம் எல்லாருடைய கடமையுமாகும். வாசகர்கள் இந்த எளியேனின் வேண்டுகோளை ஏற்று, வழிகாட்டியாக விளங்குங்கள்.

    ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் இரண்டிரண்டு ஸ்லோகங்களைப் படித்துப் பொருளை உள்வாங்கிக் கொண்டாலே போதும், ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே ஸ்ரீமத் பகவத்கீதை முழுவதையும் தெரிந்து கொண்டு விடலாம். நாள்தோறும் கீதா பாராயணம் பண்ணினால் உங்களுக்கு நாப்பழக்கமும் உண்டாகிவிடும்.

    பிரும்ம வித்தையை உபதேசிப்பதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கண்ணன் காண்டீபனின் உரையாடலுமாக, மகாபாரதக் கதையில் வந்துள்ளதுமாகிய ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷதத்தில், ராஜவித்யா ராஜகுஹ்யயோகம் என்னும் ஒன்பதாம் அத்யாயத்தில், சர்வேஸ்வரனை பஜித்தல் ஒன்றே செயற்கரிய செய்கை என்பதையும் நீங்கள் படித்துணரப் போகிறீர்கள்.

    உள்ளத்தை யோகேஸ்வரக் கிருஷ்ணனிடத்தில் உறுதியாகத் திருப்பி, அவன் ஒருவனிடமே பக்தி செலுத்தி, அவனுக்கே எல்லா வேள்விகளையும் செய்து, அவனை வணங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு உங்கள் உள்ளத்தை உறுதிப்படுத்தினால் அவனை நிச்சயம் அடைந்து விடலாம்.

    அன்பர்களே, மனம் முழுவதும் ஈஸ்வர எண்ணத்தால் நிறைய வேண்டும். ஒருவனை முழுமையாக வெறுக்கும் போதும், முழுமையாக நேசிக்கும் போதும், நம் மனம் முழுவதும் அவனைப் பற்றிய எண்ணமுடையதாகவே ஆகிவிடுகிறதல்லவா! சிந்தியுங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

    இப்படி ஒருமுனைப்படும் மனத்தை நல்வழியில் திருப்பினால் போதும். பேரன்பு ததும்பிய தூய எண்ணமாக்கிவிட்டால், எல்லா நலன்களையும் பகவானின் திருவருளால் பெறலாமே!

    எதையும் எவரிடமும் யாசகமாகப் பெற்று ஜீவிப்பவனாக இந்த உலகில் வாழாமல், கொடை வள்ளல்களாக வாழ முற்படுங்கள். எவருக்கு எதைக் கொடுத்தாலும், அதை இறைவனுக்குச் செய்யும் ஆராதனையாகக் கருதுங்கள். நீங்கள் வள்ளல்கள் என்று மட்டும் கர்வமடையாதீர்கள். இப்படிப் பக்தியில் பண்பட்ட மனம் பகவானைச் சேர்ந்துவிடும்.

    2. பகவானை அடைவதற்குப் பக்திமார்க்கமே சிறந்தது

    ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் அடைவது ஒன்றே எல்லா மார்க்கங்களின் முடிவிலும் முக்கியமாக நிலைத்து நிற்கும் சாதனமாக அமைகிறது.

    சகல கல்யாண குணங்களும் ஒருங்கே அமையப் பெற்ற, பூர்ணாவதாரணனான யோகேஸ்வரக் கிருஷ்ணனை வழிபடுவதும் மிகச் சுலபமான வழியே! பிற வேறு விஷயங்களைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து விரிவுரையாற்றிக் கொண்டிருப்பதால் இகலோக ஜீவர்களுக்கு எந்தவிதமான நற்பயனும் ஏற்பட்டு விடப்போவதும் இல்லை.

    எத்தகைய ஞானியாக இருந்தாலும், ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகாமல் ஆன்ம ஈடேற்றம் பெற முடியவே முடியாது. அப்படியே எத்தகைய கொடும் பாபாத்மாவாக இருந்தாலும் அவன் மனப்பூர்வமாகத்தான் செய்த பாபங்களையெல்லாம் மன்னிக்கும்படி வேண்டி ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்து விட்டால் அவன் நாசமடையவும் மாட்டான். இதுதான் கீதோபதேசத்தின் முடிவான கருத்து.

    தன்னலம் கருதாமல், ஆசைகள் அனைத்தையும் அழித்து, அப்படியே அகந்தையை அகற்றிச் சமநிலைச் சித்தத்தோடு, எல்லாக் கடமைகளையும் செய்ய வேண்டும். இகலோகவாசிகளான ஒவ்வொருவரும், அவரவர் செய்யும் கருமங்கள் அனைத்தையும் ஆதிநாராயணனுக்கே அர்ப்பணம் செய்து விடவேண்டும்.

    யோகேஸ்வரக் கண்ணனாலன்றி, இகலோகவாசிகளாகிய நாம் உய்வு பெற முடியாது; அச்சுதனின் அருள் நமக்குக் கிட்டிவிடுமேயானால், ஐம்புலன்களையும் நம்மால் நிச்சயமாக அடக்கி ஆள முடியும்; மனத்தில் சாந்தியும், அமைதியும் பெற்று விடமுடியும்.

    அகத்தைச் சுற்றிப் பற்றும் ஆசாபாச மயக்கங்களிலிருந்து விடுபட்டு நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். எந்தக் கர்மாவைச் செய்தாலும் - அவை அனைத்தையும், அனைத்துப் பொருள்களையும் கடந்து நிற்கும் அந்தச் சர்வேஸ்வரனுக்காகவே செய்கிறோம் என்னும் தூய்மையான எண்ணத்தை உள்ளத்தில் வருவித்துக் கொள்ள வேண்டும்.

    அஃதாவது 'ஸர்வம் ஸ்ரீ கேசவம் பிரதி கச்சதி' எல்லாம் கேசவனைக் குறித்தே சென்றடைகிறது என்று மனத்தால் நினைத்துச் செய்ய வேண்டும். உணவு உண்ணும் போதும், 'இது ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்', 'இதம் 'ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து' என்று தியானித்த பிறகே, உட்கொள்ள வேண்டும். இதைத்தான் 'பக்தி மார்க்கம்' என்று பெரியவர்கள் எல்லாரும் போற்றுகிறார்கள். கண்ணனை நினைத்துச் செய்யும் செயல்கள் அனைத்துமே நலந்தரும்; ஐயமில்லை!

    கண்ணன் காண்டீபன் உரையாடலின் போது ஸ்ரீயோகேஸ்வரக் கிருஷ்ணன், பார்த்தனிடம் இப்படிச் சொல்லுகிறான். அந்த அமுதவாக்கைக் கேளுங்கள்.

    கௌந்தேயனே கேள்! பக்தர்கள் எப்போதும் அறிவை என்னிடத்தில் செலுத்தி, உயிரை என்னுள்ளே புகுத்தி, என்னைப் பற்றியே சதா சர்வகாலமும் ஒருவரோடொருவர் உரையாடி, மகிழ்ந்து, நல்லறிவு பெற்று மனத்தில் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைவார்கள். உன் மனத்தை என்னுடையதாக்கி விடு. என் மேல் பக்தி செலுத்து; எனக்கென்றே எல்லா வேள்விகளையும் செய்; என்னைப் பூரணமாக வணங்கியெழு; நீ என்னையடைவாய். நீ எனக்குப் பிரியமானவன். இஃது உண்மை. உனக்கு நான் உறுதி கூறுகிறேன். பிறவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு, என்னையே சரணமடை. எல்லாப் பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். துயரப்படாதே என்பது கண்ணனின் திருவாக்கு.

