Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்
மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்
மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்
Ebook343 pages1 hour

மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையின் உளவுத்துறை அலுவலகம்.
 காலை பதினோரு மணி.
 உளவுத்துறையின் அஸிஸ்டண்ட் டைரக்டர் ரகோத்தமன் தன்னுடைய லேப்டாப்பில் எதையோ மும்முரமாய் சர்ச் செய்து கொண்டு இருந்த போது ஸ்பை ஸ்க்வாட் ஆபீஸர் பெர்னாண்டோ உள்ளே வந்து எதிரே நின்று சல்யூட் ஒன்றை வைத்தார்.
 ரகோத்தமன் லேப்டாப்பினின்றும் நிமிர்ந்தார்.சொல்லுங்க மிஸ்டர் பெர்னாண்டோ... எனிதிங்க் இம்பார்ட்டண்ட்...?"
 "எஸ் ஸார்... ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்துப் பேசணும்ன்னு பிடிவாதமாய் ரிசப்ஷன் கேபின்ல உட்கார்ந்துட்டு இருக்கா ஸார்."
 "விஷயம் என்னான்னு கேட்டீங்களா?"
 "கேட்டேன் ஸார்... விஷயத்தை உங்ககிட்டே மட்டும்தான் கன்வே பண்ணுவாளாம்..."
 "அவ பேர் என்ன?"
 "முகில்"
 "இப்ப எங்கே இருக்கா...?"
 "ரிசப்ஷன் கேபின்ல..."
 ரகோத்தமன் தன்னுடைய மேஜையின் மேல் இருந்த டி.வி.க்கு சர்க்யூட் இணைப்பு கொடுத்து, ரிசப்ஷன் கேபினில் இருந்த ஹிடன் காமிராவை உசுப்ப - டி.வி. திரையில் காட்சி பரவியது.
 ரிசப்ஷன் கேபினில் இருந்த சோபாவில் அந்தப் பெண் தெரிந்தாள். இளம்பெண். வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம். அழகாக இருந்தாள். சற்றே தூக்கலான மேக்கப். வெட்டி விட்டிருந்த கூந்தல் தோள்களில் புரண்டது.
 "அவளை செக் பண்ணிட்டீங்களா?"
 "செக்யூர்ட்டீஸ் தரோவா ஸ்கேன் பண்ணிட்டாங்க ஸார். நாட் ஃபவுண்ட் எனி வெப்பன்ஸ்..."
 "உள்ளே அனுப்புங்க அவளை."
 சொல்லிவிட்டு டி.வி. சர்க்யூட்டை அணைத்தார் ரகோத்தமன்.
 "எஸ்... ஸார்..."
 "அவ என்கிட்டே பேசும் போது நீங்களும் உள்ளே இருங்க. எதைப் பேசறதாய் இருந்தாலும் நம்ம ரெண்டு பேர் முன்னாடி பேசட்டும்.எஸ்... ஸார்..." பெர்னாண்டோ மறுபடியும் ஒரு சல்யூட் கொடுத்துவிட்டு அறையினின்றும் வெளியே வந்தார்.
 ஒரு நிமிஷ நடையில் ரிசப்ஷனுக்கு வந்தார். அந்தப் பெண் தன் கையில் இருந்த சிறிய வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து தன் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் தீற்றிக் கொண்டிருந்தாள். பெர்னாண்டோவைப் பார்த்ததும் அவசர அவசரமாய் அந்த வேலையை முடித்துக் கொண்டு எழுந்தாள்.
 "ஸார்... ஏ.டி., என்னைப் பார்த்துப் பேச ஒத்துக்கிட்டாரா?"
 "ஒத்துக்கிட்டார்..."
 "தேங்க்யூ ஸார்... அவர் எங்கே மாட்டேன்னு சொல்லிடுவாரோன்னு பயந்துட்டு இருந்தேன்."
 "நீ எதைப் பேசறதாய் இருந்தாலும் பத்து நிமிஷத்துக்குள்ளே பேசி முடிச்சுடணும். அவரோட என்கேஜ்மெண்ட்ஸ் இன்னிக்கு ரொம்பவும் டைட்."
 அவள் சிரித்தாள்.
 "ஐ... நோ ஹிஸ் டைம் வேல்யூ ஸார்... நீங்க கொடுத்த பத்து நிமிஷமே எனக்குப் போதுமானது. அந்தக் கால அவகாசத்துக்குள்ளே பேசிட்டு உடனே நான் கிளம்பிடுவேன்."
 இருவரும் வராந்தாவில் நடந்தார்கள்.
 பாதி வழி நடந்திருப்பார்கள். அவள் தயக்கத்தோடு நின்றாள்.
 "எக்ஸ்க்யூஸ்மீ..."
 "என்ன?"
 "இங்கே டாய்லெட் எங்கே...?"
 "போகணுமா?"
 "எஸ்... ஒரு டூ மினிட்ஸ்..."
 பெர்னாண்டோ வராந்தாவின் கோடியைக் காட்டினார். "லெஃப்ட் கார்னர்ல டாய்லட் இருக்கு..."நான் வந்துடறேன்..."
 அவள் வேகமாய் வராந்தாவின் கோடியை நோக்கிப் போக - பெர்னாண்டோ வராந்தாவின் ஓரத்தில் போடப்பட்டிருந்த பாலிவினைல் நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
 காத்திருக்க ஆரம்பித்தார்.
 ஒரு நிமிஷம் -
 இரண்டு நிமிஷம் -
 மூன்று.... நான்கு... ஐந்து...
 பத்து...
 பதினைந்து...
 அவள் வரவில்லை.
 பெர்னாண்டோ பதட்டமும் கவலையுமாய் டாய்லட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223800224
மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்

