Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - October 2022
Kanaiyazhi - October 2022
Kanaiyazhi - October 2022
Ebook180 pages57 minutes

Kanaiyazhi - October 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

October 2022 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580109509171
Kanaiyazhi - October 2022

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - October 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - October 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - October 2022 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி அக்டோபர் 2022

    மலர்: 57 இதழ்: 07 அக்டோபர் 2022

    Kanaiyazhi October 2022

    Malar: 57 Idhazh: 07 October 2022

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஈஸ்வர் அல்லா…

    "ஈஸ்வர் அல்லா தேரே நாமம்

    சப் கோ சன்மதி தே பகவான்

    சாரா ஜக் தேரி சந்தான்"

    இறைவா!

    ஈஸ்வர், அல்லா உனது பெயர்கள்

    முழு பிரபஞ்சமும் உனது குழந்தை

    அனைவருக்கும் ஞானத்தை வழங்கு!

    மகாத்மா காந்திக்குப்

    பிடித்த பாடல் வரிகள்!

    பாவ மன்னிப்பும்

    பாவத்திலிருந்து மீட்பும்

    கிடைப்பதை விட

    அஞ்ஞானத்திலிருந்து

    விடுதலை பெறுவதே அவசரத் தேவை!

    ஞானத்தின் வாயில் கல்வி

    முதலமைச்சர்

    மாணவர்களுக்குக்

    காலை உணவு கிடைக்க

    வகை செய்திருக்கிறார்.

    இளமையில் கல் எனும்

    ஔவையின் ஆத்திசூடிக்குச்

    செயல் உரை தந்திருக்கிறார்!

    "கொடிது கொடிது வறுமை கொடிது

    அதனினும் கொடிது

    இளமையில் வறுமை"

    திருவள்ளுவருக்கும்

    பசி இருந்திருக்கிறது!

    ஆனால் இந்தத் தேசம் இந்து தேசம்

    இது இராமர் பூமி என்கிறார்கள்!

    உயர்ந்தவற்றில் எல்லாம்

    உயர்ந்தவர்

    சிறியவற்றில் எல்லாம்

    சிறியவர்!

    அருவம் உருவம் அருவுருவமாக

    எல்லோருக்குள்ளும் இருப்பவர்!

    எல்லைகள் தேவைகள் அற்றவர்

    அனைத்து உலகங்களுக்கும்

    அனைத்து உயிரினங்களுக்கும்

    தலைவர்,

    அவரே ஈஸ்வரன்! என்கிறார்கள்.

    இல்லை! இல்லை!

    திராவிடக் கிறித்துவமே

    இந்துமதம்!

    சென்னைக்கு வந்த

    புனித தாமஸ் கிறித்தவமே

    இந்து மதம் ஆனது!

    இந்தியா ஒரு கிறித்தவ தேசம் என்று

    அசோக சக்கரத்தின் நடுவில்

    ஏசுநாதர் படம் வைத்து

    நூல் வெளியிடுகிறார்கள்!

    வீர சாவர்க்கரின் சகோதரர்

    பாபுராவ் எழுதிய

    கிறிஸ்துவின் பரிச்சயத்தில் (1946)

    ஏசுநாதர் தமிழர் என்றும்

    விசுவ கர்ம பிராமணர் என்றும்

    குறிப்பு தருகிறார்!

    அவர் சிலுவையில் இறக்கவில்லை

    காஷ்மீரில்

    சமாதியில் இருக்கிறார் என்கிறார்கள்!

    தேவ ரகசியம் தேடலுக்கல்ல

    ஸ்ரீநகரில்

    சமாதி இருக்கிறார் என்கிறது.

    The Man from Earth(2007) திரைப்படம்

    இந்திய மத போதனைகளை

    ஏசுநாதர்

    இஸ்ரேலில் பரப்பினார்

    என்று சொல்கிறது!

    ஏசுநாதர்

    இந்தியாவுக்கு வந்திருப்பதை

    ஓஷோ முதல்

    டாக்டர் இராதாகிருட்டிணன் வரை

    நம்பியிருக்கிறார்கள்.

    சமஸ்கிருதத்திற்கும்

    பண்டைய

    கிரேக்க, இலத்தீன் மொழிகளுக்குமான

    உறவைக் கண்டுபிடித்த

    வில்லியம் ஜோன்ஸ்,

    விவிலியம் சொல்லும் வரலாறே

    இந்தியப் புராணக்

    கதைகள் என்கிறார்.