    ஜீவன் செய்கிற எல்லாச் செயல்களிலும் இறுதியான செயல், இறைவனிடம் அடைக்கலம் புகுதலே!

    'அப்படியென்றால் என்ன பொருள்?' இது பார்த்தனின் கேள்வி.

    விடை : தன் முயற்சி பலிக்கவில்லை; ஆகையால் இறைவனிடம் தஞ்சமடைந்து விடு; கடவுளின் துணையையும் கொஞ்சம் தேடிக் கொள்ளலாம் என்று பொருளில்லை! பின் என்னே? தனக்கென்று தனிச்செயல் ஏதுமில்லை; எல்லாமே ஈஸ்வரனின் செயலே; என்ற நிலைக்கு, ஜீவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பரமாத்மாவைத் தஞ்சமடைதல் என்று பொருள்.

    பகவானை அடைய பக்திமார்க்கம் ஒன்றே சிறந்தது. சரணாகதப்பிரபத்தி. எனவே ஆச்சார்யனிடம் பரண்யாசம் செய்து கொள்ளுங்கள்.

    3. எல்லாருக்கும் பாப விமோசனம் உண்டு

    ஸ்ரீமத் பகவத் கீதையானது நம்முடைய ஹிந்து மதத்தில் எல்லாப் பிராக்ஞர்களாலும் ஏகோபித்து ஒப்புக் கொண்டு மதிக்கப்படும் ஒரு தெய்வீகமான சாஸ்திர நூலாகும்.

    ஸ்ரீமத் பகவத் கீதையினால் இரண்டு முக்கியமான விஷயங்கள் ஹிந்து தர்மங்களில் புத்துயிர் பெற்றிருக்கின்றன.

    முதலாவதாக பழங்காலத்திய வேத முறைப்படி செய்யப்படும் யாகங்கள் போன்ற செயல்களுக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்தது.

    ‘இரண்டாவதாக, இல்லறத்தைத் துறந்து, துறவறத்தை மேற்கொண்டு தவமியற்றினால் தான் மோக்ஷம் கிடைக்கும். பகவானை அடைய முடியும்' என்ற மனோபாவமும் மாறியது.

    இல்லற வாழ்க்கையைப் பூரணமாக அனுபவித்துக் கொண்டே, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டே தர்மமார்க்கத்தில் நின்று பரம்பொருளை நிச்சயமாக அடையலாம் என்ற உண்மையை ஸ்ரீமத் பகவத்கீதை உலக மக்களுக்கு மிகத் தெளிவாகவே ஊர்ஜிதம் செய்து கொடுக்கிறது.

    ஸ்ரீமத் பகவத்கீதையில் உபதேசிக்கப்படும் மார்க்கம், லோகவியவஹாரமான லௌகிக காரியங்களைச் செய்து கொண்டே, அதே நேரத்தில் உள்ளத்தையும் பற்றறச் செய்து கொள்ளும் மிகச் சிறந்த மார்க்கம். வாசகர்கள் எல்லாரும் இதை முதலில் உணர வேண்டும்.

    தீய செயல்களைப் புரிந்து பாபம் சம்பாதித்துக் கொண்ட மகாப் பாபியான ஒருவன், 'ஐயகோ! நான் இதுவரையிலும் பாபமே செய்து பாபியாகி விட்டேனே! ஏ கடவுளே! எனக்கு இனி, கதி மோட்சமே இல்லையா' என்று மனம் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. என்ன ஆச்சர்யப்படுகிறீர்களா! ஆம், உண்மையைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன்.

    பாபியான ஒருவன் தன் தவறான பாபச் செயல்களுக்கு மனம் வருந்திப் பகவானிடம் மன்னிப்பு வேண்டிப் பகவானைச் சரணம் அடைந்து விட்டானேயானால், அந்தப் பாபியும் கூட மேலான பரகதியை அடைய முடியும் என்ற கொள்கையை ஏற்படுத்துகிறது. ஸ்ரீமத் பகவத்கீதை.

    கீதோபதேசத்தின் போது உலகமக்களுக்கு கண்ணன் கூறிய உறுதிமொழி இது.

    இந்த உறுதிமொழியைக் கேட்டுப் பலரும் வியப்படைய வேண்டாம்! 'என்ன இஃது? பாபகர்ம பந்தமானது, இப்படி மிகச் சுலபமாகத் தீர்த்துக் கொள்ளக் கூடியதா!' என்றெண்ணி எவரும் வியப்படைய வேண்டாம். அப்படியே பாபத்திலிருந்து பாபிகள் எல்லாருக்கும் கதி மோட்சம் உண்டா என்ற ஐயமும் கொள்ள வேண்டாம்.

    பாபி உண்மையாகத் துயரப்படுவானேயானால், அச்செயல்கூட ஒரு கர்மமே! அந்த நல்ல கர்மாவுக்கு நல்ல பயனை ஆத்மா உறுதியாக அடைந்து விடும். ஆத்மாவுக்கு விமோசனம் உண்டு. 'தேபியாந்திபராம் கதி' கண்ணன் வாக்கு.

    பகவானைப் பரவி ஆராதித்து வணங்கினாலே போதும். பாவகர்ம மூட்டை பகவானால் அவிழ்க்கப்பட்டு நாசமடைந்து விடும். இந்தக் கருத்து கர்மவிதிக்குப் புறம்பானது - என்று கருத வேண்டியதே இல்லை. இஃது கண்ணன் தந்த உறுதிமொழியே.

    வயது முதிர்ந்த முதுமைக் காலத்தில் சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றிச் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயசித்தம் தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, முன் வாழ்க்கையில் மனம் அறிந்து வேண்டுமென்றே விரும்பிப் பாவம் செய்கிறவர்கள் நிச்சயமாக தெய்வத்தின் தண்டனையிலிருந்து. தப்பவே முடியாது. நரகம் புகுவார்கள். கவனத்தில் கொள்ளுங்கள்.

    மேற்கூறிய ஜீவன்களுக்கு எந்தவிதமான மந்திராதிகளும் பயன் அளிப்பதில்லை. மனமறிந்து பாவம் செய்கிறவர்கள், பாவகர்ம விதிப்பயனை அனுபவித்தேயாக வேண்டும். 'அவர்களுக்குப் பாபவிமோசனம் உண்டு' என்று பகவான் கண்ணன் உறுதிமொழி அளிக்கவில்லை. இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

    எவராலும் எவ்வகையினாலும் உண்மையை ஏமாற்ற முடியாது. உண்மையின் மொத்த உருவமே கர்மவிதி. சத் கர்மாவினாலன்றிப் பரம்பொருளை அடைய முடியாது.

    அறியாமையினால் வழி தவறிய ஆண் பெண் இருபாலாருக்கும் வித்தியாசமேதுமின்றி மோக்ஷம் அடைவதற்கு பகவத்கீதை வழிவகுக்கிறது.

