Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaazhampoove Kannurangu!
Thaazhampoove Kannurangu!
Thaazhampoove Kannurangu!
Ebook128 pages46 minutes

Thaazhampoove Kannurangu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுவாணி, கரிகாலன் தம்பதியருக்கு ஐந்து வருடங்களாக குழந்தை இல்லை. மதுவாணியின், மாமியார் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், தன் குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தை இறந்து விடும் என மூடநம்பிக்கை உடையவள். ஒருவேளை, மதுவாணியின் குழந்தையின்மைக்கு மாமியார் காரணமாக இருப்பாளோ? இவர்கள் வீட்டில் தூளி ஆடியதா? அதில் தாழம்பு கண்ணுறங்கியதா? என்பதை பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580137110752
Thaazhampoove Kannurangu!

Read more from R. Sumathi

Related authors

Related to Thaazhampoove Kannurangu!

Related ebooks

Reviews for Thaazhampoove Kannurangu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaazhampoove Kannurangu! - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தாழம்பூவே கண்ணுறங்கு!

    Thaazhampoove Kannurangu!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    எக்ஸ்க்யுஸ்மீ மேம்

    மென்மையாக கதவைத் தட்டிவிட்டு தள்ளித் திறந்துக் கொண்டு உள்ளே வந்து நின்றவளை ஏறிட்டாள் சிவசங்கரி.

    எதிரே நின்றிருந்த மதுவாணியின் முகத்தில் தயக்கம் கலந்த புன்னகை.

    மதுவாணியின் முக அழகு எந்த சோர்வான முகத்தையும் சுறுசுறுப்படைய செய்யும்.

    சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் பாயும் ரத்தம். சதா கலகலப்பு தவழும் பேச்சு. அவள் இருக்குமிடமே பட்டாம்பூச்சிகள் சிறகு விரிக்கும்.

    அப்படிப்ட்டவளின் முகத்தில் லேசான சோர்வு.

    எஸ்...

    மேம்... எனக்கு ஆஃப்டே பர்மிஷன் வேணும்.

    எதுக்கு? லேப்டாப்பிலிருந்து கண்களை எடுக்காமலேயே கேட்டாள்.

    ஒரு முக்கியமான வேலை

    என்ன வேலை?

    பர்சனல்

    என்ன பெரிய பர்சனல்? புருஷன் கூட வெளியே சுத்தப் போவே.இங்க பர்சனல்னு சொல்லுவே. நீ ஹோட்டலுக்கோ பீச்சுக்கோ பார்க்குக்கோ போகும் போது எப்படியோ இந்த ஆஃபிஸ்ல உள்ளவங்க கண்ணல படத்தான் போறே. அவங்க இங்க வந்து நாளைக்கு சொல்லத்தான் போறாங்க. இதுல என்ன பர்சனல் வேண்டிக்கிடக்கு?

    மதுவாணி மெல்ல சிரித்தாள்.

    கல்யாணம் ஆகி மூணுவருஷம் ஆகுது. நாங்க என்ன இப்பத்தான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கோமா? பீச் பார்க்குன்னு சுத்த... ? என்றாள்.

    ஏன்... கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகிட்டா பீச் பார்க்குன்னு சுத்தக் கூடாதா? அதான் நீங்க பண்ற தப்பு. கல்யாணம் ஆகிட்டா எல்லாம் முடிஞ்சுட்டுன்னு அர்த்தமா? என்னைப் பார்... எனக்கு ஐம்பது வயசுக்கு மேல ஆகுது. இன்னும் நானும் என் ஹஸ்பன்ட்டும் இன்னைக்குத்தான் சந்திச்சுக்கிட்ட காதலர்கள் மாதிரி அத்தனை ரொமான்ஸா இருப்போம். என் ஹஸ்பன்ட் இருக்காரே என் மேல அவருக்கு அவ்வளவு ஆசை! சதா என்னையே சுத்தி சுத்தி வருவார்.

