Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mattrumoru Maalai Neram
Mattrumoru Maalai Neram
Mattrumoru Maalai Neram
Ebook116 pages56 minutes

Mattrumoru Maalai Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466848
Mattrumoru Maalai Neram

Read more from V.Usha

Related to Mattrumoru Maalai Neram

Related ebooks

Reviews for Mattrumoru Maalai Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mattrumoru Maalai Neram - V.Usha

    1

    அந்த அதிகாலை ஐந்தரை மணிக்கே உரித்தான வானிலை மிக ரம்மியமாக இருந்தது.

    தனக்கு மிக விருப்பமான கிழக்கு நோக்கிய அறையில் உட்கார்ந்து ஜன்னல் கதவைத்திறந்து சுடர்விழி வெளியில் பார்த்தாள்.

    எப்போதடா கதவு திறக்கும், அழகிய முகத்தின் தரிசனம் கிடைக்கும் என்று காத்திருந்ததைப் போல பன்னீர் மரம் இரண்டு மலர்களை கதவு மீதாக சொரிந்தது. கை நீட்டி எடுத்துக் கொண்டாள். மென்மையாக முகர்ந்து பார்த்தாள். அம்மாவின் நினைவு வந்தது. அவளுக்கு மிக மிகப்பிடித்த மலர் அது. வித்தியாசமான மலர். கூந்தலில் சூடிக்கொள்ள மல்லிகை, முல்லை, ரோஜா, இருவாட்சி என்று எத்தனையோ வகைகள் இருக்க அம்மா எதற்காக பன்னீர்ப்பூவை மட்டும் விரும்பினாள். அதை கூந்தலில் சூடிக்கொள்ள இயலாது.

    தாயின் நினைவுகளால் மெல்ல மெல்ல கனத்துப் போகத் தொடங்கிய நெஞ்சத்தை அவள் உடனே மீட்டுக்கொள்ள விரும்பினாள்.

    வாசிக்கத் தொடங்கியிருந்த போது, இரண்டு கருங்குருவிகள் ஜன்னலை ஒட்டியவாறு சிறகடித் துப்பறந்தன.

    சுடர்விழி... என்று அழைத்தபடி பாட்டி வருவதைப் பார்த்து திரும்பினாள் அவள்.

    என்ன பாட்டி, ஏன் சீக்கிரம் எழுந்துட்ட? ஆறு கூட அடிக்கலையே இன்னும்? என்றாள் மெலிதாக.

    தூக்கமெல்லாம் மூணு மணிக்கெல்லாம் போயிடுது சுடர். அதுக்கு பிறகு பெரண்டு பெரண்டு படுக்க வேண்டியதாகத்தான் இருக்கு. அதுலயும் நேத்து சுத்தமா தூக்கமில்லே. பாழாப்போற மனசு கண்டதையும் நெனச்சு நெனச்சு உழம் புச்சு என்ற போது முதியவளின் முகம் சோர்வும் களைப்பு மாகத் தெரிந்தது.

    காபி நான் போடவா பாட்டி?

    பாலை அடுப்புல வெச்சிருக்கேன். இதோ கலந்து கொண்டு வரேன்

    சரி காபி குடிச்சபிறகு நீ போய் படுத்துக்க. சாதம் வெச்சு ரசமும் பொரியலும் நான் செஞ்சிடுறேன்

    அதெல்லாம் நீ ஒண்ணும் செய்ய வேணாம். என் வேலை அது. நீ தான் ஓய்வே இல்லாம உழைக்குற சுடர். நைட்டு பனிரெண்டு, ஒண்ணுன்னு படுத்தாலும் விடியற்காலை அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சுடற என்றபடியே பாட்டி சமையல் அறை நோக்கி விரைந்தாள்.