    ஒன்பதாவது அத்தியாயத்தில் 32 ஆவது ஸ்லோகத்தில் ஆண்-பெண் இருபாலாருக்கும் கண்ணன் உறுதிமொழி அளிக்கிறான்.

    'ஊழ்வினையின் காரணமாகப் பாப ஜென்மம் எடுத்தவர்களும், பெண்களும், வைசியர்களும், சூத்ரர்களும், தத்தம் தவறை உணர்ந்து, மேலும் தவறு செய்யாமல் மனஉறுதியோடு, என்னைச் சரணம் அடைவார்களேயானால் அவர்கள் எல்லோருக்குமே பாபவிமோசனம் உண்டு. அவர்கள் பரகதி அடைவார்கள்' என்பதே உலகவர்க்குக் கண்ணன் தந்த உறுதிமொழி.

    எந்த ஒரு குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், பெண்கள் இயல்பாகவே மனஉறுதி படைத்தவர்களில்லை! 'பேதைமை பெண்டிர் இயல்பு' - எனவே அவர்களுக்கு மட்டும் விதிவிலக்களிக்கப்படுகிறது.

    கீதோபதேசத்தில் காணும் மகத்தான பெரிய விஷயம் இது. நமது ஹிந்து மதத்திற்கு புகழ் தேடித் தரும் விஷயம் இது. எம்பெருமானைப் பலரும் பலவிதமாக ஆராதிப்பார்கள். ஆராதனக்கிரமங்களில், மத சம்பிரதாய பேதங்கள் ஏற்படவே செய்யும். ஆனாலும் அவற்றையெல்லாம் கீதாச்சாரியனை யோகேஸ்வரக் கிருஷ்ணன் பொருட்படுத்துவதில்லை. இதை மட்டும் எல்லாரும் உணர வேண்டும்.

    பகவான் தன் மொழியாலேயே இதை விளக்கமாகக் கூறுகிறான்.

    4. அறிய வேண்டிய பொருள்

    சேதன, அசேதன ஆத்மகமான பிரபஞ்சங்கள் அனைத்துமே, சர்வேஸ்வரனான ஸ்ரீமந்நாராயணனுக்கு உடல். பிரபஞ்சங்கள் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரனே ஆத்மா. விசிஷ்டாத்வைத சித்தாந்தவாதிகளுக்கு மிகப் பிரதானமான பொருள் இதுவே.

    இதர மதங்களில் இல்லாத, நம்முடைய சித்தாந்தத்தில் மட்டுமே உள்ள பொருள்தான் பிரதி தந்திரம்.

    அதில் பிரதானமானது, சகல கல்யாண குணங்களும் பொருந்திய பகவானே உலகமனைத்திற்கும் 'ஆத்மா'. இந்தப் பிரபஞ்சங்கள் எல்லாமே அவன் 'உடல்'. இத்தகைய எண்ணம் எல்லாருக்கும் மனத்தில் தோன்றிவிட்டால் போதும். வேத சாஸ்த்திரங்களில் பிணக்கு உண்டாகாது.

    சர்வேஸ்வரன் எல்லாத் திரவியங்களையும் நேராகவே தரிக்கிறான். திரவியங்களில் உள்ள குணங்களுக்கு அவன் ஆதாரமாகிறான். பொருள்கள் அனைத்துமே அவனை விட்டுப் பிரியாதவை. ஈஸ்வரன் இல்லை என்றால், இந்தப் பிரபஞ்சமும், பிரபஞ்சப் பொருள்களும் இல்லை. ஈஸ்வரன் செயலற்று நின்றால், உலகங்கள் எல்லாமுமே செயலற்றுப் போகும்.

    வேதங்களில், ஈஸ்வரன் வேறு, ஜீவன் வேறு என்று பேதப் பொருள் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். சில இடங்களில் ஈஸ்வரனும் ஜீவனும் ஒன்றே - ஒரே தத்துவம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ ஏ கோ தேவ: என்கிறது வேதம். இங்கே முரண்பாடுகள் தோன்றுவதைக் காணலாம். இதனால் மதவாதிகளிடையே சண்டை மூண்டது.

    சிலர் 'ஒன்று' என்பதை எடுத்துக் கொண்டார்கள்; அதற்கேற்பவே பொருளை வகுத்தார்கள்; கொள்கைக்கு ஏற்ப விளக்கங்களும் கொடுத்தார்கள்.

    சிலர் வேறு என்பதை எடுத்துக் கொண்டார்கள்; அதற்கேற்ப கொள்கையை வகுத்தார்கள்; விளக்கமும் கூறினார்கள். கொள்கை என்றால் 'மதம்' என்பது பொருள்.

    இப்படி மதவாதிகளிடையே ஏற்பட்ட மதச்சண்டை இன்றும் ஓய்ந்தபாடில்லை. இந்த மதச் சண்டையைத் தீர்க்க வழி என்ன? அடியேனின் சிற்றறிவில் பட்டதைச் சொல்லுகிறேன்.

    பரந்தாமனே 'ஆத்மா'. பிரபஞ்சமெல்லாம் அவனின் 'உடம்பு'. ஆத்மா உடம்பெங்குமே நிறைந்து வியாபித்திருக்கிறது. உடம்பின் ஓருறுப்பில் மட்டும் ஆத்மா இருப்பதில்லை. உடம்பும் உயிரும் சேர்ந்தே மனிதனாகிறான். உயிர் பிரிந்தால் உடம்பு செயலற்று விழுந்து விடுகிறது.

    ஆத்மாவிற்குத் தனியானதொரு அவயவமோ, இருப்பிடமோ இல்லை; வானத்தைப் போல இதற்கு எடை இல்லை; இடமும் இல்லை; அவம் இல்லை. பௌதிகப் பேரறிஞர் பலரும் ‘ஈதர்' என்று கற்பனைப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

    ஜீவன்; ஜீவாத்மா; ஆத்மா; தேஹி; என்றெல்லாம் பல பெயர்களில் சொல்லப்படும் ஒரு பொருள், உடலுக்குள், உடலின் எஜமானன: வீற்றிருந்து அசைத்து ஆட்டிப் படைக்கிறது; என்ற உண்மையை முதலில் உணர வேண்டும்.

    கட்புலனாகும் பொருளே உண்மை; கட்புலனாகாதவை பொய்; என்றெண்ணுவது தவறு. ஜீவன் புலன்களுக்குப் புலப்படவே மாட்டாது.

    ஜெகத்தில் மரம், செடி, கொடிக்கும் ஜீவன் உண்டு. தேஹம் - தேஹீ; தேகம் என்பது ஆத்மாவிற்கு இருப்பிடம். ஆகையால் தேகத்தை க்ஷேத்திரம் என்றும், ஆத்மாவை க்ஷேத்திரி என்றும், க்ஷேத்திரித்தை அறிந்தவனே 'க்ஷேத்திரக்ஞன்' என்றும் கருத வேண்டும்.

