Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...
Ebook136 pages50 minutes

மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்திரிகா நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். 'திருமணமா? நவநீதனுக்கு இன்னொரு திருமணமா? என்னை விவாக ரத்து செய்யப் போகிறார்களா?'
 கிடுகிடுவென இதயத்தில் பிரளயம்.
 முத்துலட்சுமிக் கிழவியைப் பங்கஜம் அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
 "நீங்க என்ன சொல்றீங்க?"
 "அட... என்ன இந்தியிலயா சொன்னேன்? தமிழ்ல தானே சொன்னேன். உனக்கிருக்கறதோ ஒரு புள்ளை. அவனோட வாரிசை நீ பார்க்கலைன்னா எப்படி? இவளைத் தொலைச்சு தலைமுழுகிட்டு உன் புள்ளைக்கு வேற கல்யாணம் பண்ற வழியைப் பாரு..."
 "அதெல்லாம் சரி வராது..."
 "ஏன் வராது"
 "சந்திரிகா வீட்டைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே! காசு பணத்துல எங்களுக்கு ஏணி வச்சாலும் எட்டாத குடும்பம். என் புள்ளையோட குணத்தை மதிச்சு பொண்ணு கொடுத்தாரு அவ அப்பா. அதுமட்டுமா... அவர் தன்னோட சிபாரிசுலதான் பெரிய கம்பெனியில வேலை வாங்கிக் கொடுத்தாரு. அதுமட்டுமா இந்த வீடே அவர் தன்னோட பொண்ணுக்கு வாங்கிக் கொடுத்ததுதானே. நூறு பவுனு நகை போட்டுக்கிட்டு வந்தா. இன்னைக்கும் நிறைய செய்யறாரு. இப்படித் தங்க முட்டை போடற வாத்தை வெட்டிப் போட முடியுமா?"
 "போதும் பங்கஜம். நீ காசுக்கு மயங்கறே? தங்க முட்டை போட்டு என்ன லாபம்? குழந்தை குட்டி இல்லையே! அவ வண்டி வண்டியா சொத்து சுகம் கொண்டு வந்தாங்கறதுக்காக உன் வம்சம் ஒண்டியா உன் புள்ளையோட நின்னு போகணுமா?

"டைவர்ஸ் பண்றதெல்லாம் பெரிய விஷயமாச்சே?"
 "என்ன பெரிய விஷயம்? குழந்தை பெத்துக் கொடுக்க ஒரு பொண்ணுக்கு தகுதி இல்லைன்னா அவளை விவாகரத்து பண்ண சட்டத்திலேயே இடம் இருக்கு தெரியுமா?"
 முத்துலட்சுமிக் கிழவி வக்கீலைப் போல் சட்டம் பேசினாள்.
 "எல்லாம் சரிதான். ஆனா... என் புள்ளை இருக்கானே பொண்டாட்டிதான் உலகம்னு நினைச்சுக்கிட்டிருக்கான் கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது. என்னமோ நேத்துத்தான் கல்யாணம் ஆன மாதிரி பொண்டாட்டியை கொஞ்சிக்கிட்டிருக்கான்."
 "ஆரம்பத்துல முடியாதுன்னுதான் சொல்லுவான் ஆனா சொல்ற விதத்துல சொன்னாக் கேட்டுப்பான். அவள் மனசுக்குள்ள மட்டும் தனக்கு ஒரு குழந்தை வேணும்கற எண்ணம் இருக்காதா? அந்த எண்ணம் அவனை எப்படியாவது சம்மதிக்க வைக்கும். நீ பக்குவமாப் பேசிப் பாரு."
 பங்கஜம் அமைதியாக இருந்தாள். அதிலிருந்து அவள் யோசிப்பது புரிந்தது.
 பாவம், சந்திரிகாவின் இதயம்தான் வெடித்து சிதறியது.
 இரவு பத்து மணிக்குத்தான் நவநீதன் வந்தான்.
 அவள் உணவு எடுத்து வைத்தபோது, தான் வெளியில் சாப்பிட்டு விட்டதாகச் சொன்னவன் வழக்கத்திற்கு மாறாக அவளுடைய அமைதியைக் கண்டு துணுக்குற்றான்.
 "ஏய்... என்ன உம்முன்னு இருக்கே? என்ன விஷயம்?" கட்டியணைத்தான்.
 குபுக்கென அவளுக்கு கண்கள் கலங்கியது.
 "ஏய்... என்னாச்சு? கண்ணு கலங்குது. உன்னை விட்டுட்டு சினிமாவுக்கு போனேன்னு நினைக்கிறியா? இல்லைடா! சும்மா அப்படிச் சொன்னேன். நீ வரலைன்னு சொன்னதும் டிக்கெட்டைத் தூக்கிப் போட்டுட்டு முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்துட்டு வர்றேன். நீ இல்லாம எனக்கு சினிமா இனிக்குமா என்ன?அவள் மென்மையாகச் சிரித்தாள். உள்ளம் மெல்ல மலர்ந்தது.
 'நான் இல்லாமல் சினிமாவே இனிக்காத இவனுக்கு நான் இல்லாத வாழ்க்கை இனிக்குமா என்ன?' மனசு பூரித்தது.
 அவள் தன் உள்ளத்தில் உண்டான அதிர்ச்சியை அதனால் ஏற்பட்ட வேதனைகளை மறந்து நடமாடினாள்.
 மறுநாள் முதல் வேலையாக அம்மா காபி கொடுக்கும் போதே கேட்டான் அவன்.
 "அம்மா... சந்திரிகாவை ஏதாவது சொன்னியா? ராத்திரியெல்லாம் அவ தூங்கவே இல்லை... அழுதுக்கிட்டேயிருந்தா... கேட்டாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..."
 பங்கஜம் ஒரு நிமிடம் யோசித்தாள்.
 'எப்படியும் தன் திட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். அதற்கு இதுதான் சந்தர்ப்பம்.'
 "ஆமா! சொன்னேன்தான்."
 "என்ன சொன்னே?"
 "உனக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணப் போறதா சொன்னேன்"
 இதை நவநீதன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய முகம் ஆத்திரத்தில் சிவந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224206742
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...