Read more from Rajeshkumar

Related to மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்

Related ebooks

Related categories

Reviews for மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள் - Rajeshkumar

    1

    காவல்துறை செய்திகள்:

    இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள தீயணைப்புத் துறையில்தான் மோப்ப நாய் படைப் பிரிவு தொடங்கப்பட்டது. சென்னை தாம்பரத்தில் இதற்காக மோப்ப நாய் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது ஜான்ஸி, ஜாக், ஜூலி, ஸீனா, ஒரி ஆகிய 5 மோப்ப நாய்கள் உள்ளன. நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு போன்ற பேராபத்துக்கள் ஏற்படும் போது அதில் சிக்கி உயிர்க்குப் போராடுபவர்களை மீட்பதற்காக இந்த மோப்ப நாய் படைப்பிரிவு பயன்படுத்தப்படும். மோப்பநாய்படைப் பிரிவு முதல்கட்டமாக சென்னையில் அதுவும் தீயணைப்புத் துறையில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் கோவை, மதுரை நகரங்களில் இந்த மோப்ப நாய்ப்பிரிவு தொடங்கப்படும். தீயணைப்புத் துறையில் உள்ள நாய்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நாய்க்கு எவ்வளவு ரூபாய் செலவழிக்கப்படுகிறது தெரியுமா? 2-வது அத்தியாயத்தில் பார்ப்போம்.

    விஷ்ணு, விவேக்கைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போன போது ரூபலா வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து ‘ ஷீ லுக்ஸ்’ (SHE LOOKS) என்கிற பெண்கள் வார இதழைப் புரட்டிக் கொண்டு இருந்தாள். விஷ்ணுவைப் பார்த்ததும் ப்ராக்கெட் குறி போன்ற தன் அழகிய புருவங்களை உயர்த்தினாள். உதடுகளை ஒரு கேலிப் புன்னகையோடு விரித்தாள்.

    என்னடா திடீர் விஜயம்..? இது டிஃபன் சாப்பிடற நேரமும் இல்லை. லஞ்ச் நேரமும் இல்லை. டீ சாப்பிடற நேரமும் க்ராஸ் ஆயிடுச்சு... இப்ப எதுக்காக வந்திருக்கே...?

    விஷ்ணு தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு ரூபலாவை முறைத்தான்.

    மேடம்... திஸ் ஈஸ் டூ மச்...! என்னை இன்ஸல்ட் பண்றதுக்கும் ஒரு அளவு இருக்கு. நா ஒண்ணும் தின்னி பண்டாரம் கிடையாது. இந்த நாட்டைக் காக்க வந்த அவதார புருஷன்.

    ஓஹோ...!

    என்ன ஓஹோ...! 2020 ஆம் வருஷம் பிறக்கும் போது நான் ஒரு அவதார புருஷன் என்கிற விஷயம் இந்த பூமிப் பந்தில் பாதி பேர்க்காவது தெரிஞ்சு இருக்கும்... மேடம்...!

