Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீயென்பது நானல்லவோ...?
நீயென்பது நானல்லவோ...?
நீயென்பது நானல்லவோ...?
Ebook106 pages36 minutes

நீயென்பது நானல்லவோ...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணீருடன் நின்ற மருமகளைப் பார்த்துக் கொஞ்சமும் மனதில் இரக்கம் இன்றிப் பேசினாள் செல்வநாயகி.
 "என்னடி... முறைச்சுக்கிட்டு நிக்கறே. கண்ணீர் பொத்துக்கிட்டு கொட்டுது. போடி... போய் வேலையைப் பாரு. நல்ல மாட்டுக்குத்தான் ரோஷம் வரணும். உனக்கெல்லாம் எதுக்கு ரோஷம் வரப்போகுது. கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகப்போகுது. இருபது வயசுல கல்யாணம். வயசு முப்பது ஆகுது. மாடு மாதிரி நிக்கறே. புண்ணியம் இல்லை."
 குபீரென நெஞ்சம் குலுங்கக் கதறினாள் வள்ளி. சமையலறையை விட்டு வெளியே வந்தாள். முந்தானையை வாயில் பொத்திக் கொண்டு குலுங்கினாள்.
 கருணாகரன் தன்னுடைய அறையிலிருந்து வெளிப்பட்டான். அவனுக்கு அம்மா பேசியது எல்லாம் கேட்டது. அவனுடைய முகம் நிறமிழந்து போய்விட்டிருந்தது.
 சமையலறை அருகே வந்தான். கண்ணீருடன் விசும்பிக் கொண்டிருந்த மனைவியை ஒரு கணம் பார்த்தவன் உள்நோக்கிக் குரல் கொடுத்தான்.
 "அம்மா..."
 மகனுடைய அதிகாரமான குரலுக்கு வெளியே வந்தாள் செல்வநாயகி.
 "அம்மா... என்னம்மா நீ ஏன் இந்த மாதிரி பேசறே? உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அவளை இந்த மாதிரிப் பேசாதேன்னு. எப்பப் பார்த்தாலும் எதையாவது சொல்லிக் குத்திக் காட்டிக்கிட்டே இருக்கறதுதான் வேலையா? அவளை வாய் கூசாம மலடி மலடின்னு ஏம்மா பேசறே? ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போய் எல்லா டெஸ்டும் செய்தாச்சு. ரெண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை. எதுக்குஅவளை மலடி மலடின்னு சொல்லணும்?" ஆத்திரமாகப் பேசிய மகனை எரிச்சலாகப் பார்த்தாள்.
 "பேசாம இருக்க எப்படிடா முடியும்? எல்லா வீட்லேயும் குழந்தையும் குட்டியுமா கொஞ்சி விளையாடுதுங்க. என் மனசு எவ்வளவு வேதனைப்படும்?"
 "உன் மனசு வேதனைப்படுதுங்கறதுக்காக அவ மனசை ஏன் நோக அடிச்சு வேதனைப் படுத்தறே?"
 "ஆமாண்டா! வேதனைப்படுத்துவேன்தான். உனக்குத்தான் எந்தக் குறையும் இல்லையே! நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடா?"
 "அம்மா!"
 "ஏன்டா கத்தறே? நான் சொல்றதுல என்ன தப்பு? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? பத்து வருஷம். நானும் எவ்வளவோ பொறுமையா இருந்து பார்த்தாச்சு. பொறக்கும் பொறக்கும்னு ஒவ்வொரு வருஷத்தையும் ஓட்டியாச்சு. இனிமே என்னால் பொறுமையா இருக்க முடியாது. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க!" செல்வநாயகி வெறுப்பைச் சுமந்து பேசினாள்.
 "அம்மா! இந்த மாதிரிப் பேச்சை இனிமே பேசாதே. பத்து வருஷம் என்ன? நூறு வருஷம் ஆனாலும் அவதான் என் மனைவி. பொறக்குதோ பொறக்கலையோ... இன்னொரு கல்யாணம்ங்கற பேச்சுக்கே இடம் இல்லை."
 "ஏன்டா... அப்படின்னா இந்த வீட்ல துள்ளி விளையாட ஒரு பிள்ளை கடைசி வரை இருக்காதா? என் ஆசை நிறைவேறாமலேயே நான் சாகணுமா? டேய்... நீ நூறு வருஷம் ஆனாலும் இவளையே கட்டிக்கிட்டு அழு. ஆனா... என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, இந்த வீட்ல விளையாட ஒரு பிள்ளை வேணும்."
 கருணாகரன் குழப்பமாக அம்மாவைப் பார்த்தான்.
 "என்னம்மா பேசறே? குழந்தை வேணும்னா நான் எங்க போவேன்? தத்து எடுத்தாத்தான் உண்டு."
 "எந்த இழவையாவது எடு. நீ தத்துதான் எடுப்பியோ இல்லை ரோட்ல கிடக்கற புள்ளையை இழுத்துக்கிட்டு வருவியோ! அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை. எனக்கு இந்த வீட்ல விளையாட ஒரு புள்ளை வேணும்இவளால ஒரு புள்ளையைப் பெத்தெடுக்க முடியாது. இந்தக் குடும்ப வாரிசைப் பார்க்க இந்த ஜென்மத்துல முடியாதுங்கறது தெரிஞ்சுட்டுது. அதனால ஏதோ ஒரு குழந்தையைப் பேரப் புள்ளையா நினைச்சு வாழ்ந்துட்டு செத்துப் போறேன்!"
 செல்வநாயகி பெரிதாக அழத் தொடங்கினாள். கருணாகரனுக்கு எரிச்சலாக இருந்தது. எதுவும் பேசாமல் தன், அறைக்குத் திரும்பினான்.
 இரவு அவனுடைய நெஞ்சில் படுத்துக் கொண்டு மெளனமாகக் கண்ணீர் வடித்தாள் வள்ளி.
 அவளுடைய கூந்தலை மெல்ல வருடினான் கருணாகரன். மென்மையாகச் சிந்தும் அவளுடைய கண்ணீர் சூடாக நெஞ்சில் இறங்கி வேதனையின் ஆழத்தை உணர்த்தியது. ஏதாவது பேசி அவளை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆனால், பேச முடியவில்லை. நெஞ்சை வேதனை கனமாக அழுத்தியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224327188
நீயென்பது நானல்லவோ...?

