Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidhai Cholam
Vidhai Cholam
Vidhai Cholam
Ebook247 pages1 hour

Vidhai Cholam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமுதாயத்தின் அடிகளையும், உதைகளையும், முகத்திலும், நெஞ்சிலும், முதுகிலும் மாறிமாறி வாங்கிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட கோபாவேசத்தோடு அந்த அக்கிரமங்களை எதிர்த்து நிற்கும் பாமரப் போராளிகளின் நிலைமை பற்றியும், வயிற்றுப் பசிக்கு, உலையில் கொதிக்கும் சோற்றுப் பருக்கைகளாய் இத்தகு பாட்டாளிகளின் பிழைப்பு உருமாறுவதை இந்தப் பாரததேசம் உணர்ந்திட வேண்டும்!! என்பதையும் இக்கதையின் வாயிலாக வாசித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580171510434
Vidhai Cholam

Read more from Suryaganthan

Related to Vidhai Cholam

Related ebooks

Reviews for Vidhai Cholam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidhai Cholam - Suryaganthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விதைச்சோளம்

    Vidhai Cholam

    Author:

    சூர்யகாந்தன்

    Suryaganthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/suryaganthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    கொங்குச் செம்மண்ணில் விளைந்த சோளம் இந்த விதைச்சோளம். நாவல் வடிவில் வாசக மனங்களில் வரையப்படும் இந்தக் கதைக் கோலம், வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியின் புதல்வர்களாம் அரிசன மக்களின் ஜீவித ஓவியம்.

    வறுமை வெம்மையால் கந்திப்போன இவர்களின் முகங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நியாயங்களே இதில் அத்தியாயங்கள் ஆகியுள்ளன.

    சாமானிய மக்களுக்குச் சாகித்ய அந்தஸ்து கொடுப்பதற்காகத் தொடுக்கப்பட்டிருக்கும் இலக்கியப் போராட்டம் இதுவென்றால், எனக்குச் சம்மதமே...!

    எளியோரின் கழுத்தை அழுத்தும் துயர்களைக் களைந்தெறிய இந்த எழுதுகோலும் ஒரு ஆயுதமாய்க் களத்தில் நிற்பதில் எனக்கு உடன்பாடே...!

    சமுதாயத்தின் அடிகளையும், உதைகளையும், முகத்திலும், நெஞ்சிலும், முதுகிலும் மாறிமாறி வாங்கிக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட கோபாவேசத்தோடு அந்த அக்கிரமங்களை எதிர்த்து நிற்கும் பாமரப் போராளிகளின் பக்கம் நானும் நிற்பதில், எனக்கு எவ்வித அச்சமும் இல்லை.

    இவர்கள் படிப்பறியாப் பஞ்சமர்தான் என்றாலும், இந்த மண்ணின் மகிமைச் சுவையை நவதானிய எழுத்துக்களாய் மொழிபெயர்த்து... இந்திய நாட்டுக்குச் சொன்னவர் என்பதை எந்த அரசியல் அறிஞனும், மாமேதையும் மறுத்துவிட முடியாதல்லவா...!

    மண்ணுக்கு, வியர்வை மாலை அணிவிக்கும் இந்த மணவாளர்கள்.

    புண்களுக்குப் புனுகு பூசும் மிராசுகளின் கண்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களாக, ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகத் தெரிவர்.

    அதனாலேயே இந்த மாந்தர்களை, எனது நாவலின் கதாமாந்தர்களாகத் தேர்வு செய்து... உயர்த்திப் பிடித்திருக்கிறேன்.

    இதில் இயங்கும் திம்மன், வேம்பன், ராயன், ரங்கன், தூணான், காத்தான், சுப்பன், ஓவன், மருதன், வீரான், ஆறான், பொன்னி, சென்னி, சுப்பி, செவப்பி, கருப்பாள், மருதன், மாதாள், துளசி என ஈரமண்ணின் பவளச் சிவப்பில் வார்த்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் வாசகர்களோடு நேசங்கொள்ள உள்ளார்கள்!

