Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumathi Thirupathi Crorepathi
Thirumathi Thirupathi Crorepathi
Thirumathi Thirupathi Crorepathi
Ebook302 pages1 hour

Thirumathi Thirupathi Crorepathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருவள்ளுவர் சொற்படி, காதல்-நோய்க்குக் காரணமாகவும், அதே சமயம் மருந்தாகவும் காதலி அமைவது போல, நகைச்சுவை உணர்வுக்கு பி.ஜி. வுட்ஹஷசம், தேவனும் எனக்கு அமைந்து, இன்றும் அமைந்தபடி!

டிராம் ஓடிக் கொண்டிருந்த நாட்களில் சென்னை ஹிக்கின்பாதம்சில் வாங்கிய முதல் வுட்ஹவுஸ் புத்தகத்திலிருந்து கோபுலுவின் உயிரோவியங்கள் அலங்கரிக்க வந்த தேவனின் படைப்புகள் வரை எல்லாமே, வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளால் ஸ்தம்பித்துப் போக முயன்ற உணர்வுகளை, மயிலிறகு போல் வருடி, புத்துணர்ச்சி ஊட்டி, இதயத்தையே 'கிஜூ கிஜூ' செய்து பார்வைகளில் கோணங்களை மாற்றியுள்ளன. இன்றும் மாற்றி வருகின்றன.

"என்னிடம் மாத்திரம் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால், நான் எப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி.

நகைச்சுவை என்பது ஒரு மனிதன் அணிய வேண்டிய நளினமான உடை அல்ல. கர்ணனைப் போல் பிறவியிலிருந்தே பூண வேண்டிய கவசம் அந்தக் கவசத்தை சோதனைக் காலத்தில் தானம் செய்து விட்டால்...?

"நகைச் சுவையாக எழுதுவது ஒரு சீரியசான வேலை, என்று சொல்லிவிட்டு, நகைச்சுவை எழுத்தாளர்கள் சுலபமாகத் தப்பித்துக் கொண்டு விடுகின்றனர்” என்று சீரியசாக எழுதுபவர்கள் நகைச்சுவையாகச் சொன்னாலும், நகைச்சுவைப் படைப்புகள் பத்திரிகைகளில் சந்திக்கும் சோகமான முடிவு சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.”

'சிரிப்பே சிறந்த மருந்து' என்று சொல்லப்படுவதால்தான் பத்திரிகைகளில் மருந்தளவில் நகைச்சுவைப் படைப்புகள் இடம் பெறுகின்றனவோ என்னவோ? மேற்கூறியவை, நகைச்சுவை எழுத்தாளர்களின் மனதில் அவ்வப்போது தோன்றக் கூடிய எண்ணங்கள் என்றாலும், தொடர்ந்து அவர்கள் வெற்றி பெறுவது, சிலந்தியைப் பார்த்து மனம் தளராது முயன்ற ப்ரூஸ் அரசனை முன் உதாரணமாகக் கொள்வதால்தான்!

முயற்சி திருவினையாகி மலர்ந்து உதிரிப்பூக்களை மாலையாகக் கட்டி மகிழ வேண்டும் என்று கண்ட கனவு நினைவானது மகிழ்ச்சி அளிக்கிறது. 'சிரி’ப்பூக்களின் மணம் வாசகர்களின் மனம் நிறைய வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

- ஜே.எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204451
Thirumathi Thirupathi Crorepathi

Read more from J.S. Raghavan

Related to Thirumathi Thirupathi Crorepathi

Related ebooks

Related categories

Reviews for Thirumathi Thirupathi Crorepathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumathi Thirupathi Crorepathi - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    திருமதி திருப்பதி க்ரோர்பதி

    Thirumathi Thirupathi Crorepathi

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    1. ஆலம் தூர் ஜாவ்!

    2. மழலை

    3. அபிநயக் கச்சேரி

    4. அலெக்சாந்தரின் 'பெல்'

    5. தீபாவளிக்கு வந்துவிடுங்கள்!

