Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu
Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu
Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu
Ebook117 pages36 minutes

Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்வியிற்கனிந்த தொண்டுள்ளம் கொண்ட தமிழகச் சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் அடியேனின் சென்னி தாழ்ந்த வணக்கம். சங்க இலக்கியங்களுள் சிறந்தவை.

ஐந்து! 1. சிலப்பதிகாரம்; 2. மணிமேகலை; 3. வளையாபதி; 4. குண்டலகேசி; 5. சீவக சிந்தாமணி.

இவற்றுள், சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப் பேசப்படுகின்றன. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கின்றது.

என் உள்ளத்தில் நிறைந்து நிற்பது சிறப்புயர் சீவக சிந்தாமணியே! ஆம்... அது காணக் கிடைக்காத நன்மணி!!

முதல் நான்கு காப்பியங்களும் நாடகங்களாக நடிக்கப்பட்டன. வெண்திரை ஓவியங்களாகவும் திரையிடப்பட்டன. பாமர மக்களும் உணர்ந்தனர்.

என்ன காரணத்தாலோ சீவக சிந்தாமணிக் காப்பியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். பல காரணங்கள் கூறினும் சமயக் காழ்ப்புணர்வே முதல் காரணம், என்றும் எண்ணத் தோன்றுகிறது. இரண்டாவது காரணம், காமரசம் ததும்பியது எனப் புலவர் பெருமக்களே நினைத்துவிட்டதுதான். இரண்டு நோக்கங்களுமே தவறானவை என்பதே என் கருத்து.

சீவக சிந்தாமணிப் பெருங்காப்பியம் ஒரு வீரகாவியமே! எங்குதானில்லை காதல்? சிற்றின்பம் பற்றிக் கூறாத காப்பியம் எது? காப்பியங்கள் அனைத்திலும் ஆண் பெண் இருபாலாருமே வருணிக்கப்படுகின்றனர். யார்தான் இன்பரசத்தைப் பருகாமல்விட்டு வைத்தனர்? உண்மை நிலை இவ்வாறிருக்க, சிந்தாமணியை மட்டும் ஒதுக்கிவைத்தது தவறு என்று என் மனத்தில் தோன்றுகிறது. என் மனக் கருத்தை இந்த என் ஒப்பாய்வு நூலில் விளக்குகிறேன். சான்றோர்கள் சிந்திக்கவேண்டும். இஃதே என் வேணவா.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580131108352
Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu

Read more from Jayadhaarini Trust

Related to Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu

Related ebooks

Reviews for Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu - Jayadhaarini Trust

    https://www.pustaka.co.in

    சிலப்பதிகாரம் - சீவகசிந்தாமணி ஓர் ஒப்பாய்வு

    Silapathigaram - Seevagasinthamani Oru Oppaivu

    Author:

    புலவர் சீனி. கிருஷ்ணஸ்வாமி

    Pulavar Seeni. Krishnaswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளுறை

    1. ஸ்ரீ உ.வே.சா - மூன்றாம் பதிப்பு – முகவுரையிலிருந்து:

    2. முன்னுரை

    3. அறிமுகம்

    4. சீவகன் எண்மரைமண முடித்தது ஏன்?

    5. இனி மண்மகள் இலம்பகம் போர்!

    6. சிலப்பதிகாரம் - சீவக சிந்தாமணி

    7. இளங்கோவடிகள் கட்டிய சொற்கோயில்

    8. பாண்டியன் அவையில் கண்ணகி வழக்கு!

    9. சிலம்பில் திருப்புமுனை கானல்வரி

    11. ஆற்று வரிப் பாடல்கள்

    12. கோவலன் மனம் வேறுபடக் காரணம்

    13. சிறப்புயர் சீவக சிந்தாமணி

    14. தமிழன்னை ஓவிய விளக்கப் பாடல்

    15. கம்பனுக்கும் கை கொடுத்த காப்பியம்!

    16. சேக்கிழார் சிந்தாமணி லயிப்பு

    17. சிந்தாமணிக் காப்பியம் எப்படித் தோன்றியது?

    18. பெருங்காப்பிய இலக்கணம் தண்டி

    19. சிந்தாமணியில் வானஊர்தி (மயில்பொறி)

    20. சீவகன் பிறப்பு

    21. சீவகனின் யாழ் ஆராய்ச்சி (சுயம்வர விழா)

    22. வீணாபதியின் அறிவிப்பு

    23. சீவகனின் சுண்ணப் பொடி ஆராய்ச்சி.

    24. பதுமையைத் தீண்டிய படநாகம்...

