Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avasara Avasaramaai
Avasara Avasaramaai
Avasara Avasaramaai
Ebook117 pages36 minutes

Avasara Avasaramaai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Uthama Chozhan
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466848
Avasara Avasaramaai

Related to Avasara Avasaramaai

Related ebooks

Reviews for Avasara Avasaramaai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avasara Avasaramaai - Uthama Chozhan

    1

    அன்று காலை அலுவலகத்தில் நுழைந்த நித்திலாவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. பத்து மணி அலுவலகத்திற்கு, ஒன்பதரைக்கே வந்துவிடும் முதல் நபர் அவள்தான். அன்று அவளுக்கு முன்னதாகவே வந்து உட்கார்ந்திருந்தாள் அருந்ததி.

    சரியாக பத்து மணிக்குத்தான் பைக்கில் கணவனோடு வந்திறங்குவாள் அவள்.

    என்ன மேடம்... இவ்வளவு சீக்கிரமா...! உங்க சாரையும் காணலே... பைக்கையும் காணலே...!

    நித்திலாவின் ஆச்சரியக்கேள்விகள் அருந்ததியை சலனப்படுத்தவில்லை. அசைவற்றிருந்தாள். ‘என்னாச்சு...?’ என்று யோசனையோடு அருந்ததியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அது ஒரேயடியாய் இறுகிப் போயிருந்தது.

    என்னாச்சு மேடம்... ஏன் ஒரு மாதிரியிருக்கீங்க...?

    ஒண்ணுமில்லே...

    குரலில் உயிரில்லை.

    எப்படி வந்தீங்க?

    மினி பஸ்லே...

    சார் எங்கே? பைக் என்னாச்சு?

    தெரியாது!

    சுரீரென்றது நித்திலாவுக்கு.

    ‘புருஷன் எங்கேன்னு தெரியாதாமே. அப்ப சரி... ஏதோ உள்நாட்டு கலவரம் போலிருக்கு. இதுக்குமேலே இப்போ ஏதும் பேசவேண்டாம். கொஞ்ச நேரமாகட்டும்...’

    அருந்ததி மட்டுமல்ல, அவளது கணவன் ஆனந்தனுக்கும் அதே அலுவலகத்தில்தான் வேலை.

    நித்திலா தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள். கோப்புகளை எடுத்து மேஜை மீது பரப்பினாள். அவற்றில் எது ‘அவசரம்’ என்று ஆராயத் தொடங்கினாள்.

    அது ஒரு அரசு அலுவலகம், கிராம மேம்பாடுகளைப் பற்றி கவனிப்பதுதான் அதன் முக்கியப் பணி. நித்திலா, அருந்ததி, அவளது கணவன் ஆனந்தன் உள்ளிட்டு அங்கே பணிபுரிவது ஏழே ஏழு பேர்தான்.

    ஆனந்தன்-அருந்ததி தம்பதிகள் வசிப்பது பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வேறொரு கிராமம். இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. ஆனந்தனுக்கு பூர்வீக சொத்து கொஞ்சம் உண்டு. இருந்தாலும் இவர்களின் வருமானத்தில் தென்னந்தோப்பு, மாந்தோப்பு... நெல்வயல் என்று கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்த்திருந்தார்கள்.

    ஆனந்தனுக்கு கிராமம்தான் பிடிக்கும். எனவே கிராமத்திலேயே இருவரின் ரசனைக்கு எத்த மாதிரி ஒரு அழகான வீடு கட்டிக்கொண்டனர். தினமும் பைக்கில் அலுவலகம் வந்து செல்கின்றனர். வரும் வழியெல்லாம் ஜாலியாக அரட்டையடித்தபடி பார்ப்பவர் எல்லோரையும் பொறாமைப்படவைக்கும் வாழ்க்கைதான் அவர்களுடையது.

    காலை 11.30 மணியிருக்கும். அலுவலக டென்ஷன் கொஞ்சம் குறைந்த சமயம். டீ பையன் உள்ளே நுழைந்தான்.

    தனக்கு மட்டுமல்லாது அருந்ததிக்கும் ஒரு கப் டீயை வாங்கி கொண்டு அவளருகே போய் அமர்ந்தாள் நித்திலா.

    டீ குடிங்கக்கா...

    அருந்ததியிடம் காலையிலிருந்த இறுக்கம் இப்போது இல்லை. லேசாக புன்னகைப்பது போல் தோன்றியது. பார்வையால் நன்றி சொல்லியபடி டீயை வாங்கிக் கொண்டாள்.

    காலையிலே உங்க முகத்தைப் பார்த்ததும் ரொம்பப் பயந்து போயிட்டேன்கா. ஏதோ பேயறைஞ்ச மாதிரி இருந்துச்சு. பழையபடி கலகலப்பா சிரிச்சுப் பேசற அக்காவை நாம பார்ப்போமா இல்லையான்னு சந்தேகமே வந்துடிச்சு...

    ‘அப்படியா!’ என்பது போல் இதழ் மலர்த்தினாள் அருந்ததி. அடுத்த வினாடியே முகம் மாறிப்போனாள்.