    6. வீரப்ப வினாத்தாள்

    7. பேஷண்ட் டாக்டர்

    8. வாயும் வயிறும் ஆபீசுமாக!

    9. இலக்கண விளக்கெண்ணெய்

    10. கண்டேன் லண்டனை!

    11. கிரிக்கெட்டியது....

    12. ஒரு மனைவி ஓராயிரம் சந்தேகம்

    13. கர்நாடக சங்கீதப் பாதுகாப்புச் சட்டம் - 1982.

    14. சுப நேரங்களில் சில மனிதர்கள்!

    15. கொசுவமூர்த்தியின் யக்ஞம்

    16. ஒரு எழுத்தாளரும் ஐந்து எடிட்டர்களும்

    17. K-7

    18. கிரிக்கெட் லொட லொடா!

    19. மிளகு சத்தியாகிரகம்!

    20. நகல்

    21. ஒரு மாடு ஒரு மரம்

    22. கல்லாத சமையல் சாதம்

    23. பிடி, உஷா!

    24. ஒரு 'புலி' பூனையாகிறது!

    25. ஆவி

    26. பசுமாடு பூட்டிய வண்டிகள்

    27. இனிப்பை மறந்த எறும்புகள்

    28. ராகம் தானம் பல்வலி!

    29. நாடகம்

    30. திருமதி, திருப்பதி, க்ரோர்பதி!

    31. மச்சதேவி

    32. சியன்னா ஐயன்னா ஏயன்னா

    33. வீரகேசியின் சேனை

    34. ஆற்று வெள்ளங்கள்

    35. தோண்டிற் பயனுடன் தோண்டுக!

    36. அவரோட ராவுகள்!

    37. ஹாலி சுபலாலி!

    38. நெகடிவ் அப்ரோச்

    39. சமந்தா சம்பந்தி

    40. ஆயிரம் துண்டு போடும் அபூர்வ இயந்திரமணி!

    41. ஸ்டெபிலைசர்

    42. ஆ! என்னருமை மண்டூகங்களே!

    முன்னுரை

    ஒரு ஜோக்

    நீங்கள் இந்த ஜோக்கைக் கேட்டிருக்கவும் கூடும்.

    ஓர் இளைஞன் ஒரு வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.

    வீட்டுக்காரர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். கடுப்புடன், நீங்கள் சேல்ஸ்மேன் தானே? நீங்கள் விற்பது எதுவாக இருந்தாலும் எனக்கு வேண்டாம்... கெட் அவுட்! என்று விரட்டினார்.

    மன்னிக்கணும். நான் சேல்ஸ்மேன் இல்லை. இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்!

    அடடா! நீங்க இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்டா? இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா?... வாங்க இப்படி!

    வீட்டுக்காரர் அந்த இளைஞனை மாடிக்கு அழைத்துப் போனார்.

    உச்சப்படியை அடைந்ததும், இளைஞனின் கழுத்தில் கையை வைத்து, கெட் அவுட்! என்று வீறிட்டபடியே படிகளில் உருட்டிவிட்டார்!

    இந்த ஜோக்கை என் நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, அவர் முகம் சுளித்தார்.

    என்ன சார் அநியாயமாக இருக்கிறது! அந்தப் பையன் என்ன தப்பு பண்ணினான்?... 'இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்' என்றுதானே சொன்னான்? அதற்காக அவனை மாடிப்படிகளில் உருட்டித் தள்ளுவதாவது! எலும்பு கிலும்பு முறிந்து விட்டதென்றால், பாவம் அவன் என்ன செய்வான்? முதுகுத் தண்டில் பலமாக அடிபட்டால் ஆயுசு முழுவதும் அவன் பாராஃப்னெஜிக்காகக் கட்டிலில் அல்லவா கிடக்க வேண்டியிருக்கும்! வீட்டுக்காரப் பாவி இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளலாமா? கேள்விமுறையே கிடையாதா?

    ஒரு நோக்கை படுசீரியஸாக எடுத்துக் கொண்டு அவர் பேசியதிலிருந்து ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.

