Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagu... Aarogyam... Ilamai
Azhagu... Aarogyam... Ilamai
Azhagu... Aarogyam... Ilamai
Ebook158 pages58 minutes

Azhagu... Aarogyam... Ilamai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகு... ஆரோக்கியம்... இளமை இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஆரோக்கியம் இருந்தால் அழகு தானாகவே வரும். ஆரோக்கியத்துடன் கூடிய அழகு இருந்தால் அங்கு இளமைப் பொலிவிற்குக் குறைவேது?

ஆரோக்கியத்துடன் கூடிய அழகும் இளமைத் தோற்றமும் இருந்தாலே நாம் சாதிக்க நினைக்கும் சாதனைகளில் பாதியை சாதித்தவர்கள் ஆகின்றோம். என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது. வாழ்வில் சாதனைபுரிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாமல் தேவைப்படுவது இந்த அழகு... ஆரோக்கியம்... இளமை.

ஆரோக்கியம் இருந்தாலே இயற்கை அழகு அங்கு மிளிரும். இயற்கை அழகை தரமான செயற்கை அழகு சாதனங்கள் மூலம் மெருகேற்றிக் கொண்டு எப்போதும் அழகு குறையாமல் பவனி வருவதும் ஒருவகைக் கலைதான். அக்கலையில் வல்லுநராக, உங்கள் அழகை மேம்படுத்த, ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்ள, இளமையை மெருகேற்ற பிரபல அழகுக்கலை நிபுணர்கள், ஆரோக்கிய வாழ்வு வாழ வழிகாட்டும் பிரபல மருத்துவர்கள், யோகாசனக் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை நூலாகத் தொகுத்து வெளியிடுவதில் பெருமைப்படுகின்றேன்.

இந்த நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு என்றென்றும் அழகு, ஆரோக்கியம், இளமை குறையாமலிருக்க வாழ்த்துக்கள்.

கீதா தெய்வசிகாமணி.

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580134805848
Azhagu... Aarogyam... Ilamai

Read more from Geetha Deivasigamani

Related to Azhagu... Aarogyam... Ilamai

Related ebooks

Reviews for Azhagu... Aarogyam... Ilamai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagu... Aarogyam... Ilamai - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    அழகு... ஆரோக்கியம்... இளமை

    Azhagu... Aarogyam... Ilamai

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    1. முகத்தில் முகம் பார்க்கலாம்!

    2. முகம் 'பளிச்' என இருக்க...

    3. அழகிய கண்ணே...

    4. 'பளீச்' பற்கள்

    5. லிப்ஸ்டிக்

    6. விரலோவியம்

    7. பாதப் பராமரிப்பு

    8. கண்கவர் கருங்கூந்தலுக்கு...

    9. பார்ட்டி மேக்கப்

    10. கோடைகால மேக்கப்

    11. அப்பப்பா... என்ன வெயில்...

    12. பெண்களுக்கு யோகா

    13. இயற்கை அழகே அழகு

    14. துளசி மருத்துவம்

    15. மருத்துவக் குறிப்புகள்

    16. உடல் நலத்திற்கும் அழகிற்கும் பச்சைக் காய்கறிகளும் பழங்களும்...

    17. எண்சாண் உடம்பிற்கு பயிற்சிகள்

    18. மழைக்கால நோய்களும் தடுப்பு முன்னெச்சரிக்கைகளும்

    19. ஆஸ்த்மா நோயா? அஞ்ச வேண்டாம்

    20. தவறாமல் போடுங்கள் தடுப்பூசி

    21. காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா?

    22. தினமும் கொஞ்சம் கடல் தண்ணீரைக் குடியுங்கள்

    23. உறவுக்குள் திருமணம் செய்வது தவறா?

    24. மாரடைப்பைத் தடுக்க முடியுமா?

    25. சம்மர் டயட்

    26. மருத்துவரிடம் போகிறீர்களா?

    27. உங்களுக்கு முதுகு வலியா?

    28. கண் பாதுகாப்பு

    29. அறுவை சிகிச்சை பிரசவமே ஆபத்தில்லாதது

    30. இனிக்கும் குரல் வேண்டுமா?

    31. படா படா பட்டாசு அட அடா சுட்டாச்சு

    32. முதுமையில் இளமை

    முன்னுரை

    அழகு... ஆரோக்கியம்... இளமை இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஆரோக்கியம் இருந்தால் அழகு தானாகவே வரும். ஆரோக்கியத்துடன் கூடிய அழகு இருந்தால் அங்கு இளமைப் பொலிவிற்குக் குறைவேது?