    (John Bentley) எழுதி

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

    மறுபதிப்பாக (2013) வெளியிட்டுள்ள

    இந்திய வானவியல் நூல்

    கிறித்தவ மதம் இந்தியாவில்

    பரவாமல் தடுக்கவே

    கிருஷ்ணன் கதை

    உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது!

    இல்லை! இல்லை!

    வணக்கத்திற்குத் தகுதியான

    ஒரே இறைவன் அல்லா மட்டுமே!

    ‘என் தேவனே! என்தேவனே!

    ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்"

    (மத்தேயு 27;46) என்று

    ஏசுநாதர் சப்தமிட்டபோது

    தேவன் என்பதற்கு Eli என்று

    ஹீப்ரு மொழியில் சொல்லியிருக்கிறாராம்!

    அதற்கு அல்லா என்றும்

    பொருள் இருக்கிறதாம்!

    ஏசுநாதரே அல்லாவிடம்தான்

    முறையிட்டிருக்கிறார்

    என்றும் கதை சொல்கிறார்கள்!

    ஒரே கோயிலில் பெரிய கடவுளோடு

    உள்ளூர் குட்டிக் கடவுள்களும்

    ஒண்டிக் குடித்தனம் செய்ய வைத்திருக்கிறார்கள்!

    இப்படி மத அடையாளத்தை

    இயக்க அடையாளமாக்க முயற்சித்திருக்கிறார்கள்!

    தங்கள் மதக் கடவுளுக்கு நாடு பிடிக்கவும்

    பிற மதக் கடவுள்களை நாடு கடத்தவுமாகக்

    குடியுரிமைச் சட்டத்திற்குள் கடவுள்களைக் கொண்டுவர பேரணி நடத்தி

    கதைகளை வரலாறு ஆக்கி

    மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்!

    மதம் மாறச் சொல்கிறார்கள்!

    தேவைப்படுவது

    மதமாற்றம் இல்லை! மனமாற்றம்!

    மத்தியானம் கிடைக்கப் போகும்

    சத்துணவுக் காத்திருப்பில்

    வயிற்றில் பசி நிறைத்து

    அறிவுப் பசி தீர்க்கப்

    பள்ளிக்கு வரும் குழந்தைகளின்

    முகத்தில்

    ஒளி ஏற்றியிருக்கிறார்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    ஈஸ்வர், அல்லா உனது பெயர்கள்

    முழு பிரபஞ்சமும் உனது குழந்தை

    அனைவருக்கும் ஞானத்தை வழங்கு!

    "ஈஸ்வர் அல்லா தேரே நாம்

    சப்கோ சான்மதி தேபகவான்"

    ***

    உள்ளடக்கம்

    சிறுகதை - கார்த்திக் கிருபாகரன்

    கவிதை - ந.சிவநேசன்

    கட்டுரை – புதியமாதவி

    கவிதை - வலங்கைமான் நூர்தீன்

    சிறுகதை - அகராதி

    கவிதை - ப.அ.ஈ.ஈ.அய்யனார்

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    சிறுகதை - ஆர். வத்ஸலா

    கவிதை - ச.அஜித்குமார்

    கவிதை - தி.கலையரசி

    கவிதை - இளையவன் சிவா

    சிறுகதை - கபிலன் சசிகுமார்

    கவிதை - நெய்வேலி பாரதிக்குமார்

    சிறுகதை - செய்யாறு தி.தா.நாராயணன்

    கவிதை – அன்றிலன்

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - ச.ஆனந்தகுமார்

    கட்டுரை சா.தேவதாஸ்

    கவிதை - ரகுநாத் வ

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    சிறுகதை - கார்த்திக் கிருபாகரன்

    மனிதர்கள் விற்பனைக்கு

    அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பக்கிரி மனித ஸ்டால். பத்துக்கு பத்து அளவிலான சிறிய கடை. அதில் இரண்டு பெரிய கூண்டுகள் இருந்தன. கடைக்குள்ளே வைக்க இடமில்லாமல் கூண்டு எப்போதும் கடையை ஒட்டி வெளியிலேயே கிடக்கும்.

    ஒரு கூண்டிற்கு மேல் இன்னோர் கூண்டு. மேலே உள்ள கூண்டில் சிவப்பு மனிதர்கள், கீழே உள்ள கூண்டில் கருப்பு, வெள்ளை, மாநிறம் கலந்த நாட்டு மனிதர்கள் இருந்தார்கள்.

