Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanna Mango Thinna Asaiya
Kanna Mango Thinna Asaiya
Kanna Mango Thinna Asaiya
Ebook194 pages55 minutes

Kanna Mango Thinna Asaiya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மாம்பழம் வேணுங்கிறவங்க எல்லாம் கை தூக்கலாம்’ என்று குரல் கொடுத்தால், பலர் இரண்டு கைகளையும் உயரத்தூக்கி மகிழ்வார்கள். ‘தோள்பட்டையில் சுளுக்கு. அதான் தூக்க முடியவில்லை’ என்று சிலர் தன்நிலை விளக்கம் அளித்து, மாம்பழத்தின் மீதான ஈர்ப்பை பதிவு செய்தாலும் செய்வார்கள்.

பங்கனபள்ளி, மல்கோவா, அல்ஃபோன்ஸா, கிளி மூக்கு, நீலம் என்று பல சுவையான மாம்பழங்கள் இருப்பதுபோல, வகை வகையான நகைச்சுவைகளும் உண்டு. மாம்பழம் பிடிக்காத சில அபூர்வ பிறவிகளைப்போல, நகைச்சுவை பிடிக்காத சிலர், ‘மகிழ்வித்து மகிழ்’ என்கிற தாரக மந்திரத்தை உள்வாங்காமல், ‘அழுது அழவிடு’ என்று சீரியல்களை நாடுவதைப் பார்த்து, அழுவதா சிரிப்புதா...?

மாம்பழத்தின் உள்ளே கட்டாயம் ஒரு கொட்டை இருக்கும். இருந்தாகணும், நகைச்சுவை எழுதுவது மெத்தக் கடினம் என்பதன் குறியீடுதான் அது. நகைச்சுவை என்னும் பெரிய பலாப்பழத்தைத் தின்று கொட்டை போட்ட பேராசிரியர் கல்கி கூட, நகைச்சுவை எழுதுவது, ‘கொட்டைப் பாக்கைப் பிளந்து, பாதாங்கீர் எடுப்பதற்குச் சமமய்யா’ என்று அனுபவித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஒரு குழந்தையின் விலாவில் கிச்சு கிச்சு செய்தால் சிரிக்கும், பெரியவர்களான அவ்வாறு செய்ய முடியுமா? விளாசுவதற்கு, சுருட்டிய குடையை எடுத்துக் கொள்வார்கள். வார்த்தைகளால் தான் செய்ய வேண்டும். சிரிக்க வைக்க வேண்டும் என்கிற இதயபூர்வமான அந்த ஆசையுடன், அதற்குத் தேவையான வார்த்தைகளின் கோர்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடின உழைப்பும், நகைச்சுவை எழுத்தாளர்களுக்குள் இயற்கையாக இருக்க வேண்டிய கொழுப்பும், இதயம் சார்ந்த நாளங்களை அடைத்துவிடுகின்றது என்றாலும், அதை பைபாஸ் செய்து விட்டு, கடமையைச் செய்வதில் ஒரு பரமசுகம்.

‘கண்ணா! மாம்பழம் தின்ன ஆசையா?’ என்கிற இந்தக் கூடையில் உள்ள மூனு டஜன் மாம்பழங்களும், பிரபலவட்டார ஏடுகளாக சக்கைபோடு போட்டுவரும் இதழ்களில், வாரத்திற்கு ஒன்றாக வெளிவந்த ‘தமாஷா வரிகள்’ கட்டுரைகளின் குவியல் வண்டு புகாதவை. அப்படியே சாப்பிடலாம்.

இப்பழங்களின் விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்த வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கண்களில் ஒற்றிக்கொள்ளும் வகையில் ஓவியங்களைத் தீட்டிய நடனம், அம்சமாக அச்சிட்டு வெளியிட்ட அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் கூடை கூடையாக நன்றிகள்.

வாரம்தோறும் வாசித்து என்னைப் பாராட்டிய பல வாசகர்கள். இந்தத் தொகுப்பை வாங்கிப் படித்து மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விப்பார்கள் என்கிற பழமான நம்பிக்கையுடன்,

- ஜே.எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204456
Kanna Mango Thinna Asaiya

Read more from J.S. Raghavan

Related to Kanna Mango Thinna Asaiya

Related ebooks

Related categories

Reviews for Kanna Mango Thinna Asaiya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanna Mango Thinna Asaiya - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    கண்ணா மேங்கோ தின்ன ஆசையா

    Kanna Mango Thinna Asaiya

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. வெந்தயத்தேவன்

    2. குந்தியும் காந்தாரியும்!

    3. கும்பகோணப்பாட்டி

    4. நாகராஜா! நாகராஜா!!