    'குண்டு துளைக்காத கார், கவசம், காங்க்ரீட் சுவர் என்பது போல, நகைச்சுவை துளைக்காத நபர்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் அந்த மாபெரும் உண்மை.'

    இப்படிப்பட்ட 'ஹ்யூமர் - புரூஃப்' ஆசாமிகளைத் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் நண்பர் ஜே.எஸ். ராகவனின் நகைச்சுவைப் படைப்புகளைப் படித்தால் குலுங்கக் குலுங்கச் சிரிப்பார்கள். அது மட்டுமின்றி, திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பப் படித்து மகிழ்வார்கள் என்பது நிச்சயம்.

    ஜே.எஸ். ஆரின் கதை சொல்லும் பாணி, வார்த்தைப் பிரயோகங்கள் 'குஹால் நட்டுவனார்', 'மாஞ்சா குளித்த நூல்', 'சீமைக்குப் போகும் மீசை', 'கோவில் குருக்கள் காட்டும் தீபாராதனை போன்ற இட்லித் தட்டு' மைதாவின் மலிவுப் பதிப்பு..., வர்ணனைகள், பாத்திரங்கள் எல்லாமே வித்தியாசமானவை. 1930-களில் விலாப் புடைக்கச் சிரிக்க வைக்கும் என்று வர்ணிப்பார்கள். அது உண்மைதான் என்பதை இவரது படைப்புகளைப் படித்தாலும் படித்ததை நினைவுப்படுத்திப் பார்த்தாலும் அனுபவத்தில் உணரலாம்.

    இந்தத் தொகுப்பைப் பற்றி நிறையவே சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

    ஆனால், முன்னுரை பற்றி ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்து என் கையைப் பிடித்துத் தடுக்கிறது.

    அவர் சொன்னது இதோ:

    'முன்னுரை என்பது புதுசாகக் கட்டிய வீட்டைப் பார்க்க வருகிறவர்களின் தலையில் இடிக்கும் திருஷ்டிப் பூசணிக்காய் போல வழி மறிக்கக் கூடாது.'

    நான் திருஷ்டிப் பூசணிக்காயாக இருக்க விரும்பவில்லை.

    முகுந்தன்

    என்னுரை

    திருவள்ளுவர் சொற்படி, காதல்-நோய்க்குக் காரணமாகவும், அதே சமயம் மருந்தாகவும் காதலி அமைவது போல, நகைச்சுவை உணர்வுக்கு பி.ஜி. வுட்ஹஷசம், தேவனும் எனக்கு அமைந்து, இன்றும் அமைந்தபடி!

    டிராம் ஓடிக் கொண்டிருந்த நாட்களில் சென்னை ஹிக்கின்பாதம்சில் வாங்கிய முதல் வுட்ஹவுஸ் புத்தகத்திலிருந்து கோபுலுவின் உயிரோவியங்கள் அலங்கரிக்க வந்த தேவனின் படைப்புகள் வரை எல்லாமே, வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளால் ஸ்தம்பித்துப் போக முயன்ற உணர்வுகளை, மயிலிறகு போல் வருடி, புத்துணர்ச்சி ஊட்டி, இதயத்தையே 'கிஜூ கிஜூ' செய்து பார்வைகளில் கோணங்களை மாற்றியுள்ளன. இன்றும் மாற்றி வருகின்றன.

    என்னிடம் மாத்திரம் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால், நான் எப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்றார் மகாத்மா காந்தி.

    நகைச்சுவை என்பது ஒரு மனிதன் அணிய வேண்டிய நளினமான உடை அல்ல. கர்ணனைப் போல் பிறவியிலிருந்தே பூண வேண்டிய கவசம் அந்தக் கவசத்தை சோதனைக் காலத்தில் தானம் செய்து விட்டால்...?

    நகைச் சுவையாக எழுதுவது ஒரு சீரியசான வேலை, என்று சொல்லிவிட்டு, நகைச்சுவை எழுத்தாளர்கள் சுலபமாகத் தப்பித்துக் கொண்டு விடுகின்றனர் என்று சீரியசாக எழுதுபவர்கள் நகைச்சுவையாகச் சொன்னாலும், நகைச்சுவைப் படைப்புகள் பத்திரிகைகளில் சந்திக்கும் சோகமான முடிவு சிந்திக்க வேண்டிய விஷயமாகும்."

