Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ungal Uyarvu... Ungal Kaiyil...
Ungal Uyarvu... Ungal Kaiyil...
Ungal Uyarvu... Ungal Kaiyil...
Ebook176 pages1 hour

Ungal Uyarvu... Ungal Kaiyil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுய முன்னேற்றச் சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. சுய முன்னேற்றச் சிந்தனை இல்லாமல் ஒரு மனிதன் முன்னேற்றத்தை வாழ்வில் காண முடியாது. எந்த ஒரு புகழ்மிக்க மனிதராகட்டும் அவர் மனதில் ஒரு காலத்தில் “சுய முன்னேற்றச் சிந்தனை” எனும் ஒரு விதை விழுந்த பிறகுதான் ‘உழைப்பு’ எனும் நீர் ஊற்றப்பட்டு ‘வாய்ப்புகள்’ எனும் உரம் ஏற்றப்பட்டு காலப்போக்கில் அவரால் வெற்றிக் கனியைப் பறிக்க முடிகிறது.

சுய முன்னேற்றக் கருத்துக்களை நிறைய எழுத வேண்டும் எனும் ஆவலை எனக்குள் தூண்டியவர்களுள் திரு. தமிழ்வாணன், அவர்தம் குமாரர் திரு. லேனா தமிழ்வாணன், திரு. எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் நூல்கள் ஒவ்வொன்றையும் “கருத்துக் கருவூலங்கள்” என்று சொல்லலாம்.

மேலும் இதில் வந்துள்ள கட்டுரைகள் பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி ஆகியவற்றில் வெளிவந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் வெளியான பத்து நாட்களுக்குள் சென்னையிலிருந்தும் மற்றும் எங்காவது தொலை தூரத்தில் வசிக்கும் வாசகர்களிடமிருந்தும், “உங்கள் கட்டுரை எனக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி” என்றெல்லாம் எழுதிக் கடிதம் வரும். அவற்றைப் பார்த்த நான் உண்மையிலேயே பூரித்துப் போய் விடுவேன். சுய முன்னேற்றக் கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரிடமும் செலுத்தப்பட்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். மலர்ச்சி ஏற்படும். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாறுபாடும், மலர்ச்சியும் ஏற்பட்டால் பிறகு அங்கு சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் யாரைக் கேட்க வேண்டும்?

இந்நூலில் அடங்கியுள்ள சுயமுன்னேற்றக் கருத்துக்கள் நிச்சயமாக இதைப் படிக்கும் வாசகர்களின் ஆழ்மனதில் புகுந்து ஓர் இனிய மாறுபாட்டினை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

கீதா தெய்வசிகாமணி

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580134805862
Ungal Uyarvu... Ungal Kaiyil...

Read more from Geetha Deivasigamani

Related to Ungal Uyarvu... Ungal Kaiyil...

Related ebooks

Reviews for Ungal Uyarvu... Ungal Kaiyil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ungal Uyarvu... Ungal Kaiyil... - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    உங்கள் உயர்வு... உங்கள் கையில்...

    Ungal Uyarvu... Ungal Kaiyil...

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பணம் என்னடா... பணம் பணம்...

    2. தலைவலியா, போயே போச்சு!

    3. இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

    4. உங்க'ளவர்' உங்களுடனே!

    5. அந்த அரை மணி நேரம்

    6. வார்த்தைகளில் தேன் தடவி...

    7. வேண்டாமே இந்த அவசரம்!

    8. உங்கள் திறமைகளை துருப்பிடிக்க விடலாமா?

    9. மாமனாருக்கு ஒரு சேதி

    10. மாமியாருக்கு ஒரு சேதி...

    11. கணவன்-மனைவி உறவுகள் பலப்பட...

    12. மனதாரப் பாராட்டுங்கள்

    13. நேரமே கிடைக்கலே

    14. புத்துணர்வுடன் சமைக்கலாமே!

    15. நல்ல மருமகள்

    16. உங்களுக்குத் தேவை ஓர் உயர்ந்த குறிக்கோள்

    17. சுகம் தரும் சுறுசுறுப்பு

    18. பரீட்சை நெருங்கியாச்சு...

