Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எதிரிகள் தேவை
எதிரிகள் தேவை
எதிரிகள் தேவை
Ebook101 pages33 minutes

எதிரிகள் தேவை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னை.
 இரவு எட்டுமணி.
 கடற்கரை சாலையில், அண்ணா சதுக்கத்திற்கு கொஞ்சம் தள்ளி, தன் ஜிப்ஸி மாருதியை நிறுத்திய விவேக், பக்கத்தில் இருந்த ரூபலாவைப் பார்த்தான்.
 "இறங்கி நடக்கலாமா...? இல்லே... கொஞ்சம் நேரம். இப்படியே உட்கார்ந்திருக்கலாமா...?"
 "நடப்போம்..."
 இறங்கி நடந்தார்கள்.
 ரோட்டோரமாய். கார், வேன். பைக், ஸ்கூட்டர் என்று வாகனமாய் இறைந்து கிடக்க, ஜனங்கள் இருட்டான மணல் வெளிகளில் தெரிந்தார்கள். பேவ்மெண்டில் வெள்ளரிக்காய் வண்டிக்காரனிடம், கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடைய வழக்கமான கமிஷனுக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
 "ஏன்யா... வெள்ளரிக்காய் வண்டின்னுதான் பேரு... இன்கம்டாக்ஸ் கட்டற அளவுக்கு சம்பாதிக்கிறே...! கொஞ்சம் கூட போட்டுக் குடுத்தா என்னவாம்?"
 "இன்னிக்கு வியாபாரம் சரியில்ல ஸார்"
 "உதைப்பேன்... கொண்டு வந்த நாலு மூட்டை வெள்ளரிக்காயை காணோம். வியாபாரம் ஆகலைன்னு டாவா விடறே?"
 "மெய்யாலுந்தான் ஸார்... சொல்றேன்...""பஞ்சப்பாட்டு பாடாம... மொதல்லே... காசை எடு...! இல்லேன்னா நாளையிலருந்து இங்கே கடையப் போட முடியாது... எண்ணி ஐம்பது ரூபாயை வெய்யி...! இல்லேன்னா கடையை வேற எங்கேயாச்சும் கொண்டு போயிடு..."
 "ஸார்! இன்னிக்கு தர வேண்டிய பணத்தையும் சேர்த்து நாளைக்கு குடுத்துடறேன் ஸார்..."
 நடந்து கொண்டிருந்த ரூபலா தன் தோளால் விவேக் தோளை இடித்தாள்.
 "உங்க டிபார்ட்மெண்ட்டோட லட்சணத்தைப் பார்த்தீர்களா...?"
 விவேக் நின்றான்.
 "என்ன பண்ணப் போறீங்க?"
 "இப்ப வேடிக்கையைப் பாரு..."
 விவேக் வெள்ளரிக்காய் வண்டியை நெருங்கினான். பாண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸை எடுத்து பிரித்துக் கொண்டே கேட்டான்:
 "ஏம்பா! இந்த கான்ஸ்டபிளுக்கு நீ எவ்வளவு தரணும்?"
 "ஸார்...''
 வெள்ளரிக்காய் வண்டிக்காரன் திகைக்க
 "சொல்லுய்யா... எவ்வளவு தரணும்...?" என்றான்.
 "அ... அம்பது ரூபா... ஸார்"
 "உனக்கு பதிலா நான் குடுத்துடுறேன்..." விவேக் பர்ஸைப் பிரித்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை உருவிக் கொண்டு, கான்ஸ்டபிளின் பக்கமாய் திரும்ப, கான்ஸ்டபிள், உச்சபட்ச வோல்டேஜ் பாயும் மின்சாரக் கம்பியைத் தொட்டுவிட்ட சைஸில் உடம்பை விறைத்துக் கொண்டு, சல்யூட் ஒன்றைப் போட்டான்.