    'சிரிப்பே சிறந்த மருந்து' என்று சொல்லப்படுவதால்தான் பத்திரிகைகளில் மருந்தளவில் நகைச்சுவைப் படைப்புகள் இடம் பெறுகின்றனவோ என்னவோ?

    மேற்கூறியவை, நகைச்சுவை எழுத்தாளர்களின் மனதில் அவ்வப்போது தோன்றக் கூடிய எண்ணங்கள் என்றாலும், தொடர்ந்து அவர்கள் வெற்றி பெறுவது, சிலந்தியைப் பார்த்து மனம் தளராது முயன்ற ப்ரூஸ் அரசனை முன் உதாரணமாகக் கொள்வதால்தான்!

    முயற்சி திருவினையாகி மலர்ந்து உதிரிப்பூக்களை மாலையாகக் கட்டி மகிழ வேண்டும் என்று கண்ட கனவு நினைவானது மகிழ்ச்சி அளிக்கிறது. 'சிரி’ப்பூக்களின் மணம் வாசகர்களின் மனம் நிறைய வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

    ஜே.எஸ். ராகவன்

    1. ஆலம் தூர் ஜாவ்!

    (சென்னைப் பட்டணத்தில் உள்ள புரசைவாக்கம், மாம்பலம், அயனாவரம் போன்ற சில பகுதிகளுக்கு அப்பெயர்கள் வரக் காரணம் என்ன? என்ற ஆராய்ச்சியிலிருந்து 'பைரஸி’ செய்யப்பட்ட சில பகுதிகள், இதோ!)

    சிந்தாதிரிப்பேட்டை: சென்னையின் சில பகுதிகளில் டிராம்களும், பிற பகுதிகளில் நரிகளும் ஓடிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், ஜிப்பா தலையும், புனுகு வாசனையும் கூடிய ஒரு குஷால் நட்டுவனார் வசித்து வந்தார். நபும்சகன் என்ற வார்த்தைக்கு உருவ இலக்கணமாகத் தோன்றிய அந்தத் தளாங்கு ததிங்கிணத்தாவிற்குத் தீராத காதல்கள் இரண்டு. ஒன்று ஜதி. பிரிதொன்று பொடி.

    பயிற்சிக்குக் கச்சை (அதாவது கால்களில்) கட்டிக் கொண்டு வந்த பதினேழு வயதுக் கோல மயில்களில் ஒன்றைப் பொடி வாங்கி வரும்படி பணிப்பார். மட்டையைக் கையிலேந்தி அலட்சியமாக ஆடி அசைந்து வரும் கட்டிளம் சிட்டைப் பார்த்துப் பதைத்து சிந்தாதேடி, மட்டையை, சிந்தாதேடி மட்டையை என்று பொடி வெறியுடன் அவர் போடும் கூக்குரலைக் கேட்டுப் பழகிய அப்பேட்டை மக்கள், அவ்விடத்தைச் சிந்தாதடி மட்டை என்று குறிப்பிட ஆரம்பிக்க, அஃது நாளாவட்டத்தில் சிந்தாதிரிப் பேட்டையாக மறுவியது என்பர்.

    ஆலந்தூர்: தூய தோமயர் வசித்த பரங்கிமலை எனும் திருத்தலத்திற்கு அருகில் முன்னொரு காலத்தில் ஒரு முனிபுங்கவர் வசித்து வந்தார். சப்பணமிட்டு உட்கார்ந்தால் தரையைத் தொடும் தாடியையும், நின்றால் கூரையை முட்டும் ஜடா முடியையும் உடைய அந்தச் சித்தருக்கு இந்துஸ்தானி பாஷையும் நன்றாகத் தெரியும்.

