Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaagam
Yaagam
Yaagam
Ebook160 pages56 minutes

Yaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803431
Yaagam

Read more from Maharishi

Related to Yaagam

Related ebooks

Reviews for Yaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaagam - Maharishi

    http://www.pustaka.co.in

    யாகம்

    Yaagam

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    மார்கழி மாதம் முடிந்து விட்டது. தை மாத ஆரம்ப வாரத்தில் ஒரு நாள். கிழக்குமேற்காக சுற்றி வளைந்து ஓடும் அந்தத் தொப்பையாறு வறண்டு கிடந்தது. ஆற்றுக்குப் பாலம் கட்டப் போகிறார்கள்.

    அப்பகுதி மக்களின் நீண்டநாளைய ஆவல், நீண்டநாளையக் கனவு. ஒரு கரையில் மூலக்காடு கிராமமும், மற்றொரு கரையில் தொப்பையாறு கிராமமும், இவ்விரு கிராம மக்களின் எல்லாவித பரிவர்த்தனைகளுக்கும் இத்தனை நாள் அந்த ஆற்றின் மேல் அவ்வப்பொழுது போடப்படும் மரப்பாலம் தான் பிரதான காரணமாக இருந்தது.

    புரட்டாசி ஐப்பசியில் விடாது பெய்யும் அடை மழையினால் இடையறாது தொப்பையாறு அருகில் உள்ள சேர்வராயன் மலைத்தொடர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவிலிருந்து நீர் சரிந்து அதில் விழும்போது ஆறு போல காணப்படும். அந்த ஆற்றுக்கு அதிக வேகம் கிடையாது. கிட்டத்தட்ட, அது ஒரு தேங்கல் தண்ணீர் போல்தான்.

    மேட்டூர் நீர்த்தேக்கம் அதன் தாய்வீடு மேட்டூர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தால் இங்கே தொப்பையாறு சமுத்திரமாகி உருப்பெற்று நிற்கும்.

    ‘கோம்புத் தண்ணி ஒதஞ்சுருக்கு’* என்று ஊர் மக்கள் அதன் கரையில் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். நீர்த்தேக்கத்தின் கண்மாய்கள் பாசனங்களுக்குத் திறந்து விடப்பட்டு, நீர் அங்கே வடியும்போது தொப்பையாற்று நீர் தன்னை உள்ளே இழுத்துக் கொள்ளும்.

    *கோம்புத்தண்ணி ஓதஞ்சுருக்கு- தண்ணி தளும்புகிறது.

    வருடத்தில் மழைகாலத்திலும், மைசூர் மெர்காரா மலைப்பகுதிகளில் மழை பெய்து மேட்டூர் நீர்த்தேக்கம் பிரவாகமாக உருவெடுத்து நிற்கும்போது, தொப்பையாறு வடக்கு தெற்காக சுமார் ஆறுமாத காலம் பிரிந்தே நிற்கும்.

    பரிசல்காரனுக்குக் கொண்டாட்டம்.

    ஆட்டுக்கு ரெண்டு ரூபாய், மாட்டுக்கு அஞ்சு ரூபாய், வண்ணான் கழுதைக்கு மூணு ரூபாய், ஆளுக்கு, தலைக்கு இருபது பைசா. தலைச்சுமை புல்லுக்கட்டுக்கு முப்பது பைசா.

    அவன் வைத்ததுதான் சட்டம்.

    அவ்வப்பொழுது ஏதேனும் மரப்பாலங்கள் அமைவது அந்த ஊரின் பஞ்சாயத்துக்கும், அந்த ஆற்றின் ஓரத்தில் அதன் நீர்ப்பாசனத்தை நம்பியும் உள்ள பட்டாதாரர்களின் பொறுப்பாக இருந்தது. இதில் பல சங்கடங்களை அந்தக் கிராமம் சமாளிக்க வேண்டியிருந்தது.

    மழையின் உக்கிரம் தாங்காமலும், ஆற்றில் பெருக்கு நேரும் போதும், மரப்பாலத்தின் தலைவிதியும் ஆடிக்கொண்டிருக்கும்.

