Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urchagam Ungal Kaiyil
Urchagam Ungal Kaiyil
Urchagam Ungal Kaiyil
Ebook182 pages1 hour

Urchagam Ungal Kaiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 'உற்சாகம்' என்பது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைத் தொற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று. வீட்டில் ஒருவர் உற்சாகத்துடன் கலகலப்பாக செயல்பட்டால்கூட நிச்சயம் அது அந்த வீட்டு அங்கத்தினர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டு அந்த வீட்டையே களிப்புக் கடலில் ஆழ்த்திவிடும்.

ஒரு வேலையாகட்டும், பிரச்சினையாகட்டும் உற்சாகத்துடன் அதை அணுகும் போது அந்த வேலைப்பளு பாதி குறைந்துவிட்டது போலத் தோன்றும். உற்சாகமின்றி ஒருவித மலைப்புடன் அதை அணுகும்போது அதே வேலை இரட்டிப்பு பளுவுடன் தோன்றும். இந்த உற்சாகத்தை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவரவர் உள்ளத்தில் சுய முன்னேற்ற சிந்தனை மூலம் ஊற்றெடுக்கச் செய்யலாம். ஒருவரது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருப்பவை உற்சாகமின்மை, சுறுசுறுப்பின்மை, முயற்சியின்மை போன்ற சில இன்மைகளே. ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு முயற்சியுடன், குறிப்பாக உற்சாகத்துடன் வெற்றிப்படிகளில் ஏறத் தொடங்குங்கள். கூடிய விரைவில் நீங்கள் சாதனைச் சிகரத்தைத் தொட்டு சாதனையாளராக உலகத்தவர் முன் புகழ் மாலை சூட்டப்படுவீர்கள். இது உறுதி.

எனது சுயமுன்னேற்ற நூல்களைப் படித்து அன்புடனும் ஆர்வத்துடனும் எனக்குக் கடிதங்கள் எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டும் வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி! வணக்கம்!

கீதா தெய்வசிகாமணி

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580134805840
Urchagam Ungal Kaiyil

Read more from Geetha Deivasigamani

Related to Urchagam Ungal Kaiyil

Related ebooks

Reviews for Urchagam Ungal Kaiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urchagam Ungal Kaiyil - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    உற்சாகம் உங்கள் கையில்

    Urchagam Ungal Kaiyil

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 'உற்சாகம்' என்பது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைத் தொற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று. வீட்டில் ஒருவர் உற்சாகத்துடன் கலகலப்பாக செயல்பட்டால்கூட நிச்சயம் அது அந்த வீட்டு அங்கத்தினர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டு அந்த வீட்டையே களிப்புக் கடலில் ஆழ்த்திவிடும்.

    ஒரு வேலையாகட்டும், பிரச்சினையாகட்டும் உற்சாகத்துடன் அதை அணுகும் போது அந்த வேலைப்பளு பாதி குறைந்துவிட்டது போலத் தோன்றும். உற்சாகமின்றி ஒருவித மலைப்புடன் அதை அணுகும்போது அதே வேலை இரட்டிப்பு பளுவுடன் தோன்றும். இந்த உற்சாகத்தை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவரவர் உள்ளத்தில் சுய முன்னேற்ற சிந்தனை மூலம் ஊற்றெடுக்கச் செய்யலாம். ஒருவரது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருப்பவை உற்சாகமின்மை, சுறுசுறுப்பின்மை, முயற்சியின்மை போன்ற சில இன்மைகளே. ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு முயற்சியுடன், குறிப்பாக உற்சாகத்துடன் வெற்றிப்படிகளில் ஏறத் தொடங்குங்கள். கூடிய விரைவில் நீங்கள் சாதனைச் சிகரத்தைத் தொட்டு சாதனையாளராக உலகத்தவர் முன் புகழ் மாலை சூட்டப்படுவீர்கள். இது உறுதி.

