Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nagarnthu Varum Nathigal
Nagarnthu Varum Nathigal
Nagarnthu Varum Nathigal
Ebook122 pages2 hours

Nagarnthu Varum Nathigal

By Usha

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466213
Nagarnthu Varum Nathigal

Read more from Usha

Related to Nagarnthu Varum Nathigal

Related ebooks

Reviews for Nagarnthu Varum Nathigal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nagarnthu Varum Nathigal - Usha

    26

    1

    ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழல் காடும் உடையது அரண்.’

    சிறுமி ஒருத்தி கரும்பலகையில் எழுதினாள். எழுதியதை வெட்கத்துடன் தானே படித்தாள். பின் கவலையுடன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.

    வெரிகுட்... அழகான குறள்... நல்ல அர்த்த திருக்குறள்... வெரி நைஸ்... கைதட்டுங்க குழந்தைகளும் ஒரு முறை... ஜோரா... என்றாள் மலர்விழி சிரிப்புடன்.

    உற்சாகத்துடன் மாணவர்கள் கைதட்டினார்கள். எழுதிய பெண்ணின் முகம் மலர்ந்தது.

    "சுற்றுச்சூழலின் மதிப்பை அருமையா விளக்குது இந்தக் குறள்... இந்த உலகம் எவ்வளவு அழகா இல்லையா டியர் ஃப்ரண்ட்ஸ்? மலையின் உயரம், காடு கம்பீரம், பனிமலைகளின் குளுமை, நீரின் வேகம், நெருப்பின் ஜ்வாலை என்று எல்லாமே எவ்வளவு அழகு? இயக்கை மனிதனுக்காக அள்ளிக்கொடுத்த கொடை இந்த பூமி...

    இதை நமக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது... எப்படி நம் தாத்தாக்களும் பாட்டிகளும் நமக்காக இதை பத்திரமாக பாதுகாத்துக் கொடுத்தாங்களோ, அதே போல நாமும் இதைக் கவனத்துடன் பராமரித்து நம் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கணும்... பூமி இப்போ ஓயாம சூடாகிகிட்டிருக்கு... ஓசோன் படலம் தெரியுமில்லையா, பூமியை பாதுகாக்கிற வளையம்... அது இல்லேன்னா சூரியனோட கதிர்கள் நம்ம மேல டைரக்டா விழுந்து தோல் வியாதிகளை உண்டாக்கிடும். அப்பேர்ப்பட்ட ஓசோன் திரை கிழியத் தொடங்கியிருக்கு... மேலும் மேலும் பூமி சூடாகிகிட்டே போகிறதை தடுக்கணும்... குளுமை, குளிர்ச்சி இவற்றை தரக்கூடியது மரங்கள்தான்... நம்மால முடிஞ்ச சின்ன முயற்சியைச் செய்யலாமா? எல்லாரும் மரம் வளர்க்கலாமா? மரம் வைக்க இடம் இருக்கிறவங்க மரம் வைக்கலாம்... இடம் இல்லாதவங்க செடி அல்லது கொடி வளர்க்கலாம்... இன்னில இருந்து ரெண்டு நாள் டயம்... என்கிட்ட வந்து சொல்லணும், யார் யார் என்ன என்ன செடி வளர்க்கப் போறீங்கன்னு. புதன்கிழமை மறுபடி நான் வருவேன்... சரியா?"

    அத்தனை தலைகளும் ஆடின.

    மலர்விழி குழந்தைகளைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து விட்டு வெளியில் வந்தாள்.

    உதவித் தலைமை ஆசிரியர் மனோகரன் ஒரு நிமிஷம்மா மலர்விழி... என்றபடியே எதிரில் வந்தார்.

    என்ன சார், நல்லா இருக்கீங்களா? ப்ரமோஷன் வந்துதா? என்றாள் புன்னகையுடன்.

    ஏதோ இருக்குறேம்மா... அடுத்த மார்ச்ல ரிடயர்மென்ட்... இதுல எங்க ப்ரமோஷன்?

    அட! அப்படியா! உங்களைப் பார்த்தா ஓய்வு பெறப் போகிறவர் மாதிரியே இல்லையே சார்... ஜஸ்ட் அம்பதை தாண்டின மாதிரிதானே தெரியுறீங்க? கிரேட்...

    நெஜமாவா சொல்றே? என்றபோது மனோகரின் குரலில் சந்தோஷம் எட்டிப் பார்த்தது. தன்னைத்தானே ஒரு தடவை பார்த்துக் கொண்டார்.

    அவள் வியப்புடன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். மனோகரன் மிக அருமையான விஞ்ஞான வாத்தியார். இளமையும் அழகும் போலவே மூப்பும் முதுமையும் மனிதனை வந்தடைந்துதான் தீரும், இது இயற்கை எழுதி வைத்த விதி என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவளுடைய ஒரு வாக்கியம் அவருக்கு கற்பனையான சிறகுகளைப் பரிசளித்து விட்டது. கற்பனை என்கிற அற்புதம் இல்லையென்றால் மனித வாழ்க்கை இத்தனை மகிழ்ச்சியுடன் இருந்திருக்குமா என்று தோன்றியது அவளுக்கு.