    தா! அந்த மரப் பாலத்து மேலே வண்டி ஓட்டிக்கினு போ வேணாம். அது என்னா ஆட்டம் ஆடுது. போனதபா வடிவேலுக்கு ஏற்பட்ட மாதிரி ஏதுனாச்சும்...

    பாலம் மழைக் காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் போது, இப்படிப் பல சம்பவங்கள் நினைவுபடுத்தப்படுவதைப் பார்க்கலாம்.

    மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவிலிருந்து ஓடிவரும் அதன் ஓட்டம் மேச்சேரி பெரும்பாளை கரடி மவுடு அடையுமுன் வருகிறஒருபெரிய வளைவைத் தாண்ட வேண்டிய இடத்தில் அந்த கிராமத்தின் இணைப்புச் சாலைகள் இரு கரைகளிலும் உண்டாகிவிட்டது. வேறு சாலைகள் அந்த இடத்தில் உருப்பெற வாய்ப்பில்லாமல் தனியார் நிலங்கள் சமவெளியில் நதியைக்கடக்கும் விதத்தில் பாலம் அமையக்கூடிய வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.

    மலைச்சரிவிலிருந்து ஓடி வந்து கொஞ்ச தூரம் தாறுமாறாக ஓடி, இந்த வளைவில் தன் வேகத்தையும் தன் ஆழத்தையும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டது.

    மழை காலத்தில் பாலம் ஆடுகிறது என்று பேசத் தொடங்கினாலே அதன் மேல் யாரும் நடக்கமாட்டார்கள். வண்டியை ஓட்டிக் கொண்டு போகும் விஷப்பரீட்சையை யாரும் மேற் கொள்வதில்லை. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கண்ணுசாமி படையாச்சி வீட்டுக் குட்டி ஆடுகள் அதன்மேல் ஒய்யாரமாக நடந்து செல்லும். மரப்பிடிகள் மேல் காகங்கள் உட்காரும்.

    ஏழுமலைக் கவுண்டர், முகத்தில் மண்டிக்கிடந்த பத்து நாள் ரோமத்தை நீவி விட்டுக் கொண்டார். அந்தக் காட்டுக் கொட்டகையில் அந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் எல்லாம் கூடி மரப்பாலத்தை மாற்றி அமைப்பதுபற்றித் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    எம்புட்டு உருவா ஆனாலும் பரவால்ல. மரப் பாலத்தை சதா லிபேர்* பண்ணிகிட்டு இமிசுபட்டுகின்னு இருக்கறதை விட்டுட்டு. பர்மனன்டா அதை ஒடனே மாத்தியாவணும். என்று கட்டைத்தொண்டையில் காட்டுக்கத்தலாகக்கத்தினான் இருசா கவுண்டன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மழைக் காலத்தில் அவனது மாடும், வண்டியும் மரப்பாலத்தை நம்பி மேலே ஓடிய போது ஏற்பட்ட கதி அவனுக்குத்தான் தெரியும்.

