Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madhil Mel Manasu
Madhil Mel Manasu
Madhil Mel Manasu
Ebook267 pages1 hour

Madhil Mel Manasu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

காதல் என்பதே ஒரு மென்மையான விஷய்ம். அதை மேலும் மென்மையாக்குகிற வகையில் பேனாவால் எழுதாமல் மயிலிறாகல் எழுதி காதலைப் பெருமை படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

மதில்மேல் மனசு பற்றி ராஜேஷ்குமார்

" />

சிவா பேசும் ஒரு சின்ன டயலாக்கிலேயே கதை போகும் திசையை மூளை அனுமாணித்துக் கொண்டு விட 'அப்புறம்' என்று யோசிக்கத் தூண்டுகிறது. அந்த டயலாக் இதுதான். "தெரியும் ராஜ்! காதல் கடையில் கிடைக்கிறது இல்லை. விளம்பரம் கொடுத்து விண்ணப்பிக்கச் சொல்லவும் முடியாது. அந்த இனிய விபத்து எனக்கு ஏற்படணும்ன்னு நான் நம்பறேன். காத்திருக்கேன். இப்ப திடீர்னும் கல்யாண ஏற்பாடுகள் செஞ்சா எப்படி...?"

காதல் என்பதே ஒரு மென்மையான விஷய்ம். அதை மேலும் மென்மையாக்குகிற வகையில் பேனாவால் எழுதாமல் மயிலிறாகல் எழுதி காதலைப் பெருமை படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

மதில்மேல் மனசு பற்றி ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351029
Madhil Mel Manasu

Read more from Pattukottai Prabakar

Related to Madhil Mel Manasu

Related ebooks

Reviews for Madhil Mel Manasu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madhil Mel Manasu - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    மதில் மேல் மனசு

    Madhil Mel Manasu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    கதை சுருக்கம்:

    சிவா... காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று உறுதியுடன் இருப்பவன். சிவா வேலை செய்யும் ஆபீஸில் உதயாவை சந்திக்கிறான். உதயா மலர் டிவியில் புரோக்ராம் புரொட்யூஸராக வேலை செய்கிறாள். சிவா அவளை காதலிக்க தொடங்குகிறான். உதயாவும் சிவாவை காதலிக்கிறாள். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக… இருவரும் தங்களுடைய காதலை வெளிபடுத்தவில்லை. உதயாவிற்கு திருமணம் நிச்சயக்கப்படுகிறது. சிவா... உதயாவை மறக்க முடியாமல் வெளிநாடு செல்ல முடிவு எடுக்கிறான். உதயாவின் திருமணம் நடந்ததா? சிவாவின் நிலை என்ன?

    1

    ‘உனக்காக அல்ல... காதலுக்காக காதலிப்பவன் நான்!’

    வானம் மழைத்துளிகளை வார்த்தைகளாகக் கொண்டு, பூமிக்கொரு நீண்ட கடிதத்தை எழுதத் துவங்கியது.

    அந்தக் கடிதத்தைப் படித்ததில் நனைந்து போனான் அவன். அவசரமாக பைக்கை ஓரமாக நிறுத்தினான். ஒதுங்கி நின்ற இடத்தில், அந்த நவீன புத்தகக் கடையைக் கவனித்தான். கண்ணாடிக் கதவு தள்ளி ஈரமாக உள்ளே வந்தான்.

    வாழ்த்து அட்டைகள் பகுதியில் உதயமானாள் அந்த அழகான தேவதை. அந்த சுரிதார் அணிந்த சொர்க்கம், அங்கிருந்து இவனைப் பார்த்தது. காதுகள் வரை சிரித்தது. துள்ளலாக ஓடி வந்தது.

    ஹாய் சிவா! என்றாள்.

    இவனுக்கு விழிகள் அகலமாயின.

    என்… பேர்… எப்படி… உங்களுக்கு...

    தடை ஓட்டமாய் வார்த்தைகள் வந்தன.

