Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagu Vayathu Aabathu
Azhagu Vayathu Aabathu
Azhagu Vayathu Aabathu
Ebook134 pages45 minutes

Azhagu Vayathu Aabathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Azhagu Vayathu Aabathu

Read more from Rajendrakumar

Related to Azhagu Vayathu Aabathu

Related ebooks

Related categories

Reviews for Azhagu Vayathu Aabathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagu Vayathu Aabathu - Rajendrakumar

    1

    "பாரதிராஜாவைப் பார்க்கணும். உங்களுக்கு அவரைத் தெரியுமா?"

    யார் அவர்?

    மோட்டார் பைக் பின்னாலிருந்த அந்தப் பெண் முகத்தில் வந்தது எரிச்சலா, கோபமா என்றறிய முடியாத நிலையில் மோ-பைக்கை சீற விட்டுக் கொண்டிருந்தான் அவன். கறுப்புக் கண்ணாடி, கறுப்பு ஹெல்மெட், கறுப்பு ஜூட் அனைத்திலும் கறுப்பு இருந்தது. அவன் மனது உள்பட. கறுப்புக் கண்ணாடியை உயர்த்தி இறக்கியபோது தெரிந்தது - இடது பக்கக் கண் மட்டும் பழுப்பு நிறமாயிருந்தது. காண்டாக்ட் லென்ஸ்,

    அய, அவுக புதுமுகம் தேடறாங்களாமில்லே...!

    இனிமே யாரும் உன்னைத் தேடமாட்டாங்க. தேடினாலும் நீ கிடைக்கமாட்டே...!

    ஏன் நீயே வச்சுக்கப் போறியா?

    இல்லே. அழிக்கப் போறேன்... அழுத்தமாகச் சொன்னான்... உன் கதை முடியப் போகிறது... என்ற அவன் பேச்சின் தீவிரமறியாமல் அந்தப் பெண் சிரித்தது. பெயர் அழகி! அதிகம் ஆராயாதீர்கள். அவள் கதை முடிகிறது. இப்ப முடிந்துவிடும்.

    சென்னையில் - அட்டகாசமான அந்த பங்களாவில் - குளிர்சாதன அறையில் அனலடித்துக் கொண்டிருந்தது. பாரதி அமைதியாக அமர்ந்திருக்க,

    பின்கை கட்டிய புலியாக உலாவிக் கொண்டிருந்தாள். மங்களாதேவி ஷூட்டிங்கிற்குத் தயார் நிலையில் பளபளப்பாயிருந்தாள். அவள் போட்டிருந்த கொஞ்சமான ஸ்கர்ட் காலையில்தான் விமானப் பயணம் செய்து பம்பாயிலிருந்து இறங்கியிருந்தது.

    தீர்மானம் செய்ய வேண்டியது நீயில்லே பாரதி நான்! அழுத்தமாகச் சொன்னாள். நீ போட்டிக்குப் போகிறாய்...?

    எதிர்த்து என்னமோ சொல்ல முயன்ற பாரதி - தாயின் கண்களைச் சந்தித்ததும் - அமைதியாகிப் போனாள்.

    இதிலே யோசிக்கிறதுக்கு என்ன இருக்கிறதென்றே எனக்குப் புரியல அழகுப் போட்டிக்குப் போகிறவங்க எல்லாருமே விபசாரிகளாகவா போயிடறாங்க? உன்னைச் சொல்லிக் குற்றமில்லே. நீ வந்த வழி அப்படி...!

    மகள் கண்களை நேராகச் சந்தித்தாள். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பிறந்திருக்கே...

    குனிந்த தலை நிமிராமல் கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தாள் பாரதி.

    என் அப்பா எங்கேயிருக்கார்ம்மா?

