Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதலாய் வந்து போகிறாய்
காதலாய் வந்து போகிறாய்
காதலாய் வந்து போகிறாய்
Ebook117 pages42 minutes

காதலாய் வந்து போகிறாய்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிலவைப் போல்தான் நின்றிருந்தாள் அவள்.
 ஆதிரா!
 ஆம், ஆடைகட்டி மேடைக்கு வந்த நிலவு. சுடிதார் அணிந்த ஒரு சுந்தர நிலவு...
 சுகமாக இருந்தது! பார்ப்பதற்கும் அந்தப் பாராட்டைக் கேட்பதற்கும்! எல்லா விழிகளும் விண்மீன்களாகப் பிரகாசித்து அந்த எல்லோராவை ரசித்தன.
 சும்மா பார்ப்பதற்கும், சுகமாய்ப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான் விஷ்ணு.
 சும்மா பார்ப்பது சுவரொட்டியைப் பார்ப்பதைப் போல.
 சுகமாகப் பார்ப்பது சுவரில் வரைந்த ஓவியத்தைப் பார்ப்பதைப் போல,...
 விஷ்ணுவின் பார்வை சுகத்தை உணர்ந்தது. அந்தப் பாராட்டு மழையில் பனிபட்ட பூவாய் மாறி மனம் ஆனந்தத்தில் நாவாய் போல் மிதந்தது.
 "நம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் கலந்து கொண்ட சிறுகதைப் போட்டியில் நம் கல்லூரி மாணவி ஆதிரா கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்திருப்பது நம் அனைவருக்கும் பெருமையையும் பெரு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. போட்டிக்குச் சென்றபோதே எங்களுக்குத் தெரியும், வென்று வருவாள் பரிசையென்று. எங்களின் நினைப்பை நிஜமாக்கிய ஆதிராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 இயற்கையாகவே இலக்கியச் செறிவும், தரமான தமிழ் அறிவும், நளினமான நடையழகும், கடல் போன்ற கருத்தாழமும் கைவரப்பெற்ற அவளுடைய எழுத்துக்கள் நமக்குப் பரிச்சயமானவையே! இக்கல்லூரியின் பட்டிமன்றங்களிலும் பாட்டரங்கங்களிலும் நாம் ஆதிராவின் எழுத்துத் தேனைப் பருகியிருக்கிறோம். கல்லூரி ஆண்டு மலர்களில் மலர்ந்த அந்த எழுத்துப் பூக்களை எடுத்து முகர்ந்திருக்கிறோம்எதிர்காலத்தில் எழுத்துலகில் நிலவாகப் பிரசித்து இந்தக் கல்லூரிக்குப் புகழைச் சேர்க்கப்போகும் ஆதிராவின் எழுத்து சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது.
 'மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அங்கேதான் அவன் இருப்பிடம்' என அறிஞர் வான்பிரான் கூறியதைப்போல், ஆதிரா எழுத்துத் துறையில் செல்ல வேண்டும் என்று வாழ்த்துக் கூறி, விழாத் தலைவர் தன் பொற்கரங்களால் இந்தப் பரிசை மாணவி ஆதிராவிற்குத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்."
 விழாத் தலைவரும் தன் பங்கிற்குப் பாராட்டு மழையைப் பொழியத் தொடங்கினார்.
 தரணி போற்றும் தஞ்சாவூர்க் கோவில் கண்களைப் பறிக்கும்படி கண்ணாடிக்குள் அடைக்கப்பட்டு அவளுடைய கையில் கொடுக்கப்பட்டது. கல்லூரி கரகோஷத்தில் அதிர்ந்தது. விழிகள் மொய்த்து அவள் முகத்தைத் தைத்தன. ஒரு விண்வெளி ஓடத்தைப் பார்ப்பதைப் போல் வியப்பாக வினோதமாக அத்தனை விழிகளும் மொத்தமாக அம்பாளுக்கு ஆயிரம் கற்பூரத்தட்டுக்களைக் காட்டியதைப் போல் பார்த்தன.
 "எழுதுகோல் என்பது ஓர் அருமையான ஆயுதம். பாரதியின் கையில் அது ஒரு பட்டாக்கத்தி. அடிமைத்தளையை அறுத்துப் போட்டது. பெண்ணடிமையைக் குத்திக் கிழித்தது. பாரதிதாசனின் கையிலிருந்து பாரதத்தின் புரட்சிக்குப் பாதை போட்டது. பெரியாரின் கையில் மூடத்தனத்தின் மூலத்தை அறுக்கும் சரியானதொரு ஆயுதமாக இருந்தது. அண்ணாவின் கையிலிருந்து மக்களின் எண்ணங்களை நேராக்கியது. சீராக்கியது.
 ஏதோ எழுதுவதற்கு எடுக்கக் கூடாது எழுதுகோலை! ஏரெடுத்து மண்ணைச் சீராக்குவதைப் போல் எழுது கோலெடுத்துச் சமுதாயத்தைச் சீராக்க வேண்டும்.
 எல்லாத்துறைகளிலும் ஏந்திழையர் வெல்லும் யுகம் இது. எழுத்துத் துறையிலும் ஏற்றம் காண்கின்றார். அந்த அற்புதத் துறையில் அரிய சாதனைகளைப் படைத்துப் பேரும் புகழும் அடைய மாணவி ஆதிராவை வாழ்த்துகிறேன். அவர் தன்னுடைய திறமையை நன்றாக வளர்த்துக் கெண்டு சிறப்புகள் பல பெற வாழ்த்துகிறேன்."
 தலைமை தாங்க வந்திருந்த புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் புகழ்ந்து முடித்தார்முழுமனதோடு கைதட்டியது அரங்கம். நாணத்துடன் நன்றி நவின்றாள் ஆதிரா. கோவில்தான் கலசத்தைத் தாங்கும். இங்கு - கலசம் கோவிலைக் கைகளில் தாங்கியிருக்கிறது. தரையிறங்கிய நிலவாக மேடையை விட்டுத் தரைக்கு வந்தாள்.
 திரை நீக்கியதும் திரைப்படத்தைக் காணும் ஆவலோடு தோழிகள் அவளை நோக்கினர். சூழ்ந்தனர்.
 விழா முடிந்ததோ இல்லையோ, அனைவரும் அவளை நோக்கியே விரைந்தனர்.
 கலவையான பாரட்டு மாலை! காளை ஒருவனுக்கு மட்டும் கவலை. அவளை நெருங்கிவிட வேண்டும். பாராட்ட வேண்டும். பூரிக்கும் முகத்தைப் பார்க்க வேண்டும். தன்னை ஈர்க்கும் அந்த இருவிழிகளையும் ரசிக்க வேண்டும்!
 தேனீக்களாகச் சூழ்ந்திருக்கும் தோழியர் கூட்டத்தை விலக்கிச் செல்வது இயலாத காரியம் போலிருந்தது. மனம் நாடும் மங்கையைக் கூட்டத்தில் ஒருவனாகயிருந்து வாழ்த்த மனம் கூடவில்லை.
 அவள் தனிமைப்படும் நிமிடத்திற்காகத் தவமிருந்தான்; தனித்திருந்தான்; தவித்திருந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224710423
காதலாய் வந்து போகிறாய்