    தன் கனத்த உடம்பை கவர்ச்சியாக குலுக்கிக் கொண்டாள் சிவசங்கரி.

    அதுக்கு காரணம் உங்க அழகுதான் மேம். உங்களைப் பார்த்தா யாராவது அம்பது வயசுன்னு சொல்லுவாங்களா? முப்பது வயசுதான் மதிப்பிடலாம்

    பெரிய ஐஸ்ஸாகத் தூக்கி அவளுடைய தலையில் வைத்தாள் மதுராணி. கண்டிப்பாக தனக்கு பர்மிஷன் கிடைத்துவிடும் என நினைத்தாள்.

    ஓ... தாங்க்யூ மது. என் ஹஸ்பன்ட் கூட இதையேத்தான் அடிக்கடி சொல்லுவார். தனக்குத்தானே மயங்கியவளாய் கைப்பையிலிருந்து கண்ணாடியை எடுத்து லிப்ஸ்டிக்கை சரி செய்துக் கொண்டாள்.

    ‘லூசு! கிழம். மனசுல பேரழகின்னு நினைப்பு.’

    மேம்...

    சிவசங்கரி வேறு உலகிற்குப் போய்விட்டதால் இனி திரும்பி வர வெகுநேரமாகும் என்பதால் வந்த காரியத்தை நினைவுப்படுத்த அழைத்தாள்.

    சொல்லு மது

    பர்மிஷன்?

    எதுக்கு பர்மிஷன்? காலையில லீவே போட்டுட்டுப் போயிருக்கலாமே. ஆமா... எங்கேப் போறே? போறதுதான் போறே வெளியூர் ட்ரிப்பா போயிட்டு வா. ரெண்டு நாள் லீவு எடுத்துக்க. இந்த ஊர்ல என்ன இருக்கு?

    ‘எங்கே சுற்றுலாத்தளங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி எங்கெல்லாம் தங்கி அவர்கள் ரொமான்ஸ் செய்தார்கள் என்பதை சொல்லவிடப் போகிறாளோ என கழன்றுக் கொள்ள நினைத்தாள்.

    மேடம்... நான் ஜாலியா சுத்தறதுக்கு எங்கேயும் போகலை. டாக்டர்கிட்டப் போறேன்

    டாக்டர்க்கிட்டப் போறியா? என்னாச்சு உனக்கு? நானே கேட்கனும்னு நினைச்சேன். நீ முன்ன மாதிரி கலகலப்பாயிருக்கறதில்லை. சுறுசுறுப்பும் கம்மியாயிட்டு. நிறைய மிஸ்டேக் பண்றே. கண்ணுலேர்ந்து கால் வரைக்கும் தரோவா ஒரு செக்கப் பண்ணிடு. ஷகர் பிபின்னு ஏதாவது இருக்கப் போகுது. எனக்கு இப்படித்தான்... .

    ‘கடவுளே அடுத்த புராணத்தை ஆரம்பிச்சுட்டா. இல்லாத வியாதியையெல்லாம் இவளே சொல்லி வரவழைச்சுடுவா’

    மேடம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் பார்க்கப் போறது லேடி டாக்டரை.

    "லேடி டாக்டரைப் பார்க்கப் போறியா? வாவ்... அப்படின்னா கன்சீவ்வாயிருக்கியா? வெரிகுட் வெரிகுட். அதை கன்ஃபார்ம் பண்ணிக்கத்தான் லேடி டாக்டரைப் பார்க்கப் போறியா?’

    அவள் மகிழ்ச்சியாக கையைப் பற்றிக் குலுக்க முயல

    ஐய்யோ நீங்க வேற மேடம். கல்யாணம் ஆகி மூணு வருஷமாயிட்டு இதுவரை கன்சீவாகலை. அதான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்னு...