    கூரைகளிலும், குச்சுக்களிலும் வசிப்பவர்கள் இவர்களே! காடுகளைக் கழனிகளாக்கி, குப்பைகளைத் தோப்புக்களாக்கி... அரண்மனைகளின் அஸ்திவாரங்களாகப் புதைந்தவர்களும் இவர்களே!

    இங்கு, கோடை மழை... கொங்கமழை, அடை மழை, கல் மழை என கொட்டி முழக்கிய பருவங்களும் உண்டு. சோளம் சோளமாய் விளைந்த நிலம் பாளம்பாளமாய் வெடிப்புக்கள் விட்டு, வெறுமையின் கோர வரிகளாய் மாறி நின்ற தருணங்களும் உண்டு.

    காடுகளிலும், தோட்டங்களிலும் குவிந்த மகசூலை ‘சோளக்குழி’ என்னும் பாதாள அறைகளில் மூட்டை மூட்டையாய்ப் பதுக்கி வைத்த மச்சு, மாடிகளின் ஆசைகள் ஒளிந்தன.

    கம்பங்கூழும், ராகிக்களியும், சாமைச் சோறும், சோளச்சோறும்... புஞ்சைப் புழுதியின் கருவேல மர நிழலில் பசியாற்றிய பொழுதுகளும் பிறவிப் பேரேட்டில் எளியவர்கள் கண்டு வந்த முறைமைகள் எனவாயின.

    ஆழக் கிணறுகளிலும், உச்சிமலைகளிலும் வாழ்வின் பொருளைத்தேடும் வைராக்யங்கள் இவர்களது வரலாற்றில் இன்னமும் தொடர்கின்றன.

    ஒரு விதையைத் தூவினால், அதைப் பயிராககி கதிர்கள் விட்டு... ஒரு நூறு மணிகளாக்கி புன்முறுவலோடு நன்றி காட்டும் பூமித்தாயைப்போல...

    ஊதியம் ஒரு பங்கு பெற்றால், பல மடங்காக அதனை உழைத்துக் கொடுக்கும் நன்றியுணர்வுமிக்க இந்த நல்லோர்களுக்கு நாடுகளின் சபைகளில் கெளரவம் தரவேண்டும்!

    வயிற்றுப் பசிக்கு, உலையில் கொதிக்கும் சோற்றுப் பருக்கைகளாய் இத்தகு பாட்டாளிகளின் பிழைப்பு உருமாறுவதை இந்தப் பாரததேசம் உணர்ந்திடவேண்டும்!!

    உழைக்கும் மக்களாம், வியர்வை மணக்கும்... இந்த விதைச்சோள மணிகள் எதிர்கால வளத்துக்காகச் சேமித்துப் பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களைக் காலத்தின் களஞ்சியத்தில், கண்ணின் மணிகளெனச் சமுதாயம் போற்றிட வேண்டும் என்னும் தோழமையுணர்வுடன் இதைப் படைத்தளிக்கிறேன்.

    அன்புடன்

    சூர்யகாந்தன்

    14.11.2000

    கோவை-641010

    1

    டேய்...! பாத்து நெதானமாப் போங்கடா...! அங்கெ வேலிக்கால்லெ முள்ளுக கெடக்கும்...! டேய்...

    காளாச்சி மரத்தின் கீழ் குத்தவைத்து உட்கார்ந்தபடி சொல்லிக் கொண்டிருந்தான் வேம்பன்.

    முற்பகலின் வெய்யில் சூடு, அவனுடைய உடம்புக்குச் சற்று வெதுவெதுப்பை உண்டாக்குவதாய் இருந்ததால்... காலையிலிருந்தே அங்குதான் இருந்தான். அந்த மாதாரி வழுவில், பெரும்பாலானவர்கள் கூலி வேலைகளுக்குப் போய் விட்டிருந்தனர்.

