Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagu Ungal Kaiyil
Azhagu Ungal Kaiyil
Azhagu Ungal Kaiyil
Ebook124 pages36 minutes

Azhagu Ungal Kaiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும், "நீங்க எந்த காலேஜ்ல படிக்கறீங்க?” என்று எல்லோரும் கேட்கும்படி அழகாய் இருக்க வேண்டும் என்றுதான் எல்லாப் பெண்களும் விரும்புகிறோம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று எல்லோரையும் கவனித்துவிட்டு அலுவலகம் ஓடும் பெண்களால் ஒரு ஐந்து நிமிடம் தனக்கென்று ஒதுக்க முடிகிறதா? வேலை செய்து செய்து அலுத்துக் களைத்து போய், தூங்கினால் போதும் என்று நினைக்கும் பெண்கள் "ஆமாம், உலக அழகிப் போட்டியில் கலந்துக்கப் போறோமாக்கும்.” என்று சலித்துக் கொள்ளலாம்.

ஆனால், அழகு படுத்திக் கொள்வது என்பது வெளிப்பார்வைக்கு செய்து கொள்ளும் அலங்காரம் மட்டும் அல்ல. ஆரோக்யம் சம்பந்தப்பட்டதும் கூட என்று பலர் புரிந்து கொள்வதில்லை.

எண்ணெய் சொட்டும் முகம், பித்த வெடிப்பால் கால் முழுதும் குத்தும் வலி, முடி உதிர்ந்து மண்டையை மறைக்கும் முயற்சிகள், உடைந்து பூச்சி வெட்டோடு காட்சி தரும் நகங்கள், நோயாளியாய்க் காட்டும் கண் கருவளையம், பருக்கள் - இப்படி ஆரோக்யம் சம்பந்தப்பட்ட அழகுப் பிரச்னைகள் தான் எத்தனை எத்தனை! எதையும் சகிக்கப் பழகும் நம் நாட்டுப் பெண்கள் இவற்றையும் சகிக்கப் பழகி விட்டார்கள்.

மாறாக, ஓர் அரை மணி நேரம் உங்களுக்கென்று ஒதுக்கப் பழகுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் அழகும் ஆரோக்யமும் எப்படிப் பொலிவாய் விளங்குகிறது என்று!

என்ன சரியா?

இனி, உங்கள் சருமம், தலைமுடி, உங்களை அழகு செய்து கொள்ளும் விதம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?...

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580126004661
Azhagu Ungal Kaiyil

Read more from Rajashyamala

Related to Azhagu Ungal Kaiyil

Related ebooks

Related categories

Reviews for Azhagu Ungal Kaiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagu Ungal Kaiyil - Rajashyamala

    http://www.pustaka.co.in

    அழகு உங்கள் கையில்

    Azhagu Ungal Kaiyil

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. முகம்

    2. ஃபேஷியல்

    3. பிளீச்சிங்

    4. கழுத்தும் முதுகும்

    5. த்ரெட்டிங், வேக்ஸிங், எலக்ட்ராலிஸிஸ்

    6. தலை முடி பாதுகாப்பு

    7. மார்பகம்

    8. இடுப்பு, தொப்பை, தொடை

    9. கை பராமரிப்பு

    10. கால் பராமரிப்பு

    11. குளியல்

    12. மேக்-அப்

    13. உடற்பயிற்சி

    அழகு உங்கள் கையில்

    இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும், நீங்க எந்த காலேஜ்ல படிக்கறீங்க? என்று எல்லோரும் கேட்கும்படி அழகாய் இருக்க வேண்டும் என்றுதான் எல்லாப் பெண்களும் விரும்புகிறோம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

    வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று எல்லோரையும் கவனித்துவிட்டு அலுவலகம் ஓடும் பெண்களால் ஒரு ஐந்து நிமிடம் தனக்கென்று ஒதுக்க முடிகிறதா? வேலை செய்து செய்து அலுத்துக் களைத்து போய், தூங்கினால் போதும் என்று நினைக்கும் பெண்கள் ஆமாம், உலக அழகிப் போட்டியில் கலந்துக்கப் போறோமாக்கும். என்று சலித்துக் கொள்ளலாம்.

    ஆனால், அழகு படுத்திக் கொள்வது என்பது வெளிப்பார்வைக்கு செய்து கொள்ளும் அலங்காரம் மட்டும் அல்ல. ஆரோக்யம் சம்பந்தப்பட்டதும் கூட என்று பலர் புரிந்து கொள்வதில்லை.

