Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethuvarai Sorkkam
Ethuvarai Sorkkam
Ethuvarai Sorkkam
Ebook153 pages51 minutes

Ethuvarai Sorkkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466404
Ethuvarai Sorkkam

Read more from Rajendrakumar

Related to Ethuvarai Sorkkam

Related ebooks

Related categories

Reviews for Ethuvarai Sorkkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethuvarai Sorkkam - Rajendrakumar

    21

    1

    கலைந்தும் குவிந்தும் கொண்டிருந்த கறுப்பு மேகங்கள் வெள்ளிக் கம்பிகளாக மின்னல்களைப் பிரசவித்துக் கொண்டிருந்தன.

    கொஞ்ச நேரத்தில் மழை வருவதற்கான அறிகுறிகள் நிறைய -

    எங்கோ தொலைவில் பெய்த மழையில் நனைந்த காற்று இங்கே சிலிர்ப்பூட்டியது.

    பலசரவேடு ரயில்வே ஸ்டேஷனில் களைப்புடன் நுழைந்த ரயில் இன்ஜின் விட்ட பெருமூச்சின் வெள்ளை ஆவி ஸ்டேஷனின் பாதியை மறைத்தது.

    சச்கரங்கள் தேயும் ஏகமான ஓசையுடன் முழுக்க நின்றதும் -

    பெட்டியைக் கதவோரமாகத் தள்ளி, இறங்கிக் கொண்டு -

    சீக்கிரம் பெட்டி எடும்மா. ரெண்டு நிமிசதான் ரெயில் நிக்கும். பெட்டியை இழுத்து இறக்கி வைத்தாள்.

    கிராமியப் பின்னணியிலும் கொஞ்சம் பட்டணத்து நாகரிகம் தெரிந்தது. வலது கையில் வாட்ச் கட்டியிருந்தாள்.

    பிளாட்பாரத்தின் ஓரத்தைத் தவிர்த்து, கனமான பெட்டியைக் சற்றே சிரமத்துடன் கொஞ்சமாக நிமிர்த்தினாள்.

    அட்டகாச ஊதலுடன் ஆர்ப்பாட்டமாக ரயில் நகர்ந்தது.

    அவளை நோக்கி வந்த ஸ்டேஷன் மாஸ்டர் இளமையாகவே இருந்தார். கைக்குட்டையை மடித்து காலரில் செருகியிருந்தார்.

    டிக்கெட்டை நீட்டினாள்.

    வாங்கி கொண்டு கேட்டார்.

    வண்டி வேணுமா?

    அப்பா கொண்டு வந்திருப்பார்னு நினைச்சேன்.

    யார் உங்கப்பா? என்று கேட்டார். அவள் சொன்ன பதிலுக்கு வியந்து போனார்.

    பழைய எம்.எல்.ஏ. சந்திரவர்ணன்.

    நீங்கதான் வினித்ராவா?

    அது என் அக்கா. நான் வினயா.

    அப்படியா. போய் ரூமில உட்காருங்க. வீட்டுக்குத் தகவல் சொல்லியனுப்பறேன்.

    பெட்டி?

    இருக்கட்டும். ஆள் கொண்டு வருவான் என்றவன் தலையில் கூடையுடன் வந்த பெண்ணைக் கூப்பிட்டான்.

    ஏ பாலா.

    இல்லிங்க. வெள்ளரிப் பிஞ்சு. ரூபாய்க்கு எட்டு. அரை ரூபாய்க்கு ஆறு. அவன் கணக்குக்குச் சிரித்தான்.

    சரி. சரி. அதைக் கேட்கல்லே. உன்பேர் பாலா தானே?

    இல்லீங்க. கனகா. கனகாம்புஜம்.

    சரி கனகா. எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போயி அவங்க மக வந்திருக்குன்னு சொல்றியா?

    ஆத்தி. மேட்டுக்குடிப் பொண்ணா வந்திருக்காக. அய நான் அவுகளைப் பார்க்கணுமே.

    ரூமில இருக்காங்க எட்டிப் பார்த்துட்டு ஓடிடு. எட்டிப் பார்த்தாள்.

    ஆத்தி. எம்புட்டு அழகு? பொட்டி உங்களுதா?

    ஆமா. கொண்டு வரயா? காசு தரேன்.

    ஆத்தி. வாணாம். மேட்டுக்குடிப் பரம்பரையிலே காசு வாங்கினா தீபாவளி பொங்கலுக்கு வாங்குவம். மீதி நா வாங்க மாட்டம்.