    ஒரு சமயம், ஆலம் என்ற பெயருடைய ஒரு வட இந்தியத் தளுக்குச் சுந்தரி, ஏனோ அவரிடம் மையல் கொண்டு, கையில் வண்ண மலர் மாலை ஏந்தி, நிஷ்டையில் இருக்கும் அவர் எதிரில், தனது வாளிப்பான உடலின் அமோக ஒத்துழைப்புடன், சிறப்பாகச் சதிர் ஆடத் துவங்கினாள்.

    பத்தாயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்த விசுவாமித்திரர் போன்ற மகரிஷிகள்கூட இந்த மாதிரி அயிட்டங்களில் ஜகா வாங்கியவர்களாக இருந்தும், நம் முனிபுங்கவர் பலத்த உஷாருடன், கண்களில் தீப்பொறிகள் பறக்க, ஆலம் தூர் ஜாவ்! ஆலம் தூர் ஜாவ்! என்று பிரம்மச்சரிய வெறியுடன் கத்தி வரத் தொடங்கினார்.

    கட்டழகி முனி சிரேஷ்டரை வசீகரித்தாளா? சித்தர் சிற்றின்ப வலையில் விழுந்தாரா? இவர்கள் சங்கமத்தால் சிற்றுயிர் ஒன்று தோன்றியதா? என்ற கேள்விக்குத் தக்க விடைகள் கிடைக்காவிட்டாலும், அப்பகுதி மக்கள், ஆலம் தூர் ஜாவ் என்ற அந்தக் கோஷத்தை மந்திரமாகக் கருதி ஜாவ், 'ஓடிப் போக' ஆலம் தூர் அல்லது ஆலந்தூராக நிலைத்து நின்றது என்று தெரிய வருகிறது.

    அயனாவரம்: கோன் ஐஸூம், குச்சி ஐஸூம் இன்னும் வராததால், குழந்தைகள் வாழைப்பழத்தை அழுது கேட்டுப் பின்னர் விரும்பிப் புசித்து வந்த அக்காலத்தில், சென்னையம்பதியில் ஒரு பகுதியில் படர்ந்த ஓர் ஆலமரத்தின் கீழ் ஒரு வியாபாரி பழ வியாபாரம் செய்து வந்தார்.

    ரஸ்தாளி, பேயன், பச்சை, பொட்டு, மொந்தன், நேந்திரம் போன்ற விதவிதமான வாழைப் பழங்களைத் தார்தாராகத் தொங்கவிடப்பட்ட அக்கடையிலிருந்து மக்கள் பிரியமாகப் பழங்களை வாங்கிச் செல்கையில், அருகே வசித்து வந்த வானரங்கள் சட்டென்று தாவி, 'லபக்’கென்று அபகரித்துச் செல்வது வழக்கம்.

    நீலப் பின்புறம் உடைய வானரம் ஒன்று கடிக்க, அக்காயத்தால் மரணமுற்ற ஆசை நாயகியின் பிரிவால் பைத்தியம் பிடித்த ஓர் அன்பர், வானரக் குலத்திற்குத் தன்னை ஒரு முழு நேர எதிரியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, கடையருகே நின்று, பழம் வாங்கிச் செல்பவர்களிடம் ஐயா, வானரம்! ஐயா வானரம்! என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்துக் கொண்டு இருப்பார்.

    அவ்வாறு அவர் குரல் கொடுத்த பகுதியே, அதாங்க, அந்த ஐயா வானரம் இடம் என்று பொதுமக்களால் குறிப்பிடப்பட்டு, பின்னர் அயனாவரமாகத் திரிந்தது.

    புரசைவாக்கம்: ஸ்படிகம் போல் தெளிந்த நீருடைய கூவம் நதியில், பச்சையப்ப முதலியார் அவர்கள் குளித்து வந்த அந்தப் பொன்னாட்களில், சென்னையின் ஒரு பகுதியில், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நற்குணங்கள் நிரம்பிய ஒரு பதிவிரதை வசித்து வந்தாள்.