    தெரியுமே. இப்ப நான் உங்களைப் பார்க்கத்தான் வரலாம்னு இருந்தேன். வாட் எ சர்ப்ரைஸ்! இங்கேயே மீட் பண்ணிட்டேன்.

    அவள் உதடுகள் குளிரில்லாமல் நடுங்கின.

    நீங்க எதுக்கு என்னைப் பார்க்க வர்றதா இருந்தீங்க?

    ஒவ்வொரு சொல்லாய் பிரசவித்தான்.

    எதுக்கா? ஒரு விஷயம் சொல்லத்தான்

    என்ன விஷயம்?

    சொல்ல எனக்கு வெக்கமா இருக்கு

    கால் கட்டை விரல் கால் வட்டம் வரைந்தது.

    கேட்க எனக்கு ஆர்வமா இருக்கு

    ஐ லவ் யூ சிவா! என்றாள். முகம் பொத்திக் கொண்டாள். விரல்கள் வழியாகப் பார்த்தாள்.

    ஐஸ் போட்ட தடாகத்தில் விழுந்தவனாகச் சிலிர்த்தான்.

    வாட்? உங்களை எனக்குத் தெரியவே தெரியாதே...

    ஆனா, எனக்கு உங்களைத் தெரியுமே. நீங்க சிவா. கம்ப்யூட்டர் இன்ஜினீயர். வயது இருபத்தஞ்சு. ஒரு பிரைவேட் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. அஞ்சு ஸ்தானத்தில் சம்பளம். திருவான்மியூர்ல உங்க சொந்த வீட்ல அப்பா, அம்மா, ஒரு தங்கை இருக்காங்க. ரெண்டு அக்காவுல, ஒருத்திக்கு உள்ளுர்லயே கணவன். இன்னொருத்திக்கு பாண்டிச்சேரில.

    இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே!

    இன்னும் பர்சனலாக்கூடத் தெரியும். நீங்க டெய்லி ஷேவிங். ஹீரோ ஹோண்டா பைக்ல ஆபீஸ். கடமை வீரர். அளவான நண்பர்கள். ரகசியமா தம்! எப்பயாவது பீர்! வீட்ல கம்ப்யூட்டர் இருக்கு. அதில இன்டர்நெட் இருக்கு. சதா அதில சறுக்கறதுதான் உங்க பொழுதுபோக்கு. என்ன, தகவல்கள் எல்லாம் சரியா?

    எப்படி கரெக்ட்டா சொல்றீங்க?

    என் காதலரைப் பத்தி, நான் தெரிஞ்சு வெச்சிருக்கிறதில என்ன ஆச்சரியம்?

    நீங்க பேசறப்போ, உங்க காது வளையம் ஆடறது அழகா இருக்கு.

    அது இருக்கட்டும். நீங்களும் என்னை காதலிக்கிறீங்க தானே?

    அது… இப்படி திடீர்னு கேட்டா எப்படி?

    ஏன், நான் அழகா இல்லையா?

    உங்களை அழகில்லைனு சொன்னா நாக்கு பொசுங்கிடும்

    நான் நாகரிகமா இல்லையா?

    இருக்கீங்க.

    நான் கலகலப்பாப் பேசலையா?

    பேசறீங்க

    உங்க காதலி இப்படித்தானே இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?

    ஆமாம். இன்னும்கூட கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருக்கு.

    என்ன அது?

    அவ படிச்சவளா இருக்கணும்.

    நான் பி.காம் படிச்சிருக்கேன்.

    வேலைக்குப் போறவளா இருக்கணும்.

    நான்கூட ஒரு ஓட்டல்ல ரிசப்ஷனிஸ்ட். கமான், சீக்கிரம் சொல்லுங்க.

    என்ன சொல்லணும்?

    ஐ லவ் யூ’னு சொல்லுங்க

    அவன் இப்போது வியர்வையில் மறுபடி நனைந்தான். உதடுகள் பிரிந்து காற்று மட்டுமே வந்தது. அவள் அவனை மிகவும் நெருங்கினாள்.