    வேம்பமாதாரி அந்தச் சேரி வாழ் மக்களிலே கடும் பாட்டாளி. சாமானியமாக எந்த நோவு நொடியும் அவனுடைய திரேகத்தைச் சீண்ட முடியாது. ‘வஜ்ரம் பாஞ்ச ஆசாமி’ என்கிற அடையாளம் நேரில் பார்க்கிற எவரொருவருக்கும் எளிதில் புலப்படும். உழைப்பினால் கருத்து... உருண்டு திரண்டு தெற்கு மலையின் கருங்கல்லைப் போலத் தோன்றும் அவனது உடல்வாகு.

    இப்போதும் கூடச் சுருக்கங்கள் விழுந்து… சங்கிப்போய் விட்ட நிலையிலும்... நல்ல சோறு தண்ணி குடுத்துத் திண்டி பண்ணுனா... எந்திரிச்சுப்போயி ஏருப்புடிக்க முடியும் அவனால்... என்கிறபடி தெரிந்தான்.

    பார்வை கூட மங்கித்தான் போய் விட்டது. நெற்றிக்குக் கையைக் கொடுத்து மேலே வானத்தை அண்ணாந்து நேரம் பார்த்தான். சூரியக்கதிர்கள் வைர ஊசிகளைப்போல் சரிந்து கண்களைக் கூசின.

    இவனுடைய அப்பங்காரன், எட்டு வயதுப் பையனாக இருந்த இவனைக் கூட்டிக்கொண்டு இந்த மேக்குச்சீமைக்குப் பிழைப்பைத்தேடி வந்தது இப்போது நடந்ததுபோல் நெஞ்சுக்குள்ளே ஒரு அழிக்க முடியாத வரை படத்தின் சித்திரமாகப் பதிந்துவிட்டிருந்தது. அதன்பின், தொடரோட்டமாக நடந்து முடிந்த எத்தனையோ நிகழ்வுகள் கண் முன்னால் இப்பவும்கூட பசுமையாகத்தான் உள்ளன.

    பேதி, பிளேக்கு நோய்... கிராமங்களில் புகுந்து நிறைய உயிர்களைப் புயலைப்போல் சூறையாடிய பொழுது, கிழக்கே பெருமாநல்லூரில் இவனுடைய தாயையும், தங்கச்சிகளையும் அது அள்ளிக்கொண்டு போய்விட்டது. அதில் தப்பியவர்களில் இவனுடைய அப்பனும் இன்னுஞ்சிலரும் ‘இங்கிருந்தால் நாமும் மீளமாட்டோம்’ என்கிற அச்சத்தில் உடமையாயிருந்த கூரைச் சாளையை அந்த மண்ணிலே விட்டுவிட்டுக் கன்னங்களில் அப்பிய கண்ணீர்த்தாரைகளோடு வேகமாகவே வெளியேற வேண்டியிருந்தது.

    கால் நடையாகவே... ராத்திரியில் அங்கிருந்து காடுகாடாக நடந்து இவன் வந்ததும், கால்வலிக்கும் போதெல்லாம் இவனைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு உங்க மாமங்காரன் ஊருக்குத்தான் நாம போறம்டா...! அங்கெ போயிட்டம்னா அப்பறம் இங்கே நாம வரவேண்டீதே இல்லெ... என்றெல்லாம் சொல்லியவாறு வந்தான் இவனுடைய அப்பன்.

    இருண்ட ஆகாயத்தின் பெரும் பரப்பில் தெரிந்த நட்சத்திரக் கங்குகள் எந்தக் காற்றுக்கும் அணைந்து விடாதவைகளைப்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளும் இவர்களோடேயே மேற்கு நோக்கிப் பயணம் வருபவைகளைப்போல் இவனுக்கு எண்ணத்தோணியது.

    உடன் வந்தவர்களெல்லாம் என்ன ஆனார்கள்? காலவோட்டத்தில் கரைந்து போய்விட்டார்களா? என்கிற சிந்தனை வெகுநாள் வரை இவனுக்குள் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.