    உன்னோட சந்தேகம் ஒரு வகையிலே நிஜந்தான் நித்தி. நேத்தே என்னை உசிரோட சாகடிச்சுட்டாங்க...

    அக்கா!

    ஆமாம்மா. நீ என்னோட எவ்ளோ அன்னியோன்யமா இருக்கே. நீயே இன்னொருத்தர்கிட்டே போயி ‘யாரு... அந்த அருந்ததியா... அவ ரொம்ப மோசமானவளாச்சே’ன்னு சொல்றேன்னு வச்சுக்கோ... எப்படியிருக்கும்?

    ரொம்பக் கொடுமையா இருக்கும்

    அதைவிடக் கொடுமை நான் கேள்விப்பட்டது...

    என்னக்கா சொல்றீங்க? மறுபடி அதிர்ந்தாள் நித்திலா.

    அந்த நேரத்தில் அலுவலக உதவியாள் எதிரில் வந்து நின்றான்.

    அருந்ததி மேடம். உங்களை மேனேஜர் கூப்பிடறாரு...!

    என்னையா?

    உங்களைத்தான். அருந்ததிங்கிறது இந்த ஆபீஸ்லே நீங்க மட்டும்தானே மேடம்...

    ‘நேரம்டா சாமி!’ என்று எழுந்து கொண்டாள்.

    கொஞ்சம் பொறு நித்தி. போய்ட்டு வந்திடறேன்

    தனித்து விடப்பட்ட நித்திலாவின் மனதிற்குள் ‘அக்காவின் மனசை சாகடிச்ச புண்ணியவான் யாராயிருக்கும்?’ என்ற கேள்வி குடையத் தொடங்கியது.

    மேலாளர் அருந்ததியை ஏற இறங்கப் பார்த்தார்.

    எப்போம்மா வந்தே...!

    காலையிலேயே வந்துட்டேன் சார். அதுவும் ஒன்பதரைக்கே!

    ஏன்?

    என்ன சார் இது? ஆபிஸுக்கு சீக்கிரமா வரக்கூடாதா...?

    வரலாம். ஆனா இதுவரைக்கும் நீ அப்படி வந்ததில்லையே! சரியா பத்து மணிக்கு ஆபிஸ் வாசல்லே வந்து நிற்கும் உங்க வீட்டுக்காரர் பைக்கின் பின்னாலிருந்து ஆபிஸுக்குள்ளே நுழையற உன்னைத்தான் நான் பாத்திருக்கேன்... அதான்…

    அருந்ததியிடம் பதிலில்லை. அவள் முகம் மாறத் தொடங்கியது.

    சரி... போகட்டும். உங்க வீட்டுக்காரரை இன்னும் காணோமே

    எங்கோ பார்த்தபடி தெரியலே... என்று சொன்னாள்.

    நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்த மேலாளரின் முகத்தில் தீவிரம் தெரிந்தது.

    இதப்பார் அருந்ததி... புருஷன் பொண்டாட்டிக்குள்ளே கோபதாபம் இல்லேன்னா வாழ்க்கையிலே சுவாரசியம் இல்லே. ஆனா நீ செஞ்சது ரொம்ப அதிகம்... ராத்திரியோட ராத்திரியா வீட்லேருந்து சொல்லாம கொள்ளாம புறப்பட்டு போயிட்டியாமே...! அவரே பதட்டப்பட்டு எங்கெங்கோ தேடியலைஞ்சிருக்காரு. பயந்து போயி... இப்போதான் எனக்கு போன் செஞ்சாரு... நீ வந்திருக்கேன்னு சொன்னதும்தான் அவருக்கு மூச்சே வந்துச்சுன்னு அவர் குரல்லேயிருந்து தெரிஞ்சுது... பாவம் அவரு...

    அருந்ததியின் கண்களில் நெருப்பு.

    உங்களுக்கெல்லாம் எப்பவுமே ஒரு பக்கம்தான்... அதுவும் ‘உங்க பக்கம் தான் சார் தெரியும்!

    சடக்கென்று திரும்பினாள்.

    அருந்ததி...!

    நின்றாள்.

    மேலாளர் முகத்தில் இப்போது குறும்பான சிரிப்பு.

    ஆனந்தன் ரொம்ப சாது... பயந்தாங்கொள்ளி. லேசா மிரட்டினாகூட ரொம்பப் பயப்படுவாரு... பாவம் அவரு. அவ்வளவுதான் சொல்ல முடியும்...

    பயப்படாதீங்க சார்... அவரு எப்படிப்பட்டவர்னு உங்களைவிட எனக்குத்தான் நல்லாத் தெரியும்!

    வார்த்தைகளில் அனலடித்தது.

    விறைப்பாக நடந்தவளை பார்த்து திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தார் மேலாளர்...

    ஆனந்தனின் சிவப்பு நிற ஸ்ப்ளெண்டர் அலுவலக

    Enjoying the preview?
    Page 1 of 1