Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pogumidam Vegu Thooramillai
Pogumidam Vegu Thooramillai
Pogumidam Vegu Thooramillai
Ebook137 pages1 hour

Pogumidam Vegu Thooramillai

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Pogumidam Vegu Thooramillai

Read more from Usha

Related authors

Related to Pogumidam Vegu Thooramillai

Related ebooks

Reviews for Pogumidam Vegu Thooramillai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pogumidam Vegu Thooramillai - Usha

    22

    1

    பஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

    மஞ்சு தலையை உயர்த்தி ஜன்னல் வழியே பார்த்தாள்...

    எதிர்பார்த்த மாதிரியே மீனா பஸ்சை விட்டு இறங்கி, கழுத்து வியர்வையைத் துடைத்தபடி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். மஞ்சு எழுந்து கொண்டாள்.

    டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடி ஒரு தடவை பார்த்தாள். மருந்து குப்பிகளையும், அலுமினிய பேப்பர் சுற்றப்பட்ட காப்ஸ்யுல், மாத்திரைகளையும் ஓரமாய் நகர்த்தி வைத்தாள். பேடையும், பேப்பரையும் எடுத்து கடகடவென்று ஏதோ எழுதுகையில் நெற்றியில் ஏதோ குறுகுறுத்தது. சடாரென்று நிமிர்ந்தாள்.

    மோகன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    இவள் பார்வையைக் கண்டதும் அவன் உதடுகள் இயல்பாய் சிரித்தன.

    பதிலுக்கு புன்னகைக்க நினைத்தவள், உடனே எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

    ஸாரி மஞ்சு! ரொம்ப லேட்டாய்டுச்சு இல்லே? என் மொபெட் காலை வாரிடுச்சு. நான் பஸ்லதான் வந்தேன். வெரி ஸாரி.

    இட்ஸால் ரைட் மீனா... அவள் புன்னகையுடன் டேபிளை விட்டு வெளியே வந்தாள்.

    எத்தனை பிரச்சனைகள் உனக்கு. ஹஸ்பெண்ட் ஆறரைக்கெல்லாம் கௌம்பியாகணும். பசங்க ரெண்டும் எட்டு மணிக்கு ஸ்கூல் போயாகணும். டிபன் சாப்பாடுன்னு எல்லாத்தையும் தனியா செய்யறே. எல்லாரையும் பாத்து கவனிச்சு அனுப்பிட்டு எதையும் வாய்ல கூட போட்டுக்காம அரக்கப் பரக்க ஓடி வர்றே... யு நோ ஒன் திங் மீனா! பிரேக்பாஸ்ட் இஸ் வெரி வெரி இம்பார்ட்டன்ட் ஃபார் அவர் பாடி. மார்னிங் டிபன் சாப்பிடாம இருக்கறதால தான் ஒனக்கு பிரஷர் ஸ்டார்ட் ஆகியிருக்கு. டாக்டர் சவுந்திரா அன்னிக்கு படிச்சுப் படிச்சு சொல்லலியா ஒனக்கு? மீனாவின் முகத்தில் சலிப்பு தெரிந்தது. பதில் சொல்ல வாய் திறக்கையில் டாக்டரின் பூட்ஸ் சத்தம் வராந்தாவில் கேட்டது.

    மீனா இதுல செகண்ட் ரூம் பேஷன்ட் ரத்னசபாபதியோட கண்டிஷனை எவ்ரி ஹாப் அன் அவர் ஸ்டடி பண்ணி எழுதியிருக்கேன். நீயும் ஃபாலோ பண்ணு. டாக்டர் சங்கர்நாத் வந்ததும் நேரே ரிப்போர்ட் பார்க்கத்தான் வருவார். அப்புறம் அந்த பிராக்ஷன் பேஷண்ட் சாரங்கனுக்கு எக்ஸ்-ரே ரிசல்ட் வாங்கணும். தென், சரளா இருக்காங்க இல்லே, அதான் அந்த சிஸ்ட்டிக் ட்யூமர் பேஷண்ட்... நாளைக்கு அநேகமா ஆபரேஷன் இருக்கலாம்னு டாக்டர் பெருந்தேவி சொன்னாங்க. பி.பி, ஷுகர், ஈசிஜி நான் பார்த்துட்டேன். நீயும் செக் பண்ணிடு.

