Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணாமூச்சி!
கண்ணாமூச்சி!
கண்ணாமூச்சி!
Ebook154 pages38 minutes

கண்ணாமூச்சி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கபாலீஸ்வரர் கோயிலில் கூட்டம் நெரித்தது. ஆடி வெள்ளிக் கிழமைக்கென்றே ஸ்பெஷலாய்க் கசகசக்கும் கூட்டம். உயரத் தூக்கிய கைகளோடு வியர்வை கசியும் முகங்கள்.
 தேங்காய் பழப் பூக்கூடையோடு கும்பலில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி - கர்ப்ப கிருகத்துக்குப் பத்தடி தொலைவில் நின்று கொண்டாள் செல்வா. அவளுடைய இருபத்தாறு வயது உடம்பைக் கனமான பட்டுப் புடவை போர்த்தியிருந்தது. நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் குங்குமம். தலையில் மல்லிகைப் பாரம். செல்வாவுக்கு முன்னாலும் பின்னாலும் கும்பல் நெருக்க - அவள் சிரமப்பட்டு - அர்ச்சகரிடம் தட்டை நீட்டினாள். "சாமி பேர்க்கு ஒரு அர்ச்சனை பண்ணிடுங்கோ." அவர் வாங்கிக் கொண்டு நகர - சுற்றிலும் ஏராள இரைச்சல்.
 "அட... ஏம்மா... இப்படித் தள்ளிக்கிட்டு வர்றே?"
 "நான் எங்கே தள்றேன்? நீதான் தள்ளினே... நாலு ஆள் உடம்பை நீ ஒருத்தியே வெச்சுகிட்டு இப்படி கும்பல்ல வர்றியே! கும்பல் இல்லாத நேரத்துல நீ வந்து சாமி கும்பிட்டா என்ன?"
 "என்னடி... சொன்னே?" சின்னச் சின்னச் சலசலப்புகள், தொடர்ந்து இரண்டு மாமிகள் செல்வாவுக்குப் பின்னாலிருந்து - "புது மோஸ்தர்ல ஒரு நெக்லஸ் பண்ணியிருக்கிறதா சொன்னியே? அது இதுதானா... ராஜி?"
 "ஊ...ஹும்... இதில்லை."
 "பின்னே இது யாரோடது?"
 "என் நாத்தனாரோடது."
 "பவளத்துக்குப் பதிலா... அமெரிக்கன் டயமண்ட்ஸ் வெச்சிருந்தா நெக்லஸ் எடுப்பாயிருந்திருக்கும்."அது ரசனை கெட்ட குடும்பம்." உள்ளே மணியோசையோடு - கற்பூர ஆரத்தி தெரிந்ததும் - மாமிகள் சட்டென்று வாயை மூடிக் கொண்டு - இரண்டு கைகளாலும் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்...
 செல்வா பிரசாதத் தட்டை வாங்கிக் கொண்டு - கும்பலில் நீந்தி - வெளிப் பிராகாரத்திற்கு வருவதற்குள் - வேர்த்து வியர்த்துப் போனாள். – வெளிப்பிராகாரத் தூணோரம் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த அவளுடைய கணவன் கதிர்வேல் செல்வாவைப் பார்த்ததும் சிரித்தான்.
 "என்ன செல்வா... குளிச்சுட்டு வர்றியா?"
 "மொதல்ல இந்தப் பிரசாதக் கூடையைப் பிடிங்க."
 "ஏன்? என்னாச்சு?"
 "சேலைக் கட்டே நகர்ந்து போச்சு."
 "இவ்வளவு கும்பல்ல கோயிலுக்கு வரணுமா நீ?"
 "இன்னிக்கு ஆடி வெள்ளிக் கிழமைங்க. கோடிப் பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த வெள்ளிக் கிழமை தரிசனம் கிடைக்காது."
 "வாரா வாரம் வர்ற வெள்ளிக் கிழமைதானே? சரி... போகலாமா?"
 "இருங்க. நவக்கிரகத்தைச் சுத்திட்டு வந்துடறேன்..."
 "அதெல்லாம் வேண்டாம். நீ மொதல்ல கெளம்பு. நவக்கிரகத்தைச் சுத்தப் போனியன்னா திரும்பி வர ரெண்டு நாளாயிடும். கிளம்பு... கிளம்பு..."
 செல்வாவை இழுத்துக் கொண்டு - கோயிலுக்கு வெளியே வந்து பொன்னம்பல வாத்தியார் தெருவின் முனையில் நின்றிருந்த பைக்கை நெருங்கினான். அதன் கழுத்துக்குச் சாவியைக் கொடுத்து - உதைத்து உயிரூட்டிப் பரவ - செல்வா பில்லியனில் 'மெத்தென்று உட்கார்ந்தாள். "போகலாமா?"
 "ம்."
 பைக் நகர்ந்ததுமைலாப்பூர் டாங்க்கைத் தாண்டியதும் கதிர்வேல் திரும்பிக் கிசுகிசுப்பாய்க் கேட்டான்.
 "என்ன? காரியம் காயா பழமா?"
 "பழம்."
 "அது போதும்... மத்ததை வீட்ல போய்ப் பேசிக்கலாம்." பைக்கை விரட்டினான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223989448
கண்ணாமூச்சி!