    பாக்கி மீதி பேர்க்கு எப்ப தெரியுமாம்...?

    அதுக்கு இன்னொரு காண்டம் பார்க்கணும்.

    இன்னொரு காண்டமா... என்னடா உளர்றே...?

    மேடம்... போன வாரம் ஒரு கேஸ் விஷயமாய் சிதம்பரம் போயிருந்த போது பக்கத்தில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி தரிசனத்தை முடிச்சுட்டு அப்படியே நாடி ஜோஸ்யம் பார்க்கப் போனேன்.

    என்னது... நாடி ஜோஸ்யமா...? பழங்கால ஏடு எடுத்துப் பார்ப்பாங்களே அதுதானே...?

    அதேதான் மேடம்...

    நாடி ஜோஸ்யம் பொய் பித்தலாட்டம்ன்னு சொல்றாங்களே?

    மேடம்...! எந்தத் தொழில்லதான் பொய்யில்லை; பித்தலாட்டம் இல்லை. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ல நல்ல ஹோட்டலும் இருக்கும். மோசமான ஓட்டலும் இருக்கும். நாம நல்ல ஹோட்டல் எதுன்னு கேட்டு அந்த ஹோட்டலைத் தேடிப் போறது இல்லையா...? அது மாதிரிதான் வைத்தீஸ்வரன் கோயிலிலும் உண்மையான நாடி ஜோதிடர்களும் இருக்காங்க. பொய்யான ஜோதிடர்களும் இருக்காங்க. எனக்கு நாடி ஜோதிடம் பார்த்து சொன்னவர் நல்லமுனி என்கிற ஒரு பெரியவர். ரஜினிகாந்த் தன்னோட 61-வது வயதிலும் கதாநாயகனாகத்தான் நடிப்பார்ன்னு முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சொன்னவர்.

    பரவாயில்லையே!

    2010 - வது வருஷம் கோவையில் செம்மொழி மாநாடு நடக்கும்ன்னு 2000-வது வருஷமே சொன்னவர்.

    ஆச்சர்யமாயிருக்கே!

    பெரியவர் நல்லமுனி சித்தர் வம்சாவளியைச் சேர்ந்தவர். அகப்பேய்ச் சித்தர்ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா மேடம்...?

    இன்னிக்குத்தான் கேள்விப்படறேன்.

    உங்களைப்பத்தி... பாஸ்... சொன்னது சரியாத்தான் இருக்கு.

    அவர் என்னைப்பத்தி என்னடா சொன்னார்?

    உங்களுக்கு ஜி.கே. அவ்வளவா போதாதுன்னு சொன்னார். ‘சித்தர்களின் மகாத்மியம்’னு 1250 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் இருக்கு மேடம். கொண்டு வந்து தர்றேன். பொறுமையா படிச்சுப் பாருங்க மேடம். நாம வாழ்ந்துட்டு இருக்கிற இந்த வாழ்க்கை ஒரு பெரிய ஜீரோ மாதிரி தெரியும். தானே புலன் ஐந்தும் தன் வசம் ஆயிடும். தானே புலன் ஐந்தும் தன் வசம் போயிடும். தானே புலன் ஐந்தும் தன்னில் மடை மாறும். தானே தனித் தெம்பிரான் தன்னைச் சந்தித்தே.

    ரூபலா பயமாய் விஷ்ணுவைப் பார்த்துக் கொண்டே சோபாவினின்றும் எழுந்து ஹாலின் கோடியில் இருந்த கம்ப்யூட்டர் அறையை நோக்கிப் போனாள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக லேப்-டாப்போடு விவேக் தெரிந்தான்.

    என்னங்க...!

    சொல்லு ரூபி.

    விஷ்ணு வந்திருக்கான்.

    ஓ... வந்துட்டானா...! நான்தான் வரச் சொன்னேன். அவனை உள்ளே அனுப்பு.!

    ரூபலா நகராமல் நிற்க - விவேக் கேட்டான்.

    என்ன தயங்கறே?

    ஒண்ணும் இல்லீங்க...! விஷ்ணு இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கான்.

    என்னது! வித்தியாசமாய் இருக்கானா?

    ஆமாங்க... சித்தர் பாட்டெல்லாம் பாடறான்.