    எண்ணெய் சொட்டும் முகம், பித்த வெடிப்பால் கால் முழுதும் குத்தும் வலி, முடி உதிர்ந்து மண்டையை மறைக்கும் முயற்சிகள், உடைந்து பூச்சி வெட்டோடு காட்சி தரும் நகங்கள், நோயாளியாய்க் காட்டும் கண் கருவளையம், பருக்கள் - இப்படி ஆரோக்யம் சம்பந்தப்பட்ட அழகுப் பிரச்னைகள் தான் எத்தனை எத்தனை! எதையும் சகிக்கப் பழகும் நம் நாட்டுப் பெண்கள் இவற்றையும் சகிக்கப் பழகி விட்டார்கள்.

    மாறாக, ஓர் அரை மணி நேரம் உங்களுக்கென்று ஒதுக்கப் பழகுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் அழகும் ஆரோக்யமும் எப்படிப் பொலிவாய் விளங்குகிறது என்று!

    என்ன சரியா?

    இனி, உங்கள் சருமம், தலைமுடி, உங்களை அழகு செய்து கொள்ளும் விதம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?...

    1. முகம்

    முகத்திற்கான மேக்-அப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், முகத்தின் - சருமத்தின் - வகை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் சரும வகை தெரிந்தால் தான், அதற்கு ஏற்ப முகத்தைப் பராமரிக்கவோ, மேக்-அப் போட்டுக் கொள்ளவோ முடியும்.

    சரும வகைகள்

    இயற்கையான சருமம் (Normal skin)

    இது சரும வகைகளிலேயே சிறந்ததாகும். அதே சமயம் அபூர்வமும் கூட. மிக மென்மையாய் இருக்கும். பளிச்சென்று இருக்கும். வறண்டோ எண்ணெய் பசையோடோ இருக்காது.

    வறண்ட சருமம் (Dry skin)

    பலருக்கு இருப்பது இந்த வகை சருமம்தான். இந்தச் சருமத்திற்கு ஈரப் பசையோ எண்ணெய் பசையோ கிடையாது. அதனால், சீக்கிரமே சுருக்கம் விழ வாய்ப்பு உண்டு. சோப்பு அடிக்கடி பயன்படுத்துவது, ஏ.ஸி., வெய்யில், ஹீட்டர் போன்றவை மேலும் முகத்தை வறளச் செய்யும்.

    முகத்திற்கு ஈரப்பசை தந்து தளரச் செய்யும் (moisturiser மற்றும் emollients) பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், வறட்டுச் சருமத்தை ஈரப்பசையோடு வைத்துப் பாதுகாக்க முடியும்.

    எண்ணெய்ப் பசை சருமம் (Oily skin)

    சுரப்பிகள் அதிகம் எண்ணெயைச் சுரப்பதால், இந்த சரும வகையினர் முகம் எப்போதும் எண்ணெய் வடிய காட்சி தரும். முகச் சருமத்தில் உள்ள துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதன் காரணமாய் அழுக்கு புகுந்து, பருக்கள், கரும்புள்ளிகள் (black heads), வெண் புள்ளிகள் (white heads) ஆகியவை தோன்றும்.

    கலவையான சருமம் (Combination skin)

    இந்த வகை சருமத்தில் நெற்றி, மூக்கு, தாடை (டீ சோன் என்று அழைப்பார்கள்) ஆகிய பகுதிகள் எண்ணெய் பசையோடு இருக்கும். மற்ற பகுதிகள் வறண்டோ, சாதாரணமாகவோ இருக்கும். இதைப் பொதுவாக வறண்ட சாதாரண சருமமாகவே பலர் தவறாக நினைப்பது உண்டு.

    இதுதான் டீ. சோன் (T. Zone)

    சரும வகை அறிய

    உங்கள் சருமம் என்ன வகை என்பதை நீங்களே கண்டு பிடிக்க ஒரு சின்ன பரிசோதனை செய்து பார்க்கலாம்.

    காலையில் தூங்கி எழுந்ததும் ஒரு டிஷ்யு பேப்பரை உங்கள் முகத்தில் ஒற்றி எடுத்துப் பாருங்கள். (முகத்தில் டிஷ்யு பேப்பரை அழுந்தத் துடைக்காதீர்கள்.)

    பேப்பரில் எண்ணெய் பசை இல்லாவிட்டால் வறண்ட

    Enjoying the preview?
    Page 1 of 1