    19. விருந்துக்குப் போகிறீர்களா?

    20. குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...

    21. உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டீர்களா?

    22. குழந்தைகளை மிரட்டும் தாய்மார்களே... புத்தகப் படிப்பே வாழ்க்கை அல்ல!

    23. இளமையின் ரகசியம் நடைப்பயிற்சி

    24. காலை 6 மணிக்கு மேல் எழுந்திராவிட்டால்...

    25. 40ஐ 16-க்குப் புரிய வைப்பது எப்படி?

    26. அந்த '12 வயது' மாற்றத்தில்

    27. பி.ஏ. வேலையில் பிரகாசிக்க...

    28. மறுமணம் செய்து கொண்ட ஆண் தன் புது மனைவியிடம் நாகரிகமாக நடந்து கொள்வது எப்படி?

    29. அடுத்தாத்து அம்புஜங்கள்

    30. சாப்பாட்டில், விளையாட்டில் உங்கள் குழந்தைகளை எப்படி பயிற்றுவிப்பீர்கள்?

    31. இல்லத்தரசிகளின் இரண்டெழுத்து மந்திரம்

    32. சந்தோஷ மழை

    அணிந்துரை

    எழுத்தாளரின் எழுத்து வாரிசுகள் என்று விரலை மடக்குங்கள். உங்களுக்கு இருக்கும் விரல்களுக்கே வேலையிராது.

    நாடறிந்த நல்ல எழுத்தாளர் திருமதி லீலா கிருஷ்ணனின் அன்புமகள் திருமதி. கீதா தெய்வசிகாமணி தன் தாய் எடுத்துக் கொண்ட துறையிலிருந்து ஒரு படி மேலே போய்த் தன்னை ஒரு பத்திரிகையாளராகவும், வாழ்வு முன்னேற்றச் சிந்தனைகளை வழங்கும் எழுத்தாளராகவும் வளர்த்துக் கொண்டிருப்பது மகிழ்வைத் தருகிறது.

    இதே கீதாவின் திருமணத்திற்கு நான் சென்றிருக்கிறேன். அப்போது நினைக்கவில்லை, இந்த மணப்பெண் இப்படித் தன் நிலையில் இருக்கும் சக பெண்மணிகளுக்கும் சமூகத்தில் உள்ள மாமனார்களுக்கும், மாமியார்களுக்கும் பிராக்டிகலான டிப்ஸ்களைக் கொடுக்குமளவிற்கு எழுத்துலகில் வளருவார் என்று.

    இந்நூலில் எனக்கு மிகப் பிடித்த அம்சம், தன்னை ஒரு பெரிய ஞானோபதேசம் செய்யும் மாமணியாக உருவகித்துக் கொள்ளாமல் நல்ல நட்புறவுத் தோரணையுடன், ஓர் அக்கறை மிகுந்த சகோதரிபோல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறாரே, அது.

    அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து ஒரு நூல்கூட விலகிப் போய்விடக் கூடாது என்பதில் இந்நூலாசிரியர் காட்டியிருக்கும் அக்கறை என்னைக் கவர்ந்த மற்றோர் அம்சம்.

    நம்முடைய மனத் துன்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நம்முடைய வாழ்க்கைப் பார்வையில் (Outlook of life) உள்ள குறைதான் பெரிய காரணம் என்று நம்புபவன் நான். எனவே 'உங்கள் உயர்வு உங்கள் கையில்' என்பது எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா!

    கிட்டத்தட்ட இருபதாண்டுக் காலமாக மனிதர்கள் பழகும் விதம் (Behavioural Science) குறித்தே அதிகம் நான் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் மனிதர்களின் பலவீனங்கள் என்ன என்றெல்லாம் நான் புரிந்து வைத்திருக்கிற பகுதிகளைக் குறித்துதான் கீதா அதிகம் அலசியிருக்கிறார் என்பது என்னுள் மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது.

    நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறுபகுதியை மற்றவர்களுக்கென ஒதுக்கி வைத்துவிட்டால், அவர்களுக்கென்று செலவு செய்ய யோசனை வராது; அவர்களுடனான உறவும் கெடாது என்கிறார். நல்ல பார்வை, படுக்கை அறையைப் பழிவாங்கும் அறையாக ஆக்கிவிடக் கூடாது என்கிறார். எவ்வளவு கடுமையான விஷயங்களையும் தேன் தடவி அழகுறச் சொல்லிவிட முடியும் என்பதற்குச் சில நடைமுறையான உதாரணங்களைச் சொல்லியிருக்கிறார். இந்தச் சாமர்த்தியம் இல்லாததால்தானே பல பேர் இன்று அவதிப்படுகிறார்கள்!

    தலைக்கு அப்பாற்பட்ட (Above head) விஷயங்களை எடுத்துக் கொள்ளாதது பெரிய அறுதல். குழந்தைகளை நல்லபடி உருவாக்கி வளர்க்கும் கலை நுணுக்கங்களைப் பற்றி இவர் எழுதியிருப்பவற்றைப் படிக்கிற போது இனியொரு பிள்ளை பெற்று இதன்படி வளர்த்துப் பார்க்க வேண்டும் என்கிற தூண்டுதல் ஏற்படுகிறது. (என் மனைவி மனம் வைக்கமாட்டாள், தெரியும்! வீண் ஆசை!)

    அதிகாலை எழும் பழக்கம் பற்றி வற்புறுத்துவது எனக்கு மிகப் பிடித்துப்போன விஷயம். நேரமில்லை என்று சொல்கிறவர்களுக்கு நன்றாகவே சவுக்கடி கொடுத்திருக்கிறார். வாழ்க!

    16களில் இருப்பவர்களை காற்றாடிகள் என்று வருணித்ததும் இதற்கு அணி சேர்க்கிற மாதிரி உதாரணங்களைத் தந்ததும் பாராட்டுக்குரிய பார்வை. இதுவரை கேள்விப்பட்டிராத கோணங்கள்.

    கடனே என்று எழுதிப் பக்கங்களை நிரப்பாமல் நம் மன நலம் பற்றியும், நம் உடல் நலம் பற்றியும் மிகவும் அக்கறைப்பட்டிருக்கிறார். பாராட்டுகிறேன்.

    பெண்கள், வாழ்வு முன்னேற்றச் சிந்தனைகளைப் பற்றி எழுதுவது அபூர்வமாக உள்ள இந்தத் தமிழ்கூறு நல்லுலகத்தில், கீதா தெய்வசிகாமணியின் இந்த முயற்சியை நாம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும்.

    உங்கள் சார்பாய் இதய வாழ்த்துக்கள்!

    16.03.1998

    சென்னை - 10

    அன்பன்

    லேனா தமிழ்வாணன்

    முன்னுரை

    சுய முன்னேற்றச் சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. சுய முன்னேற்றச் சிந்தனை இல்லாமல் ஒரு மனிதன் முன்னேற்றத்தை வாழ்வில் காண முடியாது. எந்த ஒரு புகழ்மிக்க மனிதராகட்டும் அவர் மனதில் ஒரு காலத்தில் சுய முன்னேற்றச் சிந்தனை எனும் ஒரு விதை விழுந்த பிறகுதான் 'உழைப்பு' எனும் நீர் ஊற்றப்பட்டு 'வாய்ப்புகள்' எனும் உரம் ஏற்றப்பட்டு காலப்போக்கில் அவரால் வெற்றிக் கனியைப் பறிக்க முடிகிறது.

    சுய முன்னேற்றக் கருத்துக்களை நிறைய எழுத வேண்டும் எனும் ஆவலை எனக்குள் தூண்டியவர்களுள் திரு. தமிழ்வாணன், அவர்தம் குமாரர் திரு. லேனா தமிழ்வாணன், திரு. எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் நூல்கள் ஒவ்வொன்றையும் கருத்துக் கருவூலங்கள் என்று சொல்லலாம்.