    எழுத்தார்வத்தினை என் இரத்தத்தில் ஊட்டிய என் தாயார் நாவலாசிரியை திருமதி லீலாகிருஷ்ணன் அவர்களுக்கும், என் எழுத்துலகப் பணியில் என்றும் துணைக்கரம் கொடுத்து வரும் என் கணவர் வழக்கறிஞர் திரு. என். தெய்வசிகாமணி அவர்களுக்கும் என் இதயபூர்வ நன்றி.

    அட்டைப்பட ஓவியம் வழங்கி இந்த நூலிற்கு பெருமை சேர்த்த திரு. மணியம் செல்வன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    எனது சுயமுன்னேற்ற நூல்களைப் படித்து அன்புடனும் ஆர்வத்துடனும் எனக்குக் கடிதங்கள் எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டும் வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி! வணக்கம்!

    கீதா தெய்வசிகாமணி

    2, 8-வது ட்ரஸ்ட் குறுக்கு தெரு

    மந்தவெளிப்பாக்கம், சென்னை-28

    போன்: 4933886-4611907

    சமர்ப்பணம்

    உற்சாகம் உங்கள் கையில் எனும் இந்த சுய முன்னேற்றக் கட்டுரைத் தொகுப்பினை என் தந்தையார் பொறியியல் வல்லுனர் திரு. எம். பாலகிருஷ்ணன் அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி

    பொருளடக்கம்

    1. உறவுப்பாலம் உங்கள் கையில்

    2. 50 வயதிலும் கணவனை 'ஐ லவ் யூ' சொல்ல வைக்க!

    3. இன்று மாமியார்கள் மருமகள்களை மெச்ச வேண்டுமென்றால்...

    4. தோப்பில் தனிமரமாய்...

    5. ஏன் இந்த இரண்டாவது வார்த்தை!

    6. நாற்காலி மனிதர்கள்

    7. விழுவது மீண்டும் எழுவதற்காகவே!

    8. அம்மாவுக்கு ஒரு சேதி.

    9. உள்ளதை உள்ளபடி சொல்லலாமா?

    10. மெகா தொடர்களும் மகா இடர்களும்

    11. உங்கள் டைரியின் நாளைய பக்கம்

    12. வானத்திலிருந்து இறங்கியவர்கள்

    13. இளமையை இழுத்துப் பிடிக்கலாமே!

    14. பண்டிகைக் காலம் தயாராகிவிட்டீர்களா?

    15. இசையின் சந்நிதி நெஞ்சுக்கு நிம்மதி

    16. தாய்மொழி போல ஆகுமா?

    17. யோகாசனம் கற்கலாமே!

    18. உற்சாகம் உங்கள் கையில்...

    19. உரையாடலும் ஒரு கலைதான்

    20. டென்ஷன்... டென்ஷன்

    21. தேடித் தேடி இளைத்தேனே...

    22. கல்யாணத்தில் கண்மூடித்தனமான வேகம் வேண்டாம்!

    23. உங்கள் குழந்தைக்கு கூச்ச சுபாவமா?

    24. கம்ப்யூட்டர் யுகத்தில் மூட்டைப் பாடங்கள் தேவையா?

    25. இடம் கிடைக்காவிட்டால் என்ன?

    26. உங்கள் பெண்ணிற்கு டீன்ஏஜா?

    27. உங்கள் கணவர் ரிடையர் ஆகப் போகிறாரா?

    28. ஒரே குட்டையில் ஊற வேண்டுமா?

    29. மிரட்டும் மே மாதச் செலவை மேய்ப்பது எப்படி...?

    30. கணவரைத் தேர்ந்தெடுக்க டிப்ஸ்

    31. பாலூட்டும் அம்மாக்களுக்கு டிப்ஸ்

    32. பயணக் குறிப்புகள்

    1. உறவுப்பாலம் உங்கள் கையில்

    திரைப்படத்தின் இண்டர்வெல் நேரம். அந்த ஏஸி தியேட்டரின் குளுகுளுக் காற்று பாய்ந்த உடம்பிற்கு கதகதப்பாகக் காப்பி தேவையாக இருக்க அந்த எக்ஸ்பிரஸோ காப்பி கவுண்டரை நோக்கி நடக்கிறேன்.