    ம்… சொல்லுங்க. ப்ளீஸ்... சொல்லுங்க

    திடீரென்று அவன் விலகி ஓட ஆரம்பித்தான்.

    அவள், சிவா! நில்லுங்க சிவா! என்று துரத்தினாள்.

    அவன் மழையில் ஓடினான். சாலையில் வாகனங்களுக்கு நடுவில் ஓடினான். ஆனாலும், அவள் குரலும் கொலுசுச் சத்தமும் விடாமல் துரத்தியது.

    இப்போது அவன் அந்த மலைப் பாதையில் ஓடினான். திரும்பிப் பார்த்தான். தொலைதூரத்தில் நீரை சிதறடித்துக் கொண்டு, அவள் ஓடி வந்து கொண்டிருந்தாள்.

    சிகரத்தின் உச்சிக்கு வந்து நின்று மூச்சிறைத்தான். விளிம்பில் எட்டிப் பார்க்க… இருட்டு நிரப்பப்பட்ட பாதாளம்.

    அவள் நெருங்கி வர...

    சட்டென்று குதித்துவிட்டான்.

    ‘ஐயையோ! இப்படி அந்தரத்தில் குதித்து விட்டோமே... இதோ, எதிலோ மோதப் போகிறேன். துண்டு துண்டாகச் சிதறப்போகிறேன்…’ என்று பதட்டம் இதயத்தை அடைத்தபோது… எப்போதும் போல், இப்போதும் விழிப்பு வந்து கண்களைத் திறந்தான் சிவா.

    ஓசையோடு சுழன்று கொண்டிருந்தது மின்விசிறி. இரவு விளக்கின் அருகில் ஒரு பல்லி. திரைச்சீலை உயர்ந்தபோது… ஜன்னலுக்கு வெளியே இருட்டும் இருட்டும் கைகுலுக்கிக் கொண்டிருந்தது.

    பதட்டம் விலகியதும்… அவன் உதடுகளில் வெட்கப் புன்னகை எட்டிப் பார்த்தது. அதை முந்திக் கொண்டு கொட்டாவி விடுதலை பெற்றது.

    அலாரம் டைம் பீஸைக் கையில் எடுத்து, கண்களைக் குறுக்கி நேரம் பார்த்தான் 5.10

    வழக்கமா பால் வாங்கிட்டு வந்து போடற ஆயாவுக்கு முடியலையாம். நாளைக்கு வரமாட்டா. நீ வாங்கிட்டு வர்றியா சிவா? என்று நேற்றிரவு அம்மா கேட்டதும்… இவன் ஒப்புக் கொண்டதும்… நினைவுக்கு வர பதறிக் கொண்டு எழுந்தான்.

    முகம் கழுவித் திரும்பி, சட்டையணிந்தபடி ஹாலுக்கு வந்தபோது… கழுத்தில் மஃப்ளருடன் கையில் டார்ச்லைட்டுடன் அப்பா செருப்பணிந்து கொண்டிருந்தார்.

    அப்பா, கார்டைக் கொடுங்க. நான்தான் போறேன்னு அம்மாகிட்ட சொல்லிருந்தேனே…

    பரவால்லை சிவா. நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. நான் அப்படியே வாக்கிங் போய்ட்டு வந்துடுவேன்.

    ஒரே பனியா இருக்குப்பா. ராத்திரியெல்லாம் இருமிட்டு இருந்தீங்க. வாக்கிங்குக்கு ரெண்டு நாள் லீவு விட்டுடுங்க. கொடுங்க, சொல்றேன்.

    பிளாஸ்டிக் கூடையையும், கார்டையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டான் சிவா.