Read more from Rajeshkumar

Related to கண்ணாமூச்சி!

Related ebooks

Related categories

Reviews for கண்ணாமூச்சி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணாமூச்சி! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    தலை பூராவும் ரத்தமயமாய் ஸ்ட்ரெச்சரில் வைத்து வேகவேமாய்த் தள்ளப்பட்டு இன்டென்சிவ் வார்டுக்குள் கொண்டு போகப்பட்டார் செல்வகிருஷ்ணன். கதவின் நெற்றியில் - சிகப்பு விளக்கு ஒளிர, வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் சத்தமில்லாமல் சாத்தப்பட்டன. வார்டுக்கு வெளியே வராந்தாவில் பதட்டமாய் ஒரு சின்னக் கும்பல். கும்பலுக்கு நடுவே இருட்டடித்த முகங்களோடு சசிதரன், மனோகர், ரசிகா.

    ரசிகா அழவே ஆரம்பித்திருந்தாள்.

    பெ... பெரியப்பாவுக்கு ஒண்ணும் ஆ... ஆயிடாதே... ம்... ம்... மனோகர்...?

    ஒண்ணும் ஆகாது...

    எவ்ளோரத்தம்...! மண்டை ரெண்டா உடைஞ்சிருக்குமா?

    சசிதரன் கொஞ்சம் பயமாய் எச்சில் விழுங்கி விட்டுச் சொன்னான்.

    அ... தெல்லாம் ஒண்ணுமில்லை... நெத்தியில் மட்டும் ஒரு சின்னப்பொத்தல். வழிஞ்ச ரத்தம் எல்லாப் பக்கமும் பரவி - பார்க்கிறதுக்கு வயித்தைக் கலக்குது. அவ்வளவுதான்.

    எக்ஸ்க்யூஸ் மீ.

    தன் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டுத் திரும்பினான் சசிதரன். இன்ஸ்பெக்டர் ஒருவர் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். புருவங்களுக்கு மேல் வியர்த்திருந்தார்.

    எஸ்...

    மிஸ்டர் செல்வகிருஷ்ணன் உங்க பெரியப்பாதானே?

    ஆமாம்.

    அவர்க்கு எப்படி அடிபட்டதுன்னு சொல்ல முடியுமா?

    மனோகர் ஆச்சர்யமாகிக் குறுக்கிட்டுக் கேட்டான்.

    அவர் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறதா... உங்களுக்கு யார் சொன்னாங்க இன்ஸ்பெக்டர்...

    ஒரு போன் கால் வந்தது. பேசினவங்க தன்னோட பேரைச் சொல்லிக்க விரும்பாமே... விஷயத்தை மட்டும் சொல்லிட்டு ரிஸீவரை வெச்சுட்டாங்க.

    போன்ல என்னான்னு சொன்னாங்க?

    'செல்வகிருஷ்ணன் ரத்தக் காயமடைஞ்சு ஹாஸ்பிடல் கொண்டு போகப்பட்டிருக்கிறார். அந்தக் காயம் அவர்க்கு எப்படி ஏற்பட்டதுங்கிறதை போலீஸ் கண்டுபிடிக்கணும்ன்னு சொன்னாங்க. அதான் உண்மையைத் தெரிஞ்சிட்டுப் போக வந்தேன்.

    ரசிகா சிறிது கோபமான குரலோடு இன்ஸ்பெக்டரை ஏறிட்டாள்.

    இன்ஸ்பெக்டர் எங்க பெரியப்பாவுக்கு ஏற்பட்ட ரத்தக்காயம் சம்பந்தமா எங்களை நீங்க சந்தேகப்படறீங்களா?

    நோ... நோ... ரத்தக் காயம் அவர்க்கு எப்படி ஏற்பட்டதுங்கிறதைச் சொன்னாப் போதும். நான் போய்க்கிட்டே இருப்பேன்.