    தேகத்திற்கு அறிவு உண்டு. அழிவும் உண்டு. ஆனால் ஆத்மாவுக்கு அழிவே இல்லை; அது சாகாது; அதைச் சாகடிக்கவும் முடியாது. சிதிலமடைந்த ஆடையைக் களைந்து விட்டு, வேறு புது ஆடையை உடுப்பது போலவே, ஜீவன் பழுதுபட்ட உடலைக் களைந்து வேறு தேகத்திற்குச் சென்று தொழில் புரிகிறது.

    ஜீவனும், உடம்பும், ஈஸ்வரனும் வெவ்வேறு தத்துவங்களையே உணர்த்துகின்றன. வேதம் ஒன்று என்று சொல்லுகிறதே! என்று கேட்க வேண்டா! வேதத்தில் முரண்பாடுகள் இருக்கின்றன.

    இவ்வுலகில் சரீரத்தையும், ஆத்மாவையும் ஒன்றாகச் சொல்லும் பழக்கம் இன்னமும் இருக்கிறது. அது போலவேதான் வேதமும் சொல்லுகிறது. முரண்பாட்டைத் தவிர்க்கலாம். இது அடியேனின் அபிப்பிராயம்.

    கல்கண்டு இன்சுவை உடையது! அதைப் பெறுவதற்குத் துடிக்கிறது குழந்தை. ஆனால் கல்கண்டைக் கொடுப்பவர்கள் யாராயிருந்தாலும் பேதம் பாராட்டாது குழந்தை. அப்படித்தான் நாமும்! பரம்பொருளை அடையத் துடிக்கின்றோம். பகவானை அடையும் விஷயத்தில் எம்மதமும் நமக்குச் சம்மதமே.

    மதச்சண்டை ஓய இதுவே வழி.

    5. வாசகர்களின் சிந்தனைக்குச் சில

    1. பல்லாயிரம் ஆண்டுகட்கும் முன்னால் இவ்வுலகில் தோன்றிய, அவதார புருஷனான ஸ்ரீபகவான் வேதவியாசரால் சொல்லப்பட்டு, பிரணவாகாரனான, எல்லாராலும் முதலில் வணங்கப்படுபவரான ஸ்ரீ விநாயக மூர்த்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் 'மகாபாரதத்துள்' காணப்படும் எழுநூறு ஸ்லோகங்கள் அடங்கிய நூலே ஸ்ரீமத் பகவத்கீதை. இதை எல்லாரும் நினைவில் கொள்ள வேண்டும். ஸ்ரீமத் பகவத்கீதா சாஸ்திரத்தின் சாராம்சத்தை மனத்தில் நன்றாகக் கிரஹித்துக் கொண்டு,

    வாசகர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.

    2. ஸ்ரீகீதா சாஸ்திரம் தன்னடக்கத்தைப் பற்றியும், ஞானோதயத்தைப் பற்றியும், மிக உயர்வாக உபதேசம் செய்கிறது. அதில் சொல்லப்படும் உபதேச மொழிகளை எல்லாம், ஏட்டில் படித்துக் காலத்தை வீண் செய்வதற்காக உபதேசிக்கப்பட்டவை என்று கருதிவிடாதீர்கள்.

    3. சாதாரணமான எளிய வாழ்க்கை நடத்தி வரும், சிறிதளவு மட்டுமே படிப்பறிவு பெற்றிருக்கும் பாமர மக்களும், ஆண்-பெண் இருபாலாரும், இளைஞர்களும், முதியவர்களும், குழலூதி ஆநீரை காத்துக் கோவர்த்தனகிரி தாங்கி நின்ற கோவிந்தனின் அருள் வாக்கான ஸ்ரீமத் பகவத்கீதா சாஸ்திரத்தில் சொல்லியபடியே வாழ்க்கையை நடத்தப் பயில வேண்டும். இந்த உயர்ந்த குறிக்கோளைக் கொண்டே கீதை உபதேசிக்கப்பட்டது. எல்லாக் காலத்தவர்க்கும் ஏற்ற சாஸ்திரம்.

    4. கீதோபதேசம் நடைபெற்ற காலம் பல ஆயிரம் ஆண்டுகட்கும் முந்திய காலம். அக்காலத்து மக்கள் எத்தகைய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வந்தார்கள்? அந்தக் காலத்தில் மக்கள் சமுதாயத்தின் அமைப்பு முறை எப்படி இருந்தது? யுத்த தர்மங்களை எப்படிக் கடைப்பிடித்தார்கள்? என்பன போன்ற அனைத்தையும் நினைவில் கொண்டால் தான் - பகவானின் உபதேச மொழிகளின் உண்மைப் பொருளை வாசகர்கள் கிரகித்துக் கொள்ள முடியும். உலகமக்களிடையே அக்காலத்தில் இருந்து வந்த பழக்கவழக்கங்களையும், சமுதாய முறைமைகளையும், மையமாக வைத்துக் கொண்டு, எக்காலத்துக்கும் பொருந்துமாறு, மிக உயர்ந்த சமத்துவக் கொள்கைகளின் உண்மைகள் போதிக்கப்பட்டன என்பதையும், வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். வீண் மனக்குழப்பம் வேண்டா.

    5. ஜாதி பேதமற்ற, சமய வேறுபாடுகளற்ற மக்கள் சமுதாயம் உருவாக வேண்டும் என்ற கொள்கைகள் உடைய, தற்காலத்தில் தோன்றிய இயக்கங்களுக்கும், போதிய அளவு உதவக்கூடிய பிரமாணங்கள் கூட கீதா சாஸ்திரத்தில் இருப்பதைப் பார்க்கலாம்.

    6. எல்லா மக்கள் சமுதாயங்களிலும் செய்யும் தொழில்களைப் பற்றிய ஒருவித ஒழுங்கு முறையானது, முக்கியமான அம்சமாக இருப்பதையும் வாசகர்கள் உணர வேண்டும். இந்த ஒழுங்குமுறை - அந்தந்த ஜாதிக்கு அந்தந்த வேலை என்ற முறையாகவும் இருக்கலாம். அல்லது அந்தந்த குடும்பத்துக்கு அந்தந்த வேலை என்றும் அமையலாம்.

    7. பிறப்புமுறையை நீக்கிவிட்டுக் கையாளக்கூடிய வேறு ஒரு முறையாகவும் இருக்கலாம். இப்படி எம்முறையைப் பின்பற்றினாலும், கீதா வாக்கியங்களின் அடிப்படைத் தத்துவம் முற்றிலும் பொருந்தும் பொறுமையாக வாசகர்கள் ஆராய வேண்டும்.

    8. குணபேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது! அரசனுடன் நட்பு செய்வது அரிது; என்றாலும் அந்த நட்பு எல்லா நன்மையையும் மேன்மையையும் தேடித் தந்துவிடும். அரசனின் ஏவலாளனுடன் நட்பு செய்வது மிகச் சுலபம்! ஆனால் அவன் மூலம் அடையும் நன்மையும் மிகமிக அற்பமாகவே இருக்கும்.

    9. சர்வேஸ்வரனை வழிபடுபவர்கள், பக்தி, ஞானம், முக்தி முதலான உயர்ந்த பேற்றினை அடைவர். சிறிய துர்த்தேவதைகளை வழிபடுபவர்கள் அதற்கேற்ற கர்மவினைப் பயனைத்தான் அடைவர். துர்த்தேவதோபாசனைகளைத் தவிர்க்க வேண்டும்.