    இருட்டு வானம் சூரிய வருகை நினைத்து, மிக லேசாகக் கலங்கிப் போயிருந்தது. திடீரென்று தாவி அணைத்த ஈரக் காற்று, நரம்புகளை நலம் விசாரித்தது. தெரு முனைக் கோயிலின் ஸ்பீக்கர் ‘ஐயப்பா! நீதான் மெய்யப்பா!’ என்றது. ஸோடியம் வேபரின் ஆரஞ்சு வெளிச்சம், வீதியைக் கழுவிக் கொண்டிருக்க… சில வீடுகளின் வாசல்களில் ஏராள வர்ணப்பொடிகளை வைத்து, மெகா கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள். சைக்கிளில் கடந்து போனவர்களின் நெற்றியில் சந்தனம் இருந்தது. மணத்தது.

    குளிரை ரசித்தபடி மெதுவாக நடந்த சிவாவுக்கு, தன் சமீபக் கனவைப் பற்றிய சிந்தனை வந்துது. கூடவே உதட்டுக்குள் புன்னகையும்.

    என்ன கனவு இது? என்ன அர்த்தம் இந்தக் கனவுக்கு?

    புத்தகக் கடையில் திடீரென்று ‘ஐ லவ் யூ’ சொன்ன அந்த அழகான பெண்ணின் முகத்தை இப்போது யோசித்துப் பார்க்கும் போது, நினைவுக்கு வரவில்லை.

    எத்தனை அழகு! கனவில் மிகத் துல்லியமாயத் தெரிந்த முகம்... இப்போது ஏன் நினைவுக்கு வர மாட்டேனென்கிறது?

    எதிர்காலத்தில் கனவுகளை நேரடியாக மல்ட்டிமீடியா கம்ப்யூட்டரில் ஒலி, ஒளியோடு பதிவுசெய்து வைத்து, மறுநாள் மானிட்டரில் பார்க்கிற எலெக்ட்ரானிக் சௌகரியம் வந்தால் பரவாயில்லை. உலகத்துக்கு ஒரு புது பொழுதுபோக்கு கிடைக்கும்.

    கனவில் அந்தப் பெண் என்னைக் காதலிப்பதாகச் சொன்னபோது, நான் சிலிர்த்தேனே… அப்புறம் எதற்காக அப்படி பேயோட்டம் ஓடி, சிகரத்திலிருந்து குதிக்க வேண்டும்.

    அந்த இடத்தில் திடீரென்று ரிமோட்டில் சேனல் மாற்றுவது போல, வேறு ஏதோ கனவு… நினைவுப் பிழையாக… வழி தெரியாமல் என்ட்ரி கொடுத்து, இதுவும் அதுவும் மெர்ஜ் ஆகிவிட்டதோ?

    பால்பூத் அருகில் இன்னும் வேன் வராததால் காத்திருந்த கும்பலில், பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருக்கும் கமலநாதனைப் பார்த்துப் புன்னகைத்து, அவர் அருகில் சென்று நின்று கொண்டான் சிவா.

    அஞ்சு மணிக்கெல்லாம் வேன் வந்துடும். இன்னிக்கு என்னவோ தெரியலை, லேட்டாகுது என்று பேச்சைத் துவக்கிய கமலநாதன்... முழுக்கை ஸ்வெட்டர், குல்லா அணிந்து சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தார். வழக்கமா நீங்க வரமாட்டீங்களே சார் என்றார்.

    ஆயாவுக்கு உடம்புக்கு முடியலையாம். ஆமாம், உங்க ஃப்ளாட்டை விக்கப் போறதா சொன்னீங்களே, முடிஞ்சிடுச்சா? என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இந்த ஏரியால ஃப்ளாட் பார்த்துக்கிட்டிருக்கான். அதான் கேட்டேன்…

    இல்லை சார், எனக்கு வேற ஒரு வகையில் பணம் கிடைச்சுட்டதால, விக்கிற யோசனையை விட்டுட்டேன். நம்ம தெரு முனையில ஒரு முக்கால் கிரவுண்ட் நிலம் ஒண்ணு சேல்ஸுக்கு வருது. எனக்குத் தெரிஞ்ச பார்ட்டிதான். உங்க ஃப்ரெண்டுக்கு ஆர்வமிருந்தாச் சொல்லுங்க.