    முதியவளுக்கு தூக்கம் என்கிற வரம் வழங்கப்படவில்லை என்பது தெரிந்த விஷயம் தான். எப்படி அது சாத்தியம்? எங்கிருந்து வரும் தூக்கம்? ஒரே மகவைப் பெற்றாள். பெண் மகவு. அழகும் வடிவுமாக ஏழ்மையிலும் சிற்பமாக ஜொலித்த மகளை கட்டிடம் கட்டும் மேஸ்திரிக்கு தன் சக்தியை மீறி கட்டிக் கொடுத்தாள். முகத்தில் அப்பாவித்தனமும், முதுகுக்கு பின்னால் அயோக்கியத்தனமுமாக அந்த மாப்பிள்ளை இருந்ததை எப்படி அந்த பாவப்பட்ட பெண் மணியால் அறிந்திருக்க இயலும்? மூன்றே வருடங்கள். பணம் கொண்டு வா, குக்கர் கொண்டு வா, செயின் வேண்டும், பைக் வேண்டும் என்று அந்த சிற்பத்தை படாதபாடு படுத்திய மேஸ்திரி கடைசியில் குடிவெறியில் அதன் மேல் அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டு துடிக்க துடிக்க கொலை செய்தான். உலகின் துர் செய்திகள் எதையும் அறியாத மூன்று வயது மழலை, ஒரே நாளில் எல்லாவற்றையும் அறிந்தது போல கதறி அழுது அந்தக் கொடி இரவின் ஒரே சாட்சியாக அமைந்தது. தாய்த்தமிழின் எந்த அட்சரமும் தெரியாமல் அந்தப்படுகொலை பாதகத்தை தன் மழலைத் தமிழில் நீதி மன்றத்திற்கு தெரிவித்தது. மகேந்திரனை ஆயுள் தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பிய நீதிபதி, அந்த பாவப்பட்ட குழந்தையை முதியவள் கையில் ஒப்படைத்தார்.

    எப்படி தூங்குவாள் அவள்?

    பகலில் தூங்கி விழிக்க அவள் ஆந்தையா என்ன? அல்லது இரவில் தூங்க முடிகிற இயல்பான வாழ்க்கை வாழ்பவளா? இரண்டுமே இல்லாத போது பாட்டியைப் போன்ற வேதனையாளர்கள் இப்படி இரவில் புரண்டும் தவித்தும் இருளை வெறித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்ய இயலாதுதான்.

    செல்பேசி அழைத்தது.

    சொல்லு ஷபானா என்றாள் எண்களை வைத்து.

    ஒரு ஹெல்ப் சுடர்,

    சொல்லு

    பையன், ஏதோ ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்துக்கறானாம். அதுக்கு ஒரு தகவல் தேவைப்படுது. உழைப்பாளர் தினத்தை குறிக்கிற மாதிரி ஆஸ்திரேலியாவில் ஒரு சிலை இருக்காமே. அதுல ஏதோ எண்கள் குறிக்கப்பட்டிருக்காம். என்ன அதுன்னு என்கிட்டே கேட்டான். நான் இதோ உன்கிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன் என்றது எதிர்முனை படபடப்பாக.

    888 என்கிற எண் பொறிக்கப்பட்டிருக்கும் ஷபானா அந்தச் சிலையில 1919ல் ஏற்பட்ட உழைப்பாளர் எழுச்சியின் ஞாபகார்த்த சிலை அது. மேதின சிலை. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர பொழுது போக்கு. அதன் அர்த்தம் அது

    "ஓ மை காட்! சுடர்னா சுடர் தான்.

    எதைக் கேட்டாலும் பதில் கிடைக்கற அறிவு அங்காடி என் தோழி சுடர்விழி. தாங்க்ஸ் ஏ மில்லியன் அலுவலகத்துல சந்திக்கலாம். பை பை"

    ரொம்ப ஐஸ் போட கத்துக்கிட்டியே, எந்த டியூஷன் மாஸ்டர்கிட்ட? ஓ.கே. பை பை என்று சிரித்துக்கொண்டே அவள் எழுந்தபோது, பாட்டி காபியுடன் வந்தாள்.

    யாரது போன்ல? என்றபடியே நீட்டினாள்.

    ஷபானா பாட்டி

    ஓ அந்தப் பொண்ணா? ஆசாரமான பாட்டியின் கேள்வியில் பொதிந்திருந்த ஓராயிரம் அர்த்தங்களை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

    ஏன் பாட்டி அப்படி கேக்குற? எவ்வளவு நல்ல பெண் தெரியுமா அவள்? இரண்டு ஆதரவற்ற குழந்தைகளை அவள் படிக்க வைக்கிறாள். தெரியுமா?

    செய்யட்டும். செய்யட்டும். நல்லது யாரு செஞ்சா என்ன? சரி சரி காபி எப்படி இருக்கு.

    கசக்குது

    கசக்குதா? சர்க்கரை போட்டேனே

    உன் மனசுல இருக்குற கசப்பு பாட்டி

    இது சாகிறவரை போகாதுடி சுடர். என் தலையெழுத்து அது. பெத்த பெண்ணை வாரிக் கொடுத்ததும் இப்படி பாறாங்கல்லா நிக்குறேனே. எப்படியடி என் மனசு கசந்து வழியாம இருக்கும்?

    கண்களைத் துடைத்தபடி நகரும் அந்த நலிந்த உருவத்தை அவளும் கவலையுடனே

    Enjoying the preview?
    Page 1 of 1