Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முல்லைப்பூ பல்லக்கு
முல்லைப்பூ பல்லக்கு
முல்லைப்பூ பல்லக்கு
Ebook141 pages51 minutes

முல்லைப்பூ பல்லக்கு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காரிலிருந்து இறங்கிய ஸ்டீபனின் தாயும் தந்தையும் 'என்னப்பா தோட்டத்திலேயே உட்கார்ந்திட்டே? உள்ளே வர வேண்டியதுதானே?" என்றனர்.
 'இருக்கட்டும். இங்க தான் நல்லாயிருக்கு" என சிரித்தான் மோகன்.
 "அப்போ வீடு சகிக்கலைங்கறியா? பார்த்துப் பார்த்து ரசிச்சு ரசிச்சு கட்டின வீடுப்பா."
 ஸ்டீபனின் தந்தை பெரிதாகச் சிரித்தார்.
 "அட நீங்க வேற அங்கிள்!"
 "அம்மா டிபனை தோட்டத்துக்குக் கொடுத்து விடு" எனக் கூறிவிட்டு ஸ்டீபன் மோகனுக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.
 "என்னடா... வந்து ரொம்ப நேரமாச்சா?"
 "இல்லை. இப்பத்தான் வந்தேன். காபி குடிச்சேன்" என்றான் மோகன்வேலைக்காரப் பெண்மணி இருவருக்கும் சிற்றுண்டி தட்டுடன் வந்தாள்.
 "அய்யோ... எனக்கு வேண்டாம். நான் சாப்பிட்டுத் தான் வந்தேன். காபி குடிச்சது வேற ஒரு மாதிரியா இருக்கு" என மோகன் மறுக்கவே ஸ்டீபனுக்கு மட்டும் கொடுத்து விட்டுப் போனார் வேலைக்காரப் பெண்மணி.
 "யோசிச்சுகிட்டே என்ன பிரார்த்தனை பண்ணிக்கிட்டே? சீக்கிரம் உன் காதல் நிறைவேறனுமின்னா?"
 "ஆமா! ஒவ்வொரு பிரார்த்தனையின் போதும் இதைத்தான் வேண்டிக்கறேன். எங்கே நிறைவேறுது?"
 "ஆமா! நீ தைரியமாப் போய்க் காதலைச் சொல்லாம இருந்தா எப்படி நிறைவேறும்? ஒவ்வொரு தடவையும் நீ இப்படித்தான் பண்றே? காதலிப்பே. பின்னாடியே போவே. ஆனா பேசமாட்டே. காதலைச் சொல்லமாட்டே. கடைசியா அவளுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் நிச்சயம் பண்ணின பின்னாடிப் போய் ஐ லவ் யூன்னு சொல்லி அறை வாங்கிட்டு வந்து நிப்பே." -
 "ப்ச்! என்ன பண்றது? காதலிக்கறதுல இருக்கற தைரியம் அதைச் சொல்றதுக்கு வரமாட்டேங்குதே!"
 "பயந்து பயந்து ரெண்டு காதலைக் கோட்டை விட்டே. இப்ப மூணாவதா ஒருத்தி பின்னாடி சுத்தறே. இவ பேராவது தெரியுமா? தெரிஞ்சுக்கிட்டியா இல்லையா?"
 "ப்ச்! இல்லை."
 "ஒண்ணு பண்ணு."
 "சொல்லு."
 "அந்தப் பொண்ணு யாருன்னு காட்டு. உனக்காக நான் போய் அவகிட்ட அவ பேரு, வீட்டு விலாசம் எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்."