    அம்மா நல்லா இருக்காங்களா மலர்விழி?

    இருக்காங்க சார்... மல்லிகாவோட நினைவு வரும் போது தவிர, மத்த நேரங்களில் நல்லாவே இருக்காங்க...

    ஒரு கணம் மனோகரன் மவுனமாக இருந்தார். பிறகு திடீரென்று ஞாபகம் வந்தவர் போல உன் கட்டுரை ஒண்ணை படிச்சேம்மா மலர்விழி... சுற்றுப்புற உலகம் பத்திரிகைன்னு நினைக்கிறேன்... ‘பேருந்துகள் ஒழிக்கப்படுகின்றனவா மறைமுகமாக?’ என்கிற தலைப்புல... பிரமாதம்மா... இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக, பொதுப் போக்குவரத்து வாகனங்கள் குறைக்கப்படுகின்றனவா என்று கேட்டு முடிச்சது ரொம்ப யோசிக்க வெச்சது... இந்த சின்ன வயசுல உன்னோட சமூக அக்கறை உண்மையிலேயே பெரிய விஷயம்மா... என்றபோது அவள் மென்னகை ஒன்று வெளியிட்டாள்.

    அப்பாவைப் பத்திதான் உங்களுக்கு நல்லா தெரியுமே சார்... உழைப்பாளி, விவசாயி... உழவர் சங்கத்து தலைவர்... பிறந்தது முதலா அப்படியொரு அற்புதமான மனிதரோட இருந்தா, யாருமே சமூக அக்கறையுள்ளவங்களாத்தான் மாறுவாங்க சார்...

    உண்மைதாம்மா... பெயர்ல மட்டுமில்ல, உண்மையிலேயே அவர் ராஜமாணிக்கம்தாம்மா... என்றவர் சற்று பக்கவாட்டில் வந்து நின்று மெல்லிய குரலில் கேட்டார்.

    அம்மாவ ஒரு நாள் பாங்க்ல பாத்தேன், பென்ஷன் வாங்க வந்தப்ப... உன் மேல வருத்தப்பட்டாங்க... கல்யாணமே வேண்டாம்னு ஒரே பிடிவாதமா இருக்கியாமே? ஏம்மா? நிஜம்தானே அம்மா சொல்றது?

    ஆமாம் சார்... நிஜம்தான்...

    அட... ஏம்மா அப்படி?

    இப்ப என் சந்தோஷத்துக்கு என்ன சார் குறைச்சல்?

    என்ன சந்தோஷம்னு சொல்லு மொதல்ல...

    நானும் அம்மாவும்தான் வீட்டுல... அப்பாவோட பென்ஷன் எட்டாயிரம் வருது... சின்னதா சொந்த வீடு... அதுல அழகா ஒரு தோட்டம்... சமையலுக்குத் தேவையான காற்கறிகள் கிடைச்சுடுது... தோட்டத்துல உழைக்கறதால அம்மாவும் ஆரோக்கியமா இருக்காங்க... எம்.ஏ. சோஷியாலஜி முடிச்சதுமே என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலமா வேலை கெடைச்சிடுச்சு... அரசாங்க வேலை மாதிரி வருஷக்கணக்கா ஒரே சீட்ல உக்காந்து நாமும் தேய்ந்து அதையும் தேய்க்கிற வேலையா இல்லாம, தமிழ்நாடு முழுக்க விஸிட் செய்யற வேலை... சூழல் பத்தி, சுத்தம் பத்தி, சுகாதாரம் பத்தி கிராமத்து ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ற பணி... அப்பப்போ இந்த மாதிரி அரசுப்பள்ளிகளுக்கும் போயிட்டு வர்ற அனுமதி... சம்பளம், டி.ஏ. ன்னு கௌரவமா வருமானம்... மனசுக்கு திருப்தியா வாழறேன் சார்... இதை விட வேற என்ன வேணும் சொல்லுங்க...

    வியப்புடன் அவர் புன்னகைத்தார்.

    மலர்விழியை அவர் விழிகள் வாழ்த்துவது போல மூடித் திறந்தன.

    இன்னும் ரெண்டு மாசத்துல ரிடயர்மென்ட்னு சொன்னீங்க... குழந்தைகள் உலகத்தை விட இனிமையானது வேற என்ன சார் இருக்கு? அனுபவியுங்க சார்... வரேன்...

    நல்லதும்மா...

    கிளம்பினாள் அவள்.

    காற்று இதமாகவே வீசிக் கொண்டிருந்தது.

    மனோகரனின் வார்த்தைகள் காதருகில் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தன.

    கல்யாணம் கல்யாணம்!

    அம்மா ஏன் இவரிடம் வருத்தப்பட்டாள் என்று தோன்றியது. பாவம் அவள் என்றும் நினைத்துக் கொண்டாள். தோளுக்கு மேல் வளர்ந்து வனப்புடன் தகதகத்துக் கொண்டிருந்த பெண்ணை அப்படியே முழுதாக பறிகொடுத்தாளே, அந்தக் கொடுமைக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்? ஆனால் அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1