    மேலும் இதில் வந்துள்ள கட்டுரைகள் பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி ஆகியவற்றில் வெளிவந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் வெளியான பத்து நாட்களுக்குள் சென்னையிலிருந்தும் மற்றும் எங்காவது தொலை தூரத்தில் வசிக்கும் வாசகர்களிடமிருந்தும், உங்கள் கட்டுரை எனக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி என்றெல்லாம் எழுதிக் கடிதம் வரும். அவற்றைப் பார்த்த நான் உண்மையிலேயே பூரித்துப் போய் விடுவேன். சுய முன்னேற்றக் கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரிடமும் செலுத்தப்பட்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். மலர்ச்சி ஏற்படும். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாறுபாடும், மலர்ச்சியும் ஏற்பட்டால் பிறகு அங்கு சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் யாரைக் கேட்க வேண்டும்?

    இந்நூலில் அடங்கியுள்ள சுயமுன்னேற்றக் கருத்துக்கள் நிச்சயமாக இதைப் படிக்கும் வாசகர்களின் ஆழ்மனதில் புகுந்து ஓர் இனிய மாறுபாட்டினை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

    ஒரு பெண்ணிற்கு அதிலும் ஒரு குடும்பத் தலைவிக்கு எழுதுவதற்கு ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் மட்டும் போதாது. அவளது கருத்துக்கள் உலகத்திற்கு வரவேண்டுமென்றால், அவளது கணவரின் அன்பான தூண்டுதலும், ஒத்துழைப்பும் மிகவும் தேவை. உடனிருந்து ஊக்கம் கொடுத்து வரும் என் கணவர் வழக்கறிஞர் திரு என். தெய்வசிகாமணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    எழுத்தார்வத்தினை என் இரத்தத்தில் ஊட்டிய என் தாயார் நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன் அவர்களையும், என் எழுத்துலக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும் என் தந்தை பொறியியல் வல்லுநர் திரு. எம். பாலகிருஷ்ணன் அவர்களையும், என் பெற்றோராகப் படைத்த அந்த இறைவனுக்கு என்றென்றும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    அணிந்துரை வழங்கி நூலை சிறப்பித்த திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு என் இதயங் கனிந்த நன்றி.

    நன்றி. வணக்கம்!

    8, 8ஆவது ட்ரஸ்ட் குறுக்குத் தெரு,

    மந்தைவெளியாக்கம்,

    சென்னை - 600 028

    போன்:4933886, 4941481.

    கீதா தெய்வசிகாமணி

    1

    பணம் என்னடா... பணம் பணம்...

    ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட என் நெருங்கிய தோழி நித்யா அண்மையில் சென்னை வந்திருந்தாள். எப்போது அவள் வந்தாலும் அவள் வீட்டிற்கு நானும், என் வீட்டிற்கு அவளும், ஒரு விஸிட் அடித்து, போன கதை வந்த கதையெல்லாம் பேசி மகிழ்வதுண்டு. இம்முறை வழக்கம்போல அவள் வீட்டிற்கு விஸிட் செய்தேன். அவளது ஒன்றுவிட்ட தங்கை ஷீலா பற்றி விசாரித்தேன். பள்ளியில் நாங்கள் மூவரும் ஒரே கிளாஸ் மெட்ஸ். ஷீலாவும் அமெரிக்காவில் மற்றொரு பகுதியில் செட்டிலாகி இருந்தாள். அவளைப் பற்றி நான் கேட்டதும், அவளைப் பற்றி இப்போ என்ன? என்று ரொம்பவும் சுவாரஸ்யம் இல்லாதவள் போல் அவள் பேசிய விதம், எனக்குள் ஒரு சுவாரஸ்யத்தைத் தூண்ட, தூண்டித் துருவி என்னடி ஆச்சு உங்களுக்குள்? என்று விசாரித்தேன்.

    அவள் கூறிய விதத்திலிருந்து நூல் ஊடாடாத அவர்கள் உறவையும், நட்பையும் பணம் ஊடாடிக் கெடுத்த விவரம் புரிந்தது. அவசரத்திற்கு உதவிய ஒரு சிறு தொகைக்காக கொடுத்த ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1