    விவேக் சிரித்தான். அதைச் சொல்றியா...? போன வாரம் பய வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போயிருக்கான். போனவன் நாடி ஜோஸ்யம் பார்த்து இருக்கான். ஜோஸ்யம் பார்த்த பெரியவர் அவனை ‘2020-ல நீ ஒரு அவதார புருஷனாய் மாறுவாய். மக்களோட கவனத்தை ஈர்ப்பாய்’ன்னு சொல்லியிருக்கார்.

    கொடுமைங்க...!

    கொடுமைதான்...! என்ன பண்றது...! அந்த அவதார புருஷனை உள்ளே அனுப்பு... ரூபி...!

    நானே வந்துட்டேன் பாஸ்...! சின்னதா ஒரு சித்தர் பாட்டை பாடினதுமே மேடம் பயந்துட்டாங்க போலிருக்கு.

    விஷ்ணு அறைக்குள் நுழைந்தான்.

    ஏண்டா...! நீ அந்த நாடி ஜோஸ்யத்தை விட மாட்டியா? அது ஒரு வியாபாரம்டா.

    அப்படி சொல்லாதீங்க பாஸ்... நாடி ஜோஸ்யம் உண்மை. அதை முறையாய் பார்க்கணும். எனக்குப் பார்த்து சொன்ன பெரியவர் நல்லமுனி அகப்பேய்ச் சித்தர் வம்சாவளியில் வந்தவர். அவர் எத்தனையோ பேர்க்கு நாடி ஜோஸ்யம் பார்த்து சொன்னதெல்லாம் உண்மையாய் நடந்து இருக்கு. உதாரணத்துக்கு இன்னிக்கு டாப்ல இருக்கிற நடிகை நர்த்தனாவுக்கு மொத்தம் அஞ்சு கல்யாணம் நடக்கும். ஆனா நாலு டைவர்ஸுக்கு அப்புறம் அஞ்சாவதா நடக்கிற கல்யாணம்தான் நிலைக்கும். அஞ்சாவதாய் அமையற கணவர்தான் கடைசி வரைக்கும் இணைபிரியாமே இருப்பார். அவர்க்கும் ஏற்கெனவே கல்யாணமாகியிருக்கும். மூணு குழந்தைகளும் இருக்கும்ன்னு சொன்னார்.

    அவர் சொன்னது போல் நடந்ததா...?

    பின்னே...? பொட்டு வெச்ச மாதிரி நடந்தது பாஸ். நர்த்தனாவோட முதல் புருஷன் ஆந்திராவில் இருக்கிற ஒரு ரெட்டியோட பையன். ரெண்டாவது ஒரு ஹிந்திப்பட மியூஸிக் டைரக்டர். மூணாவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை. நாலாவது ஊட்டி எஸ்டேட் ஓனர். எல்லாமே ஆறு மாசம்தான். டைவர்ஸுக்காக கோர்ட்டுக்கு நடந்து நடந்தே நர்த்தனா வெயிட் குறைஞ்சு ஸ்லிம் ஆயிட்டா.

    ரூபலா குறுக்கிட்டு கேட்டாள்.

    அவளுக்கு அஞ்சாவது கல்யாணம் நடந்ததா இல்லையா?

    நடக்காமே இருக்குமா...? நடந்தது...! மாப்பிள்ளை யார் தெரியுமா மேடம்...?

    நாட்டுக்குத் தேவையான அந்த அதிமுக்கியமான விஷயத்தை சீக்கிரமாய் சொல்லித் தொலையேண்டா...

    உங்க நாட்டுப்பற்றுக்கு ரொம்பவும் நன்றி மேடம். இதோ... விஷயத்துக்கு வந்துட்டேன். நடிகை நர்த்தனாவை அஞ்சாவது மாப்பிள்ளையாய் கைபிடித்த அந்த நபர் ஒரு மாஜி மினிஸ்டரோட பையன். அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி மனைவியும் இருக்கா. மூணு குழந்தைகளும் இருக்காங்க. இப்ப சொல்லுங்க பாஸ்... நாடி ஜோஸ்யம் உண்மையா? பொய்யா?

    டேய்...! ஒரு நடிகைக்கு நாலு கல்யாணம், அஞ்சு கல்யாணம் நடக்கிறதெல்லாம் அதிசயமா...?

    பாஸ்... அப்படி சொல்லாதீங்க. பொதுவா நடிகைகளுக்கு ரெண்டு அல்லது மூணு கல்யாணம்தான் நடக்கும். ஆனா நர்த்தனாவுக்கு அஞ்சு கல்யாணம் நடந்தது. அதுக்கு என்ன காரணம் தெரியுமா பாஸ்?