 "நீ போடா! நானாவது ரெண்டு பொண்ணுங்களைக் காதலிச்சு அதை நிறைவேறலைன்னாலும் தாடி வச்சுக் கிட்டுத் தண்ணியடிச்சுக்கிட்டு திரியாம டேக் இட் பாஸின்னு அடுத்த காதலுக்கு அஸ்திவாரம் போட்டுக்கிட்டிருக்கேன். ஆனா நீ இதுவரைக்கும் ஒரு பொண்ணைக் காதலிச்சிருக்கியா? அட்லீஸ்ட் சைட்டடிச்சிருக்கியா? சில சமயம் நீ ஆம்பளைதானான்னு எனக்கு சந்தேகம் கூட வருது"வரும்டா. அறைஞ்சேன்னாப் பாரு. எனக்கும் ஒரு பொண்ணுமேல..."
 "வெரிகுட். காதலா?"
 "காதல் இல்லை. ஒரு ஆர்வம்."
 "என்னது ஆர்வமா? அது எத்தனை நாளா?"
 "இப்பதான் ஒரு மணி நேரமா?"
 "ஒரு மணி நேரமாவா? ஒரு மணி நேரத்துல ஒரு பொண்ணு மேல ஆர்வமா? வர்ற வழியில யாராவது அழகியைப் பார்த்தியா?"
 "வழியில் பார்க்கலை. டி.வி.யில பார்த்தேன்."
 "டி.வி.யில பார்த்தியா? செய்தி வாசிக்கிற பொண்ணா?"
 சிரித்தான் மோகன்.
 மாதவியைப் பற்றிச் சொன்னான். மோகனின் அம்மா சொன்னதைத் தான் ஸ்டீபனும் சொல்லிச் சிரித்தான்.
 "தங்கச்சிக்கு மாப்பிள்ளைப் பார்க்குறாள்னா அவ கல்யாணம் ஆனவளாத்தான் இருக்கணும். போயும் போயும் கல்யாணம் ஆனவ மேல ஆர்வம் வந்திருக்கு உனக்கு."
 "ப்ச்! எனக்கென்னமோ அப்படித் தோணலை. அவ கல்யாணம் ஆகாதவள்னு மனசுல தோணுது."
 "அப்போ பொண்ணு பார்க்கப் போறது மாதவியையா? அவ தங்கையையா?"
 "அனுவைப் பார்க்கற மாதிரி போய் மாதவியைப் பார்க்கத்தான்."
 "மாதவிக்குக் கல்யாணம் ஆகியிருந்தா..."
 "ப்ச்! தங்கையைப் பிடிச்சிருந்தா கட்டிக்க வேண்டியது தான்."
 "வெரிகுட். இது புத்திசாலித்தனம்.ஏன்டா... ரெண்டு பொண்ணைக் காதலிச்சு ஏமாந்த நீ மூணாவதா ஒருத்தி பின்னாடி சுத்தும் போது நான் பாருன்னே தெரியாத அந்த மாதவிக்காக தாடி வச்சுக் திட்டு அலைவேனா..."
 "போடா..."
 "சரி நீ அலைய வேண்டாம். நாளைக்கு நீ பொண்ணு பார்க்கப் போகும் போது நானும் வர்றேன்."
 "நீ எதுக்கு?"
 "உனக்குத் துணையா?"
 "வேற வினையே வேண்டாம். உன்னை நம்பி அங்கெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது. உன் ஒரு தலைக்காதலை அங்கேயும் ஆரம்பிச்சுடுவே."
 "அடச்சீ! என்னை என்ன அவ்வளவு மோசமானவனாவா நினைக்கிறே? ஒரு இடத்துல ரிசல்ட் தெரியாத வரைக்கும் அடுத்த இடத்துக்கு தாவமாட்டான் இந்த ஸ்டீபன்" இருவரும் கலகலவெனச் சிரித்தனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224396658
முல்லைப்பூ பல்லக்கு

