Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Unnai Nesikkirean
Naan Unnai Nesikkirean
Naan Unnai Nesikkirean
Ebook103 pages1 hour

Naan Unnai Nesikkirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராஜன் உதயா இருவரும் காதலர்கள். உதயா தாயில்லாமல் வளர்ந்தவள். செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தவள். எப்பொழுதும் ஆடம்பரமாக இருக்க விருப்பம் கொண்டவள். ராஜன் ஏழ்மையானவன். உதயாவிற்கு ஒரு பணக்கார மாப்பிள்ளையின் வரன் வருகிறது. அவள் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு தீபக் என்ற பணக்கார மாப்பிள்ளையை மணம் செய்ய தயாரானாள். ராஜன் காதல் தோல்வியால் அவளது திருமணத்தை தடுத்து நிறுத்த ப்ளான் பண்ணுகிறான். திருமணம் நடந்ததா? உதயா யாரை திருமணம் செய்வாள் தீபக்கா...? இல்லை ராஜனா...? வாருங்கள் படிப்போம்

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580100906977
Naan Unnai Nesikkirean

Read more from Pattukottai Prabakar

Related to Naan Unnai Nesikkirean

Related ebooks

Reviews for Naan Unnai Nesikkirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Unnai Nesikkirean - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    நான் உன்னை நேசிக்கிறேன்

    Naan Unnai Nesikkirean

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    வெயில் மெதுவாக நழுவிக்கொண்டிருந்த மாலையில், சற்று கழித்து முகத்தில் கரி பூசிக்கொள்ளப்போகிற வானம் தற்போது சிவப்பாக ஒப்பனை செய்திருந்தது.

    திருச்சி நகரத்தின் தில்லைநகரில் அந்த நவீன பங்களா விறைப்பாக நின்று கொண்டிருந்தது. வாசலில் இரண்டு கார்கள் தவமிருந்தன. வெளிச் சுவரின் மேல் முள்கம்பி பதித்திருக்க, காவல்காரன் இரும்புக் கதவருகில் தன் கூண்டில் அமர்ந்து எரியாத பேட்டரி லைட்டைக் குடைந்து கொண்டிருந்தான்.

    உள்ளே வீட்டின் முகப்புக்கு இடைப்பட்ட தூரத்தில் பச்சைப் பசேலென்று புல்வெளி சீராக வெட்டப்பட்டிருக்க, ஒருபுறம் தோட்டக்காரன் நீளமான பைப்பிடித்து தண்ணீர்பீய்ச்சிக் கொண்டிருந்தான்.

    அலுமினிய வர்ணக் குடைக்கும் கீழே மூங்கில் நாற்காலியில் சபாரி சூட் அணிந்து அமர்ந்திருந்த செல்வகணேசனுக்கு காதருகில் மட்டுமே நரைத்திருந்தது. அவர் மடியில் பஞ்சுக்குவியலாப் ஒரு பொமரேனியன் வகை நாய் பதுங்கியிருந்தது.

    மற்றொரு நாற்காலியில் இருந்த நண்பர் தட்டிலிருந்து பிஸ்கெட் எடுத்து நளினமாகக் கடித்தார்.

    மகாலிங்கம், நீங்க சொல்றதைப் பார்த்தால் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு சொல்லுங்க, எர்ரார் செல்வகணேசன், நாயின் முதுகில் செல்லமாகத் தடவிக்கொடுத்துக் கொண்டே,

    உங்க பொண்ணு உதயாவைப் பிடிக்கவில்லை என்று சொல்றவன் ஒண்ணு குருடனா இருக்கணும். இல்லைன்னா மனநிலை சரியில்லாதவனாக இருக்கணும்.

    அமெரிக்காவிலேர்ந்து பையன் பதில் எழுதிட்டாராமா?

    பதில் எழுதறதா? நீங்க கொடுத்த உதயாவோட புகைப்படத்தை நான் அவங்ககிட்ட கொடுத்ததும் அவங்க ‘கூரியர் தபால்' மூலமாக உடனே பையனுக்கு அனுப்பிவைச்சிட்டாங்க. பையன் உடனே தொலைபேசில கூப்பிட்டு எனக்கு சம்மதம், மேற்கொண்டு ஆகவேண்டியதை கவனிங்கன்னு சொல்லிவிட்டார்.

    எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு மகாலிங்கம். உதயாவிற்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும். இல்லையா?

    பின்னே? அமெரிக்கா வாழ்க்கை எல்லாருக்கும் அமையுமா? பையன் மனநோய் டாக்டர். பெரிய ஆஸ்பத்திரியில் வேலை. வீடு, கார் எல்லாம் கொடுத்திருக்காங்க. தனியா ஆஸ்பத்திரி ஆரம்பிக்க அரசாங்கத்துகிட்டே அனுமதி வாங்கிருக்கார். பையன் புகைப்படமும் நாம் பார்த்தோம், வீடியோவிலேயும் பார்த்தோம். சுண்டினா இரத்தம் தெறிக்கிற நிறம், உயரம்,கம்பீரம். இன்னும் என்ன வேணும் ஓர் ஆண்பிள்ளைக்கு?

    உண்மைதான்.

    அதே நேரம் நீங்க பெருமைப்படற மாதிரி அவங்களும் இந்த இடம் அமையறதுக்கு பெருமைப்பட்டுதான் ஆகணும். டயர் தொழிற்சாலையில் பணம் கொழிக்குது உங்களுக்கு. பொங்கி வழியற பணத்தை எதெதுல முதலீடு செய்யறதுன்னு புரியாம தவிக்கிறிங்க. உங்க ஒரே பொண்ணு உதயா சினிமா நட்சத்திரம் மாதிரி அடிச்சிப்போடற ஓர் அழகு. ஆக இரண்டு பேருமே கொடுத்து வைச்சவங்க என்பது என்கருத்து.

    பணியாள் இரண்டு கோப்பைகளில் டீ கொண்டுவந்து குள்ள மேசையில் வைக்க, இரண்டு பேரும் எடுத்துக் கொண்டார்கள். செல்வகணேசன் நாயைத் தூக்கி புல்வெளியில் விட்டுவிட்டு, சாஸரில் கொஞ்சமாக டீ ஊற்றி கீழே வைக்க, அது ஆர்வமாக வந்து நாக்கை நீட்டிக் குடித்தது.

    மகாலிங்கம். என் பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகளை நான் செய்துகிட்டிருக்கிறதும், இப்படி ஓர் அமைப்பான இடம் நெருங்கி வந்திருக்கிறதும் அவளுக்குத் தெரியாது. அவளுக்கே தெரியாமல்தான் அவள் புகைப்படத்தை எடுத்துக்கொடுத்தேன்.

    ஏன் அப்படி செஞ்சீங்க?

    திடீர்னு அவளைப் பிரமிக்க வைக்கிற தகவல் சொல்லணும்னுதான்.

    நிச்சயதார்த்தத்துக்கு உங்களை நாள் பார்க்க சொல்லிட்டாங்களே,

    நிச்சயதார்த்தம்னா... அதுக்கு முன்னாடி பையன் உதயாவை முறையா நேர்ல வந்து பெண்பார்க்க வேண்டாமா?

    அவசியமில்லேன்னு சொல்லிட்டானாம் பையன். நிச்சயதார்த்தத்திற்குக்கூட அவனால் வரமுடியாதாம். சரியா நாலு நாள் லீவு போட்டு பறந்துவந்து கல்யாணம் செய்துகிட்டு உடனே மனைவியோட அமெரிக்காவிற்குத் திரும்பற மாதிரிதான் இருக்குமாம்.

    எனக்கு ஒரே ஒரு விஷயம்தான், லேசா கவலையா இருக்கு.

    என்ன அது?

    உதயா தாயில்லாத பொண்ணு. அதனால ஆரம்பத்திலேர்ந்தே கண்டிப்பு என்கிறது கொஞ்சமும் இல்லாமல் வளர்த்துவிட்டேன். அதனால பொதுவாக ஒருவித திமிரும், அகம்பாவமும் அவள் கிட்டே இருக்கு. கூடவே இருக்கிறதாலே அந்த குணங்கள் எனக்குப் பெரிசாத் தெரியாது. ஆனால், போகிற இடத்தில் அதையெல்லாம் அவள் மாத்திக்கிட்டாதானே தேவலாம்?

    "அட! இதைப் போய் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1