Read more from R.Sumathi

Related to நீயென்பது நானல்லவோ...?

Related ebooks

Reviews for நீயென்பது நானல்லவோ...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீயென்பது நானல்லவோ...? - R.Sumathi

    Ujebook_preview_excerpt.htmlZnF~&gF{6)KۤX$6)tA::,"Ez=J;;KYF/JL|,~?~~]hccrlo}(ctnac=;֋8:6ctlݴ"Xŗ!z9w=a/n,FBspjzv#nimOG7]I$_\s!-`߸?ROIòtЫY8v]'A2ࡳk,Z9Lu}ZrF.e F=pgza<ŷOt0a& GZM8X%l g -W..M$SIɝ `=T7'3q ڥg}dJ|3Z+Lk*h By"+ְMMOet=A/& @7n>DOޣw3wm+iV˷Q3[rbԎ(b'Jjx+lSxE؁1yr>x.<xTz Њ_B 8nR01x_tL~ 23yCk]rf-m =#ޢDb5:}4QT3MW EA<4*ڨ#Zc* k 9h'H4 azFP 1LbvU) J(I纲5`>'hq ; FtD%q=YGh6@Tl]8ю @bXK$`Gmd.)aqYN34"3(}0ȢĠ#N8! H[#A1@F˴roj`N%@N&:deG0 [[‘v䔘y=EAldǞ- LDr8~rԹx4:=h?C)M;mqU,vcrؘ' ]tfJݒ,eɖ7a̻_ ‹fǭN^OdX^jjUlX&fGCekt(ͷIu9IEmuXT_>W[lƕ3a}I bx.57Mx8p+,F9{o\N.uHW-X,$: jt GHr=ĺf2A掙)N KMo3f.x "(e;F cTDND>+Öd㈍hL`W1@‚ qNl U6%D)Cյ4՘;CjO+Uf.3~W W'+h/wȒk3FN6ʼn;O؄^@ f.>MhlO/+"]a%z {|NV+Bgܚ%폾Gw.lo/p&R^F1 W)xe3 uA .gYGzc.u fP^,KZ0N!4OuŇ$>-r;sL?}bFM>/G-,^ͫ:  __ĵo߅Co谕2N tqd d 0?W'1
    Enjoying the preview?
    Page 1 of 1