    பொருள் திரட்டும் பொருட்டு அவள் கணவன் ஒரு சமயம் அவளிடமிருந்து பிரியாவிடை பெற்று, கத்தி, பிச்சுவா, சாவிக்கொத்து, கன்னக்கோல் போன்ற உபகரணங்களை ஏந்தி ஓர் அமாவாசை இரவு அருள்மிகு முனீஸ்வரனை வழிபட்டுச் சென்றவன், பல இரவுகளாகியும் திரும்பி வரவே இல்லை!

    கணவனைப் பிரிந்த அக்காரிகையானப்பட்டவள் மெலிந்து, வாடி நாளாவட்டத்தில் பெருமூச்சுகள் விட ஆரம்பித்தாள். அப்பெருமூச்சுகள் நீண்டு உஷ்ணம் ஏறி அனல் காற்றாக உரு எடுக்கத் தொடங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் அச்சூட்டினால் துவையலுக்காக குமுட்டி அடுப்பில் போடப்பட்ட குண்டுக் கத்திரிக்காயைப் போல் வதங்கினாலும், அக்கற்புடையாளின் பதி பக்தியை மெச்சி, புருஷ ஏக்கம், புருஷ ஏக்கம் என்று பரவசத்துடன் விளிக்க, அவ்வழியே வந்த ஆங்கிலேயத் துரை அவர்கள், அதை வாங்கி, 'புர்ஷவாக்கம்' என்று தன் பரங்கி உதடுகளால் உச்சரிக்க, அப்பகுதிக்கு அப்பெயரே வழங்கப்பட ஆரம்பித்தது.

    வண்டலூர்: சென்னை மாநகருக்கு வெளியே உள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் வசித்து வந்த ஆண்கள், தொழில் நிமித்தம் ஜார்ஜ் டவுன் அல்லது கறுப்பர் டவுன் பகுதிகளுக்குச் சென்று உழைத்துவிட்டுத் தத்தம் வீடுகளுக்குத் திரும்பும் வேளையில் முதல் ஜாமம் முடிந்து, வெளியில் நாய்களும், பேய்களும் உலவத் துவங்கிவிடும்.

    கணவன்மார்களுக்காக, கண்களில் தூக்கத்துடனும், வயிற்றில் பசியுடனும் காத்திருக்கும் பெண்கள், பசி மிகுதியால் ரசத்தின் தெளிந்த பகுதியில் சாதம் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு விட்டுப் படுத்து விடுவது வழக்கம். வீடு திரும்பும் ஆண்களுக்குச் சுள்ளென்று உரைக்கும் பச்சை மிளகாய்த் துண்டுகள், ரசப்பொடி, இஞ்சி, புளிச்சக்கை, பருப்பு ஆகியவை சேர்ந்த இரண்டாந்தரக் கலவைதான் மிஞ்சும்.

    வேலை முடிந்தவுடன், நேரத்திற்கு வீடு திரும்பி, தெளிந்த சூடான ரசத்தில் சாதம் கலந்து உண்ணும் ஜார்ஜ் டவுனிலேயே வசிக்கும் திமிர் பிடித்த ஆண்கள், தம் புறநகர்ச் சகாக்களை வண்டலூர்க்காரர்கள் என்று குத்தலாகக் குறிப்பிடத் துவங்க, நாளடைவில் அப்பெயரே அப்புறநகர் பகுதிக்கு ஸ்திரமாகி விட்டது என்பர்.

    மாம்பலம்: முன்னொரு காலத்தில் மைலாப்பூர் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஒரு பருத்த ஸ்தீரி லோலன் வசித்து வந்தான். செப்புச் சிலை போன்ற அழகிய மனைவி இருக்கையில், அரபுக் குதிரையின் கம்பீரத்துடன் நடக்கும் ஆரணங்கு ஒருத்தி மேல் மையல் கொண்டு பெரிய வீட்டைப் புறக்கணித்துச் சிறிய வீட்டில் சிற்றின்பங்களைச் சிறப்பாகத் துய்க்கத் துவங்கினான்.