Read more from R.Sumathi

Related to மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...

Related ebooks

Related categories

Reviews for மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... - R.Sumathi

    1

    நீல வண்ணச் சேலை, கோலமயில் போல் அழகு. கண்ணாடியில் தன்னையே ஒரு கணம் இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சந்திரிகா. அழகான அந்த உடலுக்கு கம்பீரத்தைத் தருவதைப் போல் நீள் கழுத்து. அதில் தவழும் முத்துமாலையோடு சேர்த்து கழுத்தையும் தன் கரத்தால் வருடினாள்.

    ‘ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ...’ என நவநீதன் அடிக்கடி இந்தக் கழுத்தை வருடிப் பாடும் பாடல் காதில் ஒலித்தது.

    புனையாச் சித்திரமாக பரந்திருந்த கூந்தலில் புத்தம் புதிதாகப் பறித்து வந்த அடர்ந்த சிவப்பு நிற ரோஜாவை சொருகினாள். வண்ணக் கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்ததைப் போல் அழகு பளிச்சிட்டது.

    அவளழகில் அவளே மயங்கிய அதே நேரம் கூடத்தில் தொலைபேசி சிணுங்கியது.

    அவசரமாகக் கூடத்திற்கு வந்தாள். தொலைபேசியை எடுத்து ஹலோ... என்றாள்.

    ஹாய்... என்ன பண்ணிக்கிட்டிருக்கே?

    உங்ககூட போன் பேசிக்கிட்டிருக்கேன். மறுமுனையில் சிரித்தான் நவநீதன்.

    ஹாய் சந்து... நான் சொல்றபடி செய்.

    எத்தனை வாட்டி சொல்றது? இப்படி சந்து, தெருன்னு கூப்பிடாதீங்கன்னு.

    சந்திரிகாவைச் செல்லமா வேற எப்படிக் கூப்பிடறதாம்?

    இந்த செல்லம் வெல்லம் எதுவும் வேண்டாம். முழுசா சந்திரிகான்னு கூப்பிடுங்க. அதான் எனக்குப் பிடிச்சிருக்கு.

    அதனாலதான் கூப்பிடலை. சந்திரிகா சந்திரிகான்னு நான் கூப்பிடறதுல நீ சந்திரிகா சோப்பு மாதிரியே கரைஞ்சுட்டா அப்புறம் நான் என்ன பண்றது?

    சிரித்தவள் சரி சொல்லுங்க! என்றாள்.

    நான் சொல்றபடி செய்... போன வாரம் உன் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தேனே... நீலக் கலர் எம்பிராய்டரி போட்ட புடவை... அதை எடுத்துக் கட்டிக்க.

    ம்... அப்புறம்?

    அதுக்கு மேட்சா வளையல் போட்டுக்க. முத்து மாலையும் முத்து ஜிமிக்கியும் போட்டுக்க. அந்தப் புடவையில் முத்து மணி வச்சு தைச்சிருக்கே அதுக்குப் பொருத்தமாயிருக்கும்.