Read more from R.Sumathi

Related to முல்லைப்பூ பல்லக்கு

Related ebooks

Related categories

Reviews for முல்லைப்பூ பல்லக்கு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முல்லைப்பூ பல்லக்கு - R.Sumathi

    1

    சட்டைக்கு பட்டன் போட்டவாறே தன் அறையிலிருந்து வெளிப்பட்டான் மோகன்.

    அம்மா டிபன் எடுத்து வைம்மா. ஒலித்த அவன் குரலைக் காதில் வாங்காமல் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்திருந்தாள் அம்மா துளசி.

    அவன் மறுபடியும் அருகே வந்து அதையே கூறவும்,

    சித்த இருடா. கல்யாண வேளை நிகழ்ச்சி ஆரம்பிச்சுட்டாங்க. வரன்களை அறிமுகப்படுத்தப் போறாங்க. நீயும் பாரு. நமக்கு ஏத்த மாதிரி பொண்ணு தேறுதான்னு பார்ப்போம்.

    அய்யோ தலையில் தட்டிக் கொண்டான் மோகன்.

    அம்மா உனக்கு வேலையே இல்லையா? எனக்குப் பசிக்குது. டிபன் கொடும்மா.

    என்னை டிஸ்டர்ப் பண்ணாதே. சமையலறையில இட்லியும், சட்னியும் இருக்கு. போய் எடுத்து வச்சு சாப்பிடு.

    பெத்த புள்ளைக்குச் சாப்பாடு தர்றதை விட டி.வி. பார்க்கறதுதான் ரொம்ப முக்கியமா? கடுப்படித்தான்.

    இந்த நிகழ்ச்சியை யாருக்காகடா விழுந்து விழுந்து பார்க்கறேன். உனக்காகத்தானேடா? நல்ல பொண்ணாத் தேடி உனக்குக் கட்டி வைக்கணும்னுதானேடா.

    ம்க்கும்... இதையே தான் ஒரு வருஷமா சொல்றே? ஒரு பொண்ணையும் பார்த்த மாதிரி இல்லை.

    "குறை சொல்லாதடா. நல்ல பொண்ணா அமைய வேண்டாமா?

    சரி சரி தொணதொணங்காதே. நிகழ்ச்சி ஆரம்பமாயிடுச்சு. நீ போய் எடுத்து வச்சுச் சாப்பிடு. மோகன் ஏதேதோ முனகியவாறே சமையலறைக்குள் நுழைந்து ஒரு தட்டில் இட்லியும், சட்னியும் எடுத்துக் கொண்டு அம்மாவிடம் வந்தான்.

    அம்மாவிற்குப் பக்கத்தில் அமர்ந்தபடியே சாப்பிடத் தொடங்கினான். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர் தன் இனிய குரலாலும் கனிவான பேச்சாலும் வரன்களை அறிமுகப்படுத்தி இறுதியில் நல்ல துணை அமைய வாழ்த்தினார்.

    அடுத்து நிகழ்ச்சியில் வரனை அறிமுகப்படுத்த வருபவர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மாதவி.

    அந்த மாதவி மேடையேறி வந்தாள். அவளைப் பார்த்த மோகன் ஒரு கணம் பார்வையில் கூடுதல் ஈர்ப்பு சக்தி சேர் மெல்லிய அதிர்விற்கு உள்ளானான்.

    மிகவும் இளம் பெண்ணான அவளுடன் யாரும் வரவில்லை.

    காலத்தைப் பாருடா! இந்தப் பொண்ணு தனக்கு மாப்பிள்ளை தேடித்தானே வந்திருக்கா போலிருக்கு. கூட யாருமே வரலை அம்மா சிரிப்பும் திகைப்புமாகச் சொன்னாள்.

    இருக்கட்டுமேம்மா. பொண்ணுங்க தன்னந்தனியா ஏதேதோ சாதனை செய்யும்போது தானே மாப்பிள்ளை தேடறதுல என்ன தப்பு?

    இருந்தாலும் காலம் கெட்டுப் போச்சுடா. சில விஷயங்கள்ல அடக்கம் தேவை.

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மாப்பிள்ளை தன்னைப் பற்றின விவரங்களைச் சொல்லி தனக்கு எப்படிப்பட்டப் பொண்ணு வேணும்னு சொன்னதைப் பார்த்தேயில்ல. ஆனா அதே மாதிரி ஒரு பெண் சொல்லக் கூடாதா? என்னம்மா நீ? அந்தக் காலத்துல பொண்ணுங்க தான் மாப்பிள்ளைகளை வரிசையா உட்கார வச்சு கம்பீரமா கையில மாலையோட வந்து தனக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்தாங்க. அந்த சுயம்வரத்தை நாம பெண் பார்க்கும் படலமா மாத்திப் பெண்ணை அடிமைப்படுத்திட்டோம்.