    முறைத்தாள் அம்மா. இத பார் பாரதி, இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு தரம் அந்தக் காட்டுமிராண்டியைப் பற்றி பேசினாயோ எனக்குப் பொல்லாத கோபம் வரும். மனிதர்களைப் பற்றிப் பேசாமல் அந்த மிருகத்தைப் பற்றிப் பேசறே...!

    அம்மா...!

    பேசாமல் ஒப்புதல் கையெழுத்துப் போடு. டியூடேட் போன வாரமே தீர்ந்துப் போச்சு...

    கையெழுத்துப் போடணுமானால் ஒரு கண்டிஷன்...!

    பாரதி!

    சும்மா கத்தாதேம்மா. இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் உங்ககிட்டேயிருந்து விஷயத்தைக் கறக்க முடியாது. ஐ மஸ்ட் நோ அபவுட் மை ஃபாதர்...

    சொல்றேண்டி சொல்றேன்... உனக்கும் தெரிஞ்சிருக்கட்டும், உன் அப்பாவின் யோக்கியதை... ச்சே...!

    என்னம்மா துவண்டு போயிட்டே?

    உன் அப்பா பேச்சை எடுத்தாலே எனக்கு உடம்பு பற்றி எரிகிறது!

    அவ்வளவு மோசமானவரா?

    பயங்கர குடிகாரன்!

    தள்ளாடிக் கொண்டே வந்தார் அவர்.

    முரடன், ராத்திரியெல்லாம் நான் பட்ட சித்திரவதை அந்த தெய்வத்துக்குத்தான் தெரியும்.

    சொல்லு, எட்டி உதைக்கவே உருண்டு போய்க் கட்டில் காலில் தலையை மோதி அழுகையுடன் திரும்பிப் பார்த்தாள்.

    நீ உருவானதும்-

    அம்மா...

    சொல்லு. யாருக்காகப் புள்ளையைச் சுமக்கிறே? சொல்லுடி...?

    விபரீதமான சந்தேகத்தினால் அன்னைக்கு என்னையும் உன்னையும் விட்டுட்டுப் போனவர்தான் திரும்ப வரவேயில்லே...

    நான் நடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சதும் திரும்ப வந்தார். உன்னைத் தேடியோ உறவை நாடியோ வரல்லே. என் பணத்தைக் கேட்டு... புருஷன் உறவைச் சொல்லிப் பார்த்தார். விரட்டிட்டேன்...!

    அப்பா பெயர்? ஸ்கூல் சர்டிபிகேட்டில் என்.ஆர். பாண்டியன்னு இருக்கு...

    அசல் பெயர் நாகராஜ பாண்டியன். ஆனா நான் கூப்பிடறது ராஜநாக பாண்டியன். அவ்வளவு விஷம். பூவிழுந்த இடது கண்ணைப் பார்க்கவே பயங்கரமாயும் அருவருப்பாயுமிருக்கும்...

    அப்புறம் ஏன் பழகினே?

    நான் பழகலே... வெறுத்தேன்...

    பழகியிருக்கணும்மா... இல்லேன்னா நான் எப்படி?

    பாரதி!

    அம்மா... நீ என்னைக் கொன்னாலும் சரி. எனக்கு அப்பாவின் பேரில சாஃப்ட் கார்னர் அதிகம். நான் அவரைச் சந்திக்கணும். விலாசம் கொடு...

    ஒவ்வொரு ஜெயிலாகப் போய் விசாரி. எங்கே கல் உடைக்கிறாரோ கண்டுபிடி, போ!

    அம்மா...!

    அந்தக் குடிகாரனுக்கு எந்த ஜெயிலிலும் அறிமுகம் உண்டு. எங்கே கேட்டாலும் கச்சிதமா உன் கேள்விக்கு விலாசம் சொல்லுவாங்க. கேட்டுத் தெரிஞ்சுக்க... போ...

    அம்மா...!

    ஏண்டி என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கறே? அந்த ஆள் செய்த ஒரே நல்ல காரியம் - உருப்படியான விஷயம் - உன்னை என் மகளாக எனக்குத் தந்தது. போதுமா? இப்பக் கையெழுத்துப் போடு.

