Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - August 2021
Kanaiyazhi - August 2021
Kanaiyazhi - August 2021
Ebook163 pages56 minutes

Kanaiyazhi - August 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507411
Kanaiyazhi - August 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - August 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - August 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - August 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஆகஸ்ட் 2021

    மலர்: 56 இதழ்: 05 ஆகஸ்ட் 2021

    Kanaiyazhi August 2021

    Malar: 56 Idhazh: 05 August 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தமிழக முதல்வரும் தகைசால் தமிழரும்

    விடுதலை நாளில்

    கோட்டையில் கொடியேற்றும் முதல்வர்

    தகைசால் தமிழர் விருதை

    வழங்க இருக்கிறார்.

    இலக்கிய வரலாற்றில்

    தகைசால் தமிழராக

    முதலில் அறியப்படுகிறவர்

    சிலப்பதிகாரக் கண்ணகிதான்.

    கவுந்தி அடிகள்

    மாதரியிடம் கண்ணகியைத்

    தகைசால் பூங்கொடி என்று

    அடைக்கலப்படுத்துகிறார்.

    தகுதியே சான்றாண்மையாக

    சான்றாண்மையே தகுதியாக

    வாழ்கிற தமிழர்களைத்

    தகைசால் தமிழர்

    அடையாளம் காட்டும்!

    கும்பிட்டுக் கும்பிட்டு

    ஓட்டு கேட்டவர்கள்

    கும்பிட வைக்க

    ஒட்டு கேட்கிறார்கள்!

    ஒட்டுக் கேட்பதும் உளவு பார்ப்பதும்

    வரலாற்றில் புதிதில்லை!

    தன்னைத்தானே

    ஒற்றுப் பார்க்கவும் உற்று நோக்கவும்

    தத்துவ உளவாளிகள்!

    அடுத்தவர் வியாபாரத்தை

    அழித்து ஒடுக்கவும்

    தனது வியாபாரத்தை

    மேம்படுத்தவும் வணிக உளவாளிகள்!

    அண்டை நாடுகளின்

    எல்லை கடக்கவும்

    அத்து மீறவும் அடக்கி வைக்கவும்

    அரசியல் உளவாளிகள் என்று

    உளவாளிகள் பட்டியலை

    வரலாறு சொல்கிறது.

    வள்ளுவர் இன்னொரு படி

    மேலே சொல்கிறார்

    பகைவர்களை மட்டுமின்றி

    அதிகாரிகளையும் உறவினர்களையும் கூட

    ஒற்று பார்க்க வேண்டுமாம்

    சாமியார், வியாபாரி, பார்ப்பனர்கள்

    உளவாளிகளாக

    எல்லா இடங்களுக்கும் நுழைய

    எளிதாக இருக்குமாம்..

    அறிவு ஜீவிகளாகிய புலவர்களும்

    அடங்குகின்றனர் பட்டியலில்.

    சிலப்பதிகாரத்தில்

    ஒரு வணிகன் ஒற்றன் என்று

    கொலை செய்யப்பட்டிருக்கிறான்.

    உறையூருக்குள் புகுந்த

    புலவர் இளந்தத்தனை

    ஒற்றன் என்று கருதிக்

    கொல்லப் போனதைக்

    கோவூர்க் கிழார் தடுத்த செய்தியைப்

    புறநானூறு சொல்கிறது.

    ஓலைச் சுவடியை

    மடியில் கட்டிக்கொண்டு

    ஒட்டிய வயிற்றுடன் தூது சென்ற

    பார்ப்பனரை வெட்டிக்கொன்ற செய்தியை

    அகநானுறு சொல்கிறது.

    இப்போது

    தகவல் தொழிநுட்ப உளவாளிகள்

    ஒவ்வொரு நாட்டுக்கும் ஏகப்பட்ட செலவு!

    வாழ்க்கையையும் விடுதலையையும்

    மகிழ்ச்சிக்கான தேடலையும்

    மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய

    அரசு

    தன் நாட்டு மக்களையே

    ஒற்றுப் பார்க்கிறது!

    உலக வணிகப் பேரரசை உருவாக்க

    பலவீனங்களைத் தெரிந்துகொண்டு

    அறிவு ஜீவிகளை - அடியாட்களை

    உருவாக்கிக் கொண்டிருக்கிறது

    தகவல் தொழில் நுட்பம்.