    என்னைப் போலவே காப்பி கவுண்டரை நோக்கி விரைந்து வருவது... பவானி மாதிரி தெரிகிறதே...ஓ... பவானியேதான். பவானி என் கல்லூரித் தோழி. தூரத்து உறவும்கூட. முன்னைக் காட்டிலும் மெலிந்து ஒடுங்கி ஒரு ஐந்து வயது கூடிய மாதிரி தெரிகிறாள்.

    ஹாய்... பவானி எங்கேடி இவ்வளவுதூரம் அதிசயமாய்? ஆளே என்னவோபோல இருக்கே.

    ஒரு சேஞ்சுக்கு நானும் சித்தியும் வந்தோம். சித்தி உள்ளே இருக்காங்க.

    காப்பியைப் பருகியபடியே உரையாடல் தொடர்கிறது.

    என்னடி இப்படி ஆயிட்டே?

    வேறே என்னடி... வீட்டிலே நிம்மதி இல்லை. நானும் என் கணவரும் எவ்வளவோ அன்னியோன்யமாதான் இருக்கோம். வீட்டுப் பெரியவங்களாலேதான் பிரச்னையே.

    அகப்பட்ட அந்த ஐந்து நிமிடங்களுக்குள் தன்னுடைய ஆற்றாமைக்கு என்மூலம் வடிகால் தேடுகிறாள் பவானி.

    வீட்டிற்கு வந்தபிறகும் பவானி கூறிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

    வீட்டுப் பெரியவர்கள்...

    பல குடும்பங்களில் உறவில் விரிசல் ஏற்பட்டு உறவுப் பாலத்தில் பிளவு ஏற்படுவது வீட்டிலுள்ள பெரியவர்களாலேதான் என்பது பிரச்னையை ஆழமாக அலசி நோக்கினால் புலப்படும். அவர்கள் நினைத்திருந்தால் பிரச்னையே ஏற்படாமல், ஏற்பட்டிருந்தாலும் வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக, பல குடும்பங்களில் கருத்து வேறுபாடு எனும் விதை போட்டு, வார்த்தைகளால் உரமிட்டு, கண்ணீரால் நீர் ஊற்றி பிரச்னைச் செடியை மரமாக, விருட்சமாக தங்களால் இயன்ற அளவு வளர்த்து விட்டிருப்பார்கள். முடிவில் உறவுகள் அவர்களைப் பார்த்து ஒதுங்கிப் போக, உறவு எனும் மர நிழலில் ஒதுங்க இடமின்றி, ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பார்கள்.

    குடும்பத்தில் பெரியவர்கள் தாயாகட்டும், தகப்பனாராகட்டும், மாமனாராகட்டும், மாமியாராகட்டும் தங்களது அடுத்த தலைமுறையினரிடம் உரையாடும் போது, அவர்களது பேச்சு அவர்கள் குடும்பத்தினரை அன்பு எனும் நூலால் கட்டிப்போடும் அஸ்திரமாக அமைய வேண்டும். மாறாக சில குடும்பங்களில் வீட்டுப் பெரியவர்களின் வார்த்தைகள் அன்பு எனும் நூலைக் கத்தரிக்கும் கத்திரிக்கோலாய் அமைகின்றன.

    உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

    சில வருடங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து வந்து தன் சகோதரியைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் விசாரிக்கும் மகனிடம், தனது மகள் வீட்டில் நடந்த நல்ல விஷயங்களை மறைத்து, என்றோ நடந்த உப்புப் பெறாத சண்டையை விவரிப்பது ஒரு நல்ல தாய்க்கு அழகல்ல. அவளது வார்த்தைகளால் மகன் மருமகன் உறவுப்பாலத்தில் மெல்லிய விரிசல் ஏற்பட்டு சமயங்களில் பிளவு வரை போய்விடுவதுண்டு.