    ம்... அப்புறம்.

    அப்புறம்... காலையில் தோட்டத்துல பூத்திருந்ததே புதுசா ஒரு சிகப்பு ரோஜா, அதைப் பறிச்சு அழகா வச்சுக்க.

    சந்திரிகா கலகலவென சிரித்தாள்.

    எதுக்குச் சிரிக்கறே?

    நீங்க சொன்ன அதே புடவை அதே முத்து மாலை, ரோஜா எல்லாத்தையும் சுமந்துக்கிட்டுத்தான் நிக்கறேன். நீங்க இங்க வீட்டுக்குள்ளயே எங்கேயோ நின்னுக்கிட்டு என்னைப் பார்த்துக்கிட்டே பேசறீங்கன்னு நினைக்கிறேன்.

    நிச்சயமா இல்லை. நான் ஆபீஸ்லதான் இருக்கேன். ஆமா... நான் நினைச்ச மாதிரியே எப்படி நீ டிரஸ் பண்ணியிருக்கே?

    ம்... எப்படியா? ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...’ பாட்டுக் கேட்டதில்லையா? அந்த மாதிரிதான் இதுவும். உங்க மனசு நினைச்சதையே என் மனசும் நினைக்குது.

    சரி, அப்படியே ரெடியா வாசல்ல வந்து வழிமேல விழி வச்சுக் காத்துக்கிட்டு நில்லு. சரியா இருபது நிமிஷத்துல வர்றேன்.

    எதுக்கு?

    நாம ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போறோம். ரெண்டு டிக்கெட் எடுத்து வச்சிருக்கேன்.

    நான் வரலை. அத்தையும் நானும் கோவிலுக்குப் போறோம்.

    என்னது கோவிலுக்கா? அதெல்லாம் முடியாது. இன்னொரு நாள் கோவிலுக்குப் போ. இன்னைக்கு என்கூட சினிமாவுக்கு வர்றே?

    ஐய்யோ என்னால முடியாது. நானும் அத்தையும் கிளம்பிக்கிட்டிருக்கோம். வீணா எங்க பக்தியைக் கெடுக்காதீங்க. அப்புறம் சாமி கண்ணைக் குத்தும். கண்ணையும் குத்தாது. மூக்கையும் குத்தாது. ஒழுங்கா என்கூட சினிமாவுக்கு வா.

    முடியாது.

    முடியாதா? அப்ப... என் ஆபீஸ்ல புதுசா ஒருத்தி வேலைக்கு வந்திருக்கா. அவளை அழைச்சுக்கிட்டுப் போய்டுவேன்.

    தாராளமா அழைச்சிட்டுப் போங்க.

    தியேட்டர்ல அவளுக்கு இன்டர்வெல்ல ஐஸ்கிரீம் அது இதுன்னு நிறைய வாங்கிக் கொடுப்பேன்.

    தாராளமா வாங்கிக் கொடுங்க.

    ஏய்... சந்திரிகா, அது மட்டுமில்லை. இருட்டுல அவ தோள்ல கைபோட்டு...

    தாராளமா போடுங்க. தியேட்டர்ல தர்ம அடி வாங்கணும்னு இருந்தா அதை எப்படி மாத்த முடியும்?

    கோயில்ல புளிசாதமோ பொங்கலோ பிரசாதமா கிடைக்கும். எடுத்து வைக்கிறேன். ராத்திரிக்கு வாங்க சாப்பிடலாம்.

    அவள் பெரிதாகச் சிரித்து விட்டு தொலைபேசியை வைத்து விட்டாள். அதே நேரம் பின்பக்கத் தோட்டத்திலிருந்து பூஜைக் கூடை நிறைய பூக்களைப் பறித்துக் கொண்டு உள்ளே வந்தாள் சந்திரிகாவின் மாமியார் பங்கஜம்.

    யாரு போன்ல...? என்றபடியே கூடையை மேஜை மீது வைத்தாள்.

    அவர்தான்.

    என்னவாம்?

    சும்மாதான் போன் பண்ணினார்.

    ம்... கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகுது. என்னமோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி ஒரு நாளைக்குப் பத்துவாட்டி போன் பண்றான்.

    மாமியார் கிண்டலாகவும் எரிச்சலாகவும் சொன்னாலும் சந்திரிகாவின் மனம் முழுவதும் பெருமையும் கர்வமும் பொங்கியது.

    ‘என் நவநீதனுக்குத்தான் என் மேல் எத்தனை அன்பு!’ சந்தோஷத்தால் நெஞ்சம் விம்மியது.