    என்ன காரணம்?

    நாடி ஜோஸ்யத்துல அதுக்கான காரணம் தெளிவாய் சொல்லப்பட்டிருந்தது பாஸ்.... அதைக் கேட்டா நீங்க அப்படியே ‘ஸ்டன்’ ஆயிடுவீங்க...

    மொதல்ல காரணத்தை சொல்லுடா!

    பாஸ்...! நடிகை நர்த்தனா சம்பந்தப்பட்ட ஓலைச் சுவடிகளைப் புரட்டிப் பார்த்தப்போ அவ வம்சாவளி சந்ததி திரௌபதியோடு சம்பந்தப்பட்டதாம்.

    எந்த திரௌபதி...?

    மஹாபாரத திரௌபதி பாஸ்...! மஹாபாரதத்துல திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்ன்னு எல்.கே.ஜி. படிக்கிற பையனுக்குக்கூட தெரியுமே!

    ரூபலா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    என்ன மேடம் தேடறீங்க...?

    உன்னை எதால சாத்தலாம்ன்னு பார்க்கிறேன். ரூபலா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விவேக்கின் செல்போன் ரிங்டோனை காற்றில் பரப்பியது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

    டாக்டர் சத்யஜோதி.

    விவேக் உற்சாகமாய் குரல் கொடுத்தான்.

    சொல்லுங்க டாக்டர்... உங்க போன்காலுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

    நீங்க புறப்பட்டு வரலாம் மிஸ்டர் விவேக்.

    அஸிஸ்டண்ட் கமிஷனர் வந்துட்டாரா?

    வந்து வெயிட் பண்ணிட்டிருக்கார்.

    டாக்டர்...! விஷயம் என்னான்னு இப்பவாவது சொல்வீங்களா...?

    ஸாரி மிஸ்டர் விவேக்... நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி செல்போன்ல எந்த ஒரு கான்வர்சேஷனும் வேண்டாம். விஷயம் துளியளவு வெளியே போனாலும் சுனாமி அளவுக்கு பிரச்னையாயிடும். ப்ளீஸ் கம் இன் பர்ஸன்... அண்ட் கலெக்ட் த மேட்டர்...

    ஐ... வில்... பி... தேர்... இன்... அனதர் ட்வெண்ட்டி மினிட்ஸ்.

    வீ... ஆர் வெயிட்டிங்....

    விவேக் செல்போனை அணைத்துவிட்டு விஷ்ணுவை ஏறிட்டான்.

    நான் எதிர்பார்த்த போன்கால் வந்தாச்சு. கிளம்பு.

    கிளம்பறதா... எங்கே பாஸ்?

    டாக்டர் சத்யஜோதியைப் பார்க்கப் போறோம்.

    டாக்டர் சத்யஜோதியா...? யார் பாஸ் அது?

    ஏண்டா...! சினிமாவில் க்ரூப் டான்ஸ் ஆட்ற சப்-ஆர்ட்டிஸ்ட் நடிகையிலிருந்து டாப் ஹீரோயினாய் நடிக்கிற நடிகை வரைக்கும் தெரிஞ்சு வெச்சிருப்பே. ஆனா டாக்டர் சத்யஜோதியை உனக்குத் தெரியாது?

    சத்தியமா தெரியாது பாஸ்...

    ரூபி! உனக்குத் தெரியுமா...?

    கேள்விப்பட்டு இருக்கிறேன். சிட்டியில் நெம்பர் ஒன் லேடி டாக்டர். சன் நியூஸ் டி.வி. சேனலில் ஒரு தடவை ‘ஃபெர்ட்டிலிடி’ பத்தி ஒரு ஸ்பீச் கொடுத்தாங்க.

    யூ... ஆர்... கரெக்ட் ரூபி...! சிட்டியில் மட்டும் அவங்க நெம்பர் ஒன் டாக்டர் இல்லை. இந்தியாவிலேயே நெம்பர் ஒன் டாக்டர். ஃபெர்ட்டிலிடி ஸ்பெஷலிஸ்ட். டாக்டர் சத்யஜோதி நடத்திட்டு வர்ற ஃபெர்ட்டிலிட்டி சென்டர் உலக அளவில் புகழ் பெற்றது. இதுவரைக்கும் அந்த ஃபெர்ட்டிலிட்டி சென்டர் மூலம் 50 ஆயிரம் குழந்தை இல்லாத தம்பதிகள் அம்மா-அப்பாவாய் பதவி உயர்வு பெற்று இருக்காங்க.

