Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thenum Thinaimaavum
Thenum Thinaimaavum
Thenum Thinaimaavum
Ebook123 pages27 minutes

Thenum Thinaimaavum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் நெஞ்சமே...! காலத்தால் அழியாத புகழடைய விரும்புகிறாயா? கவிதை பழகு! அதிலும் அழிக்க முடியாததொரு மொழி தாய்மொழியாகக் கிடைக்கப் பெற்ற உனது கவியார்வம் உன்னை மேலும் வழிகளை, ஊழிகளைக் கடந்து வாழவைக்குமென்பது உண்மை...

தாலாட்டுப் பாட்டிலிருந்து ஒப்பாரிப் பாட்டு வரை பெண்கள் கவிதையை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். தமிழ்ப் பெண்கள் கவிஞர்களாகவும் வாழ்கின்றனர். கவிதைகளாகவும் வாழ்கின்றனர். பெண்களின் புற அழகை மட்டும் முன்னிலைப் படுத்தி எழுதப்படும் கவிதைகள் சில நேரங்களில் விரும்பத்தக்கவைகளாகவும், பல நேரங்களில் வெறுக்கத்தக்கவைகளாகவும் அமைவதுண்டு. ஆனால், காதல், பண்பு, கடமை, மற்றும் இவையனைத்திலும் மிக உயர்ந்த தாய்மை போன்ற உயர் பண்புகளால் உள்ளம் நிறைக்கும் நன் மணிகளான பெரும்பான்மையானப் பெண்களையும், பிடிவாதம், பொன் பொருளாசை, பொறாமை போன்ற தாழ்வுகளால் வசை பாடுகளுக்குள்ளாகும் சிலரான பெண்களையும் என்றென்றும் கவிஞர்கள் கவிதைகளாக்கி இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுத்து வந்துள்ளனர். உலக இலக்கியங்களில் தமிழ்க்கவிஞர்களில் பலர் பெண்களாக அமைவது நடந்து வரும் சிறப்பமைப்பு.

பெண்களின் அழகு, சிறப்பியல்புகளைப் புகழ்வதிலும், பிடிவாதம், ஆதிக்க உணர்வு போன்றவற்றை இகழ்வதிலும் ஆண் கவிஞர்கள் போட்டி போடும் பொழுது... பெண்கள் மட்டும் வாளாவிருந்து விடலாமா! பெண்களின் பார்வையில் உலகம் மேலும் அழகாகத் தெரியும். இதற்கு அவர்களது தாய்மையும் மெல்லியல்புகளும் ஒரு காரணம். இதே இயல்புகளால், உலகின் கொடுமைகளும் அவர்களது பார்வையில் மிகைப் பட்டனவாகத் தோன்றுவதுண்டு.

"கவிதை புனைவதே பெண்மை இலக்கணம்" என்று நம்புபவன் நான். பெண்களே கவிஞர்களாகும்போது, பெண்மை இலக்கணம் மொழி இலக்கணத்துடன் இணைந்து, மெல்லுணர்வுகளால் தங்க முலாம் பூசப்பட்டு மிளிர்கிறது.

மொழி இலக்கணத்தை முறித்துப் போடும் புதுக்கவிதைகளாகட்டும்..., மொழி வளத்தை மேம்படுத்தும் மரபுக் கவிதைகளாகட்டும்... பண்பாட்டுச் சிதைவிற்கு வழிவகுக்காதக் கவிதைகளை வரவேற்பதே நல்ல கலைஞர்களின் இயல்பு.