    10. மனிதர்களிடையே ஏற்படும் மனபரிபாகத்துக்கேற்பவே, அவர்கள் விரும்புகின்ற நன்மைகளும் வெவ்வேறாகின்றன. அவர்களின் வகைகளைத்தான் கீதாசாஸ்திரம் அவர் எடுத்தியம்புகிறது. சிந்தியுங்கள்.

    11. குணபேதத்தால் தான் ஈஸ்வர சிருஷ்டி ஏற்படுகிறது, என்பதற்குக் கீதையில் வரும் ஸ்லோகம் எடுத்துக்காட்டாக அமைகிறது. வாசகர்களே அமைதியாகச் சிந்தியுங்கள். துவேஷபுத்தி வேண்டாம். பொருள் விளங்காது.

    12. ‘குணத்திற்கும், கர்மத்துக்கும் ஏற்றவகையில் நான்கு வர்ணங்களை நான் படைத்தேன்’ என்று நான்காம் அத்தியாயத்தில், பதின்மூன்றாம் சுலோகத்தில் கண்ணன் கூறுவதை உற்றுநோக்க வேண்டும். விருப்பு, வெறுப்பின்றிச் சமசித்தத்தோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ: |

    தஸ்யகர்த்தார மபிமாம் வித்யத் கர்த்தா மவ்யமு ||

    (11/4-13)

    பொருள் : நான்கு வர்ணங்களும் என்னால் குணகர்மங்களை விபாகம் செய்வதாலே சிருஷ்டிக்கப்பட்டன. அதற்குக் கர்த்தா நானாகிலும், என்னைப் பற்றுதல் அற்றவனென்றும், உண்டாக்கினவனல்லன் என்றும் அறிவாயாக.

    ‘கருமங்கள் என்னைத் தொடுவதில்லை; கருமங்களின் பலத்தில் எனக்கு விருப்பம் இல்லை. என்னை உணர்ந்த ஞானி கர்மங்களால் கட்டுப்படவே மாட்டான். பார்த்தா! இதனை நீ அறிவாயாக' என்பது கண்ணன் வாக்கு.’

    குணபேதத்தால் - சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வாணங்கள்

    1. பிராமணன் - பூரண சத்துவகுணம் உடையவன்

    2. க்ஷத்ரியன் - சத்துவ குணமே இல்லாதவன், ரஜோ குணம் உடையவன்

    3. வைசியன் - ரனோகுணம் 3/4 பங்கும், சத்வ குணம் 1/8 பங்கும், தமோ குணம் 1/8 பங்கும் உடையவனாய் இருப்பவன்

    4. சூத்திரன்- தமோ குணம் 3/4 பங்கும், ரஜோ குணம் ¼ பங்கும் உடையவனாய் இருப்பான்.

    5. சத்வகுணம் - வெண்மை - பிராமணன்

    6. ரஜோகுணம் - செம்மை - க்ஷத்திரியன்

    7. குணங்களின் பொது – மஞ்சள் - வைசியன்

    8. தமோகுணம் – கருமை - சூத்திரன்

    13. வாசகர்களே! கவனியுங்கள். இந்நிறங்கள் யாவுமே, உடலின் புறத்தோற்றமாகிய ஸ்தூல சரீரத்தில், தசைகளின் மேல் தோன்றுவன அல்ல! மேலே சொல்லப்பட்ட நான்கு வருணத்தாருடைய நிறங்களும் அந்தக்கரணங்களாகும். அவை மனத்தை ஒட்டியவை. உலகினர் பழக்க வழக்கங்களைக் கொண்டு ஒழுகும் நான்கு வர்ணங்களும் (தற்போது ஜாதிகள் என வழங்கப்படுபவை) பிறப்பை ஒட்டியவை. எனவே இவை வர்ணப்பிரிவிற்குப் பொருந்தா. இதை வாசகர்கள் ஆராய்ந்து உணர வேண்டும்.

    14. சூதும் வாதும் தெரியாத ஒருவனை 'அவன் பாவம்! வெள்ளை மனம் படைத்தவன்’ என்றும், தீத்தொழிலும், கெட்ட எண்ணமும் கொண்ட கொடியனைக் கருப்பு மனம் உடையவன் என்றும் சொல்லுகிறோம். வாசகர்களே! இங்கே நாம் நிறத்தை எப்படிப் பார்க்கிறோம். அக்கால ஜாதிமுறைகள் நான்கே! இக்கால ஜாதிமுறைகள் நான்காயிரம்! இவ்வளவு ஜாதிகள் எப்படித் தோன்றின? இக்கால ஜாதிகளைத் தோற்றுவித்தவர் யார்? நடுவில் அரசியல் ஜாதிகள் வேறு.

    15. அத்தியாயம் 18, ஸ்லோகங்கள் 42, 43, 44 - இங்கே நால்வகை வர்ணத்தாரின் இயல்புகளையும், செயல்களையும் கீதாச்சாரியன் விளக்குவதை நாம் உற்றுநோக்க வேண்டும். அவரவர் செய்யும் தொழிலால் மக்கள் சமுதாயப் பிரிவுகள் உண்டாகின்றன. இதுதான் உண்மை.

    1. பிராமண கர்மங்கள்

    அகக்கரணங்களை அடக்குதல்; புறக்கரணங்களை அடக்குதல்; உலக நன்மையைக் கருதித் தவமியற்றுதல்; தூய்மை, நேர்மை, பொறுமை, சாஸ்திர ஞானம், கடவுளிடம் நம்பிக்கை முதலான குணஇயல்புகளை உடையவராயிருத்தல்; ஆகிய இவை பிராமண கர்மங்கள் - பிரம்மம் ஞானாதீதிபிராம்மண: பிரம்மதத்துவத்தை அறிபவன் பிராமணன்.

    2. க்ஷத்திரிய கர்மங்கள்

    சூரத்தன்மை (வீரம்) துணிவு, உறுதி, சாதுரியம், போரில் புறங்காட்டாமை, கொடைவள்ளன்மை, கடவுள் நம்பிக்கை ஆகிய இயல்பு உடையவர்களாய் இருத்தல், இவை க்ஷத்திரிய கர்மங்கள். மேலும் திருவள்ளுவர் கூறுகிறார் - 'தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு' (குறள் 383). பொருள் : காலந்தாழ்த்தாமை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு இருக்க வேண்டியவை - இறைமாட்சி குறள் 3.

    3. வைசிய கர்மங்கள்

    சமுதாய நன்மைக்காகப் பொருள் ஈட்டுதல், தர்மநெறிப்படி வாணிபம் செய்தல், நாட்டில் பல்வேறு தொழில்களையும் ஏற்படுத்துதல், உலக வாழ்க்கைக்குத் தன - தானிய சம்பத்துக்களை அபிவிருத்தி செய்தல், மக்கள் சமுதாயத்திற்குப் பாதுகாவலராயிருத்தல், தொழில்களுக்கான மூலப் பொருள்களைச் சேமித்துப் பாதுகாத்தல், நால்வகை வர்ண மக்களைப் பாதுகாத்துச் செல்வத்தை அவர்களுக்குப் பங்கிட்டளித்தல் ஆகியவை வைசிய கர்மங்கள்.