    ஏன்

    அதென்னமோ ஊர்க்கட்டுப்பாடு அப்பிடி. எங்கே வைக்க?

    இப்படியே வச்சிரு.

    உட்கார்ந்து பத்து எண்ணு. அதுக்குள்ளாற வூட்ல தகவல் சொல்லிப் போட்டு வாரேன்.

    அதுக்காக ஓடாதே. விழுந்துடுவே. உதட்டைச் சுழித்துச் சிரித்தவாறு ஸ்டேஷன் மாஸ்டரின் அறையைச் சுற்றிலும் பார்த்தாள்.

    சுத்தமாக வைத்திருந்தார். ஒரு பெண்ணின் கை சுத்தமாயிருந்தது.

    பிச்சை எங்கோ அவர் இரைவது கேட்டது. ‘ஙே.’ என்ற பார்வையோடு உள்ளே வந்தார். ஒயிட் அண்ட் ஒயிட்டில் நல்ல ட்ரிம்மாக இருந்தார்.

    காப்பி ஆர் டீ ஆர் கோல்ட்? என்ன சாப்பிடறீங்க?

    நோ. தாங்க்ஸ்.

    யூ மஸ்ட் ப்ளீஸ். காப்பி?

    மெலிதாகத் தோள்களை உயர்த்தி அடக்கினாள்.

    காலேஜ் படிப்பு முடிஞ்சு போச்சா?

    ஃபைனல் இயர் ஒண்ணு பாக்கி இருக்கு. அடுத்த வருஷம் முடிச்சிடுவேன்.

    ஏப்ரல் மே வெகேஷன் கூட இல்லையே. என்ன இப்ப திடீர்னு.

    என்னமோ தெரியலை. அப்பா திடீர்னு தந்தி கொடுத்தார். ‘அவசரம் உடனே வா’ன்னு.

    காப்பி வந்தது.

    ஒரு வேளை...

    சும்மா சொல்லுங்க...

    உங்க அக்கா விஷயமாப் பேசக் கூப்பிட்டிருக்காரோ என்னமோ?

    குனிந்த தலை நிமிராமல் காப்பியைக் குடிக்கும் அவளைப் பார்த்தார்.

    பரவாயில்லே. இது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். எனக்குத் தெரிஞ்சிருக்கிறதில தப்பில்லே.

    அந்த ஆள் யார் சார் உங்களுக்குத் தெரியுமா?

    தெரியும். அடிக்கடி இங்கே டிக்கெட் இல்லாம வந்து தொல்லை தருவான். ஒரு தடவை அவன் சட்டையை உருவி எடுத்து, பணம் கொண்டு வந்தால் தான் தருவேன்னு சொல்லிட்டேன். அவனைப்பற்றி ஒரே வார்த்தையில சொல்கிறதானா-அவன் நல்ல மனிதனல்ல. ரவுடி. மோசமான

    ஆனா உன் அக்கா எப்படி அவன்கிட்டே மயங்கினாள்ன்னு தான் எனக்குப் புரியல.

    அவளை நீங்க பார்த்திருக்கீங்களா?

    இல்லே. ஸ்டேஷனை விட்டு நான் வெளியே போகிறதில்லை. அவளும் ரயில் ஏற வருகிறதில்லே. எங்கே போனாலும் கார்லேதான் போகிறதாய்க் கேள்வி. அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளையைப் பார்த்தேன்.

    நிமிர்ந்தாள்.

    ரயிலேற்ற உங்கப்பா வந்திருந்தார். வெரி ஹாண்ட்ஸம். ஜெர்கின் எல்லாம் போட்டு ஸ்மார்ட்டா இருந்தார்.

    வினயாவின் மனத்தில் ஏனோ அத்தான் அழகு சுந்தரம் வந்தான்.

    கனகா உள்ளே வந்தாள். வண்டி வந்தாச்சும்மா

    மெலிதான புன்னகையுடன் விடை பெற்றாள்,

    அம்மாடியோ. என்னா கனம் கனக்குது பெட்டி. என்னாதான் வச்சிருக்கே தாயி.

    புத்தகங்கள்.

    அது சரி, உன் படிப்பு நல்ல கனமான படிப்புதேங்.

    கார் பின் ஸீட் கதவைத் திறந்தபோது-டிரைவர் ஸ்தானத்தில் அவள் இருந்தாள்--வினித்ரா!

    அக்கா.

    முகத்தைத் திரும்பி எங்கோ பார்த்தபோது கவனித்தாள். கன்னத்தில் சிவப்புப் பட்டைகள்- விரல்கள் சைஸிலிருந்தன.

