Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhga Manamakkal
Vazhga Manamakkal
Vazhga Manamakkal
Ebook95 pages29 minutes

Vazhga Manamakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"வாழ்க மணமக்கள்" என்கிற இந்தத் திருமண பரிசளிப்பு நூல் எனது நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே “மணப்பெண்ணே உனக்காக" என்கிற எனது நூலில் மணமகள் அதாவது இளம் குடும்பத்தலைவி தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை, அழகுக் குறிப்பிலிருந்து அடுப்படி அட்வைஸ் வரை எழுதி, வாசகர்களாகிய உங்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று தற்போது ஏழாவது பதிப்பைத் தொட்டு விட்டது. நன்றி.

பொதுவாக உத்தியோகமாகட்டும் சுய தொழிலாகட்டும் தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை குடும்ப அமைதி, நிம்மதியான குடும்ப அமைப்பு உள்ளவர்கள் சாதித்தது ஏராளம். குடும்ப அமைதிக்குத் தேவை கணவன் மனைவி ஒற்றுமை, அன்யோன்யம். தங்களது இல்வாழ்க்கை இனிமையாக அன்பு பெருகி இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத தம்பதியரே இருக்க முடியாது. சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும், அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாகவே குடும்ப வாழ்வு இனிமையாக அமையும். இந்த நூல் உங்களுக்காகவே... உங்கள் இருவரின் நிம்மதியான மணவாழ்விற்காகவே எழுதப்பட்ட நூல். இந்த நூலை... “கற்க... அதன்படி நிற்க" என்று கேட்டுக் கொள்கிறேன்.

புத்தகத்தைப் படித்துப் பயன்பெற்ற இனிய தம்பதியினர் அவர்களது கருத்துக்களை எனக்கு எழுதினால் அடுத்தடுத்த பதிப்புக்களில் இடம் பெறச் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

"வாழ்க மணமக்கள்"

“நீடூழி வாழ்க நிம்மதியுடன்"

கீதா தெய்வசிகாமணி

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580134805841
Vazhga Manamakkal

Read more from Geetha Deivasigamani

Related to Vazhga Manamakkal

Related ebooks

Reviews for Vazhga Manamakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhga Manamakkal - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    வாழ்க மணமக்கள்

    Vazhga Manamakkal

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    இல்லறத்தை நல்லறமாக நடத்தி வாழ்வில் வெற்றி கண்ட எனது பெற்றோர் தெய்வத் திரு.மா.பாலகிருஷ்ணன் (பொறியாளர்) தெய்வத் திருமதி லீலா கிருஷ்ணன் (நாவலாசிரியை) இருவருக்கும் இந்த வாழ்க மணமக்கள் எனும் நூலை சமர்ப்பிக்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    என்னுரை

    வாழ்க மணமக்கள் என்கிற இந்தத் திருமண பரிசளிப்பு நூல் எனது நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே மணப்பெண்ணே உனக்காக என்கிற எனது நூலில் மணமகள் அதாவது இளம் குடும்பத்தலைவி தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை, அழகுக் குறிப்பிலிருந்து அடுப்படி அட்வைஸ் வரை எழுதி, வாசகர்களாகிய உங்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று தற்போது ஏழாவது பதிப்பைத் தொட்டு விட்டது. நன்றி.

    பொதுவாக உத்தியோகமாகட்டும் சுய தொழிலாகட்டும் தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை குடும்ப அமைதி, நிம்மதியான குடும்ப அமைப்பு உள்ளவர்கள் சாதித்தது ஏராளம். குடும்ப அமைதிக்குத் தேவை கணவன் மனைவி ஒற்றுமை, அன்யோன்யம். தங்களது இல்வாழ்க்கை இனிமையாக அன்பு பெருகி இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத தம்பதியரே இருக்க முடியாது. சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும், அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாகவே குடும்ப வாழ்வு இனிமையாக அமையும். இந்த நூல் உங்களுக்காகவே... உங்கள் இருவரின் நிம்மதியான மணவாழ்விற்காகவே எழுதப்பட்ட நூல். இந்த நூலை... கற்க... அதன்படி நிற்க என்று கேட்டுக் கொள்கிறேன்.

    எழுத்துலகில் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி உதவிக்கரம் கொடுத்துவரும் அன்பு கணவர் வழக்கறிஞர் திரு.தெய்வசிகாமணி அவர்களுக்கு நன்றி.

    புத்தகத்தைப் படித்துப் பயன்பெற்ற இனிய தம்பதியினர் அவர்களது கருத்துக்களை எனக்கு எழுதினால் அடுத்தடுத்த பதிப்புக்களில் இடம் பெறச் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

    வாழ்க மணமக்கள்

    நீடூழி வாழ்க நிம்மதியுடன்

    அன்புடன்

    கீதா தெய்வசிகாமணி

    05.06.2012

    எண்: 23, அபிநவ் பேலஸ்

    ஜெத் நகர் முதல் மெயின் ரோடு

    மந்தவெளி

    சென்னை - 600028

    போன்: 044-24933886

    பொருளடக்கம்

    1. இல்வாழ்க்கை இன்பமாய் இனிக்க...

    2. புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே!...

    3. இளம் மனைவிக்கு... ஒரு சேதி

    4. உங்கள் கணவர் உங்கள் கைக்குள்

    5. இல்லமே ஆலயம் உள்ளமே சன்னிதானம்!

    6. இன்றைய மாமியார்கள் மருமகள்களை மெச்ச வேண்டுமென்றால்...

    7. கன்னிகாதானம் செய்யவிருக்கும் பெற்றோரே!

    8. வேலைக்குச் செல்லும் பெண்ணா நீங்கள்?

    9. உறவுப் பாலம் உங்கள் கையில்

    10. புது மாப்பிள்ளைக்குப் பத்து கட்டளைகள்

    11. முறுக்கு மாப்பிள்ளையே... கொஞ்சம் உங்க காதைக் கொடுங்க... ப்ளீஸ்

    12. பட்ஜெட்டைத் தாண்டி விலைவாசி ஏறும் போது...

    13. எழாவிடில் பயனில்லை

    14. காலை எழுந்தவுடன் படிப்பு

    15. உங்கள் இல்லத்திற்கு அஷ்டலெக்ஷ்மிகளும் இஷ்டமுடன் வரவேண்டுமா?

    16. சேமிக்கலாமே!

    17. தினசரி தியான ஸ்லோகங்கள்

    18. தம்பதியினருக்குள் ஒற்றுமை வலுப்பட

    19. வதனமே... சந்திர பிம்பமோ!

    20. இளம் இல்லத்தரசிக்கு சில ஆரோக்கியக் குறிப்புகள்

    21. தாயாகப் போகிறீர்களா?

    22. பாலூட்டும் அம்மாவுக்காக...

    23. முத்தான மூன்று விஷயங்கள்

    1. இல்வாழ்க்கை இன்பமாய் இனிக்க...

    தங்கள் இல்வாழ்க்கை இன்பமாய் இனிக்க வேண்டும் என்று எந்தத் தம்பதியினருக்குத்தான் ஆசை இருக்காது? சில சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தாலே போதும். மொத்தத்தில் சின்னச்சின்ன பிரச்சினைப் பனித்துளிகள் உங்கள் இருவரின் ஆழமான அன்பு எனும் ஒளியின் முன் மாயமாய் மறைந்துவிடும்.

    சரி... கணவன் மனைவி உறவு பலப்பட என்ன செய்ய

    Enjoying the preview?
    Page 1 of 1