    ***

    பேரூர்க்குத் தெற்கிலிருந்த இந்தக் குக்கிராமம் ஒரு விடியல் வேளையில்... இப்படித்தான் வேம்பமாதாரிக்கு அறிமுகமாயிற்று. தென்கிழக்கு முனையில் இருந்த இந்த அரிசனக்குப்பத்தில் கம்பந்தட்டுகளால் வேய்ந்த குடிசைகளும், மேற்கூரைகளும்கூட இல்லாத மண்சுவர்களின் இடிபாடுகளும் திட்டுத்திட்டாக இருந்தன.

    தெற்கேயும், மேற்கேயும் மலையடிவாரம் வரை வியாபித்திருக்கும் மேட்டாங்காடுகளை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளிகளின் குடியிருப்பாக இந்தச் சேரிப்பகுதி தெரிந்தது.

    ஊரின் பிற தெருக்களில் மின்சார விளக்குகள் வந்த பிறகும் கூட இந்த மக்களின் இருப்பிடத்தைத் தேடி வெளிச்சம் வந்தபாடில்லை. இருள் மூட்டம் நிரந்தரக் குத்தகைக்குப் பிடித்துக்கொண்டு விட்ட ‘மாதாரி வழுவாக’ இது விளங்கியது.

    வேம்பனுக்கு அந்த நினைவுகள் அலைச்சுருள்கள் போல் வட்டமிட, வெய்யில் சுள்ளென்று உரைத்து... திண்ணைக்குப் போகச் சொல்லித் தூண்டியது.

    சிறுவர்களின் ஓட்டமும், ஒளிதலும் இன்னமும் இவன் உட்கார்ந்திருந்த தெருவில் நடந்து கொண்டு தானிருந்தன. கண்டுபிடிக்கும் விளையாட்டில் அவர்கள் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர்.

    மதியவேளையில்... உள்ளூர்ப்பள்ளிக்கூடத்தில் போடப்படும் சத்துணவுக்காக வட்டில்களை எடுத்துப்போக வந்தவர்கள், அதற்குள்ளாக இந்த விளையாட்டு முசுவில் இருப்பதை உணர்ந்தவனாய் வேம்பன் மறுபடியும் சத்தமிட்டான்...

    …ஏண்டா இந்த வெளையாட்டுகளைச் சாய்ங்காலமா ஆடுனாப் போதாதாடா? படிக்கப்போன பசங்க... பசிக்குச் சோறும் கெடைக்குதுங்கறதை நெனைச்சு... ரெண்டெழுத்தைனாலு கிருமமாப் படிச்சு மின்னுக்கு வரவேணுமடா! உங்க அப்பனாத்தாளுக்கு கைகாலுக சோந்த காலத்துல அவிகளெக் காப்பாத்த வேணுமல்லடா...

    இவனுடைய குரல் அவர்களுடைய காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.

    அந்நேரத்திற்குத் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. தெற்குக் காடுகளுக்கு வேலைக்குச் செல்கிற தடங்களே கூட இப்போது மாற்றமடைந்து விட்டிருந்தன. டெம்போக்களும், சிறுவாகனங்களும் போய்வருவதற்கேற்ப ஜல்லிக்கற்கள் போடப்பட்டு விட்டன. ஊருக்குத் தென்புறமிருந்து ஒரு மைல் தூரத்துக்கும் மேலாகவே காட்டு நிலங்கள் விற்பனையாகியிருந்தன. ரியல் எஸ்டேட்காரர்கள் அவைகளை வாங்கி செண்ட் கணக்கில் பிரித்து, வீடுகள் கட்டுவதற்கு வசதி செய்திருந்தனர். அவற்றை விலைக்கு வாங்கியவர்கள் கட்டிடங்கள் கட்டி, குடியும் வந்திருந்தனர்.

    பொழுது விடிந்ததில் இருந்து, பொழுது விழுந்த பிற்பாடும் வண்டித்தடத்திலும் இட்டேறியிலும்... ஜன நடமாட்டம் காடுகரைகளுக்குப் போய் வந்தது இப்போது மாறிவிட்டிருந்தது.

    சக்கிலியர் வழுவிலிருந்து தெற்கே வேலைகளுக்குப் போகிறவர்கள் குறைச்சல்தான் என்றாகி விட்டது.

