Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sinthanai Thooralgal
Sinthanai Thooralgal
Sinthanai Thooralgal
Ebook85 pages24 minutes

Sinthanai Thooralgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தரம் ஒன்றே நிரந்தரம்
ஜெயம் ஒன்றே எந்திரம்
பலம் ஒன்றே மந்திரம்
சோடா பாட்டிலைத் திறந்தவுடன் அது நொங்கும் நுரையுமாய் பொங்கி வரும். ஆனால், சிறிது நேரத்தில் பாட்டிலில் பாதி அளவில் வெறும் தண்ணீராய் அது நிற்கும். இப்படி சோடா பாட்டில் உற்சாகம் கொண்டவர்கள் பலர் தங்கள் வெற்றியை அடைய முடியாமல் எதிர்பாராத விதமாய்க் கிடைத்த உயர் பதவியையும் விட்டுவிடுகிறார்கள். இவர்களுக்காகத் தான் ஜெயதாரிணி அறக்கட்டளையின் சேவை தேவையாகிறது. தனியாக ஒன்று மட்டும் எந்தச் சிறந்த பலனையும் அளிப்பதில்லை. இவ்வுலகில் இனாமாக எதுவும் கிடைப்பதில்லை. சிந்தனையும் உழைப்பும் சேரும் போதுதான் அங்கே ஒருமித்த பலன்கள் கிடைக்கின்றன. வெற்றிக்கு உழைப்புதான் குறுக்கு வழி என திடமாக நம்ப வேண்டும். அப்போதுதான் நேரடிச் சிந்தனை உதயமாகும். அதில் கிடைப்பதுதான் வெற்றி.
எனவே வேறுவழிச் சிந்தனைகளை மறந்து விடுங்கள். இந்த 'சிந்தனைத் தூறல்கள்' யாரையும் கெடுக்காத ஒரு உயர்ந்த படைப்பு. இச்சிறு நூலினை எழுதிய பாவை கண்ணதாசன் இளவயதிலேயே தமிழ்ச் சோலைக்குள் புகும் வாய்ப்பைப் பெற்ற பாக்கியசாலி என்பதை நூலினைப் படிக்கும் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குள் இது போன்ற பயனுள்ள நூலினை எழுத வேண்டும் என்ற சிந்தனை வளரும்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580131105021
Sinthanai Thooralgal

Read more from Jayadhaarini Trust

Related to Sinthanai Thooralgal

Related ebooks

Reviews for Sinthanai Thooralgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sinthanai Thooralgal - Jayadhaarini Trust

    http://www.pustaka.co.in

    சிந்தனைத் தூறல்கள்

    Sinthanai Thooralgal

    Author:

    பாவை கண்ணதாசன்

    Paavai Kannadasan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியருரை

    பொன்னான காலத்தை எனக்களித்து

    பொன்மொழிகளைப் புனைவதற்கு

    உறுதுணையாக இருந்த

    இறைவனின் பொற்பாதங்களில்

    இந்த நூலினைச் சமர்ப்பிக்கிறேன்.

    தமிழ் எழுத்துச் சுரங்கத்தில்

    பொன் மொழிகளைத் தோண்டியெடுக்கத்

    துணை புரிந்த தூய உள்ளங்களுக்கு என்

    உளமார்ந்த நன்றி.

    பாவை கண்ணதாசன்

    பதிப்புரை

    தரம் ஒன்றே நிரந்தரம்

    ஜெயம் ஒன்றே எந்திரம்

    பலம் ஒன்றே மந்திரம்

    சோடா பாட்டிலைத் திறந்தவுடன் அது நொங்கும் நுரையுமாய் பொங்கி வரும். ஆனால், சிறிது நேரத்தில் பாட்டிலில் பாதி அளவில் வெறும் தண்ணீராய் அது நிற்கும். இப்படி சோடா பாட்டில் உற்சாகம் கொண்டவர்கள் பலர் தங்கள் வெற்றியை அடைய முடியாமல் எதிர்பாராத விதமாய்க் கிடைத்த உயர் பதவியையும் விட்டுவிடுகிறார்கள். இவர்களுக்காகத் தான் ஜெயதாரிணி அறக்கட்டளையின் சேவை தேவையாகிறது. தனியாக ஒன்று மட்டும் எந்தச் சிறந்த பலனையும் அளிப்பதில்லை. இவ்வுலகில் இனாமாக எதுவும் கிடைப்பதில்லை. சிந்தனையும் உழைப்பும் சேரும் போதுதான் அங்கே ஒருமித்த பலன்கள் கிடைக்கின்றன. வெற்றிக்கு உழைப்புதான் குறுக்கு வழி என திடமாக நம்ப வேண்டும். அப்போதுதான் நேரடிச் சிந்தனை உதயமாகும். அதில் கிடைப்பதுதான் வெற்றி.

    எனவே வேறுவழிச் சிந்தனைகளை மறந்து விடுங்கள். இந்த 'சிந்தனைத் தூறல்கள்' யாரையும் கெடுக்காத ஒரு உயர்ந்த படைப்பு. இச்சிறு நூலினை எழுதிய பாவை கண்ணதாசன் இளவயதிலேயே தமிழ்ச் சோலைக்குள் புகும் வாய்ப்பைப் பெற்ற பாக்கியசாலி என்பதை நூலினைப் படிக்கும் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குள் இது போன்ற பயனுள்ள நூலினை எழுத வேண்டும் என்ற சிந்தனை வளரும்.

    கே. பத்மநாபன்

    சிந்தனைத் தூறல்கள்

    அமர்வது சிம்மாசனமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்காமல், நீ அமர்ந்த பின் அந்த இடம் சிம்மாசனமாக மாற வேண்டும் என்று மனத்தில் கொள்.

    ***

    அடையும் துயரத்தின் உயரத்தைப் பொறுத்தே நாம் அடையும் வெற்றியின் உயரமும் வேறுபடுகிறது.

    ***

    வயலில் விதைத்த வித்துகள் கூட வீணாகப்போய் விடலாம்! ஆனால் உழைப்பில் விதைத்த வியர்வை வித்துகள் சாதனைகளை அறுவடை செய்தே தீரும்!

    ***

    வாழ்க்கை அழகிய கவிதை! அதை ரசிக்கத் தெரிய வில்லையென்றால், அதுவே நம்மை உதைக்கும் கழுதையாகி விடும்.

    ***

    சந்தர்ப்பங்கள் அமையவில்லையென்று சலனப் படாதே! சந்தர்ப்பத்தை நீயே உருவாக்கிடு! சாதனைப் புத்தகத்தில் உன் பெயரை அதுவே தன் செலவில் அச்சாக்கும்.

    ***

    'வாக்கிங்' உடல் நலத்திற்கு நல்லது. வாக்களிப்பது நாட்டு நலத்திற்கு நல்லது.

    ***

    நம்முடைய வாய் வீச்சு வீச்சரிவாளாக இருந்தால், வெட்டு நமக்குத்தான் விழும்.

    ***

    வாக்கு என்னும் தீக்குச்சியைக் கொண்டு ஜோதியை ஏற்றுங்கள்! தயவுசெய்து ஜாதியை ஏற்றி வீடாதீர்கள்!

    ***

    உன்னுடைய ஆற்றலை அளந்து பார்க்கும் சக்தியாகக் கல்வியை நினைக்காதே! உன் அறிவை ஆழமாகவும் அகலமாகவும் மாற்றும் சக்தியாக நினை.

    ***

    உலகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1