    எனக்குப் பிடிக்கலேன்னு தெரிஞ்சும் பிடிவாதமாக அழகுப் போட்டிக்கு அனுப்பறியே ஏம்மா...? அதில ஜெயிக்கிறது அவ்வளவு சுலபம்னா நினைக்கறே?

    உனக்கில்லாத அழகு எவளுக்குடி வரும்? அளந்து வெட்டி எடுத்த மாதிரி கச்சிதமான உடம்பு. திறமையான டெய்லர் தைச்சுவச்ச சட்டை மாதிரி உன் அழகு எவளுக்கு வரும்? சீக்கிரம் கையெழுத்துப் போடுடி! நான் ஷூட்டிங் போகணும். கம்பெனி கார் இப்ப வந்திடும்...

    இன்னும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிடும்மா...

    எது?

    எதுக்காகப் போட்டியில கலந்துக்கச் சொல்லி என்னை வற்புறுத்தறே?

    அதான் சொன்னேனே. என் மகள் அழகின்னு ஜெயிச்சா அதில் எனக்குப் பெருமைதான்னு...

    அம்மா, உன் பெருமைக்காக நான் எதையும் செய்வேன். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்...

    எது?

    அப்புறமும் நான் உனக்கு மகளாக மட்டும் தானிருப்பேன்...

    பின்னே?

    எக்காரணத்தைக் கொண்டும் ஊருக்கு நடிகையாக மாட்டேன்...!

    மகளே...!

    அதுமட்டும் நிச்சயம்...!

    குனிந்து கையெழுத்துப் போட்டுவிட்டாள்.

    நிஜமாகவே கையெழுத்துப் போட்டுட்டியாடி? என்ற சினேகிதியை வியப்பாகப் பார்த்தாள் பாரதி.

    ஆமாம்... ஏன்?

    அநேகமா அது உன் தலையெழுத்தையே மாத்திடும்னுதான் நினைக்கிறேன்...

    என்ன சொல்றே? புரியல...

    எங்க பெரியப்பா படத்தில உங்கம்மா நடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுமில்லையா?

    தெரியும்...

    அவர்கிட்டே அடுத்த படத்தில் புதுமுகமா உன்னை அறிமுகப்படுத்தச் சொல்லி அட்வான்ஸ்கூட வாங்கிட்டாங்க...!

    பாரதிக்கு இது செய்தி!

    அதெப்படி முடியும்? மேஜராயிட்ட எனக்கெப்படி. என் அம்மா அக்ரீமெண்ட் சைன் பண்ண முடியும்?

    நீ மேஜரான சேதியை அவங்கல்லே சொல்லணும். மைனர்னு சொல்லியிருக்காங்க. அவங்களைப் பொறுத்தவரை வயசு எப்பவுமே பிரச்சினையாக முடியாது. என்றும் பதினாறு...!

    சர்டிபிகேட் இருக்கே?

    எத்தனை பேருக்குக் காட்டிட்டிருக்க முடியும்? கோர்ட்டு கேஸுன்னு போனால்தான். ஆனா அதுக்கு நீ உன் அம்மாவை எதிர்த்துக்க வேண்டி வரும். அது முடியாத காரியம்...

    பாரதி தயங்கினாள்.

    ஒண்ணு செய்யேன். பேசாம மிராண்டாவுக்குப் போயிடேன்...

    பெரியம்மாவா? வேணாம்டியம்மா. அந்த ராட்சசிக்கு இந்த ராட்சசியே மேல்...

    "இதுக்குத்தான் நேரத்தோட ஒருத்தனை காதலிக்கணும்ங்கிறது. ஆண் பிள்ளையா அழகா லட்சணமா துணையிருந்திட்டானில்லே. இந்த மாதிரி சிக்கல்லே நாம மாட்டினாத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1