    மேலே உள்ள கூண்டுக்குள் அதிகமான வெள்ளை மனிதர்களை அடைத்து வைத்திருந்தார்கள்.

    மனிதர்கள் விற்பனைக்கு என்று பெரிய அளவிலான விளம்பர பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.

    விடியற்காலை 6 மணிக்கு அவசர அவசரமா வந்த டைகர் நாய் கடையை வேக வேகமா சுத்தம் பண்ணி, மரம், கத்தி எல்லாத்தையும் தயாராக வைத்து வாடிக்கையாளர் வருகைக்கு காத்திருந்தான். அவன்தான் கடை உரிமையாளர். 10 வருடங்களுக்கு மேல் இந்த கிராமத்தில் கடை வைத்துள்ளான்.நேர்மையானவன். நன்றியுள்ளவன். அதனால் கடையிலும் நன்றியுள்ளவர்களையே வேலைக்கு வைத்துள்ளான்.

    ஜானி நாய் கூட ஆடி அசைந்து மெதுவாக நடந்து வர ஜிம்மி நாயை பார்த்தவுடனே, கோபமான கடை முதலாளி டைகர் எல்லா நாளும் லேட்டா வறீங்க. அதுவும் இன்னக்கி ஞாயித்து கிழமையுமா லேட்டா வரது. அறிவில்ல...போங்கடா! சீக்கிரம் மரத்தை, கத்திய எடுத்துட்டு வாங்க என்று திட்டிகொண்டிருக்க, அந்த கிராமத்து தலைவி மீரா சிங்கம் முதல் வாடிக்கையாளராக கடைக்கு வந்தாள்.

    வாங்கம்மா, வாங்க என்றான் டைகர்.

    ம்..... கருப்பு மனுஷன் கிலோ எவ்வளவு? என்றாள் மீரா.

    கருப்பு உயிரோடன்னா 1000 ரூபா தான். தோலை உரிச்சு வெட்டுனா கிலோ 800 ரூபாங்க என்றான் டைகர்.

    அடேங்கப்பா! விலை ரொம்ப ஜாஸ்தி என்று சலித்துக் கொண்டாள் மீரா.

    நாட்டு கருப்பு மனுஷன். ஊரை சுத்தி மேய்றவன். ஓடி ஆடி வண்டி இழுத்து வேல செய்றவன். கொழுப்பு இருக்காது.சாப்புட்டா சத்து என்றான்.

    சரி.. சிவப்பு மனுஷன் விலை?

    அவன் இறைச்சிக்காக இருக்கது. அவன் ஓடி அலைய மாட்டான். உட்காந்து மணி அடிக்கிற மாதிரிதானே. ஊசி போட்டு சதை புடிக்க வைக்கிறது. புல்லு, செடி, கொடி திங்கிற சைவம். ருசிக்கு சாப்பிடலாம்.அது கிலோ 250 ரூபாதான்

    நம்ம பட்ஜெட்க்கு அதுதான் வேணும்.இரண்டு கிலோ போடு என்றாள் மீரா.

    ஜானி இரண்டு கிலோ சிவப்பு மனுஷனை வெட்டு என்று டைகர் குரல் கொடுக்க,

    உடனே இயந்திரத்தை இயக்கி கூண்டிலிருந்து ஒரு சிவப்பு மனிதனை எடுக்க, மீதி இருக்கும் மனிதர்கள் கத்தி கூப்பாடு போட்டார்கள்.

    சீ.... என்னா கத்து கத்துதுக... என்று கூண்டை அடைத்து, வெளியே எடுத்த மனிதனின் வாயைப் பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்து, தண்ணீரை இயந்திரத்தில் ஊற்றி முண்டமான மனிதனை உள்ளே போட்டார்கள். இயந்திரம் சுழன்று மனிதனின் இரத்தத்தை ஊறிஞ்சி தோலை உரித்து கொடுக்கும்.

    பின் தோலுரிந்த மனிதனை எடுத்து கை கால் விரலை, கழிவு பாகங்களை வெட்டி எடுத்து ஒரு பகுதியை வெட்டி எடை போட்டு சரிபார்த்து, பின் சிறுசிறு பாகங்களாக வெட்டி கூடையில் போட்டு கொடுத்தான் ஜானி நாய்.

    இந்தப்பா என்று பணத்தை நீட்டினாள் மீரா சிங்கம்.

    "அக்கா... பணம் கம்மியா

    Enjoying the preview?
    Page 1 of 1