    சுற்றி வரும் கோள்களைக் கொண்டு

    சூரியனையும் உளவு பார்ப்பார்கள் போல!

    இதோ கையில் உள்ள செல்பேசி கொண்டு

    ஒட்டுக் கேட்கவும் ஒற்றுப் பார்க்கவும்

    உலகைச் சுற்றுகிறது தகவல் தொழில் நுட்பம்.

    சொல்வதைக் கேட்கும் எடுபிடியாக்க

    உதவி எனும் பெயரில் கடனாளி ஆக்கவும்

    பக்கத்து நாடுகளைப் பகை நாடாக்கிப்

    போர் உற்பத்தியில் இராணுவத் தளவாட

    அறுவடை பெருக்கவும்

    ஒட்டுக் கேட்பதும் ஒற்று பார்ப்பதும்

    உலக நடைமுறையான காலத்தில்

    ஒவ்வொரு நாளும்

    மக்கள் வியப்பில் பொழுதளக்கும்

    தமிழக முதல்வர்

    வாழ்க்கையின் பெரும் பகுதியை

    ஒற்றர்களின் கவனிப்பில் கழித்த

    தோழர் சங்கரய்யாவுக்குத்

    தகைசால் தமிழர் விருதை

    விடுதலை நாளில் வழங்கப் போகிறார்.

    அறிவிப்பு வந்ததும் நன்றி தெரிவித்ததோடு

    விருதுத் தொகை பத்து இலட்சத்தையும்

    கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு

    வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

    பல நேரம் உருவாக்கியவரால்

    விருதுக்குப் பெருமை சேரும்

    சில நேரம் பெறுகிற விருதாளர்

    பெருமை சேர்ப்பார்.

    எப்போதாவதுதான்

    உருவாக்கியவராலும் பெறுகிறவராலும்

    விருது பெருமை பெறும்.

    அது இப்போது நடந்திருக்கிறது

    ஆகவே

    தகைசால் தமிழர்களை

    வாழ்த்துவோம்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    தமிழக முதல்வரும் தகைசால் தமிழரும்

    சிறுகதை - அ. நாகராசன்

    கவிதை - ரகுநாத் வ

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - செ. நாகநந்தினி

    சிறுகதை - சத்யஜித்ராய்

    கவிதை - கிரிஸ்டல் வார்ரென்

    கவிதை - பிரபுசங்கர்

    கட்டுரை - கவிஜி

    கவிதை - தங்கேஸ்

    சிறுகதை - வடுவூர் சிவ. முரளி

    குறுநாடகம் - கனகராஜ் பாலசுப்பிரமணியம்

    கட்டுரை - உஷாதீபன்

    கவிதை - ந.சிவநேசன்

    சிறுகதை - ஆசைத்தம்பி

    கவிதை - தசாமி

    கட்டுரை - சேது. ஜெயசெல்வன்

    கட்டுரை - அண்டனூர் சுரா

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    சிறுகதை - அ. நாகராசன்

    01.jpg

    கல் தேர் ஓடி... அல்லது

    ஜே.கே. சிலாகித்த ஆழித்தேர்...

    அடுத்த வாரம் குடும்ப நண்பர் சண்முகம் வீட்டுத் திருமணத்திற்கு சென்னை போகும் சமயம் அந்த இரண்டு கோட்டங்களையும் கண்டிப்பாக எப்படியும் பார்த்து விட்டுத்தான் ஊருக்கு திரும்ப வண்டி ஏற வேண்டும் என்பதில் உறுதியாக என் மனைவி இருந்தாள். அவள் பார்க்க விழைந்ததில் ஒன்று; ரயில் நிலையத்தின் அருகாமையில் இருந்த கந்தகோட்டம்.