    "அட மூணுவருஷம்தானே ஆகுது. அதுக்குள்ள என்ன அவசரம்? குழந்தை குட்டின்னு ஆயிடுச்சுன்னு வச்சுக்க லைஃபை என்ஜாய் பண்ண முடியாது. என்னையே எடுத்துக்கயேன்...

    ‘கடவுளே ஆரம்பிச்சுட்டாளே சுய புராணம் பாட’

    கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் குழந்தையே பெத்துக்கிட்டோம். எல்லாமே எங்க லைஃப்ல ப்ளான்தான். முதல்ல வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்ணனும்

    உண்மைதான் மேடம். ஆனா குடும்பத்துல இருக்கறவங்க ஏதாவது நினைப்பாங்களே!

    யாரு... யாரு என்ன நினைப்பா? உன் மாமியார் ஏதாவது சொல்றாங்களா சொல்லு. ஏதாவது பிரச்சனைப் பண்ணினாங்க, கொடுமைப்படுத்தினாங்கன்னா என்கிட்ட சொல்லு. ஐபிஸ் முதல் ஐஏஎஸ் வரை எனக்கு அத்தனைப் பேரையும் தெரியும். ஹவுஸ் ஹராஸ்மென்ட்டுன்னு சொல்லி உள்ளத் தூக்கிப் போட்டுடறேன். என்ன நினைச்சுக்கிட்டிருக்காளுங்க இந்த கிழவிங்க. பொம்பளைன்னா சும்மா புள்ளைப் பெத்துப் போடற மெஷ~ன்னு நினைச்சுட்டாங்களா? எழுந்து நின்று மேஜையைத் தட்டினாள்.

    பதறிப் போனாள் மதுவாணி.

    ஐய்யோ... மேடம் நீங்க வேற. என் மாமியார் அப்படிப்பட்டவங்க இல்லை. ரொம்ப நல்லவங்க. இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை கூட குழந்தை இல்லையேன்னு சொன்னதே கிடையாது.

    ம்... குழந்தை இல்லையேன்னு சொன்னதே கிடையாதா? என தாடையை ஒற்றை விரலால் தட்டியவாறே மேசைமீது ஏறியமர்ந்தாள்.

    எங்கோ இடிக்குதே

    நீங்க... ச்சேர்ல உட்காருங்க மேடம். இப்படி மேசையில ஏறி உட்கார்ந்தா எங்காவது இடிக்கத்தான் செய்யும்.

    ப்ச்! நான் சொன்னது உன் மாமியார் விஷயத்தை. கல்யாணம் ஆகி மருமக வந்த அடுத்த மாசத்திலேர்ந்தே மாமியாருங்க பாட ஆரம்பிக்கிற புராணம் எப்ப எனக்கு பேரப்புள்ளையைப் பெத்துத் தரப் போறாங்கறதுதான். உன் மாமியார் ரெண்டு வருஷம் ஆகியும் வாயைத் திறக்காம இருக்காங்கன்னா எனக்கு எங்கேயோ இடிக்குது. ஒரு சமயம் உன் புருஷனுக்கு கூட ஏதாவது குறை இருக்கலாம். அது அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம். அதனாலதான் கம்முன்னு இருக்காங்க

    ஐய்யோ... மேடம். அப்படியெல்லாம் எதுவுமில்லை மேடம்

    மேசையிலிருந்து குதித்த சிவசங்கரி சுட்டுவிரலை அவளை நோக்கி நீட்டினாள்.

    "தெரியுமா? உனக்குத் தெரியுமா? எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு உனக்குத் தெரியுமா? இதே கதைதான் என் ஃப்ரன்ட் வாழ்க்கையில நடந்தது. புள்ளைக்கு ஏதோ ஆக்ஸிடன்ட்ல ஒரு குழந்தைக்கு அப்பாவாகற தகுதிப் போய்ட்டு. அந்த விஷயத்தை மறைச்சு அந்தம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1