    அந்த அம்மாவுக்கு என்ன வயசு பாஸ்?

    டாக்டர் சத்யஜோதிக்கு ரெண்டு சன். ரெண்டு பேரும் ஃபாரின்ல டாக்டர்களாய் இருக்காங்க. ரெண்டு பேரன். ரெண்டு பேத்தி.

    விஷ்ணு முனகினான்.

    இது நமக்கு உதவாது.

    என்னடா சொன்னே?

    டாக்டரோட ஹஸ்பெண்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலையேன்னு கேட்டேன்.

    ஹி ஈஸ் நோ... மோர்... அஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு மாஸிவ் அட்டாக் வந்து இறந்துட்டார்.

    ஓ.கே... பாஸ்... அந்த சத்யஜோதிக்கு இப்ப என்ன பிரச்னை? நாம எதுக்காக போறோம்...?

    "போனாத்தான் தெரியும்...! கிளம்பு... இன்னும் இருபது நிமிஷத்துக்குள்ளே டாக்டர் சத்யஜோதி ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ல நாம இருக்கணும்."

    நான் ரெடி பாஸ்...!

    நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்... விவேக் எழுந்து பக்கத்து அறைக்குள் நுழைய, விஷ்ணு ரூபலாவை ஏறிட்டான்.

    மேடம்...! பாஸ் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?

    மீறி மீறிப்போனா ரெண்டு நிமிஷம்.

    அவர் வர்றதுக்குள்ளே ஒரு விடுகதை சொல்லட்டுமா?

    சொல்லு...

    விடுகதைக்கான விடையையும் பாஸ் வர்றதுக்குள்ளே சொல்லணும். அப்படி சொல்லலைன்னா... நாளைக்கு மூணு வேளையும் உங்க வீட்லதான் எனக்கு ப்ரேக் ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்...

    நான் விடையைச் சொல்லிட்டா...?

    நீங்க சொல்ற ஹோட்டலுக்கு உங்களையும் பாஸையும் கூட்டிக்கிட்டுப் போய் என்னோட செலவுல இன்னிக்கு ராத்திரி டின்னர்.

    ஓ.கே...! நீ விடுகதையைச் சொல்லு.

    "ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள். அது என்ன?"

    ரூபலா விழித்தாள்.

    மோகினிப் பிசாசுகளா?

    ஆமா...

    யோசித்தாள். புரியாமல் போகவே ஒரு க்ளூ குடேண்டா...! என்றாள்.

    நோ க்ளூ...! பாஸ் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரூமை விட்டு வெளியே வர்றதுக்குள்ளே சொல்லணும்.

    ஒண்ணும் புரியலையேடா...!

    மேடம்...! இருக்கிற மூளையை இன்னிக்காவது யூஸ் பண்ணுங்க. நீங்க பதிலைச் சொல்லிட்டா எந்த ஸ்டார் ஹோட்டலைச் சொன்னாலும் சரி அய்யா கூட்டிட்டுப் போகத் தயார். இல்லேன்னா நாளைக்கு இந்த வீட்லதான் எனக்கு ராஜ போஜனம். அதுவும் நான் சொல்ற மெனுதான்.

    டேய்... விஷ்ணு ப்ளீஸ்... ஒரு சின்ன க்ளூ...

    துளியூண்டு க்ளூ கூட கிடையாது. விடுகதையையும் சொல்லிட்டு பதிலையும் சொல்றதுக்கு எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...? ஸ்டார் ஹோட்டல் டின்னர்க்கு நல்லா அலையறாங்கப்பா...!

    டேய்...! பந்தயம் கான்ஸல்.

    என்னது! பந்தயம் கான்ஸலா...? நல்லாயிருக்கே கதை! டீல் டீல்தான். பாஸ் எந்த செக்கண்டும் வெளியே வந்துடுவார். பதிலைச் சொல்லுங்க மேடம்...

    சரி! மறுபடியும் அந்த விடுகதையைச் சொல்லு...

    ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள்... அது என்ன?

    ரூபலா நெற்றியைத் தட்டியபடியே யோசித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1