    அவன் ஃபளாட்தான் பார்க்கறான். அவனும், அவன் வொய்ஃபும் ரெண்டே பேர்தான். ஃப்ளாட்டுன்னா பாதுகாப்பா இருக்கும்னு பார்க்கறான்.

    சும்மா அப்படி நினைக்கிறோம். இப்ப எங்கேயும் பாதுகாப்பு இல்லை சார். எங்க பில்டிங்கிலேயே பதினாறு ஃப்ளாட்ஸ் இருக்கு. அதில மூணு ஃபேமிலியோடதான் பழக்கம். மத்தவங்க எல்லாம் யாருனுகூடத் தெரியாது. எனக்கு உங்க வீட்டைப் பார்த்தா பொறாமையா இருக்கும். தனி வீடு. அதனாலதான் இடம் ஒதுக்கி, தோட்டம் போட்டிருக்கீங்க. அது சரி, மாடி போர்ஷனை ஏன் அம்மா பூட்டி வெச்சிருக்காங்க?

    அதை வாடகைக்குத்தான் விட்டிருந்தோம். கடைசியா இருந்த டெனன்ட்டுக்கும், எங்களுக்கும் பிராப்ளமாகி... மூணு வருஷம் கோர்ட்ல கேஸ் நடத்தி காலி செய்ய வெச்சோம். ஆறு மாசமா சும்மாதான் இருக்கு. அப்பாவுக்கு அங்கே ஏதாச்சும் சொந்தமா பிஸ்னஸ் பண்ணலாம்னு பிளான் இருக்கு. வாடகைக்கு விட்டுட்டா, நமக்குத் தேவைப்படறப்போ உடனே இடம் கிடைக்காது. அதனால பூட்டி வெச்சிருக்கோம்.

    உங்க வீடு எவ்வளவு கிரவுண்டு?

    ஒண்ணேகால் கிரவுண்டு. ஏன் சார்?

    ரெண்டு கிரவுண்டா இருந்தா, ஃபளாட் புரோமோட்டர்ஸ் கொத்திக்கிட்டுப் போயிருப்பாங்க. ஆமாம், உங்கப்பா போன மாசம் ரிட்டயராயிட்டதாச் சொன்னீங்க. ஆனா, தினம் ஒன்பது மணிக்கு, டீக்கா டிரஸ் பண்ணிட்டுக் கிளம்பிப் போறாரே…

    நாங்க ஓய்வா இருங்கனு சொல்லிப் பார்த்துட்டோம். அவரால முடியாது சார். அவர் ஃப்ரண்டோட கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில, கன்சல்டண்டா போய்ட்டு வந்துட்டு இருக்கார்.

    சரி... சரி, அந்த முக்கால் கிரவுண்டு சொன்னேனே... உங்கப்பாவுக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கானு கேளுங்களேன். அஞ்சு ரூபா சொல்றான். உட்கார்ந்து பேசினா குறைக்கலாம். ரிட்டயரானப்போ கிடைச்ச செட்டில்மெண்ட் பணத்தை, இப்படி இன்வெஸ்ட் பண்ணலாமே... எந்த ஃபைனான்ஸ் கம்பெனியையும் முழுக்க நம்ப முடியலையே...

    நான் கேட்டுச் சொல்றேன் சார்...

    வேன் வந்து பாலுடன் திரும்பியபோது… இன்னும் கொஞ்சம் இருட்டு விலகிப் பறவைகள் விழித்திருந்தன.

    தூரத்தில் தன் வீட்டு வாசலில், தன் தங்கை மதுமிதா கோலம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான் சிவா. சற்றுத் தள்ளி, இவனுக்கு முதுகு காட்டியபடி ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிளில் ஷார்ட்ஸ், டிஷர்ட் அணிந்த ஒரு இளைஞன்… இரண்டு கால்களையும் ஊன்றியபடி அமர்ந்த நிலையில், மதுமிதாவையே பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்த்தான்.

    அவனை நோக்கி வேகமாக நடந்தான்.