Read more from R.Sumathi

Related to காதலாய் வந்து போகிறாய்

Related ebooks

Reviews for காதலாய் வந்து போகிறாய்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதலாய் வந்து போகிறாய் - R.Sumathi

    ebook_preview_excerpt.html[nF~h9,v/d5cA<:=D$'XUݔ<F3fwW_}UsoϿ\7)?}nMdgGgX-940p4pukgF@b8g<o{bp Wa'A~WmuOߵw1-sŏfBoB`!F,ʂz[slşta:5̀1ځBZ7iDTj3@ t3b;7,:ybtBw  ys(a4+LwJoaWz?nq`RiY0^¤=1*9=DNΪfJ|~3֬N~"f9K# #S$,bfp97+AYpym1(Bx diМcXoaV+MB-zM-){J0g9ch5;1z_h?V^I nk8'3 7%ň~7W=v̋%ֆX_>?6B2^Cp Ⴖex\8XTm`P"P.|ɬυL?8C5 ;ّ|>KQHd$/R2w2b*SvDyB18AyZѰzSЪ2 ͪ|%>X?x]Ȃ5*Ku)]R󚩽?#x8yӟ xxaxCP?Ff2M.mI:SVh0\Ln[1) 26 $+9wն~I 5 *"5ZwÂ\_RBB:پ]?},F&sj,ύUcP3Jqv`Y)VcG w(*"dTf4X*2+D~&EP:@5cƭ0 ;42H~ܮCAwVwLntgj%G>FbIBL$bu3 HNuN6px,c|kJ,i\WnPŔcuMC2!㳅uW"J$y3;s[rU (^B5 SST%KZrZgLb)uc*Yt*o.i -0kZW X8 s؆oR iL?HVX6V@j%OwcoGȵj_Wƪyo8`Sbns9e纣iT'ղUhg֟ Po𱘐S5e$"*)H5[-P~7*+ w6ViE7N$2qLkke:ef+(!J[iuYAt&"IYh( &zatk$TȦBC{%P37 `2!Nӏ\XF.wiy5(2iz{A4d&w@~b.$} q2qg -AU83.eis1C/p4Ij7/E)km84;[/;ߋ(j6ky"fC77AC`pђ9:JuF)͙<?k'[a=ԙ;C'l.өī" $Il&q=HI(yԪu=ϱ[q+a&y&bG0x!K?]a8Kdro9H×PZ.dط:*3{) #oęv8ݵEh 䄡HND5}6sLytJ28/$#db5 }O*7v~r+_{7Kc␨x`5Uֲ;i. 08 hhLҕfAg+:9ɽcC2-N&Л͹dT'I|8 X0jNWY,ϧ腉WYQO+#b妻4|8,;1⽘Fz3Bï"Bv EpGu "=-tv63MZ
    Enjoying the preview?
    Page 1 of 1