    என்ன... கிளம்பிட்டியா...?

    கிளம்பிட்டேன் அத்தை...

    சரி! மசமசன்னு நிக்காம பூஜைக்கான சாமானெல்லாம் சரியாயிருக்கான்னு பாரு. முக்கியமா எலுமிச்சம் பழத்தை எடுத்து வச்சுக்க. விளக்கு ஏத்தணும்.

    சரி... அத்தை...

    நான் புடவை மாத்திக்கிட்டு வந்திடறேன். இந்தப் பூவையும் எடுத்து வை சொல்லிவிட்டு பங்கஜம் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். பத்து நிமிடத்தில் அவள் சேலை மாற்றிக் கொண்டு கூடுதலாக ஒன்றிரண்டு சங்கிலிகளையும் கழுத்தில் போட்டுக் கொண்டு வெளியே வந்தபோது கூடத்தில் சந்திரிகா ஒரு விதத் தவிப்புடன் நின்றிருந்தாள்.

    சற்று முன் அவளுடைய முகத்தில் பொங்கி வழிந்த சந்தோஷம் காணாமல் போய் ஒருவித பயமும் குழப்பமும் வந்து தங்கியிருந்தது.

    அவளுடைய முகத்தைப் பார்த்து துணுக்குற்ற பங்கஜம்.

    என்னடி... என்ன ஒரு மாதிரியா இருக்கே? என்னாச்சு? என்றாள்.

    அத்தை... அது வந்து...

    சொல்லித் தொலையேன்.

    வந்து... வீட்டு தூரம் ஆயிட்டேன்.

    அவ்வளவுதான். பங்கஜத்தின் முகம் திடீரென இருண்டது. கணப்பொழுதில் கனல் சுமந்தாள் கண்களில். புண்களில் பாய்ச்சும் வேலைப் போல் வார்த்தைகளை வீசினாள்.

    சனியனே! சனியனே! தரித்திரியம் புடிச்சவளே! நீ போற இடம் கூட விடியாது. கோயிலுக்குப் போற நேரத்துல இப்படி ஆகியிருக்கியே... மூதேவி, போ... போய் மூலையில் உட்கார்ந்துக்க.

    மாமியாரின் வார்த்தைகள் அவளை அறைந்து தள்ளுவதைப் போலிருந்தது. அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

    ஒவ்வொரு வாரமும் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்துல விளக்கேத்தினா புள்ளை வரம் கிடைக்கும்னு கிளம்பினா முதல் வாரத்திலேயே இந்த அழகு. இனி விடிஞ்சாப்லதான். எல்லாம் என் தலையெழுத்து. உன்னோட கல்யாணம் ஆனவளெல்லாம் ரெண்டு புள்ளையைப் பெத்து ஆபரேஷன் கூட பண்ணிக்கிட்டாளுங்க. இங்க ஒரு மண்ணையும் காணோம். கோயில் குளம்னு போனாலாவது ஒரு வழி பிறக்கும்னு நினைச்சா தரித்திரியம் புடிச்சது இப்படி வந்து வாய்ச்சிருக்கு. கருமம்... கருமம் தலையில் அடித்துக் கொண்டாள்.

    சந்திரிகா நெஞ்சையடைக்கும் வேதனை பொறுக்க முடியாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

    படுக்கையறையிலேயே இருந்த குளியலறையினுள் நுழைந்து கட்டியிருந்த புதுப்புடவையை அவிழ்த்துப் போட்டுவிட்டு குளிக்கத் தொடங்கினாள்.

    தண்ணீரோடு கண்ணீரும் சேர்ந்து கரைந்தது.

    சற்று முன் கணவனிடம் பேசியதில் உண்டான மகிழ்ச்சி, கோயிலுக்குச் செல்லத் தயாரானதில் உண்டான நிறைவு எல்லாம் காற்றுப் போன பலூனாக ஆனது.

    இனி அவ்வளவுதான். அத்தையின் வாய் சும்மாயிருக்காது. திட்டிக் கொட்டிக் கொண்டே இருப்பாள். இதெல்லாம் நம் கையிலா இருக்கிறது? இத்தனை வயதான பெண்மணி... எல்லாப் பருவங்களையும் கடந்து வந்தவள்...

    அவளுக்குத் தெரியாதா என்ன? ஏன் இப்படிப் பேசுகிறாள்? திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனையோ முறை கர்ப்பம் தரித்தது. ஆனால் முழுதாக மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் கலைந்து விடுகிறது.

    எவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1