    மனோகர் சொன்னான்.

    பெரியப்பா பேப்பர் பார்த்துகிட்டே மாடிப்படிகளில் இறங்கிட்டிருந்தார். திடீர்ன்னு கால் பிசகி உருண்டுட்டார்... எல்லாமே கிரானைட் மாடிப்படிகள். ஏதோ ஒரு படியில தலை மோதிக்கிச்சு.

    மிஸ்டர் செல்வகிருஷ்ணனுக்கு என்ன வயசு இருக்கும்?

    அறுபத்து நாலு.

    அவர்க்கு சன்னோ டாட்டரோ இல்லையா?

    இல்லை.

    அவங்க ஒய்ப் எப்போ இறந்தாங்க?

    பெரியம்மா இறந்து பத்து வருஷத்துக்கு மேலாகுது.

    நீங்க மூணு பேரும் பெரியப்பாகிட்டேதான் வளர்ந்தீங்களா?

    ஆமா. எங்க ஃபாதர் மதர் இறந்ததும் பெரியப்பா ஊர்ல இருந்த எங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டார். அவர்தான் எங்களை வளர்த்தார். படிக்க வெச்சார். இன்னிக்கு அவரோட கம்பெனியிலேயே எங்க மூணு பேர்க்கும் பொறுப்புகளைக் குடுத்து கம்பெனி நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லியிருக்கார். பெரியப்பா மேலே நாங்க பாசத்தை வைக்கலை. பக்தியையே வெச்சிருக்கோம். யாரோ போன் பண்ணி ஏதோ சொன்னாங்கிறதுக்காக எங்களை விசாரிக்க வந்தது சரியில்லை மிஸ்டர் இன்ஸ்பெக்டர்...

    ஸாரி...! எங்களுக்கு ரிப்போர்ட் எங்கேயிருந்து வந்தாலும் சரி... அது உண்மையா பொய்யான்னு விசாரிக்க வேண்டியது எங்க கடமை.

    உங்களுக்குப் போன் எத்தனை மணிக்கு வந்தது இன்ஸ்பெக்டர்?

    அரை மணி நேரத்துக்கு முன்னாடி.

    போன்ல பேசினவனோட குரல் எப்படியிருந்ததுன்னு சொல்ல முடியுமா?

    ஒரு சாதாரண ஆண் குரல். பேசின நபர்க்கு நடுத்தர வயதைத் தாண்டியிருக்கலாம். - இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "

    இன்டென்சிவ் வார்டின் அறைக் கதவுகள் சத்தமில்லாமல் திறக்கப்பட்டு டாக்டர் ஞானமூர்த்தி வெளியே வந்தார்.

    சசிதரன், மனோகர், ரசிகா மூன்று பேரும் அவரை நோக்கிப் பாய, இன்ஸ்பெக்டரும் அவர்களைத் தொடர்ந்தார்.

    டாக்டர்...! பெரியப்பாவுக்கு இப்போ எப்படியிருக்கு?

    டாக்டர் சோர்வாய்க் கண்களை மூடித் திறந்தார்.

    இப்போ எதுவுமே சொல்ல முடியாத நிலைமை. ரத்தம் நிறையச் சேதமாகியிருக்கு. ரத்தம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கோம். ரத்தத்தை உடம்பு ஒத்துகிட்டதும் - ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்.

    ரசிகா குரல் தழுதழுப்போடு குறுக்கிட்டாள்.

    டாக்டர்! பெரியப்பாவோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லையே? -

    அதை இப்போ எப்படிம்மா சொல்ல முடியும்...! அடிபட்டது இளைஞனாக இருந்திருந்தா... இந்த... ரத்த சேதத்தை அவன் தாங்கியிருப்பான். ஆனா இவர் ஏஜ்டு... தாங்க முடியலை.

    எக்ஸ்க்யூஸ்மீ டாக்டர். மனோகரை ஒதுக்கிக் கொண்டு - அந்த இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தார்.

    டாக்டர் ஏறிட்டார்.

    எஸ்.

    மிஸ்டர் செல்வகிருஷ்ணன் அடிபட்டது சம்பந்தமா ஒரு சின்ன என்கொய்ரி.

    என்ன கேக்கப் போறீங்க?

    அவர் எப்படி அடிபட்டார்?

    "மாடிப்படிகளில் இறங்கி வரும்போது - கால் பிசகிக் கீழே உருண்டு விழுந்திருக்கிறார். நெற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1