Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

...Enavey, Ennodu Vaa!
...Enavey, Ennodu Vaa!
...Enavey, Ennodu Vaa!
Ebook106 pages59 minutes

...Enavey, Ennodu Vaa!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சிவகாமியும், மகேஷ்வரனும் கணவன் மனைவி. இவர்களுக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். மூத்த பெண் கௌசல்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இரண்டாவது பெண் திவ்யாதான் வேலைக்கு சென்று குடும்பத்தை பொறுப்பாக கவனிக்கிறாள். மகேஷ்வரன் ஒரு குடிகாரர். மூன்றாவது பெண் காலேஜ் படிக்கிறாள். திவ்யா தனது அக்காவின் திருமணத்தை நடத்தி முடித்தாரா? வினு செய்த செயல் எவ்வாறு குடும்பத்தை பாதிக்கிறது.? திவ்யா தனது காதலருடன் சேர்ந்தாரா? என்பதை பட்டுக்கோட்டை பிராபகரின் பரபரப்பான நடையில் படியுங்கள்...

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580100906994
...Enavey, Ennodu Vaa!

Read more from Pattukottai Prabakar

Related to ...Enavey, Ennodu Vaa!

Related ebooks

Reviews for ...Enavey, Ennodu Vaa!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Enna oru arumayana kadhai enna oru mudivu pkp solluvadhupol uzhaippai thyagam seyyalam anal manadhai adhan unarvugalai ennagalai amazing story after a long gap

Book preview

...Enavey, Ennodu Vaa! - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

... எனவே, என்னோடு வா!

... Enavey, Ennodu Vaa!

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

1

வானம் சலவை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. தெறித்த சோப்பு நுரைகளாய் மரங்களின் அங்கங்கள் மேல் பனி மல்லாக்கப் படுத்திருந்தது. நாள் முழுதும் பாடப்போவதற்கு இப்போது ஒத்திகை துவங்கின பறவைகள்.

திவ்யா 'பால்பூத்'தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

டீக்கடைகள் விழித்து, குளித்து, டீ வில்லாய் வளைந்து கிளாஸ்களில் விழுந்து கொண்டிருந்தது. காத்திருந்தவர்களுக்கு அன்றைய தலைப்புச் செய்திகள் அவசரமாகத் தேவைப்பட, ஒரு தினசரியைச் சுற்றி எட்டு தலைகள்...

திவ்யா பால் பாக்கெட்டுகளை வாங்கி பையில் போட்டுக் கொண்டு திரும்பி நடந்த போது, தனது நாய்க் குட்டியுடன் சாலை ஓரம்  ஓடிக்கொண்டிருந்தவருக்கு 'ஹலோ' சொன்னாள். சுவர்களில் நடந்து முடிந்த தேர்தல்களின் சாட்சியங்கள் தங்கியிருந்தன. அருகில் தன் குழந்தைக்குக் கழுவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி...

வீட்டின் வாசலில் தட்டில் கலர் கலர் பொடிக் கிண்ணங்களை வைத்துக் கொண்டு, கோலத்தில் சுவாரசியமாய் ஈடுபட்டிருந்தாள் கௌசல்யா.

அப்பா எந்திரிச்சிட்டாராக்கா? என்றாள் திவ்யா.

யார் போய் எழுப்பறது? குமட்டுது திவ்யா வாடை! உன் சொல்லுக்குக் கொஞ்சம் கட்டுப்படுவார். ஆனா, இப்பல்லாம் நீ அவரை எதுவுமே கேக்கறதில்லை.

திவ்யா மௌனமாக வீட்டுக்குள் வந்தாள்.

ஹாலில் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, சரசர என்று பல் விளக்கிக்கொண்டே பேப்பரில் ஸ்போர்ட்ஸ் பகுதி பார்த்துக் கொண்டிருந்தாள் வினோதினி.

வினு...

சட்டென்று காலை எடுத்துக்கொண்டாள்.

வினு, எத்தனை தடவை சொல்லியிருக்கேன் பல் தேய்ச்சுக்கிட்டே ஹாலுக்கு வராதேன்னு? போய் வாயைக் கழுவிட்டு வந்து பாரு: பேப்பர் ஓடிடாது!

பேப்பரைப் பட்டென்று வைத்துவிட்டு, பின் பக்கம் சென்றாள் வினு.

ஹாலின் ஓரத்தில் சோபாவை பெட்டாக்கிப் படுத்திருந்த அப்பாவின் வேட்டி விலகி, கோடு கோடாய் உள்ளாடை தெரிய...

அம்மா! என்றாள் சற்றே கத்தலாய்.

ஸ்டோர் ரூமில் சாம்பிராணி போட்டுக்கொண்டிருந்த சிவகாமி, கையில் தூபக்காலோடு வந்தாள்.

என்ன திவ்யா... பால் வாங்கிட்டு வந்துட்டியா? நீ குளிச்சுடு... பாத்ரூம் காலியாத்தான் இருக்கு. அப்புறம் உனக்கு நேரமாய்டும்.

