Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Niththam Oru Natchathiram
Niththam Oru Natchathiram
Niththam Oru Natchathiram
Ebook128 pages45 minutes

Niththam Oru Natchathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Niththam Oru Natchathiram

Read more from Rajendrakumar

Related to Niththam Oru Natchathiram

Related ebooks

Related categories

Reviews for Niththam Oru Natchathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Niththam Oru Natchathiram - Rajendrakumar

    அறிமுகம் : குடும்பம்

    "வங்கக் கடலில் சுமார் நூற்றம்பது கிலோ மீட்டரில் உருவான காற்றழுத்த மண்டலம் புயல் சின்னமாக உருவாகி இருக்கிறது. இது நேரே தீவிரமடைந்து சென்னைக்கும் கடலூருக்கும் நடுவே இன்று கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழ்நாடு, ஆந்திரா கடலோரப் பகுதியில் மணிக்கு நாற்பது முதல் அறுபது கிலோ மீட்டர் அளவு வேகத்துக்கு காற்று புயலாக வீசக்கூடும்."

    சமையலறையில் வேலையிலிருந்த பெருந்தேவி கோபமாக நிமிர்ந்து சுவரிலிருந்த ஸ்பீக்கரைப் பார்த்தாள்.

    மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்.

    அடுப்பை அமர்த்தினாள்.

    தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு பத்திரமாகப் போகும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

    கதவைத் திறந்து வெளிப்பட்ட அம்மாள் வேகமாக நடந்து ரேடியோவின் காதைத் திருக -

    புயல் பற்றி... என்றதோடு அடங்கிவிட்டது அது!

    என்னம்மா நீ? குமரன் எரிச்சலாகப் பார்த்தான். எவ்வளவு த்ரில் நியூஸ் கேட்டுட்டிருந்தேன். பாதியிலேயே நிறுத்திட்டியே.

    த்ரில்லிங் நியூஸா? நியூஸன்ஸ் நியூஸ்... என்ற மல்லி தலையிலடித்தான்.

    நீ சும்மாயிருடி

    ராஸ்கல். ஏண்டா அவளை அடிக்கறே? முட்டாளே. காரில் போனவர் முந்தா நாளே திரும்ப வேண்டியவர் இன்னமும் வீடு திரும்பல என்ன ஏதுன்னு தெரியலே. பத்திரமாத் திரும்பணுமேன்னு பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கேன். ராஸ்கல் புயல் செய்தியைச் சுவாரசியமாகவா கேட்கறே? இனி ரேடியோவைத் தொட்டே, தொட்ட கையை வெட்டிப் போடுவேன். ஜாக்கிரதை.

    தள்ளி உட்கார்ந்திருந்த மல்லி சிரித்தாள்.

    டீன் ஏஜ் முடியும் தறுவாயிலிருந்தாள், ஆனால்...

    அவளுக்கென்று ஒரு ரகசிய வாழ்க்கை இருந்தது. அதனால் -

    முழுசாக வளர்ச்சியடைந்த பருவம் அவளுக்கு இருந்தது. அவள் காதலன் பாச்சா.

    (ஊஹூம். நீங்கள் நினைக்கிற பாச்சா இல்லை. பார்த்தசாரதி, பாச்சாக மாறி அதுவும் சுருங்கி இப்போது பாச்சாவாகி இருக்கிறது. சுத்தம் சுயம் ஹிந்து)

    ஆரம்ப நாட்களில் இவளும் ‘பார் சாதி’ என்றேதான் கூப்பிட்டாள்.

    அவன் சாதி எல்லாம் கூடாது என்று சொல்லிவிடவே - இவளும் பாச்சா என்றே கூப்பிடத் துவங்கிவிட்டாள்.

    ரகசியமாகச் சொல்வான்.

    டார்லிங், ராத்திரி பன்னிரண்டு மணிக்குக் கதவைத் திறந்து வை. நூல் ஏணியை இறக்கி விடு. நான் மேலே வரேன்.

    ச்சீய் அவன் தலையைக் கலைத்துக் கொண்டே சிரிப்பாள். நீ ரோமியோ. ரோடு சைட் ரோமியோ என்பாள்.

    அண்ணன் குமரனைப் பார்த்தாள்.

    சமையலறைக்கான ஸ்பீக்கர் தொடர்பை விலக்கிவிட்டு ரேடியோவைத் திருக -

    அடக்கமான குரலில் செய்தி ஒளிபரப்பியது அது.

    கடைசியாக வந்த தகவலின்படி புயல் தென் சென்னை பாண்டிச்சேரி காரைக்காலுக்கு அருகே கரையைக் கடக்கக்கூடுமென எதிர்பார்க்கப் படுகிறது. என்றது.

    மீண்டும் மீண்டும் மீனவர்களைக் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரித்தது.

    தாழ்வுப் பகுதி மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அடிக்கடி வேண்டுகோள் விடுத்தது.

    பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் போலீஸ் கமிஷனரின் அறிக்கையை வாசித்தது.

    உட்கார்ந்த நிலையிலேயே குதித்தான் குமரன். இருபத்தைந்து வயதுக் குழந்தை.

    ஹையா! புயல் வரப் போகிறது என்ற அவனது உற்சாகமான கூவலுக்கு -

    அடி செருப்பால். என்ற அம்மா குரல் அசரீரியாக அதட்ட முதலில் முகம் சுளித்தான்.