    ஆமா வந்துட்டாரு பாரதியாரு! சும்மா கொஞ்ச நேரம் இரு. இந்தப் பொண்ணு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு கேட்கறாள்னு பார்ப்போம்.

    அம்மா நிகழ்ச்சியில் ஆர்வமானாள்.

    மோகனும் சாப்பிட்டவாறே நிகழ்ச்சியை கவனித்தான்.

    வணக்கம் மாதவி. சொல்லுங்க நீங்க அறிமுகப்படுத்தப் போற வரனைப் பற்றி.

    "என் தங்கை அனுராதா கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடிச்சுட்டு தனியார் கம்பெனியில நல்ல சம்பளத்துல வேலை பார்க்குறா.

    அவளுக்கு நல்லா படிச்ச, வேலை பார்க்குற மாப்பிள்ளை வேணும். ஜாதி அவசியம் இல்லை.

    அந்த அனுராதாவின் புகைப்படம் திரையை அடைத்த வண்ணம் காட்டப்பட்டது.

    அவளும் அழகாகவேயிருந்தாள்.

    உங்க தங்கை அனுராதாவிற்கு நீங்க எதிர்பார்க்கற மாதிரியே நல்ல மாப்பிள்ளை கிடைக்க வாழ்த்துகிறோம்.

    தொடர்ந்து அனுராதாவின் முகவரி தொலைபேசி எண் முதலியவை தொலைக்காட்சி திரையில் காட்டப்பட அம்மா அவசர அவசரமாக அதைக் குறித்துக் கொண்டாள்.

    மோகன் இந்தப் பொண்ணைப் போய்ப் பார்த்தால் என்ன?

    எந்தப் பொண்ணை?

    அனுராதாவை.

    அவளை விட அவ அக்கா மாதவியை எனக்குப் பிடிச்சிருக்கு.

    ‘அடப்பாவி. அவங்க மாப்பிள்ளை தேடறது தங்கச்சிக்கு.

    இருக்கட்டுமே அதுக்காக அக்காவைப் பிடிக்கக்கூடாதுன்னு ஏதாவது சட்டமா?

    டேய் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருந்தா? ஆகி இருக்கும்டா. அதனால தான் தங்கச்சிக்கு டி.வி. மூலமா மாப்பிள்ளை பார்க்கறா.

    ஏம்மா இப்படி இருக்கலாமே?

    எப்படி?

    அவ குடும்பத்துல வரிசையா நாலஞ்சு பொண்ணுங்க இருந்து இவதான் மூத்தவளாயிருந்து எல்லாரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு கடைசியா தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கலாமில்லையா? அம்மா கலகலவெனச் சிரித்தாள்.

    பரவாயில்லைடா. நீ கூட நல்லா கற்பனை பண்றே? சீரியல்ல தான் இப்படி ஒரு அம்மாவுக்கு அஞ்சு பொண்ணுங்க ஒரு அப்பாவுக்கு ஏழு புள்ளைங்கன்னு கதை வரும். நீ பேசாம சீரியலுக்கு கதை எழுதப்போயிடு.

    அம்மா சும்மா கிண்டல் பண்ணாதே. எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு கல்யாணம் ஆகாதவள்னுதான் தோணுது.

    சரிடா! நாளைக்கே அவங்க வீட்டுக்குப் போவோம். அதையும் தெரிஞ்சுப்போம்.

    ஆனா ஒரு கண்டிஷன்.

    என்னடா...?

    அக்காவைத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்லுவேன்.

    அவ புருஷன் சக்கையா உன்னை உதைச்சு அனுப்பப் போறான். வடிவேலு மாதிரி உதை வாங்கிக்கிட்டு அய்யோ அம்மான்னு வரப்போறே? அம்மா மறுபடியும் பெரிதாகச் சிரித்தாள்.