    "தா...தா...சும்மா அதையே பேசினு பொளுத வோட்டாதே இருசா, அதா வேற கட்டியாவணும்னு முடிவு கட்டிட்டாங்களே. இப்ப செலவபத்தி பேசியாவணும்... பணம்னு வரச்சே திக்காலுக்கு* ஒத்தரா திரும்பிக்கறதிலே அர்த்தமில்ல. இத்தன நாளா இப்படிப் பேசிப் பேசி ஒரு முடிவுக்கும் வராமயே காலத்தை ஓட்டிட்டோம். அப்பிசி* காத்திகையிலே குச்சிக் கிலங்கு சீசன்லே, அவனவன்பட்டப் பொறானால*யும் புத்திவரமாட்டேங்குது. போன தையிலே என்ன ஆச்சு? மரப்பாலம் லிப்பேராக விளுந்த பின்னால், அது சரி பண்ணி முடியறதுக்குள்ள, செவ்வா சந்தையிலே மார்கட் வுளுந்துபோச்சு. எம்புட்டு நஷ்டம் நமக்கு. எனக்கு மட்டும் பெரிய உருவாயிலே ரெண்டு உருவாபோச்சு.இருசா கவுண்டனுக்கு மூனு உருவா. பெரிய அண்ணே ஏளுமலை கவுண்டருக்கு மட்டும் நஷ்டம் கொஞ்சமா. லோடு ஏத்திகினு தொப்பையாறு' குறுக்கே போய் மெயின்ரோடுக்கு வார வண்டிக்காரங்க என்ன கிராக்கி பண்ணிக்கிட்டாங்க. இது தான் 'டைம்'னு வண்டி வச்சுக்கினு இருக்கிறவங்க என்ன அக்குறும்பா* கூலிய ஏத்திக் கேட்டானுங்க பாலம் லிபேராகி இந்தப் பக்கத்து குச்சி கிலங்கு மார்க்கட்டுக்குப் போறதுக்குள்ளே அக்கரையிலே இருக்கிற வீரி செப்டி எவ்வுளு நயிஸா* மார்க்கெட்டை ஏத்தி ஒரு அடி அடிச்சான். பாலம் லிபேராகி நம்ப ஆளுங்க கெலங்கைக் கொண்டு போய் குவியல் போடறப்போ, கோயம்புத்தூர் காரன் போயிட்டான், ஈரோடுகாரன் போயிட்டான். திண்டுக்கல்காரன் ஈனவெல* கேட்டான் இருக்க இருக்க

    திக்காலுக்கு - திசைக்கு, அப்பிசி - ஐப்பசி

    பட்டப் பொறானால-பட்டபின்பும்

    அக்குறும்பு-அக்கிரமம், எவ்வுளு - எவ்வளவு

    நயிஸா-Nice, ஈனவெல-ஈனவில

    இன்னும் மோசமாப் போயிடப் போவுதுன்னு ஏதோ ஒரு வெலக்கு அள்ளிக் கொடுத்துட்டு வந்தமே"- ராமக் கவுண்டன் உண்மைத் தன்மையுடன் பிரத்யக்ஷ நிலையை விளக்கினான். ராமகவுண்டரின் ஒரு 'பாயிண்ட்' எல்லோரையும் உலுக்கி விட்டது. குச்சிக் கிழங்கு சீசனில் பாலம் ரிபேராகி விழுந்துவிட்டால் அக்கரையில் உள்ள வீரி செட்டிக்கு ஏக சந்தோஷம். இந்தப்பக்கத்து குச்சிக் கிழங்கு தான் சேலம், மேச்சேரி மார்க்கெட்டைத் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தது. சரியான பருவகாலத்தில் கட்டைகளை நட்டு, சரியான காலத்தில் கிழங்கைத்தோண்டி எடுத்து, சந்தைக்கு வரும் முதல் கிழங்கு வண்டிகள், அந்த கிராமத்து வண்டிகளாகத்தானிருக்கும். சாரி சாரியாக லேலண்ட் 'ஓபன்' பாடி லாரிகள் உள்ளே போகும் போது வீரி செட்டியும், அவனைப் போன்ற, அந்த கிராமத்து, மற்றக் குச்சிக் கிழங்கு பயிரிடுவோரும் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதோடு அந்த கிராமத்துக் குச்சிக்கிழங்குக்கு சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. அதுன் விளைச்சலும் ரகமும் அவ்வளவு பிரசித்தம். குச்சிக் கிழங்கு அறுவடையும். மழைக் காலமும் ஒன்றுசேரும்போது வீரிசெட்டி, மரப்பாலம் ஒடிந்து போகாதா என்று ஏங்குவான்.

    வானம் பார்த்த பூமி, வானம் தரும் பிரசாதம் தான், அக்கரட்டுப் பிரதேசத்து நிலமகளைக் குளிரவைத்துத் தளிரவைக்கும். அந்தப் பட்டத்தைத் தவறவிட்டு விட்டால், பிறகு சேந்துக் கிணற்றில்

    Enjoying the preview?
    Page 1 of 1