    ஆரோக்கியத்துடன் கூடிய அழகும் இளமைத் தோற்றமும் இருந்தாலே நாம் சாதிக்க நினைக்கும் சாதனைகளில் பாதியை சாதித்தவர்கள் ஆகின்றோம். என்னதான் திறமையும் உழைப்பும் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது. வாழ்வில் சாதனைபுரிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாமல் தேவைப்படுவது இந்த அழகு... ஆரோக்கியம்... இளமை.

    ஆரோக்கியம் இருந்தாலே இயற்கை அழகு அங்கு மிளிரும். இயற்கை அழகை தரமான செயற்கை அழகு சாதனங்கள் மூலம் மெருகேற்றிக் கொண்டு எப்போதும் அழகு குறையாமல் பவனி வருவதும் ஒருவகைக் கலைதான். அக்கலையில் வல்லுநராக, உங்கள் அழகை மேம்படுத்த, ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்ள, இளமையை மெருகேற்ற பிரபல அழகுக்கலை நிபுணர்கள், ஆரோக்கிய வாழ்வு வாழ வழிகாட்டும் பிரபல மருத்துவர்கள், யோகாசனக் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை நூலாகத் தொகுத்து வெளியிடுவதில் பெருமைப்படுகின்றேன்.

    இந்தப் புத்தகம் உருவாவதற்கு உதவியாக இருந்த ஒரு சிலருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். இதில் வெளிவந்துள்ள கட்டுரைகள், பேட்டிகள், மங்கை, வாசுகி, மலர் மல்லிகை போன்ற மகளிர் மாத இதழ்களில் வெளிவந்தவை என்பதால் தேர்வு செய்து வெளியிட்ட அந்தந்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி. பேட்டி கொடுத்த மருத்துவர்களான டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் (பல் சீரமைப்பு நிபுணர்), டாக்டர் ஜி.எஸ். கைலாஷ் (ஆஸ்த்மா நோய் நிபுணர்), டாக்டர் திருமதி ஞானசௌந்தரி (மகப்பேறு மருத்துவர்), டாக்டர் எஸ். செல்வகுமார் (அல்ஸர் நோய் மருத்துவர்), டாக்டர் எல். உமாபதி (குழந்தைகள் நல மருத்துவர்) டாக்டர் சாயி குமார் (இருதய நோய் நிபுணர்) ஆகியோருக்கும், அழகுக் கலை நிபுணர்கள் திருமதி ரமாராமசாமி (ரம்யாஸ் ப்யூட்டி பார்லர்) திருமதி கிரண்புடாணி (தாஜ் ஹோட்டல் அழகுக்கலை நிபுணர்) ஆகியோருக்கும், யோகாசனக் கலைஞர் திருமதி மேனகா தேசிகாச்சாரியார் (கிருஷ்ணமாச்சாரி யோக மந்திர்), டயட்டீஷியன் திருமதி செல்விராஜன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் எழுத்துலக வளர்ச்சியில் மிக்க உறுதுணையாக இருந்துவரும் என் கணவர் வழக்கறிஞர் என். தெய்வசிகாமணி, தாயார் நாவலாசிரிய லீலாகிருஷ்ணன், தகப்பனார் பொறியியல் கலைஞர் எம். பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பல்வேறு அலுவல்களுக்கிடையே இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

    இந்த நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு என்றென்றும் அழகு, ஆரோக்கியம், இளமை குறையாமலிருக்க வாழ்த்துக்கள்.

    நன்றி, வணக்கம்.

    8, 8 ஆவது ட்ரஸ்ட் குறுக்குத் தெரு,

    மந்தைவெளிப்பாக்கம்,

    சென்னை - 600 028.

    போன்: 493 38 86, 494 14 81.

    கீதா தெய்வசிகாமணி

    அணிந்துரை

    இறைவன் உலகில் அழகைப் படைப்பதில்தான் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான் என்று சொல்ல வேண்டும். கைபுனைந்து இயற்றா கவின் பெரும் ஓவியமாக உலகில் இயற்கையை கொள்ளை அழகாய்ப் படைத்தார்

    கொட்டும் அருவிகளிலும், அதன் இரு புறங்களில் பூத்துக் குலுங்கும் மரங்களிலும், மலை முகட்டிலும், மண்ணிலும் மரத்திலும் இறைவன் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் அழகைப் படைத்திருக்கிறார்.

    இயற்கை அழகுக்கு இணையாக மனிதர்களைப் படைத்து, அதில் பெண்களுக்கு அழகை அள்ளித் தெளிப்பதில் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

    பெண்மையின் அழகில் மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? முற்றும் துறந்த முனிவர்களும் தங்கள் தவவலிமையை பெண்மையின் கவர்ச்சியில் பறி கொடுத்திருக்கிறார்கள் என்று புராணம் கூறும்.