    கோயமுத்தூர் டவுனுக்குக் கட்டிடவேலைகளுக்கும், சுற்றுப் புறப்பகுதிகளில் அகப்படுகிற வேலைகளுக்கும் சென்று வருவதாக மாற்றங்கண்டிருந்தது.

    இதுபோக, கோவைப்புதூரில் இருக்கும் வசதியான வீடுகளுக்கு அன்றாடம் வேலைக்காரர்களாய்ச் சென்று வருவது ஆம்பிளைகளுக்கும், பொம்பிளைகளுக்கும் சௌகரியமாய்த் தெரிந்தது.

    அங்கே நிழலில் சொகுசாக இருந்தபடி வீட்டு வேலைகளைச் செய்வது இலகுவாய் இருந்தது. பஸ்ஸில் போகவரச் சுகங்கண்டு பழகி தெற்குப்புழுதிக் காடுகளை மறந்தே விட்ட நிலையாகி விட்டது.

    வெளியூர்களில் இருந்து கோவைப்புதூர்க்கு வந்து வசிப்பவர்களுக்கு வீடு தவறாமல் வேலைக்கு ஆட்கள் தேவையாயிருந்தனர். துணி துவைக்கவும் வீடு வாசலைப் பெருக்கித் துப்புரவு செய்யவும், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சவும் என மாற்றி மாற்றி வேலைகளும் இருந்தன.

    உடம்புக்கு முடியாமலும், உடம்பு ஒத்துழைக்காமலும் இருக்கும் சில வீடுகளில் இந்தச் சக்கிலியப் பெண்களையே கூட உணவு சமைக்கச் சொல்லியும் விட்டுவிட்டனர்.

    தொடக்கத்தில் இது கூச்சமாகவும், சங்கடத்தை உண்டு பண்ணுவதாகவும் இருந்தது. பிறகு கிடைத்ததை எதுக்கு விடவேண்டும், மனதாரச் சமைத்து அவர்களுக்கும் வைத்துவிட்டுப் பசியாற நாமும் உண்டு ருசி பார்ப்போமே, என்று பழகிப் போய்விட்டது.

    கைகளைக் கட்டி குனிந்து நின்றும், கையேந்தியும் வட்டிலையும் சட்டியையும் ஏந்திக்கொண்டு தோட்டங்காடுகளிலும், கிராமப்புறங்களிலும் எத்தனை நாட்களுக்குத் தான் நிற்பது? என்கிற ஆதங்கம் இந்த வழியே கரைந்து போய்க் கொண்டிருந்தது.

    இவர்கள் பேசுகிற தெலுங்கை, கோவைப்புதூரின் வசதிக்கார குடித்தனங்கள் புரிந்து கொண்ட சங்கதி அலாதியானது. அதை ராம மாதாரி வந்து வெடிச் சிரிப்போடு சொல்வதைக் கேட்கையில் வேம்பனுக்குக் கெக்கலிப்பாக இருக்கும்.

    …நா... வெக்கப்பட்டுட்டு வாசல்லெ ஓரமா நின்னாலுங்கூட ‘உள்ளாற வந்து பெஞ்சிலெ உக்காருங்க நாய்க்கரே...! சாப்புடுங்க’ன்னு சொல்லுவாங்க. நானு நாய்க்கரு இல்லீங்கோ... மாதாரிங்கோ அப்படின்னு நெஜத்தைச் சொல்லிப் போடவேணும்னு நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கும். ஆனா இதையெப் போய்ச் சொல்றதுல என்ன பிரயோஜனம்? அவிகளாகவே நம்மைச் சமமான சாதிக்காரன்னு நெனைச்சுக் கூப்புடறப்ப அதுல என்ர தப்பு ஒண்ணுங்கெடையாது... அப்பிடின்னு வுட்டுட்டேன்...

    அவன் கூறுவதிலிருந்த நியாயத்தை இவன் ஒத்துக்கொண்டது மட்டுமல்ல. அங்கு போய் மாதாரிச்சிகள் அடிக்கும் லூட்டியையும் கூடத் தெரிந்து கொள்ள முடிந்தது.