    கைத்தலம் பற்றிய கணவன் உதாசீனப்படுத்தியதால் சீறியெழுந்த அப்பெண் புலி, தன் பதிவிரத பலத்தால் பெற்ற மந்திரச் சக்தியை உபயோகிக்கும் தருணம் நெருங்கியதை உணர்ந்து, சின்ன வீட்டை நோக்கி வலது கையை உயர்த்தி, சில 'மம்போ ஜம்போக்'களை உச்சாடனம் செய்தாள்.

    ஆஹா! அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கட்டிலில் ஆசை நாயகியின் அருகே துயில் கொண்டிருந்த அந்தப் பருத்த ஸ்தீரி லோலன், உடனே மேலே ஈரடி எழும்பி, மெல்ல மிதந்து பெரிய வீட்டை நோக்கி, அகன்ற ஆகாய விமானம் போல் நகர ஆரம்பித்தான்.

    சட்டென்று கண் விழித்த ஆசை நாயகி தன் காதலனைத் தூக்கிச் செல்ல ஏவப்பட்டவை அந்தப் பகுதிப் பயில்வான்களான கொசுக்கள் என்பதை உணர்ந்து, உதடுகள் துடிக்க, எம்மாம்பலம், எம்மாம்பலம்! என்று வியக்க, காதலன் பெரிய வீட்டில் கம்பீரமாக 'லாண்ட்' ஆனதைப் பார்த்துப் பேதலித்து, 'எம்மாம்பலம், எம்மாம்பலம்' என்று சதா பிதற்றிக் கொண்டே திரிய, அப்பகுதியை மக்கள், எம்மாம்பலம் என்று அழைக்க ஆரம்பித்து, பின்னர் அதை மாம்பலமாகக் குறுக்கி விட்டனர் என்பர் அறிஞர்!

    2. மழலை

    பாப்பா! பாப்பா! உம் பேரு என்னம்மா?

    மை நேம் இஸ் பி.ஆர். லஷ்மி

    அச்சுமியா? அங்க ஒக்காச்சிண்டு என்ன சாப்பிடறே?

    லஞ்ச் சாப்பிடறேன், மாமா!

    மம்மம் சாப்பிடறயா! என்ன மம்மம்?

    பருப்பு சாதம்

    பப்பு மம்மா? அப்புறம் என்ன சாப்பிடுவே?

    ரசம் சாதம்.

    அசம் மம்மா? அப்புறம்.

    தயிர் சாதம்.

    தச்சி மம்மா?

    எஸ் அங்கிள். டாடியைப் பார்க்க வந்தீங்களா?

    கன்னுக்குட்டி! கரெக்டா சொல்லிட்டியே. அப்பா 'ஓ' போயிருக்காளா?

    எட்டு மணிக்குப் போனா, ரேஷன்லே சக்கரை வாங்க.

    அக்கை வாங்கவா? அக்கை பிடிக்குமா நோக்கு?

    ஹூஹூம், பிடிக்காது. கிராக்ஜாக் பிஸ்கெட்தான் பிடிக்கும்.

    பிக்கெட் பிடிக்குமா? வேறென்ன பிடிக்கும்?

    காபி

    பாப்பியா? அப்போ நீ கிண்டிலே இங்கா குச்ச மாட்டியா?

    கிண்டியிலேயும் குடிக்க மாட்டேன், சைதாப்பேட்டையிலும் குடிக்க மாட்டேன்.

    எவ்வளவு சமத்துடி, என் பட்டுக்குட்டி! இதான் உன் மியாவ் பொம்மையா?

    பூனை பொம்மை இது அங்கிள்! பாய் பூனையாக்கும். மீசை இருக்கு பாருங்கோ!

    ஜூஜூ பொம்மை உங்கிட்டே இருக்கா?

    நாய்க்குட்டியே இருக்கு. 'பாம்'னு பேரு. கூப்பிடட்டுமா? பாாாாம்....

    வாணாம், வாணாம். மாமாவைக் கச்சுடும். ஆமாம் பாப்பாவோட அம்மா எங்கே?

    மதுரை போயிருக்கா?

    "எதிலே?

    Enjoying the preview?
    Page 1 of 1