    நீ கௌம்பு மஞ்சு. நைட் டியூட்டி பாத்துட்டு ரொம்ப டயர்டா இருக்கே மீனாவின் குரல் தழுதழுத்தது.

    மஞ்சு எனக்காக வேண்டித்தானே நீ எப்பவும் ராத்திரி டியூட்டி பார்க்க வேண்டியிருக்கு? ஸாரி மஞ்சு.

    ச்சே... என்ன இது? மீனா எக்ஸைட் ஆகாதே. வெரி ஸ்மால் ஹெல்ப். ஜஸ்ட் அட்ஜஸ்ட்மென்ட் அவ்ளோதானே? வரட்டுமா?

    ஸீ யூ.

    நர்சுகளுக்கான அறையில் நுழைந்து சீருடையை அவிழ்த்து விட்டு வழக்கமான டிரஸ்சுக்கு மாறினாள். முகம் கழுவி துடைத்து சின்னதாய் ஸ்டிக்கரில் கறுப்புப் புள்ளி வைத்துக் கொண்டாள். தலையை லேசாக வாரி கிளிப் பொருத்தி, வானிடியை மாட்டிக் கொண்டபோது காத்திருக்கும் வேலைகள் நினைவுக்கு வந்தன.

    அம்மாவுக்கு கண்ணாடி மாற்ற வேண்டும். குக்கரின் கைப்பிடி உடைந்து சரி பண்ணுவதற்காக கொடுத்து இருப்பதை திரும்ப வாங்க வேண்டும்.

    ஜோதியின் கிளாஸ் டீச்சர் வரச் சொல்லியிருக்கிறாள். பிளஸ்டூ பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும் ஜோதி மூணு சப்ஜக்டில் பெயில் அதற்காகத்தான் அழைத்து இருப்பாள். கண்டிப்பாய் போக வேண்டும்.

    அத்தைக்கு கால் முட்டி வீங்கி வலியால் துடிக்கிறாள் என்று அம்மா சொன்னாள். கண்டிப்பாய் பார்க்க வேண்டும்.

    தூங்குவதற்கு பத்து நிமிடமாவது கிடைக்குமா?

    வெளியே வந்தாள்.

    தெரு கலகலப்பாக இருந்தது. ஜனங்கள் பஸ்சிலும், ஸ்கூட்டரிலும், ஆட்டோவிலும், நடைபாதையிலும் விரைந்தார்கள். பெட்ரோல், டீசல் புகை கண்களுக்குள் எரிச்சலாய் இறங்கிற்று. லாட்டரி சீட்டு கடையிலும், குடிமக்களை அழைக்கும் ‘பாரி’லும் ஜிகினா பேப்பர்கள் தொங்கின. மக்களின் பண்புகளை வம்புக்கிழுத்து, அவர்களின் பலகீனங்களுக்கு முதுகு சொரிந்து விடுகிற குள்ளநரி வியாபாரத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு சிறுமி புத்தம் புது ரோஜா மலர்களை விற்றுக் கொண்டு இருந்தாள்.

    ஹலோ... சட்டென்று திரும்பி குரல் வந்த திசையில் பார்த்தாள்.

    மோகன் நின்றிருந்தான்.

    உதடுகளில் அதே சிரிப்புடன் முகத்திலும் ஏதோ குறும்பு தெரிந்தது.

    "நீங்களா?’ என்றாள் வியப்புடன்.

    ஷேக்ஸ்பியர் எத்தனை அருமையாய் சொல்லியிருக்கார். இதையே கொஞ்சம் மாத்தி சொல்லலாமா - இப்படி? உங்களைப் போல அழகான பெண்ணுக்கு சூட்டினதாலேயே உங்க பெயருக்குக் கூட தனி அழகு வந்திடுது... ஆம் ஐ கரெக்ட்?

    சடாரென்று முகம் சிவந்தது அவளுக்கு. குபுக்கென்று ரத்தம் இதயத்தை நோக்கி பாய்கிற மாதிரி இருந்தது. இந்த மாதிரி வேறு யாராவது சொல்லியிருந்தால் எத்தனை கோபம் வந்து என்னென்ன பேச்சு பேசியிருப்போம்? இவனிடம் ஏன் கோபம் வருவதில்லை? மாறாக இந்த வர்ணனை ஏன் என்னை நெகிழ்த்துப் பார்க்கிறது?