    4. சூத்திர கர்மங்கள்

    பசுக்களைக் காத்தல், உழவுத்தொழில் செய்தல், கால்நடைகளைப் பாதுகாத்தல், தங்களால் சேமிக்கப்பட்டவற்றைத் தக்கவாறு வாணிபம் செய்து பொருட்செல்வம் ஈட்டுதல், கருணை உடையவர்களாய் இருத்தல், தங்களால் அறிய முடியாதவற்றைத் தக்கவர் மூலம் அறிந்து செயல்படுதல், தூய வாழ்க்கையை மேற்கொள்ளுதல், கடவுளை நம்பி வாழ்தல் ஆகியவை சூத்ர கர்மங்கள். இவர்களை அரசன்-யோகி- மகரிஷிகள் உள்ளிட்ட அனைவரும் போற்றுவார்கள். சமுதாயத்தில் இவர்கள் மிக உயர்ந்தவர்கள்.

    16. இக்காலத்திய ஜாதிகள் அடிப்படையில் அதாவது பிறப்பால் ஏற்பட்ட ஜாதியடைப்படையில் பார்த்தால் - செய்தொழிலால் பிராமணன் சூத்திரனாகவும், க்ஷத்ரியன் வைசியனாகவும், வைசியன் க்ஷத்திரியனாகவும், இப்படியே பலவாறு மாறி வருவதையும் நம்மால் காண முடிகிறது. வாசகர்களே! சிந்தியுங்கள். அரசில் தற்காலத்தில், பல ஜாதிப் பிரிவினரும் பணிபுரிகிறார்கள். குணபேத அடிப்படையில் பார்த்தால் இவர்கள் எல்லாருமே சூத்திரர்களே! இக்காலத்தவர்கள் ஏற்கமாட்டார்கள்! கோபம் அடைவார்கள். நால்வகை வர்ணத்தாரும் ஏற்றத் தாழ்வின்றி அரசு ஊழியர்களில்லையா? பிறரிடம் ஊதியம் பெற்று நால்வகையினரும் பணிபுரிவதால் எல்லாருமே சூத்திரர்களே!

    17. பாரத காலத்திலும் திருநிலை இருந்திருக்கிறதே துரோணாசரியன் பிரம்மணர். க்ஷத்திரியாக மாறினார். இவரால் பாரதப்போ பல திருப்பங்களைக் கண்டது மேலும் பாரத காலத்தினும் முற்பட்ட இராமாயண காலத்தைக் கவனிப்பதே ஏற்றது.

    விஸ்வாமித்திரர் பிறப்பாலும், தொழிலாலும் க்ஷத்ரியன். அரசன்! அவர் தனக்குரிய தொழிலை விடுத்துப் பிராமணனுக்குரிய தொழிலை மேற்கொண்டு பிரம்மதத்துவத்தை அறிந்தார்! பிராமணன் ஆனார். வசிஷ்டரின் திருவாக்கினால் பிரம்ம ரிஷிப் பட்டமும் பெற்ற வரலாற்றையும் நாம் அறிகிறோம்! பிரம்மத்தை அறிபவன் எவனோ அவன் பிராமணன். எந்த ஜாதியில் பிறந்தவனானாலும், அவன் பிரம்மத்தை (பரம்பொருளை) உணர்ந்து பிராமணன் ஆகமுடியும்.

    உடல் வாழ்க்கையில் மட்டும் கருத்து வைத்திருப்பவன், இக்கால ஜாதி அடிப்படையில் பிராமணனானாலும் அவன் சூத்திரனாகித் தாழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    18. இப்படியே அவரவர் செய்தொழிலுக்கேற்பவே - பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த நான்கு வர்ணங்களும் குணபேதத்தால் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகளே. பிறப்பை ஒட்டியவை அன்று! வாசகர்கள் உணரவேண்டும். வேண்டாம் ஜாதிச் சண்டை எனப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

    19. நான்கு வர்ணத்தாரின் செயல்கள் அனைத்தையும் செய்வதற்குப் பயிற்சி பெறுபவன் எவனோ அவனே ‘நிறைமனிதன் - முழுமனிதன்' ஆவான். மக்கள் சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரின் திறன்களையும் பெற்றால் நிறைமனித சமுதாயமாகும். உலகில் முழு மனித சமுதாயத்தை ஏற்படுத்தவே நாம் முயற்சி செய்வோமா!

    20. நாலாயிரம் ஜாதிகள், அரசியல் ஜாதிகள் வேண்டாம். நிறைமனிதனை உருவாக்கலாமே! இக்காலத்தில் பள்ளிகளில் எல்லாப் பிரிவையும் சேர்ந்த சிறுவர்களும், சிறுமிகளும் கல்வி பயில்கிறார்கள்! இங்கே முழுமனிதனை உருவாக்க விதை விதைக்க வேண்டும். நால்வகைப் பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

    ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் இம்முறை பின்பற்றப்படுவதாக அறிகிறேன். தொழில்களில் குற்றம் குறைகள் இருக்கும். நாம் அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். நம் பாரதநாடு உய்வு பெறும்.

    21. செய்யும் தொழிலே தெய்வம். எனவே எத்தொழிலையும் தாழ்வாகக் கருதவே கூடாது. புனிதமாகவே கருத வேண்டும். நமக்கென வாழாமல் பிறர்க்கெனவும் நாம் வாழ்வோம். லாப-நஷ்டக் கணக்கு வேண்டாம். மக்கட்பணி தொடர வேண்டும்.

    'பாரத சமுதாயம் உய்வுபெற நான் எனது கடமையைச் செய்கிறேன்' என்ற தூய மனோ பாவத்தை ஒவ்வொருவரும் வருவித்துக் கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் இந்த எண்ணத்தைத் தங்களுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணமே, மாசற்ற புனித கங்கைநீர்.

    22. குணபேதக் கிரமத்தில் கீதோபதேசம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் புகுமுகம் படியுங்கள். மக்களுக்கு அறிவூட்டவென்றே ‘கீதோதயம்'! தெளிவு பெறுங்கள். பணிவான வணக்கம்.

    கீதோதயம்

    கண்ணன்-காண்டீபன் உரையாடல்....

    புகுமுகம்

    உலகில் பாரதபூமி பழம் பெரும் புண்ணிய பூமி. ஸ்ரீமத் பகவத்கீதை உதயமான குருக்ஷேத்திர பூமி. தொன்றுதொட்டு தர்மத்துக்கு நிலைக்களமாய் இருக்கும் மகிமை வாய்ந்தது குருக்ஷேத்திரம். இதனைத் தன்பால் கொண்டது நம் பாரததேசம்.

    'குருக்ஷேத்திர மகிமையால், பாண்டவர்களிடமிருந்து மண்ணாசை இன்னமும் ஓயவில்லையா' என்று, மண்ணாசை பிடித்த துரியோதனன் தந்தையான திருதராஷ்டிர மன்னன் சிறப்பித்த புண்ணியபூமி குருக்ஷேத்திரம்.’