பெண்மையின் உயர் நோக்கங்களிலிருந்து 'பாவை கண்ணதாசன்' தமது சூழல்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறார். வியப்படைந்தும் களித்திருக்கிறார். வேதனைப்பட்டும் நெகிழ்ந்திருக்கிறார். கற்பனை வளமும், எளிய நலமும் ததும்பும் புதுக்கவிதைகளாகவும்... கருத்தாழம் மொழிக்கட்டுப்பாடும் நிறைந்த மரபுக்கவிதைகளாகவும் படைத்திருக்கிறார். தமிழில் வெளியாகும் இலக்கிய இதழ்கள் இவரது படைப்புகளை அரங்கேற்றியிருப்பது இவரது மரபுக் கவிதைகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு. பல அரங்கங்களில் இவர் கவிதை பாடியிருப்பது இவரது புதுக்கவிதைகளுக்குக் கிடைத்த வெற்றி. தக்கத் திருத்தங்களுடன் தனது கவிதை நூல் வெளியாக வேண்டுமென்ற இவரது ஆர்வம் அனைத்துக் கவிஞர்களாலும் பின்பற்றப்பட வேண்டியதாகும்.

"தேனும் தினைமாவும்" என்று இத்தொகுதிக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறேன். தேனைச் சேகரிப்பதும் கடினமானது. தினை விளைவித்து இடித்து மாவாக்குவதும் கடினமானது. இரண்டும் வெவ்வேறு சுவை. இரண்டும் சேர்ந்தால் உடலுக்கு உறுதி. இத்தொகுதியில் மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இவ்வகையில் சேர்ந்து கருத்துக்கு உறுதி தருகின்றன.

“மரபுக்கவிதை படைப்பதில் மேலும் முயன்று தனது ஈடுபாட்டையும், திறனையும் இவர் மேம்படுத்தி மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்”

- “பல்கலைச் செல்வர்” ரமணன்

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131105062
Thenum Thinaimaavum

Read more from Jayadhaarini Trust

Related to Thenum Thinaimaavum

Related ebooks

Reviews for Thenum Thinaimaavum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thenum Thinaimaavum - Jayadhaarini Trust

    http://www.pustaka.co.in

    தேனும் தினைமாவும்

    Thenum Thinaimaavum

    Author:

    பாவை கண்ணதாசன்

    Paavai Kannadasan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வெண்பா

    ஆசிரியப்பா

    வஞ்சிப்பா

    கலிவிருத்தம்

    கட்டளைக் கலித்துறை

    பெருமையுடன் பொறுமை!

    இடுகுறி!

    குறும்பாக்கள்

    பொங்கிடும் இமயமாவோம்!

    'சொற்'க்கம் தேடுவோம்!

    ‘ஏற்று'மதியாளர் ஆவோம்!

    முதுமையையும் வென்றிடலாம் முனைந்தே!

    சிலிர்ப்போம் சிறப்பினிலே!

    குணம் மணக்கக் குதூகலிப்பீர்!

    பிரபஞ்சம் வியக்கட்டும்!

    கால்கோள் நாட்டு!

    சரித்திரத்தில் நம்மை வரைவோம்!

    புண்களை ஆற்றுமே பண்கள்!

    சீவிதமும் நாவிதமும்!

    நன்றாய் வாழ்க நன்னிலையடைந்து!

    வெற்றி தேடி வருமே!

    திட்டம் தீட்டித் திகழ்க!

    உயர் புரட்சி உலவட்டும்!

    இனிவரும் நாட்கள் இன்பமே!

    உன் வீடு தேடி பதவி

    குறைவின்றிக் குவலயம்!

    மணந்தார் மகாகவி வாக்கை!

    வி 'வரம்கள்’ பெற்றவர்!

    வியனுலகம் வியக்கட்டும்!

    பழுதுபார்ப்போம் எழுதுகோலால்!

    தமிழமுது பொங்குமே!

    இனியவழி காட்டும் வள்ளுவம்!

    புலம்பி நோகிறாரே!

    உன்னத நோக்கம்!

    மழலைப் பூக்கள் மலரட்டும் தமிழில்!

    தெளிதமிழ் பாடல்கள்

    புதுக்கவிதை

    உள்ளம் ஒளிர்ந்திட...

    நலம் நம்மிடையே!

    ஆக்சிஜன்

    சுதந்திர தின விழா!

    பத்தினித் தாசி!

    காந்தி மீண்டும் பிறந்து வந்தால்...

