Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theerkka Naalai Theerkkapaduvaal
Theerkka Naalai Theerkkapaduvaal
Theerkka Naalai Theerkkapaduvaal
Ebook76 pages25 minutes

Theerkka Naalai Theerkkapaduvaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466480
Theerkka Naalai Theerkkapaduvaal

Read more from Rajendrakumar

Related to Theerkka Naalai Theerkkapaduvaal

Related ebooks

Related categories

Reviews for Theerkka Naalai Theerkkapaduvaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theerkka Naalai Theerkkapaduvaal - Rajendrakumar

    10

    1

    ஒரு விஷயம் சொல்கிறாயா ராம்!

    என்ன சாந்தா!

    உன் மனைவியுடைய - அந்த டீ.வி ஆடியோவை கொஞ்சம் தழைத்து விடேன்.

    தழைத்தான்.

    உன் மனைவியுடைய அவள் எழுதின வேறு கடிதங்கள் ஏதாவது இருக்கா?

    புரியாமல் பார்த்தான்.

    நீ ஊருக்கு போனப்ப அவள் எழுதிய கடிதம் - காலேஜ் நோட்ஸ் சம்திங் லைக் தட்?

    எதுக்கு?

    சொல்றேன் கொண்டு வா. இருக்கிறதில்லையா?

    கத்தை கத்தையாக. காதல் காலத்தில் அவள் எழுதியதே நிறைய - நிறைய இருக்கு. கொண்டு வரும்போது கண்கள் கலங்கியிருந்தான். கடிதங்களா இது? காதல் கவிதைகள். அவள் ஆத்மாவின் அஞ்சல்கள்.

    அவன் கொண்டு வந்து கொடுத்ததை ஒப்பிட்டுப் பார்த்தாள்.

    வெறும் நிர்வாணக் கண்களுக்கே ஒரே மாதிரி தெரிகிறது. எதுக்கும் ஒரு நல்ல எக்ஸ்பர்ட்கிட்டே காட்டலாம். நமக்குப் புரியாத வித்தியாசங்கள் அவங்களுக்கு தெரிய வரலாம்.

    உற்சாகமாக நிமிர்ந்தவன், மீண்டும் துவண்டு சரிந்தான். வேண்டாம் சாந்தா. அதெல்லாம் வேண்டாம்.

    ஏன்?

    இப்ப இருக்கிற சந்தேகமே ஒரு நல்ல ஆறுதலாயிருக்கு. எங்காவது அவங்க இரண்டு கையெழுத்தும் ஒன்றுதான்னு சொல்லிட்டா குழப்பம் இன்னமும் அதிகமாயிடும்.

    அதுக்காக?

    விட்டுடலாம். அப்படியே விட்டுடலாம். அடுத்த கடிதம் வந்தா வேறமாதிரிக் கவனிக்கலாம். இப்ப வேண்டாம்.

    ஏன்!

    என்னைப் பொறுத்தவரை யாரோ விளையாடறாங்க... என்கிற நினைப்பே ஒரு தினுசான ஆறுதலாகயிருக்கு. அதையும் கெடுத்துக்க வேண்டாம்.

    அதுவும் சரி. உன் இஷ்டம்.

    ஒண்ணு செய்யலாம் ராம்.

    சொல்லு.

    அம்மா எஸ்.டி.டி.யில பேசினாங்க. உன்னையும் கூட்டிட்டு அங்கே வரச் சொல்லியிருக்கிறாங்க.

    இந்தூருக்கா.

    இல்லே பம்பாய்க்கு. மம்மீ இப்ப அவங்க அண்ணன் வீட்ல பம்பாய்லேயிருக்காங்க... கெஞ்சினாள். வாயேன், உன் மனசுக்கும் கொஞ்சம் ஆறுதலாகயிருக்கும்.

    அதுவும் சரிதான். இங்கே என் அமைதி குலைஞ்சி எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போலயிருக்கு.

    அப்ப வரயா!

    வரேன்.

    நிஜமா? ஏஜெண்ட்டுக்கு போன் பண்ணி டிக்கெட் வாங்கிட சொல்கிறாயா? மாற மாட்டியே.

    நெவர். அவன் தலையசைக்கவும் -

    உற்சாகமாக நடந்து போய் போனைத் தொடவும் அது வீறிடவும் சரியாகயிருந்தது. எடுத்தாள்.

    எஸ்... யார்?

    .....

    இருக்கார் இருங்க. போனை நீட்டினாள். பீட்டர்.

    நான்தான் பேசறேன் பீட்டர். என்ன விஷயம்?

    நீ உடனே இங்கே வரணும்.

    இப்பவா? சிரமப்படுமே. நான் இப்ப பம்பாய் போறேன். அதுக்குள்ளே முடிக்க வேண்டிய சில வேளைகள் ஆபீஸிலிருக்கு. ஆபீஸ் போறேன். அங்கே வந்துடேன். பேசலாம்.

    எப்ப வருவே?

    அடுத்த பதினைந்தாவது நிமிஷம் நான் சரியாகயிருப்பேன்.

    நான் பதினைந்தாவது நிமிஷமே ஆஜராகியிருப்பேன்.

    என்ன விஷயம்? குரலெல்லாம் மாறித்தெரியுது. பதட்டம் போல.

    நேரில் சொல்கிறேன் கேட்டான், வந்துடுவேயில்லே?

    "சம்திங் ராங் டியர்?"

    நத்திங்.

    பின்னே ஏன் என்னமோ போலாயிட்டே?

    அதெல்லாம் ஒண்ணுமில்லே. ஆபீஸுக்குப் போகணும்.

    சொல்லுங்க ப்ளீஸ்.

    அதான் சொன்னேனில்லே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேன்னு.

    மை காட்... அதுக்கேன் இந்தக் கத்து கத்தறீங்க?

    ஸாரி சாந்தா டியர். ஆபீஸில எதுவும் சொல்லாம நான் பாட்டுக்கு கிளம்பி வந்துட முடியாது. அப்புறம் பிரச்சினைகள் வந்தா என்ன பண்ணுவாங்க! சரி. அங்கே சொல்றதுக்கு வேணும். விலாசம் சொல்லு. பம்பாயில உங்க அண்ணன். வீடு எங்கேயிருக்கு?

    கிங் சர்கிள்லே.

    விலாசம் சொல்லும்மா.

    சொன்னாள்.

    எழுதி முடிக்கும்போது - மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த போன் ஹய்யோ... வ்... என்றது கத்தலாக.

    மை காட். மறந்தே போயிட்டேன். நீ இன்னுமா லயன்லேயிருக்கே பீட்டர்!

    அது என்ன? கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து காத்திருக்கேன்.

    என்ன கேள்வி மறந்துட்டேன்?

    வந்துடுவேயில்லேன்னு கேட்டேன்.

    கிளம்பிட்டேன்.

    ஆபீஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1