    பிறகு சிரித்தான். இந்த அம்மா வேறு சுத்தப் பயந்தாங்கொள்ளி. அப்பா இன்னம் உயில் எழுதல்லையேன்னு கவலையாக்கும்?

    உதைப்படப்போறே நீ! ஏண்டா அபசகுணமாகவே பேசிட்டு வரே?

    டோண்ட் வொர்ரி மம்மி. அவர் உயில் எழுதினாலும் எழுதலேனாலும் சொத்துப் பூராவும் அவருக்கு அப்புறம் தாலி கட்டின தோஷத்துக்கு உன்னைத்தான் வந்து சேரும்.

    எப்படிடா சொல்றே?,

    எப்ப உன்னைத் தொட்டுத் தாலி கட்டினாரோ அப்பவே அந்த உரிமை உனக்குத் தன்னால் வந்தாச்சு.

    வெளியே வந்து நின்று பேய் மாதிரி கத்தினாள் அம்மா.

    சனியனே, எந்த நேரத்தில எதைப் பேசறதுன்னு விவஸ்தையேயில்லாமப் போயிடுச்சா உனக்கு? வெளியூருக்குப் போன மனுஷன் இன்னமும் திரும்பலையேன்னு கவலைப்பட்டிருக்கேன். நீ என்ன விளையாடறியா?

    நான் விளையாடல்லேம்மா. அப்பாதான் விளையாடறார். உன்னை ஏமாத்தி எங்களை ஏமாத்தி...

    என்னடா உளர்றே?

    நான் ஒண்ணும் உளர்லே. போன வாரம் நடந்த ஆக்ஸிடண்ட் கேஸுக்காக நேத்து கோர்ட்டுக்குப் போய் நம்ம வக்கீலைப் பார்த்தேன் அவர்தான் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

    என்ன அது?

    உங்கப்பாகிட்டே உயில் டிராஃப்ட் ரெடியாயிருக்கு. வந்து பார்த்துட்டுப் போகச் சொன்னாரு

    அவர்தான் ஊரிலேயேயில்லையே.

    அதான் நானும் சொன்னேன். அவர்தான் சொன்னார். ‘உளறாதே. நேத்து வந்து உயில் எழுதச் சொல்லி டிக்டேட் பண்ணிட்டுப் போனார். அதோட இன்னொன்ணும் சொன்னார்.

    என்ன அது?

    அவரோட இழைஞ்சுகிட்டு மேல்நாட்டுப் பெண் ஒருத்தியும் வந்தாளாம்.

    யாரது?

    சொல்லல்லே. ஆனால் அவளோட ஏதோ ஓட்டல்லே தங்கி இருக்கிறது மட்டும் தெரியும்.

    யாருக்கு அவருக்கா?

    இல்லே எனக்கு. என்றவன் ரேடியோவை இயக்க - அது ‘மீண்டும் புயல் பற்றிய விசேஷ வானிலை அறிக்கை என -

    சட்டென்று நிறுத்தினாள் பெருந்தேவி. மனசுக்குள்ளே அடிக்கிற புயலே போதும். நீ வேறு ஊதிவிடாதேடா

    அம்மா, ரேடியோவை மூடறதினாலேயோ நீ கோஷ்டம் போடறதினாலேயோ வரப்போகிற புயல் நிற்கப் போகிறதில்லே. அது என்னவோ வந்தே தீரும். என்று அவன் சொல்லும்போது –

    நீ வாயை மூடப் போறியா இல்லேயா? என்று பெருந்தேவி பெரிதாக அலறும்போது -

    அந்த மல்லி வாயைப் பொத்திச் சிரிக்கும்போதுதான் –

    வாசலில் கார் வந்து நின்றது - ஓசையின்றி, அமைதியாக.

    வந்துட்டார் அவர் வந்துட்டார் என்று பெருந்தேவி வாசலுக்கு ஓட -

    பின் தொடர்ந்து வந்த சின்னப் பிசாசு, ஐய்! ஆன்ட்டி! புதுசா ஒரு ஆன்ட்டி! என்று உற்சாகமாகக் கூவ -

    கதவைத் திறந்து இறங்கிய வீரராகவன் பின் கதவைத் திறந்து விட -

    மிகவும் ஒயிலாக இறங்கினாள் நான்ஸி.

    மல்லியும் குமரனும் ஓடிவந்து வாசலில் நிற்க...

    மேற்கத்திய நாகரிகத்துடன் கூடிய பெண்ணைப் பார்த்ததும் –

    ‘வா; என்பதா! அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பதா’ என்று புரியாத நிலையில் பெருந்தேவி குழப்பமாக நிற்க -

    கையோடு கை பிணைந்து அவர்கள் படி ஏறத் துவங்கிய நிலையில் தெரிந்த அந்த நெருக்கத்துக்கு -

    ஐயோ... ஐயோ... ஐயோ... அலறிவிட்டாள் பெருந்தேவி இது என்னங்க கொடுமை? யாரு இவ? சொல்லுங்க யாரு இவ?

    கத்தாதே பெருந்தேவி.

    பதில் சொல்லுங்க. யாரு இவ?

    வாசல்லே நின்னு கத்தாதே. உள்ளே வா. சொல்றேன். வீட்டு ரகளை வெளியே தெரியக்கூடாது.

    ரகளை? மெலிதாக அதிர்ந்தாலும் கத்தினாள், நில்லுங்க அப்படியே

    மூக்குக் கண்ணாடியை உயர்த்திப் பார்த்தார். ஏன்?

    "உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1