 "ஸ... ஸார்...''
 விவேக் நோட்டைக் காட்டிக் கொண்டே புன்னகையின் பரப்பை பெரிது படுத்தினான்என்ன கான்ஸ்டபிள்... இந்த ஐம்பது ரூபாய் போதுமா? இல்லே... இன்னும் கொஞ்சம் அதிகமா வேணுமா...?"
 "ஸா... ஸாரி... ஸார்... நான் ஏதோ தெரியாத்தனமா..."
 "உங்களுக்கு எந்த பீட் ஸ்டேஷன்?"
 "மெரீனா பீச் ஸ்டேஷன் ஸார்..."
 "ரெவின்யூ ஸ்டாம்ப்ல கையெழுத்துப் போட்டு, மாசா மாசம் சம்பளம் வாங்கறீங்களா, இல்லையா...?"
 "'வா... வாங்கறேன்..."
 "இந்த வெள்ளரிக்காய் வண்டிக்காரன்கிட்டேயும் கமிஷன் வாங்கிக்கலாம்ன்னு... போலீஸ் கமிஷனர்... உங்களுக்கு சலுகை உத்தரவு ஏதாவது குடுத்திருக்காரா...?"
 ''ஸ... ஸார்...''
 "போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு நீங்க நல்ல பேரைத் தேடித் தரலைன்னாலும் பரவாயில்லை... கெட்ட பேரை வாங்கித் தராதீங்க...! இப்படி கை நீட்டி கமிஷன் கேக்கறீங்களே... உங்களுக்கும் அங்கே... வர்ற போறவங்களை காசு கேட்டு பிச்சையெடுத்திட்டிருக்கிற. பிச்சைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்...?"
 "எ... என்னை மன்னிச்சுடுங்க... ஸார்..."
 "அந்த வெள்ளரிக்காய் வண்டிக்காரனுக்கு... ஸாரி சொல்லிட்டு கிளம்புங்க..."
 கான்ஸ்டபிள் இன்னமும் சல்யூட் வைத்த கையோடு. வியர்த்து வழிந்து கொண்டிருக்க, விவேக், ரூபலாவிடம் திரும்பி வந்தான்.
 ரூபலா சிரித்தாள்...
 "இனிமே அந்த கான்ஸ்டபிளுக்கு கமிஷன் ஆசையே. வராது..."
 ''சில கான்ஸ்டபிள்ஸ் ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியலை. வெளிநாட்டுல... போலீஸ் உத்யோகத்தையும், டாக்டர் உத்யோகத்தையும் நோபிள் ப்ரொபஷனா நினைக்கிறாங்க... ஆனா இந்தியாவில... அப்படி இல்லை. இது மாறணும்.'"இது மாறணும்னா ஒரே வழிதான் இருக்கு..."
 "என்ன.?"
 "சம்பளம் தர்ற கவர்மெண்டே, 'மாமூல்' தர்றதுக்காக ஒரு அமௌண்ட்டை ஒதுக்கணும்..."
 விவேக் சிரித்துக் கொண்டே, ரூபலாவோடு நடந்தான். பேவ்மெண்டில் ஐம்பது மீட்டர் தூரம் நடந்து, காலியாய் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சை நெருங்கி உட்காரலாம் என்று நினைத்த போது - பின்பக்கம் ஒரு குரல் கேட்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223357452
எதிரிகள் தேவை