    2

    ‘மரத்தின் கீழ் உனக்காகக் காத்திருக்கையில்… மரமேறிப் பார்க்கும் மனசு!’

    கோலம் போட்டுக் கொண்டிருந்த மதுமிதாவின் மேல், பார்வையை ஆணியடித்து வைத்திருந்த அந்த சைக்கிள் இளைஞன்… இப்போது மெதுவாகக் கனைத்தான்.

    நிமிர்ந்து பார்த்த மதுமிதா… அவனையும், பின்னால் வந்து கொண்டிருக்கும் தன் அண்ணனையும் பார்த்தாள்.

    ஹலோ! கோலம் ரொம்ப அழகா இருக்கு... என்றான் அந்த இளைஞன்.

    அவனை முறைத்துவிட்டு, பூர்த்தியாவதற்குக் காத்திருந்த கோலத்தைத் தொடர்ந்தாள் அவள்.

    பாராட்டினா ஒரு தாங்க்ஸ் சொல்ல மாட்டீங்களா? என்ற அவன், தன் தோளில் ஒரு கை அமர்வதை உணர்ந்து திரும்பினான்.

    என்ன பண்ணிட்டிருக்கீங்க பிரதர்? என்றான் சிவா புன்னகையோடு.

    அவன் கொஞ்சம் தடுமாறி, கையை எடுங்க... நான் சும்மா இப்படி சைக்கிளிங் வந்தேன்… ஸோ வாட்... என்றான்.

    சைக்கிளிங் போறது உடம்புக்கு ரொம்ப நல்லதுதான். இந்த இடத்துல சைக்கிள் ரொம்ப நேரமா நின்னுடுச்சு போலிருக்கே... பங்க்சரா...? நல்லாதானே இருக்கு...

    நான் போவேன், நிப்பேன்... உங்களுக்கென்ன? உங்க ரோடா இது? உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க சார்!

    நீங்க சும்மா நின்னா, நான் எதுக்குங்க கேட்கப் போறேன்...? அந்தக் கோலம் போடற பொண்ணையே முழுங்கிடற மாதிரி பார்த்தீங்க... அப்புறம் ஏதோ பேச்சுக் கொடுத்தீங்க... இதெல்லாம் டீசன்ட்டா இல்லையே?

    அவனுக்கு முகம் சிவந்துபோய், உனக்கென்னய்யா அதைப்பத்தி? தகராறு பண்றியா? நான் யார் தெரியுமா? என்றான் முறைப்பாக.

    கோலம் போட்டு முடித்துவிட்டு, இவர்களின் சண்டையைப் பதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவிடம், இவன்தானா ரோஜாப்பூ போட்டது? என்றான் சிவா.

    அவள் மௌனமாக ஆமோதித்துத் தலையசைக்க, சரி... நீ உள்ளே போ... என்று சொல்லிவிட்டு இவனிடம், இதப்பாருங்க தம்பி… அவ எங்கம்மாவோட வயித்துல, எனக்கப்புறம் பொறந்தவ! அதனால எனக்கென்னன்னு போக முடியாது பாருங்க… போன வாரம் இதே மாதிரி கோலம் போட்டுக்கிட்டு இருந்தப்போ, ரோஜாப்பூ வீசிட்டுப் போனீங்களாம்... மறுநாள் காத்திருந்து பார்த்தா, ஆளைக் காணோம். இன்னிக்கு என்ன பூ கொண்டு வந்திருக்கீங்க? என்றான்.

    அது… வந்து... சார்… நீங்க பிரதர்னு தெரியாம…

    சரி! இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களே… சொல்லுங்க. என்ன இது… லவ்வா?

    அவன் எச்சில் விழுங்கினான்.

    ஸாரி சார். இனிமே டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்

    விருட்டென்று சைக்கிளை மிதித்துக் கொண்டு அவன் போய்விட, தன் வீட்டின் காம்பௌண்ட் கேட் தள்ளித் திறந்து உள்ளே வந்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1