    நம் ஹிந்து மதத்தில் எண்ணிலடங்காத, பற்பல - சாஸ்திரங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தலைமை வகிப்பது வேதமே! வேதங்களின் ரசமே உபநிஷதங்கள். அவை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    ஈஸ்வரனை ஆராய்வதில் உபநிஷதங்களின் நிலை... பற்றி எடுத்தியம்புகிறது. 'பிரம்ம சூத்திரம்' வேதாந்த சூத்திரம் என்பர் சாஸ்திரக்ஞர்கள்.

    உபநிஷதர்களாகிய பசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட பால ஸ்ரீமத்பகவத் கீதை. பிரஸ்தானத்திரயங்களைப் பற்றி முன்பே சொல்லி விட்டேன். ஹிந்து மத சாஸ்திரங்களே பிரஸ்தானத்திரயங்கள். இதற்குப் புறம்பான சாஸ்திரங்களை நாம் முழுமையாகப் புறக்கணிக்கிறோம்.

    'வாசகர்களுக்குச் சில' என்னும் தலைப்பில் வேண்டிய அளவிற்கு விளக்கங்கள் தந்துவிட்டேன். மகாபாரதத்தில், பீஷ்மபர்வதத்தில், இருபத்தைந்தாம் அத்தியாயத்திலிருந்து நாற்பத்திரண்டாவது அத்தியாயம் வரையில் அடங்கிய பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட அரிய நூல் ஸ்ரீமத் பகவத்கீதை. 700 ஸ்லோகங்களைக் கொண்டது கீதா சாஸ்திரம்.

    'மகாபாரதம்' என்ற உடலுக்கு, ஸ்ரீமத் பகவத்கீதையே இருதயமாக விளங்குகிறது. உடலும், இருதயமும் வெவ்வேறு காலங்களில் தனித்தனியே தோன்றியிருக்க முடியாது. 'ஸ்ரீமத் பகவத்கீதை' மகாபாரதத்துள் செய்யப்பட்ட இடைச்செருகல் இல்லை என்பதையும் உணருங்கள்.

    தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்துக்குப் போவோர் உண்மையை உணரலாம். முன்பே விளக்கியிருக்கிறேன். போர் புரிய வரும் வரையில் விழிப்பும், துடிப்புமாக இருந்தான் பார்த்தன். தேரை யோகேஸ்வரக்கிருஷ்ணன் சாரதம்யம் பண்ணிக்கொண்டு குருக்ஷேத்திரரைப் பூமிக்கு வந்தான். பாண்டவர் கௌவர்களின் இருபக்கத்திற்கும் நடுவில் தேரை நிறுத்தி விட்டுக் கௌந்தேயனைப் பார்த்து மெல்லப் புன்முறுவல் பூத்தான் பார்த்தசாரதி.

    பார்த்தன் தன் எதிரில், தன்னுடன் போர் புரிய அணிவகுத்துக் காத்திருக்கும் போர்வீரர்களை எல்லாம் அலட்சியமாகவும், சினந்தும் பார்த்தான். அவன் எதிரே பீஷ்மப்பிதாமகரும், ஆச்சார்யத் துரோணரும் நின்றார்கள். பூஜிக்கத் தக்கவர்களைக் கண்டு நிலைகுலைந்தான் பார்த்தன்.

    பாசவலை காண்டீபனைச் சுற்றிச் சுழன்றது! திகைத்து நடுநடுங்கி நின்றான்.

    ஹா..... அந்தோ! மனம் கலங்கினான். அவனுடைய வாழ்க்கையில் அவனுக்குச் சோதனையான நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டது. உடல் சோர்ந்து தளர்ந்து நின்றான் தனஞ்சயன்.

    தன்னெதிரே, தன்னுடன் போர் புரிய நின்றவர்களை எதிர்த்துப் போரிடவா? இல்லை போரைத் தவிர்த்து விடலாமா? எதிரில் நிற்பவர்களுக்கு எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கலாமா? என்பதே அவன் முன் நின்ற பிரச்சினை.

    குந்திபுத்ரன் கௌந்தேயன் போருக்கு அஞ்சினவனல்லன்; பாசுபதாஸ்திரம் பெறுவதற்குச் சென்ற காண்டீபன் முன்பு மஹேஸ்வரனையே எதிர்த்துப் போரிட்டான்! அப்போது அவன் விவேகம் அவனை விட்டுச் செல்லவில்லை! இப்போது விவேகம் அவனை விட்டுப் போய்விட்டது. அதனால் மனம் கலங்கிப் போனான் அந்த மாவீரன். மனப்பக்குவம் இப்போது அவனிடம் இல்லை.

    பார்த்தன் பெற்றிருந்த பேரும், புகழும், போகமும், இந்த நெருக்கடியான தருணத்தில் அவனுக்குப் பயன்படவில்லை. ஆகையால் அவன் கேசவனை நோக்கினான்.

    'அச்சுதா... எனக்கு ஒன்றும் விளங்கவேயில்லை! என் அறிவு என்னை விட்டுச் சென்று கொண்டிருக்கிறது! பாசம் என்னை வென்று கொண்டிருக்கிறது! உன் ஒருவனையே சரணமடைகிறேன். எனக்கு அறிவூட்டு! உணர்வூட்டு! அருள் செய்' என்று பகர்ந்தான் பார்த்தன்.

    இஃது இறைவனிடம் ஜீவன் செய்யும் உண்மையான சரணாகதி. கண்ணன், காண்டீபனிடம் இதைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இதுவே குருசிஷ்ய பாவம். சரணாகதிதான் பலன் அளிக்கிறது.

    குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், பார்த்தன் பரந்தாமனிடம் தன்னை ஒப்படைத்து முழுமையாக சரணாகதி அடைந்து விட்டான். தனக்கு அறிவுரை போதிக்க வேண்டும் என்று வாசுதேவனிடம் வேண்டி நின்றான்.

    மாணவன் விருப்பத்தோடு குருவிடம் பாடம் கேட்க வரும்போதும் மட்டுமே ஆசிரியர் பாடம் போதிக்க முன்வருவார். போதிக்கும் பாடம் அப்போதுதான் மனத்தில் பதியும்.

    வாசுதேவன் புன்முறுவல் செய்தார்! தம் சிஷியன் மீது அருட்பார்வையை வீசினார் - அனகனுக்கு அத்தகைய நிலை வரும்வரையிலும் காத்திருந்தான் கமலக்கண்ணன். கை கூப்பி மண்டியிட்டு நின்றான் காண்டீடன்.

    பார்த்தன் தனக்கு நண்பனாயிருக்கும்போது, தோழமையில் ‘பிரேயசை' மட்டுமே தந்திருந்தான் கண்ணன். நட்புரிமை பூண்ட அவனால் அப்போது அதைத்தான் வழங்க முடிந்தது. ஆனால் இப்போது பார்த்தனுக்கு சிஷ்யபாவம் வந்துவிட்டது! குரு சிஷ்ய பாவம் வந்தால்தான், குருவினால் சிஷ்யனுக்கு ‘சிரேயசை' நல்க முடியும். இப்போது காண்டீபன் கண்ணனுக்கு சிஷ்யன்.