    25. அரவுகளின் பற்களுக்கும் பெயர் உண்டு

    26. பாம்புகளுக்கும் ஜாதிகள் உண்டு

    27. முடிவுரை

    1. ஸ்ரீ உ.வே.சா - மூன்றாம் பதிப்பு – முகவுரையிலிருந்து:

    "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

    மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது

    தன்னே ரிலாத தமிழ்"

    விருத்தம்

    "உருவள ரகவை பூமி யுயர்தவங்கருணை யூக்கம்

    பொருவலி விசயம் வீரம் புண்ணிய மாதர் போகம்

    பெரு நிதியொழுக்கஞ் சீலம் பிள்ளைகண் மானம் கல்வி

    திருமுத லிவையீ ரெட்டுஞ் சீவகன் ஒருவன் பெற்றான்"

    "தத்தை குண மாலையொடுதாவில் புகழ்ப் பதுமை

    ஒத்தவெழிற் கேமசரி யொண்கனக மாலை

    வித்தகநல் விமலையொடு வெஞ்சுரமஞ் சரிதான்

    அத்த கையி லக்கணையொ டாகமண மெட்டே"

    "பகைமாற் றொருநற் பரன் வாழ்த்தவைசொற் பதிக விலம்பகமோ

    வகைமாற் றொருநா மகளோ கோவிந்தைமணமுறுதத்தைகுணம்

    மிகைமாற் பதுமை கேமசரி கனகம் விமலையர் வீழ்சுரமஞ்

    சகைமாற் றொடுமண் மகள்பூவிலக்கணை முத்தியீராறொன்றே"

    (செந்தமிழ்த் தொகுதி 20, பகுதி 5ல் உள்ளது)

    2. முன்னுரை

    கல்வியிற்கனிந்த தொண்டுள்ளம் கொண்ட தமிழகச் சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் அடியேனின் சென்னி தாழ்ந்த வணக்கம்.

    சங்க இலக்கியங்களுள் சிறந்தவை. ஐந்து! 1. சிலப்பதிகாரம்; 2. மணிமேகலை; 3. வளையாபதி; 4. குண்டலகேசி; 5. சீவக சிந்தாமணி.

    இவற்றுள், சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப் பேசப்படுகின்றன. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கின்றது.

    என் உள்ளத்தில் நிறைந்து நிற்பது சிறப்புயர் சீவக சிந்தாமணியே! ஆம்... அது காணக் கிடைக்காத நன்மணி!!

    முதல் நான்கு காப்பியங்களும் நாடகங்களாக நடிக்கப்பட்டன. வெண்திரை ஓவியங்களாகவும் திரையிடப்பட்டன. பாமர மக்களும் உணர்ந்தனர்.

    என்ன காரணத்தாலோ சீவக சிந்தாமணிக் காப்பியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். பல காரணங்கள் கூறினும் சமயக் காழ்ப்புணர்வே முதல் காரணம், என்றும் எண்ணத் தோன்றுகிறது. இரண்டாவது காரணம், காமரசம் ததும்பியது எனப் புலவர் பெருமக்களே நினைத்துவிட்டதுதான். இரண்டு நோக்கங்களுமே தவறானவை என்பதே என் கருத்து.

    சீவக சிந்தாமணிப் பெருங்காப்பியம் ஒரு வீரகாவியமே! எங்குதானில்லை காதல்? சிற்றின்பம் பற்றிக் கூறாத காப்பியம் எது? காப்பியங்கள் அனைத்திலும் ஆண் பெண் இருபாலாருமே வருணிக்கப்படுகின்றனர். யார்தான் இன்பரசத்தைப் பருகாமல்விட்டு வைத்தனர்? உண்மை நிலை இவ்வாறிருக்க, சிந்தாமணியை மட்டும் ஒதுக்கிவைத்தது தவறு என்று என் மனத்தில் தோன்றுகிறது. என் மனக் கருத்தை இந்த என் ஒப்பாய்வு நூலில் விளக்குகிறேன். சான்றோர்கள் சிந்திக்கவேண்டும். இஃதே என் வேணவா.

    1963இல் சீவக சிந்தாமணியை நாடகமாக எழுதத் தொடங்கினேன். 1973இல் நூலை எழுதி முடித்தேன் .கடினமான உழைப்பு. ஆயினும் நூல் வெளிவரவில்லை. 30 ஆண்டுகள் உருண்டோடின. பதிப்பகங்கள் நூலை வெளியிட முன்வரவில்லை.

    12-8-2002இல் என் மகன் சொந்தமாகவே "ஜெயதாரிணி பதிப்பகம் அமைத்தான். என் மன வேதனையை உணர்ந்தான். 12-10-2002இல் அறுபதே நாளில், நான் இயற்றிய நூலை முதல் நூலாக அச்சிட்டு முடித்தான்.

    உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் எங்களுக்கு உதவிக் கரம் நீட்டியது.

    12-10-2002இல், கலைமாமணி, திரு விக்கிரமன் அவர்களின் தலைமையில், நூல் வெளியீட்டு விழா, சென்னை நாரதகான சபாவில் நடைபெற்றது. என் மனம் குளிர்ந்தது.

    உரத்த சிந்தனை எனக்கு சீவகச் செல்வர் என்ற விருது வழங்கியது. நண்பர்கள் என்னை கௌரவித்தனர்.

    இப்போது நான் எனது இரண்டாவது படைப்பாக, சிலப்பதிகாரம் - சீவக சிந்தாமணி, என்ற ஓர் ஒப்பாய்வு நூலை வெளியிடுகிறேன். இந்நூல் உங்களின் நல்லாதரவைப் பெறும் என்றும் நம்புகிறேன்.

    எனக்காகவே என் மகன் பத்மநாபன் ஜெயதாரிணி பதிப்பகம்

    Enjoying the preview?
    Page 1 of 1