    துணிமணிகளைத் துவைத்து உலர்த்தி அவற்றை எடுத்து மடித்துக்கொடுப்பது வரையிலும் சலிப்பில்லாமல் செய்கிற இந்த வேலைக்காரிகள் மீது பற்றுதலும், நம்பிக்கையும் உண்டாகியதோடு தாங்கள் கட்டிப் பழசாகிவிட்ட சேலைகளையும் கொடுத்து இதுகளெக் கட்டிக்குங்க. பழசுகளெயும், அழுக்கானதுகளெயுமே கட்டிட்டு வர்றீங்களே பாவம், என உதவவும் செய்தார்கள்.

    தங்கள் வீடுகளுக்கு வேலைக்கு வருபவர்கள் சுத்தமாகவும், கொஞ்சமாவது நாகரீகமாகவும் வரவேண்டுமென்கிற எண்ணமே அதற்குக் காரணம் என்பதை ராமனும் புரிந்துகொண்டுதான் இங்கு வந்து சொன்னான்.

    ...ச்செரி. பின்னெ அது நல்லதுதானே. இல்லீனா இவிக சம்பாதிச்சு அதப்போலத் துணிகளெ வெலைகுடுத்து வாங்கறதுன்னா கஷ்டந்தான்! வவுத்துக்குச் சோறும் கட்டுறதுக்குத் துணியும் செய்யிற வேலைக்குச் செரி வர சம்பளமும் கெடைக்குறப்ப அங்கேதான வேலைக்கு அக்கறையாப்போவாங்க. தெக்கு வழிக்கெல்லாம் அப்பறம் இவிக காலுக திரும்புமா? வந்தும் போயி ஊட்டோட கெடக்குற ஒண்டி சண்டிகதான் வெறகுசெத்தெ பொறுக்கறதுக்கோசரம் தெக்குப் பக்கம் போகும்...

    உருமாலை சகிதமாய்ப் பெருங்கூட்டு ஆளாக இருக்கும் ராமனின் தோரணையைக்கண்டு இன்னுஞ்சில வீடுகளில் கவுண்டரே... கவுண்டரே... என அழைத்து ‘மானத்தை வாங்குறாங்க’ என்று சங்கடத்தோடு சொல்பவனாகவும் இருந்தான்.

    ...இருக்கட்டும்போ! இது காலம் வெரைலும் இந்த ஊருப்பக்கங்கள்லெ நாம கையெக்கட்டி ஒதுங்கி நின்னு கவுண்டரேன்னும்... சின்னக்கவுண்டரேன்னும், பெரிய கவுண்டரேன்னும் மருவாதி குடுத்துட்டு இருந்தோம். இப்ப இந்தக் கோவைப் புதூர்ப் பக்கமாச்சும் போகங்காட்டி எங்கெங்கயோ இருந்து வந்த பலதரப்பட்ட சாதிக்காரங்க நம்ம வேலெத் தெறமையையும், விசுவாசத்தையும் வெச்சுப் பெருசா நெனைச்சுகிட்டு அப்பிடிக் கவுண்டரே... கவுண்டரேன்னு நம்மளெப் பாத்துக் கூப்புடறாங்க. அப்பிடின்னா அது நம்மளெத் தேடி வர்ற ஒரு கவுரவம்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்.

    என ஒத்தாசை பண்ணினான் வேம்பமாதாரி.

    ...நீ உம்பாட்டுக்குச் செரி செரின்னே தலெயே ஆட்டிட்டு அவிக குடுக்குற வேலையெ நருவிசாச் செஞ்சுபோட்டு வந்திட்டிரு, வேண்டாம்னு எதாச்சு வுட்டுராதெ. அதோட நாகவுண்டரில்லேன்னு சொல்லித் தொலைச்சிராதே...

    அனுசரணையோடு அறிவுரை கூறுபவனாகவும்

    Enjoying the preview?
    Page 1 of 1