    சௌந்தர்யம், லாவண்யம், எழில், முருகு என்றெல்லாம் பல வகையில் பேசப்படும் அழகு, பெண்களின் அணிகலன்.

    பெண்களுக்குக் கல்வி அழகுதான் அழகு என்று கவிஞர்கள் கூறினாலும், அவர்கள் அந்த அழகு சிறந்தது என்று ஒப்பிட்டுக் கூறும்போது கூந்தல் அழகு, மஞ்சள் முக அழகு- என்று பெண்களின் அழகுக்குக் காரணமான அவயவங்களைக் கூறுகிறார்கள்.

    பெண்களின் அழகுக்குக் காரணமான அங்கங்களைச் சிறந்த முறையில் பாதுகாத்தால்தான் அழகு என்றும் அழியாது இருக்கும்.

    பெண்கள் அழகைப் பளிச்சிடும் அவயம் முகம். அந்த முகத்தைக் கவிஞர்கள் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள்!

    புதுக்கவிதை ஆசிரியர் ஒரு கவிதை எழுதினார்: கண்ணே, உன் கன்னத்தைக் காட்டு, நான் தலை வாரிக் கொள்கிறேன்! அந்தக் காளைக்குத் தலை வாரிக் கொள்ள பெண் கன்னம்தான் கிடைத்தது. கிண்டலா செய்கிறார் கவிஞர்? இல்லை, இல்லை.

    அதாவது பெண்களின் கன்னங்கள் கண்ணாடி போல் பளபளக்கின்றன அதில் முகம் தெரிகிறது. இளைஞன் தன் தலையை வாரிக் கொள்ளப் பயன்படுகிறதாம் கண்ணாடிக் கன்னம்.

    அந்த முக எழில் குறையாமல் பாதுகாக்க வேண்டும் இளமைப் பொலிவோடு அது என்றும், எவ்வயதிலும் விளங்கச் செய்ய வேண்டும். முகத்தில் பருக்கள் வரக்கூடாது.

    மேனியழகு. எந்த வண்ணத் மேனியானாலும் அது சுருக்கம் அடையாமல் இருக்க வேண்டும். முகத்தில் முக்கியமானது விழிகள். பெண்களின் கவர்ச்சிக்கு விழிகள் முக்கியம். கண்கள் முகத்திற்குக் களையையும் கவர்ச்சியையும் அளிக்க வல்லவை. அந்தக் கண்களின் கீழ் கருவளையம் விழாதிருக்க வேண்டும்.

    பிறகு உதடுகள். ஒரு பெண் பேசும்போது, அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டும் கவனிக்கப்படுவதில்லை. வார்த்தைகளை வீசும் உதடுகளையும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது 'செவ்விதழ்' என்று சிறப்பிக்கப்படும் உதடுகளுக்கு அழகூட்டப் பயன்படுவது லிப்ஸ்டிக்.

    உதடுகளுக்கு அழகைத் தரும் பற்களும் முக்கியம், 'பல்லினைக் காட்டி வெண் முத்தினைப் பழித்திடும் வள்ளியை...' என்றார் பாரதியார்.

    பிறகு கரங்கள், விரல்கள், பாதங்கள், கூந்தல் என்று பெண்களின் அழகு சேர்க்கும் அவயவங்கள் இவை. இன்னும் அவளுடைய அழகிய மார்பகம், இடைகள், காளிதாசனின் வர்ணனைகளைப் படியுங்கள்!

    இறைவனால் படைக்கப்பட்ட பெண்களின் அழகுக்கு அணி செய்யும் அவயவங்கள், அழகு குறையாமல் பாதகமடையாமல் சேதமடையாமல் காப்பாற்றப்பட வேண்டும். அஜந்தா சித்திரங்களுக்குக் கூட பாதுகாப்பு அவசியம். பராமரிப்பு கட்டாயம் தேவை.

    முகம், விழிகள், உதடுகள், பற்கள், பாதங்கள், கூந்தல் இவற்றின் அழகு குறையாமல் பாதுகாப்பதற்குத் தக்க யோசனை கூறுபவர்கள் வேண்டும். அவ்வப்போது சீர் செய்ய வழிகாட்டிகள் வேண்டும். அவ்வப்போது சந்தேகங்களைத் தெளிவுப்படுத்த புத்தகங்கள் வேண்டும்.

    பளபளப்புடன் இருக்க - இளமைப் பொலிவுடன் இருக்க, என்ன வழிகள்! இயற்கையான வைத்தியங்கள் என்னென்ன?

    கண்களைப் பாதுகாக்க, கூந்தலை செழுமையாக வளரச் செய்ய, பற்களை நோய்க்

    Enjoying the preview?
    Page 1 of 1