    உட்காரேண்டி.

    ஏறிக்கொண்டாள்.

    இருபக்கமும் பச்சைப் பசேல் நெல் கதிர்கள் காற்றில் ஆடி அசைந்து வரவேற்றன.

    இந்த வருஷம் நல்ல விளைச்சல் போலிருக்குதில்லே.

    உம்.

    சாமாளியோட பேத்தி வயசுக்கு வந்துட்டாளா?

    தெரியாது.

    கோயில் திருவிழா இந்த மாசம்தானே? இல்லே ஆயிடுச்சா?

    நோ ஐடியா.

    இந்தத் தடவை மாந்தோப்பு நம்மகிட்டே இருக்கா? இல்லே குத்தகை விட்டுட்டாரா?

    அப்பாவைக் கேட்க வேண்டிய கேள்வி.

    அப்பப்பா, மெட்ராஸ் மெஸ்லே காரமில்லாம சாப்புட்டு நாக்கே செத்துப் போச்சு. நல்ல இடியாப்பமும் கொத்துமல்லித் துவையல் நல்ல காரமாயும் செய்து வைக்கச் சொல்லி லெட்டர் போட்டேன். செய்திருக்கா?

    சமையல்கார அம்மாவைக் கேட்க வேண்டிய கேள்வி.

    ஏங்க்கா என்னவோ மாதிரி இருக்கே?

    ஏன்?

    ஒட்டாம விட்டேத்தியா பதில் சொல்றியே.

    திரும்பிப் பார்வையால் அவளைத் துழாவி விட்டுச் சாலைக்குத் திரும்பினாள்.

    அய. கேட்கிறேன். அப்பா ஏதும் சத்தம் போட்டாரா?

    டிரைவிங் நேரத்திலே பேசாதேடி இடியட். அப்புறம் காரோட சேர்ந்து கிணத்தில்தான் விழுவோம்.

    வாயை மூடிக் கொண்டாள் வினயா. கார் போய்க் கொண்டிருந்தது பங்களாவை நோக்கி.

    2

    இவர்கள் வீட்டுக்குள் போகும்போது - சந்திரவர்ணன் எம்.எல்.ஏயைச் சுற்றி ஒரு சின்னக் கும்பல் இருந்தது.

    அதிலே பாருங்க ராக்கப்பன். எனக்கு எம்.டி.டியில யாரையும் தெரியாது. என் இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும், செங்கோட்டையிலும் தான். நீ போய் ராமானுஜத்தைப் பாரு. நான் சொன்னேன்னு சொல்லு. வாம்மா விஜி.

    அப்பா.

    உள்ளே போய் இரு. இவுகளை அம்ச்சிட்டு வர்ரேன். வணக்கம். வாழிய நலமே. உங்க விவகாரம்தானே ராமனாதன். சொல்லியிருக்கேன் பார்ப்போம்.

    அயா அப்படிச் சொல்லிடாதீங்க. உங்களைத்தான் மலைமாதிரி நம்பிக்கிட்டிருக்கேன்.

    அந்த டிபார்ட்மெண்ட் தலைவரோட நேரடிப் பார்வையில இருக்கு. மூடு பார்த்துத்தான் பேசணும். வாரம் பத்து நாள் டயம் கொடுங்க. பார்ப்போம். அப்ப நான்..."

    வணக்கம், இன்னொருவரைப் பார்த்துச் சிரித்தார், என்ன பெரிய இடத்தில் எல்லாம் மனு கொடுத்திருக்காப்பல இருக்கு.

    நான் கொடுப்பேனுங்களா? என் மச்சான் பய வேலை. நான் சொன்னேன் நம்மகிட்ட ஒரு வார்த்தை சொன்னாலே போறும்னு. பய கேட்கவே மாட்டேங்கறான். நீங்கதான் எப்படியாச்சும்?

    அங்கேயில்லேன்னு சொன்னதுக்கப்புறமா நான் என்ன செய்ய முடியும்?

    மாம்பழங்க. நம்ம தோட்டத்தது. சும்மா கல்கண்டு மாதிரி இருக்கும். சுட்டு விரலை அசைத்தார்.

    எங்க தோட்டத்திலே இல்லாத ஜாதி மாம்பழமா? எடுத்துப் போ. என்று அதிர வைத்து விட்டு, ஏதோ தேங்காயானாலும் பரவாயில்லை. இளநியானாலும் பரவாயில்லே. பழம் வேணாம்.

    "அயோ தெரியாம

    Enjoying the preview?
    Page 1 of 1