    அதையும் பார்ப்போம் எழுந்த மோகன் தட்டைக் கொண்டு போய் சமையலறையில் வைத்துவிட்டுக் கை கழுவிக் கொண்டு வந்தான்.

    நாற்பதைத் தொடப்போகும் ஒருவன் திரையில் தனக்குப் பெண் கேட்டுக் கொண்டிருந்தான்.

    பெண் ரொம்ப அழகாயிருக்கணும். நிறைய படிச்சிருக்கணும். வேலை பார்க்கறவளாயிருக்கணும்.

    குபீரெனச் சிரித்தான் மோகன். ஆசையைப் பாரு. மண்டையில அஸ்திவாரம் போட்டு வீடு கட்டலாம். அப்படி ஒரு பொட்டல் வெளி. வயசு நாற்பதாயிட்டு. இவருக்கு ரொம்ப அழகான பொண்ணு வேணுமாம்.

    பழிக்காதேடா! ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு. நீ இப்ப ஆசைப் படலையா? அந்த மாதவி கல்யாணம் ஆகாதவளாயிருக்கணும்னு. அத மாதிரி தான் இதுவும்.

    உன்கிட்ட பேச முடியாதும்மா. அறிமுகம் இல்லாத ஆட்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குவே. பெத்த புள்ளையை ஆசைப்பட்ட பொண்ணே கிடைக்கட்டும்னு வாழ்த்த மாட்டே...

    சரிடா! அந்த மாதவி கல்யாணம் ஆகாதவளாயிருந்து அவளே உனக்குக் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.

    நன்றி தாயே! மிக்க நன்றி. இப்பத்தான் ஒரு தாய்க்குரிய இலக்கணத்தோடு நடந்துக்கிட்டிருக்கே?

    அடிச்சேன் பாரு அம்மா துளசி கையை ஓங்க ஒதுங்கிக் கொண்டவன் சொன்னான்.

    அம்மா நான் ஸ்டீபன் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்.

    கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஞாயித்துக்கிழமையாச்சுன்னா உனக்கு அவனைப் பார்க்கலைன்னா தூக்கம் வராதே.

    எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒரு மாசமோ ரெண்டு மாசமோ

    ஏன்டா... பாரின் எங்காவது போகப் போறானா அவன்?

    ‘பாரின் போறதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்மா.

    பின்னே?

    கல்யாணம் ஆகிடும்னு சொல்ல வந்தேன்.

    அட... அப்படியா? பொண்ணெல்லாம் பார்த்தாச்சா?

    வீட்ல யாரும் பார்க்கலை. இவன் மட்டும் பார்த்திருக்கான்.

    என்னடா குழப்பறே?

    லவ் பண்றாம்மா.

    அடப்பாவி! பொண்ணு யாருடா? அவ பேரு என்ன? எந்த ஊரு?

    அவ பேரு அவனுக்கே தெரியாது. தினமும் அவ பின்னாலேயே போறதும் வர்றதுமாயிருக்கான். காதலைக் கூட இன்னும் சொல்லலையாம்.

    ஒரு தலைக்காதலா? உதை வாங்கிட்டு வந்து நிக்கப்போறான்.

    ஏம்மா நீ எல்லாரையும் இப்படித்தான் வாழ்த்துவியா? ஆளைப் பாரு.

    கோவிச்சுக்காதே. சரி நாளைக்கு பொண்ணு பார்க்கப் போகும்போது ஸ்டீபனையும் அழைச்சுக்கிட்டு வா. உனக்கு சங்கோஜம் இல்லாம இருக்கும்.

    யாரு ஸ்டீபனையா? வேற வினையே வேண்டாம்.

    ஏன்டா?

    இந்த ஒரு தலைக்காதலன்களையே நம்ப முடியாது. திடீர்னு ரூட்டை மாத்திடுவானுங்க. அதிலும் ஸ்டீபனை நம்ப முடியாது. இது மூணாவது ஒரு தலைக்காதல்.

    அடக்கடவுளே...

    "இதுக்கு முன்னாடி ரெண்டு பொண்ணுங்களை ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1