Read more from Rajeshkumar

Related to எதிரிகள் தேவை

Related ebooks

Related categories

Reviews for எதிரிகள் தேவை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எதிரிகள் தேவை - Rajeshkumar

    1

    "வயத்துல ஆறுமாசக் குழந்தையை வெச்சுகிட்டு... இப்படி, ‘திம்... திம்’ன்னு மாடிப்படி ஏறி வர்றியே... மங்கை...? கொஞ்சம் நிதானமா, வரக்கூடாதா...?" மாடி மேல் போர்ஷன் காரி சித்ரா கேட்கவும் மங்கை சிரித்தாள்.

    மெதுவாத்தானே ஏறி வர்றேன்...

    என்னது... நீ மெதுவா ஏறி வர்றியா...? நீ இப்போ ஏறி வந்ததை உன் வீட்டுக்காரர் பார்த்திருக்கணும்... உன்னை அப்படியே ஒரு துர்வாசப் பார்வை பார்த்திருப்பார். அந்த மனுஷன் நீ உண்டான நாளிலிருந்து... உன்னை உள்ளங்கையில் ஏந்தி, பூ மாதிரி பார்த்துக்கிறார். நீ என்னடான்னா... விறுவிறுன்னு மாடிப்படி ஏறுறதும்... இறங்கறதும்... நினைச்ச இடத்தில் விசுக்... விசுக்ன்னு உட்கார்றதும்... எனக்கு ‘திக் திக்’ன்னு இருக்கு...

    எனக்கென்னமோ... உண்டான மாதிரியே இல்லை. உடம்பு ப்ரியா இருக்கு...

    அடுத்த மாசம் வரைக்கும் அப்படித்தான் இருக்கும்... ஏழாவது மாசம் பொறக்கட்டும்... பையனோ பொண்ணோ உதைக்கிற உதையில... இடுப்பு வலிக்கும்... நீ வேகமா நடந்தாலும் இழுத்துப் பிடிப்பாங்க...

    சித்ரா...

    மங்கை பக்கத்தில் வந்தாள்.

    வயிறு எனக்குத் தெரியுதா...?

    நல்லாவே தெரியுது...

    அசிங்கமா இருக்கா...?

    மண்டு! ஒரு பொண்ணுக்கு இதுதாண்டி அழகு...

    ‘‘எனக்கு என்ன குழந்தை பொறக்கும்னு நினைக்கிறே?"

    சொல்லட்டுமா...?

    உனக்கு பொண்ணுதான் பொறக்கும்

    ஏன் அப்படி சொல்றே...?

    ‘‘எனக்குத் தெரியும்...?"

    ‘‘எப்படித் தெரியும்...?"

    ‘‘தெரியும்ன்னா விடேன்..."

    ‘‘விடமாட்டேன்... நீ சொல்லித்தான் ஆகணும்..."

    சரி சொல்றேன். இன்னிக்கு காலையில் உங்க வீட்ல என்ன டிபன்...?

    "சப்பாத்தி வெங்காய சட்னி...’’

    எத்தனை சாப்பிட்டே...?

    "நாலு...’’

    இதுக்கு முந்தியெல்லாம் வழக்கமா எவ்வளவு சாப்பிடுவே...?

    "ரெண்டு... இல்லேன்னா... மூணு...’’

    இப்பல்லாம் உனக்கு பசி அதிகம்தானே...?

    ஆமா...

    ‘‘வயித்துல இருக்கிறது பொண்ணா இருந்தாத்தான் இப்படி பசிக்குமாம்... நீ சாப்பிடற வேகத்தை நானே ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கேன்..."

    அய்யய்யோ...

    ‘‘என்ன...?"

    பையன் தான் பொறக்கும்ன்னு... அவர் நம்பிட்டிருக்காரே...?

    அதுக்கு நீ என்ன பண்ண முடியும்...? மொதல்ல உண்டானது ஆணா இருந்தா என்ன...? பொண்ணா இருந்தா என்ன...?

    வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. கீழே எட்டிப் பார்த்த சித்ரா, மங்கையின் தோளைத் தட்டினாள்.

    உன் இல்லத்தரசர் வந்து விட்டார்...

    அட... அதுக்குள்ளே மணி ஆறாயிடுச்சா...? நான் போய். டிபன் பண்ணணும்...

    மங்கை, தன் போர்ஷனுக்கு ஓடினாள்.

    ஏ... ஏய்... மெதுவா...