    அங்காடிகள் நெருக்கமாக நிறைந்த ஒரு தெருவில் இருந்தது கந்த கோட்டம் எனும் கந்தசாமி கோவில். அக்கோவில் சமீபத்தில் வள்ளலார் பெருமான் வசித்ததாக சொல்வார்கள். 1673-இல் கிழக்கிந்திய ஆங்கில கம்பெனியுடன் வர்த்தகம் செய்து வந்த வேலூர் மாரி செட்டியாரும் அவர் நண்பர் கந்த பண்டாரமும் திருப்போருர் கந்தசாமி கோயிலுக்கு மாதாந்திர கார்த்திகை நாட்களில் சென்று வருவது வழக்கம்.. அதுபோல் ஒருமுறை தரிசனத்துக்குப் பின் திரும்புகையில் ஒரு வேப்ப மரத்தடியில் பாம்பு புற்று ஒன்றருகில் கண்ட முருகர் சிலையை அவர்கள் எடுத்து வந்து சென்னை வர்த்தக மையமான ஜார்ஜ் டவுனில், ராசப்ப செட்டி தெருவில் இருந்த பிள்ளையார் கோயிலில் வைத்து வழிபட துவங்கினர். நாளடைவில் பல வணிக வள்ளல் பெருமக்கள் பக்தியில் தந்த கொடைகளால் நிலமும் ரதமும் வாங்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட இந்தக் கந்த கோட்டம் எனும் கந்தசாமி கோயிலுக்கு 1901-இல் காளி இரத்தின செட்டியார் உபயத்தால் ராஜ கோபுரம் கட்டப்பட்டது ரயில் நிலையம் அருகில் இருந்ததால் இந்தக் கோட்டத்தை எளிதில் தரிசித்து திரும்பலாம்.

    மற்றொரு கோட்டம் தெய்வப்புலவர் நினைவு அரங்கமும்,, சிற்பத்தேரும் உள்ள ஒன்று. சற்று தூரத்தில் அது இருந்ததால் சென்று காண நேரம் இல்லை என்றால் அடுத்த முறை சென்னை வரும் சமயம் பார்க்கலாம் என்றதை என் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம், அக்கோட்டத்தில் இருந்த சிற்ப தேர், அவளது பிறந்த மண் பெருமை சொல்லும் தேர் வடிவ மாதிரியில் இருந்தது தான்.

    அத்துடன் சென்ற வாரம் வீட்டுக்கு வந்து சென்ற அவள் சகோதரனும் ஒரு மறைமுகக் காரணம்.

    ஒரு கான்பிரன்ஸ் நிமித்தம் வந்த என் மைத்துனர், இரண்டு நாட்களுக்கு முன் தங்கள் ஊரில் நிகழ்ந்த தேர் திருவிழா வைபவத்தைதான் காண சென்று வந்ததை பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

    நான் ஊர்ல இருந்தப்ப தேர் ஓடியதை பார்த்ததே இல்லை.. ரெண்டு நாளைக்கு முன்ன தான் தேர் ஓடறதை முதல் தடவையா பார்க்கிறேன். நிஜமாகவே அது அற்புதமா அசைந்து நகரும் அழகை இப்போதுதான் பார்க்கிறேன். சிவ சின்னங்களும், திருகுடைகளும் கொடிகளும் முன்னேச்செல்ல, ஓதுவார்கள் பதிகம் பாடி பின்தொடர, வேத கோஷங்கள் ஒலிக்க பேரலையாய் எழும், பக்தர்களின் ஆருரான் கோஷம், பரவசம் தரும் நாதஸ்வர மேள வாத்தியங்களுடன் நகார் ஓசையும்....

    கடந்தகாலக் காட்சியை கண்ணுக்குள் கொண்டு வந்த திருப்தி அவர்கள் இருவருக்குமே.

    1948-க்குப்பின் தேர் ஓடிய 1970-1975 களில், நீ கல்லூரி படிப்பின் காரணத்தால் சென்னையில் இருந்தாய்.. அப்புறம் 1978-இல் ஒருமுறை பின் 1982-இல் ஒருமுறை தான் தேர் ஓடியது. அந்த சமயம் நீ ஊரில் இல்லை. பின்னர் மீண்டும் 1989-இல் தேரோட்டம் நடந்த போது மேற்படிப்பு படிக்க வேறு மாநிலம் சென்று விட்டாய். அதன் பின்னர் தேரோட்டம் நடக்கவே இல்லை. சமீபமாகத்தான் தொடர்ந்து நிகழ்கிறது.

    நம்ம ஊர்லே எதுவுமே மாறவில்லை.. எல்லாமே அப்படியே இருக்கு,

    "ஊரும் தேரும், குளமும்

    Enjoying the preview?
    Page 1 of 1