    மிஸ்டர் மோகன்... அவள் திரும்பி அவனைப் பார்த்து மெல்லிய குரலில் சொன்னாள்.

    "இப்பதான் உங்க கால் கொஞ்சம் பெட்டரா இருக்கு. பிராக்சரா ஆகியிருக்க வேண்டியது. நல்ல வேளையா டிஸ்லொகேட் ஆனதோட நின்னிருக்கு. யு ஷுட் டேக் மாக்ஸிமம் கேர்... இப்படி ஆஸ்பிட்டலை விட்டு தெருவுக்கு வரதுக்கு யார் பர்மிஷன் கொடுத்தாங்க?

    டோன்ட் பீ எ நர்ஸ் ஆல்வேஸ் மேடம்... அவன் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டான்.

    உங்களை இப்படி பாக்கணும்கிறதுக்காகவே உங்களுக்கு தெரியாம நடந்து நடந்து பிராக்டிஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா?

    இப்படிப் பாக்கணுமா? அவள் யோசனையுடன் குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள். புரிந்து விட்டது. நர்ஸ் உடைக்கும் புடவைக்கும் உள்ள வேறுபாடு. மறுபடி முகம் சிவந்தது அவளுக்கு.

    எதிர்பார்த்ததைவிட இது அற்புதமாக பொருந்துது உங்களுக்கு.

    ப்ளீஸ் மோகன். ஆஸ்பிட்டலுக்குள்ள இப்பவே மீனா தேடிகிட்டிருப்பா. பயந்து போய் அழுதாலும் அழுவா. திஸ் இஸ் நாட் கரெக்ட். டிஸ்சார்ஜ் ஆகிறவரைக்கும் எங்க கஸ்டடில தான் நீங்க இருக்கணும். அதுதான் நல்லது உங்களுக்கு.

    ஓகே ஓகே... என்றான் அவன் பெருமூச்சுடன்.

    ஆன் ஒன் கண்டிஷன்...

    சொல்லுங்க... என்றாள் இவனுடன் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கிறோம் என்று ஏன் தோன்றவில்லை எனக்கு?

    டே டியூட்டி, நைட் டியூட்டி எல்லாமே நீங்கதான் பார்க்கணும். அப்ப எப்பவும் உள்ளேயே இருக்கேன். சரியா?

    அப்ப ரெண்டு சம்பளம் தரணுமே எனக்கு என்றாள் சிரித்தபடி.

    ரெண்டு சம்பளமென்ன? நீங்க ஒத்துக்கிட்டா...

    அதற்கு மேல் அவனைப் பேச விடாமல் அவள் அவசரமாய் மோகன் ஸார்... இட்ஸ் ஆல்ரெடி லேட். எக்கச்சக்க வேலைங்க பாக்கியிருக்கு எனக்கு. ஸீ யூ இன் த நைட்... என்று சொல்லிவிட்டு வேகமாய் நடக்கத் தொடங்கினாள்.

    மஞ்சு... காத்திருப்பேன் உனக்காக... - அவன் உணர்வுகள் நெகிழ்ந்தன.

    திரும்பி ஆஸ்பிட்டலை நோக்கி அவன் காலை விந்தியபடி நடக்கத் தொடங்கினான்.

    2

    வீட்டிற்குள் நுழைந்ததுமே காத்திருந்த மாதிரி கவலைகள் ஓடி வந்தன.

    எத்தனை பைத்தியக்காரத்தனமாய் மோகனின் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு மயங்கிப் போய் நின்றிருந்தேன் என்று தோன்றிற்று.

    என்னைப் பொருத்தரை எல்லாமே முடிந்து விட்டது. பிரத்யேகமாய் எந்த வசந்தமும் இனி கிடையாது. தென்றல் வரும் பாதை என்னைப் பொருத்தவரை நிரந்தரமாய் மூடி விட்டது. கல்லறையில் எப்படி மலர் மலர முடியாதோ, என் உணர்வுகளில் இருந்தும் எந்தப் புதுமையும் உருகாது.

    அதில் சலனங்களே இல்லை. நேரம் காட்டுகிற ஒரே வேலையை செய்கிற கடிகாரம் மாதிரிதான் நானும்.

    மஞ்சு...

    அம்மாவின் குரல் அருகாமையில் கேட்டதும் அவள் சட்டென்று உணர்ச்சிகளை மீட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1