    ஞான விதையை விதைப்பதற்கு ஏற்பப் பார்த்தனின் மனமாகிய விளைநிலம் பண்பட்டு விட்டதை அறிந்து உவகை பூத்தான் கீதாச்சாரியன். 'சிரேயசை' எடுத்துப் புகட்ட இப்போது தடையேதும் இல்லை. உள்ளன்போடு சிஷ்யனுக்கு சிரேயசை புகட்டத் தொடங்கினான் வாசுதேவன். ஞானமும் யோகமும் அடங்கப் பெற்றதுதான் 'சிரேயஸ்'. குருக்ஷேத்திரத்தில் கீதோபதேசம் ஆகிறது. ஆம்! உதய கீதை! கீதோதயம்.

    பகவத்கீதையில், முதல் அத்தியாயத்தில் எம்பெருமானின் பேச்சு ஒன்றுமே இல்லை - மேலும் இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டாவது - மூன்றாவது ஸ்லோகங்களில் தான், நம் பெருமான் திருவாய் மலர்ந்தருளுகிறார். ஆகவே பகவத்கீதையின் துவக்கம். இதுவே என்பதை நம்மால் உணரமுடிகிறது.

    எடுத்த எடுப்பிலேயே பகவானின் முதல் பேச்சாகிய, இரண்டு ஸ்லோகங்களிலேயே கீதா சாஸ்திரத்தின் மூலத்தத்துவம் வெளிப்பட்டு விடுகிறது. பகவானில் போதனாசாரம் அனைத்துமே இந்த இரண்டு ஸ்லோகங்களில் அடங்கிவிடுகிறது. அதாவது ஆய்ந்த அடிப்படையில் கருத்தானது துவக்கத்திலேயே தெளிவுபடவே வந்துவிடுகிறது.

    ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச் யதோ |

    பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணஷேவா வஸிஷ்யதே ||

    'தோற்றத்துக்கு அப்பால் இருப்பது பூரணம்; தோன்றியுள்ளதும் பூரணம்; பூரணத்திலிருந்து பூரணம் வந்த பிறகு எஞ்சியிருப்பதும் பூரணம்’ - என்று உபநிஷத்தின் மூலக்கருத்தனைத்துமே இதில் அடங்கிவிடுகிறது. பிறகு விரிவாகச் சொல்லுவதெல்லாம் இதன் விளக்கம் தான்.

    இதுவரையில் காண்டீபன் பேசிய பேச்சில் பொருள் ஒன்றுமே இல்லை! என்கிறார் பகவான். '0' தான். காண்டீபனுக்கு மனம் கலங்கிவிட்டது - என்றும் கூறுகிறார் பகவான். காண்டீபன் கீழ்மகன் போல் நடந்து கொள்வதையும் நாராயணன் ஏற்கவில்லை! ஆரியன் செய்யத்தக்க செயலைச் செய்ய வேண்டும் என்பதே கண்ணனின் விருப்பம்.

    பகவானின் முதல் உரையாடல்

    கண்ணன் : அர்ச்சுனா! ஆயனுக்கு அடாததும், சொர்க்கத்தைத் தடுப்பதும், கீழ்ச்செயலே. இந்த உள்ளச் சோர்வு இக்கால கட்டத்தில் உனக்கு எங்கிருந்து வந்தது?

    பார்த்தா, அலியின் தன்மையை அடைந்து விடாதே! அலியின் இயல்பு உனக்குப் பொருந்தாது! எதிரியை வாட்டும் மாவீரனே! இழிவான உள்ளத்தளர்வினை விட்டுவிட்டு, நீ எழுந்து நில்.

    'குதஸ்த்வா கஸ்மலமிதம் - விஷமே ஸமுபஸ்திதம்

    அனார்யஜுஷ்ட மஸ்வர்க்ய மகீர்த்திகர மர்ஜுன

    கலைப்யம் மாஸ்மகம்: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே

    க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப’

    வாசகர்களே! கவனியுங்கள். 'ஆரியன்' என்ற சொல் ஜாதிப் பெயரன்று. பண்பட்ட மனமும், சிறந்த வாழ்க்கைமுறையும் எந்தப் புருஷனிடம் இருக்கிறதோ அவன் ஆரியன்; உயர்ந்தவன் என்று பொருள். ஆரியன் என்ற சொல்லே தமிழில் 'ஐயன்' எனத் திரிந்து வருகிறது.

    அர்ஜுனன் உயர்ந்தவன். கீழ்மகனல்லன் - என்பதுதான் ஸ்ரீகிருஷ்ணனின் அபிப்பிராயம். அவனின் மனக்கலக்கத்தை 'கஸ்மலம்' (குப்பை) என்று கூறி ஒதுக்குகிறார். மனமாசுள்ளவன் ஆரியன் இல்லை. ஆகையால் தான், 'ஆரியனுக்கு அடாததான செய்கையைச் செய்யாதே; எழுந்திரு' என்று சிஷ்யனைத் தட்டி எழுப்புகிறார் பரமாத்மா.

    அடுத்த ஸ்லோகத்தில், இன்னும் சற்று கடினமான சொல்லை உபயோகிக்கிறார். ‘ஆண்மையை இழந்து விடாதே! பேதை போல் நடந்து கொள்பவன் 'அலி' எனப்படுவான். ஆகையால் பார்த்தா! ‘அலி'யின் இயல்பை அடையாதே; அது உனக்குப் பொருந்தாது' என்கிறார்.

    வாழ்க்கைக்குத் தேவையான திறவுகோலை (சாவியை)ப் பரமாத்மா இக்கோட்பாட்டின் மூலம் இங்கே கொடுத்து விடுகிறார். பரமாத்மா அருளிச் செய்த, ஸ்ரீமத் பகவத்கீதையின் அடிப்படையான மூலக்கருத்து இதுதான். ஒவ்வோர் அத்தியாயமும் இதற்கு, ஒவ்வொரு விளக்கமாக அமைகிறது. அந்த அழகைத்தான் இனி நாம் உணரப் போகிறோம்.

    ‘வலிவு' இம்மைக்கும், மறுமைக்கும் துணை. ‘வலிவு' உயிரை வளர்க்கும்; மெலிவு உயிரைத் தேய்க்கும். 'வலிவு' நோயைப் போக்கும். மெலிவு நோயை வளர்க்கும். வலிவு நல்லறத்தையும், நேர்மையையும் கொடுக்கும். மெலிவு மனக்கோணலையும், ஒழுக்கமின்மையையும் ஏற்படுத்தும் வலிவு ஆத்ம போதத்தையும், பிரபஞ்ச உணர்வையும் உண்டு பண்ணும். மெலிவு பாசபந்தத்தை அதிகப்படுத்தும்; ஆகையால் வலிவு உடையவனே வாழ்வுக்கு உரியவன், என்று மிக அழகாக எடுத்துரைக்கிறது கீதா நூல்.

    குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கும், அச்சுதனுக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலே ஸ்ரீமத் பகவத்க்தை. இந்த உரையாடல் கற்றோர் நிறைந்த அவையின்கண் நிகழ்ந்ததன்று. நிலைமை, உண்மை இவ்வாறு இருக்க, இந்தக் கிருஷ்ணார்ஜுன சம்வாதம் போர்க்களத்தில் நிகழ்ந்தபடியே சிறிதும் மாறாமல் மக்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று வாசகர்கள் கேட்கலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1