    தித்திக்கும் தீபாவ(லி)ளி!

    மணக்கும் மறுமலர்ச்சி!

    சிறந்த 'தாய்!'

    நினைத்த பொழுதுதான்...

    படுகுழி!

    மாற்றிச் செய்தால்...

    தாயின் சொற்களே சொர்க்கம்!

    சாதிக்க வேண்டுமென்று...

    நாளையும் நாளை மறுநாளும்...

    சமமாகட்டும் அசமங்கள்!

    இ'லக்கு!’

    'பஞ்ச' 'வர்ண'க் கிளி!

    பணமரம்

    முடிவு உன் கையில்!

    புதுப் பொங்கல்

    நேர்காணல்

    சோக இராகாயணம்!

    ஆசையின் நிறம்!

    நடிகையின் தேடல்!

    வண்ணத் தொலைக்காட்சி

    ஏமாற்றம்

    காதலித்ததால்...

    புறப்பட்டு வா!

    இந்த வருடமாவது...

    ஆசிரியருரை

    பரந்த எழுத்துக் கடலில் என்னையும்

    ஒரு பயணியாக அனுமதித்த

    எல்லாம் வல்ல இறைவனுக்கு

    இந்த நூல் அர்ப்பணம்.

    நான் விதைத்த எழுத்து விதைகளை

    புத்தக மரமாக எழுந்து நிற்பதற்குக்

    கை கொடுத்த அனைவரையும்

    நன்றி மலர்களால் வணங்குகிறேன்.

    பாவை கண்ணதாசன்

    *****

    பதிப்புரை

    சகோதரி பாவை கண்ணதாசன் அவர்களின் எழுத்தாற்றல், தமிழர்களுக்கு இலவசமாக வந்திருக்கும் ஒரு மருந்து என்று கூறும் அளவிற்கு இந்த நூல் அமைந்திருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    *****

    அணிந்துரை

    தமிழ் நெஞ்சமே...! காலத்தால் அழியாத புகழடைய விரும்புகிறாயா? கவிதை பழகு! அதிலும் அழிக்க முடியாததொரு மொழி தாய்மொழியாகக் கிடைக்கப் பெற்ற உனது கவியார்வம் உன்னை மேலும் வழிகளை, ஊழிகளைக் கடந்து வாழவைக்குமென்பது உண்மை...

    தாலாட்டுப் பாட்டிலிருந்து ஒப்பாரிப் பாட்டு வரை பெண்கள் கவிதையை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். தமிழ்ப் பெண்கள் கவிஞர்களாகவும் வாழ்கின்றனர். கவிதைகளாகவும் வாழ்கின்றனர். பெண்களின் புற அழகை மட்டும் முன்னிலைப் படுத்தி எழுதப்படும் கவிதைகள் சில நேரங்களில் விரும்பத்தக்கவைகளாகவும், பல நேரங்களில் வெறுக்கத்தக்கவைகளாகவும் அமைவதுண்டு. ஆனால், காதல், பண்பு, கடமை, மற்றும் இவையனைத்திலும் மிக உயர்ந்த தாய்மை போன்ற உயர் பண்புகளால் உள்ளம் நிறைக்கும் நன் மணிகளான பெரும்பான்மையானப் பெண்களையும், பிடிவாதம், பொன் பொருளாசை, பொறாமை போன்ற தாழ்வுகளால் வசை பாடுகளுக்குள்ளாகும் சிலரான பெண்களையும் என்றென்றும் கவிஞர்கள் கவிதைகளாக்கி இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுத்து வந்துள்ளனர். உலக இலக்கியங்களில் தமிழ்க்கவிஞர்களில் பலர் பெண்களாக அமைவது நடந்து வரும் சிறப்பமைப்பு.

    பெண்களின் அழகு, சிறப்பியல்புகளைப் புகழ்வதிலும், பிடிவாதம், ஆதிக்க உணர்வு போன்றவற்றை இகழ்வதிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1