    மங்கை, சித்ராவின் கத்தலைப் பொருட்படுத்தாமல் தன் வீட்டுக்குள் நுழைந்து, கண்ணாடி முன் நின்று சீப்பை எடுத்து தலையை மேலாக வாரி, ஸ்டிக்கர் பொட்டை சரியாய் பொருத்திக் கொண்டு, கணவன் பட்டாபியை எதிர் கொண்டாள். நெற்றியில் வலது கையை வைத்து குறும்பாக சல்யூட் பண்ணினாள்.

    "குட் ஈவினிங் ஜென்டில்மேன்...’’

    பட்டாபி ஒரு புன்சிரிப்பு கூடக்காட்டாமல், நாற்காலிக்கு போய் உட்கார்ந்து ஷூக்களை கழற்றி சுவரோரமாய் வீசினான்.

    மங்கை முகம் மாறினாள். அப்போதுதான் அதையும் கவனித்தாள். அவன் வழக்கமாய் வாங்கி வரும் ஸ்வீட் பொட்டலமும், வாழை இலையில் கட்டிய மல்லிகைச் சரமும் மிஸ்ஸாகி இருப்பதை. தவிப்போடு அவனை நெருங்கினாள்.

    ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...?

    ஓ... ஒண்ணுமில்லை...

    ஒண்ணுமில்லையா...? முகமெல்லாம் வாடின மாதிரி இருக்கு. உடம்புக்கு சரியில்லையா...?

    நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தாள்.

    பட்டாபி அவளுடைய கைகளை விலக்கி விட்டு, சர்ட்டையும் பேண்ட்டையும் களைந்து சுவர் ஆணியில் மாட்டி விட்டு லுங்கியைச் சுற்றிக் கொண்டபடி பாத்ரூமை நோக்கிப் போனான்.

    என்னங்க... காப்பி கொண்டு வரட்டுமா...?

    வேண்டாம். வழியில வர்றப்பவே... ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டேன்...

    வீட்டுக்கு வரும்போது... ஹோட்டல்ல எதுக்காக சாப்பிடணும்?

    ‘‘சாப்பிடணும் போல் தோணிச்சு. சாப்பிட்டேன்"

    பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு...

    ஆட்களும்... ஒரு மாதிரியா மாறும் போது, பேச்சும் ஒரு மாதிரியா இருக்கிறதில என்ன தப்பு?

    நில்லுங்க...

    பாத்ரூமுக்குள் நுழைய முயன்றவன் நின்றான்.

    என்ன...?

    காரணத்தை சொல்லிட்டு உள்ளே போங்க...

    ‘‘உனக்கு காரணம் தெரியணும். அவ்வளவுதானே?"

    ஆமா...

    என்னோட சர்ட் பாக்கெட்ல ஒரு லெட்டரை வெச்சிருக்கேன். எடுத்துப் படி...

    சொன்ன பட்டாபி பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொள்ள, மங்கை ஹேங்கரில் மாட்டியிருந்த சர்ட்டை நோக்கிப் போனாள். இருதயத்துக்குள் நூற்றுக்கணக்கான புறாக்கள் இறக்கைகளை அடித்துக் கொண்டன.

    ‘அது என்ன லெட்டராயிருக்கும்?’

    சர்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்தாள். வாய் கிழிபட்ட ஒரு தபால் கவர் கிடைத்தது. எடுத்தாள். ஃப்ரம் அட்ரஸ் பகுதியில் ஒரு ஆச்சர்யக் குறியும், கேள்விக் குறியும் தெரிந்தது. கவர்க்குள் கையை நுழைத்து நான்காய் மடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தாள்.

    பரிதாபத்துக்குரிய பட்டாபி அவர்களுக்கு,

    வணக்கம்.

    இது ஒரு மொட்டைக் கடிதம் என்று நீங்கள் அலட்சியப்படுத்துவதாக இருந்தால், படிக்க ஆரம்பிக்கும் போதே கிழித்து விடுங்கள். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் மட்டும் படிக்க ஆரம்பியுங்கள்.

    "மங்கை என்கிற பெயரில் உங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1