    மருமகள், வீட்டிலில்லாத நேரத்தில் மகனிடம் என்னமோடா... நீதான் அவளைத் தலையிலே தூக்கி வைச்சுக்கிட்டு ஆடறே, அவ உன்னைக் கொஞ்சம்கூட மதிக்கிறதில்லே. தனது தாயின் தூப வார்த்தைகள் மகன் மனதினுள் புகையப் புகைய நாளடைவில் மகன்-மருமகள் உறவுப்பாலத்தில் இழைகள் தொய்வு விழ ஆரம்பிக்கின்றன.

    விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மகளிடம் வந்ததும் வராததுமாய் மருமகளைப் பற்றிய புகார்ப் பட்டியல். நீ வர்றேன்னு லெட்டர் போட்டே பாரு. உடனே முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டா. இந்த ஒரு வார்த்தை போதும் நாத்தனார் அண்ணி உறவில் பிரிவை ஏற்படுத்த. அண்ணிக்காக பார்த்துப் பார்த்து வாங்கிய பாலியஸ்டர் புடவை அப்படியே பெட்டிக்குள்ளேயே முடங்கிவிடும். அண்ணி யதார்த்தமாகப் பேசிய பேச்சுக்கள் குத்தல் பேச்சுக்களாக நாத்தனார் காதில் விழும். பிறகென்ன மகள் - மருமகள் உறவில் விரிசல்தான்.

    சில வீடுகளில் பேரன்களைப் பார்த்துப் பாட்டிமார்கள் சொல்லும் வார்த்தைகள் இவை. என்னடா படிக்கிறீங்க படிப்பு. அங்கே உங்க அத்தை வீட்டைப் போய்ப் பாருங்க. அவனுங்க படிக்கிற படிப்பு என்ன, மார்க் என்ன... மகள் வயிற்றுப் பேரன் பேத்திகளை உயர்த்தி, மகன் வயிற்றுப் பேரன் பேத்திகளைத் தாழ்த்தி (ஏனெனில் மருமகள் வயிற்றில் வந்து பிறந்ததால்) சொல்வதென்றால் சில பாட்டிமார்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நாளடைவில் அவர்கள் பேச்சு குழந்தைகள் மனதிலும் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்த, விடுமுறை நாட்களில் அவர்கள் ஒன்று சேரும்போது வீடு ஒரே குருக்ஷேத்திரம்தான்.

    இன்னும் சிலர் இருக்கிறார்கள். என்றோ வந்து எட்டிப் பார்க்கும் தனது தூரத்து உறவினரிடம் இந்த வீட்டிலே நான் தான் எல்லாம், சம்பளம் இல்லாத வேலைக்காரி என்று ஒரேயடியாய் அங்கலாய்ப்பார்கள். வந்தவர்கள் அதைக் கேட்டு, அடப் பாவமே... நீங்க வாழ்ந்த வாழ்க்கை என்ன? என்று சொல்வதைக் கேட்பதில் அப்படி ஒரு ஆனந்தம். இந்த உரையாடல்கள் உள்ளன்புடன் கவனித்து வரும் மருமகள் மனதில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்த, பிறகென்ன மாமியார் மருமகள் உறவில் விரிசல்தான்.

    சில வீடுகளில் மாமியார்கள் தங்கள் மருமகள் மீதுள்ள கோபத்தைக் காட்ட தன் பேரனிடமே என்னமோடா உங்கம்மா எங்கே உன்னைக் கவனிக்கிறா? கவனிச்சு வளர்த்திருந்தா இப்படிப் படிப்பியா? என்னமோ அவ வயித்திலே வந்து பிறந்து இப்படிக் கஷ்டப்படறே தன்னால் இயன்ற அளவு விஷ

    Enjoying the preview?
    Page 1 of 1