நான் குளிக்கிறது இருக்கட்டும்... முதல்ல அப்பாவை எழுப்பு.

எழுப்பிப் பார்த்துட்டேன் திவ்யா. அசைய மாட்டேங்கறார்.

அம்மா, நடு ஹால்ல... இது நல்லாவாம்மா இருக்கு... ரூமுக்குள்ளே போயாவது படுக்கச் சொல்லு.

தூபக்காலைக் கீழே வைத்துவிட்டு, அவசரமாக அவர் அருகில் வந்து வேஷ்டியைச் சரிப்படுத்தினாள். தோளில் அசைத்தாள்.

இங்கே பாருங்க... மணி ஏழாச்சு. எந்திரிங்க... பிள்ளைங்க எல்லாம் எந்திரிச்சுட்டாங்க. வேஷ்டி விலகினது கூட தெரியாம இப்படி நடு ஹால்ல தூங்குறீங்களே... சொன்னா கேளுங்க!

மகேஸ்வரன் கண்களைத் திறந்தார்.

அடாடா... தூங்கக்கூட விடமாட்டீங்களா இந்த வீட்ல? இப்ப என்னங்கறே? என்று தன் வேஷ்டியைச் சரியாகக் கட்டிக்கொண்டு குப்புறப் படுத்துக் கொண்டார், சரிதானே?

இப்ப எந்திரிக்கப் போறீங்களா, இல்லையா? ஃபாக்டரிக்குப் போகலையா?

பொல்லாத ஃபாக்டரி... பொல்லாத உத்தியோகம்... போங்கடி! அவனவன் தூக்கத்துக்காக மாத்திரை முழுங்கி தவம் கிடக்கிறான். எனக்கு இலவசமா வருது. ஏண்டி கெடுக்கறீங்க?

அட! எந்திரிங்கன்னா...

மகேஸ்வரனிடமிருந்து மெலிதான குறட்டை வர ஆரம்பித்தது.

சிவகாமி பரிதாபமாக மகளைப் பார்த்தாள்.

திவ்யா பால்பாக்கெட்டுகளோடு நேராய் சமையலறை சென்றாள். கத்தரிக்கோலால் மூலைகளை வெட்டி, பாத்திரத்தில் கொட்டினாள். கௌசல்யா உள்ளே வந்தாள்.

நகரு திவ்யா... நான் பார்த்துக்கறேன். நீ போ; போய் முதல்ல குளி. அப்புறம் உனக்கு பாத்ரூம் கிடைக்காது. கல்யாணம் உள்ளே போயிட்டான்னா வர்றதுக்கு அரைமணி நேரமாகும். விரல் விரலா சோப்பு போடுவான்.

திவ்யா நகர்ந்த போது...

உன் காட்டன் சேலையை அயர்ன் பண்ணி கட்டில் மேல வச்சிக்கேன்.

தாங்க்ஸ்க்கா

நமக்குள்ளே என்ன திவ்யா நன்றி? சொல்லாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...

அப்படி இல்லைக்கா... மனசை புரிஞ்சு மத்தவங்க செய்ற சின்ன, பெரிய செய்கைகள் சந்தோஷப்படுத்தறப்போ, அந்த சந்தோஷத்தோட வெளிப்பாட்டுக்கு ஏதாச்சும் ஒரு வார்த்தை தேவைப்படுது. அப்படி வர்ற வார்த்தை இது. வெறும் ஃபார்மாலிட்டி தாங்க்ஸ் இல்லைக்கா! என்றான்.

திவ்யா மறுபடி ஹாலுக்கு வந்து அங்கே அலமாரியில் மடித்து வைக்கப்பட்டிருந்த துண்டை எடுத்துக்கொண்டு பின்பக்கம் வந்தபோது, துவைக்கும் கல்லில் அமர்த்து வளைந்து அருகில் இருந்த தென்னையின் ஓலையைக் கிழித்துக் கொண்டிருந்தான் கல்யாணராமன்.

கைலி மட்டம் கட்டியிருந்தான், பனியன் போடாத மார்பிலும், முதுகிலும் வியர்வை வரிவரியாய் வழிந்து கொண்டிருந்தது.

கல்யாணம். என்ன இப்படி வேர்த்திருக்கு?

எக்ஸர்சைஸ் செஞ்சேன்...

அதென்ன - ஒரு வாரமா பார்க்கறேன். பயங்கரமா எக்ஸர்சைஸ் செய்றே? என்ன திடீர்னு, ஹெல்த் மேல ஒரு கவர்ச்சி! ம்... எவளாச்சும் நீ ஹேண்சம்ன்னு சொன்னாளா?

இல்லைக்கா... சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு அப்ளை செஞ்சிருக்கேன். ஃபிசிகல் ஃபிட்னசுக்காக எக்ஸர்சைஸ் பண்றேன். நீ சொன்ன ஸ்டேஜ் எல்லாம் கடந்து பல வருஷமாச்சு.

Enjoying the preview?
Page 1 of 1