    5. பேசும் மடந்தை!

    6. தாத்தாவுடன் குரோர்பதி

    7. ‘பிரம்பூர்’ வள்ளல்கள்

    8. தலைநகரில் படைகளா?

    9. மின்சார ராகு காலம்!

    10. கண்ணா! மேங்கோ தின்ன ஆசையா?

    11. தம்பையாவின் ஆராய்ச்சிகள்

    12. பிளானர் பாஸ்கரன்

    13. மாப்பிள்ளையின் நண்பேன்டா!

    14. பெருக்கலும் முடக்கலும்

    15. டாப்பா? டிராப்பா?

    16. எவ அவ?

    17. அமிலமொழி ஆதிமூலம்!

    18. மீண்டும் மீண்டும் தம்பையா

    19. சண்டைகள் ஆரம்பிப்பது எப்படி?

    20. நில், பார், புறப்படு!

    21. குரு!

    22. முன்சீட்டும் பின்சீட்டும்

    23. சாப்பாட்டு ராணி

    24. மயக்கம் என்ன?

    25. இம்ப்போர்டட் பாப் கார்ன்!

    26. கலகக்காரரை சந்தித்தேன்

    27. கண்ணாடியைப் பார்க்காதே!

    28. அன்னக்கிளியும் சொர்ணக்கிளியும்!

    29. வீட்டுக்கு வந்த குரங்கு

    30. அவியலின் குவியல்!

    31. பூண்டின் மேல் பூண்ட பகை

    32. கிண்டில் புழு!

    33. மாம்பலத்தில் கும்பகோணம்!

    34. அர்ச்சனாவும் அர்ச்சனையும்!

    35. சின்னம்மா, பெரியம்மா, டயலம்மா!

    36. சரஸ்வதி பூஜை

    முன்னுரை

    ‘மாம்பழம் வேணுங்கிறவங்க எல்லாம் கை தூக்கலாம்’ என்று குரல் கொடுத்தால், பலர் இரண்டு கைகளையும் உயரத்தூக்கி மகிழ்வார்கள். ‘தோள்பட்டையில் சுளுக்கு. அதான் தூக்க முடியவில்லை’ என்று சிலர் தன்நிலை விளக்கம் அளித்து, மாம்பழத்தின் மீதான ஈர்ப்பை பதிவு செய்தாலும் செய்வார்கள்.

    பங்கனபள்ளி, மல்கோவா, அல்ஃபோன்ஸா, கிளி மூக்கு, நீலம் என்று பல சுவையான மாம்பழங்கள் இருப்பதுபோல, வகை வகையான நகைச்சுவைகளும் உண்டு. மாம்பழம் பிடிக்காத சில அபூர்வ பிறவிகளைப்போல, நகைச்சுவை பிடிக்காத சிலர், ‘மகிழ்வித்து மகிழ்’ என்கிற தாரக மந்திரத்தை உள்வாங்காமல், ‘அழுது அழவிடு’ என்று சீரியல்களை நாடுவதைப் பார்த்து, அழுவதா சிரிப்புதா...?

    மாம்பழத்தின் உள்ளே கட்டாயம் ஒரு கொட்டை இருக்கும். இருந்தாகணும், நகைச்சுவை எழுதுவது மெத்தக் கடினம் என்பதன் குறியீடுதான் அது. நகைச்சுவை என்னும் பெரிய பலாப்பழத்தைத் தின்று கொட்டை போட்ட பேராசிரியர் கல்கி கூட, நகைச்சுவை எழுதுவது, ‘கொட்டைப் பாக்கைப் பிளந்து, பாதாங்கீர் எடுப்பதற்குச் சமமய்யா’ என்று அனுபவித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

    ஒரு குழந்தையின் விலாவில் கிச்சு கிச்சு செய்தால் சிரிக்கும், பெரியவர்களான அவ்வாறு செய்ய முடியுமா? விளாசுவதற்கு, சுருட்டிய குடையை எடுத்துக் கொள்வார்கள். வார்த்தைகளால் தான் செய்ய வேண்டும். சிரிக்க வைக்க வேண்டும் என்கிற இதயபூர்வமான அந்த ஆசையுடன், அதற்குத் தேவையான வார்த்தைகளின் கோர்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடின உழைப்பும், நகைச்சுவை எழுத்தாளர்களுக்குள் இயற்கையாக இருக்க வேண்டிய கொழுப்பும், இதயம் சார்ந்த நாளங்களை அடைத்துவிடுகின்றது என்றாலும், அதை பைபாஸ் செய்து விட்டு, கடமையைச் செய்வதில் ஒரு பரமசுகம்.

    ‘கண்ணா! மாம்பழம் தின்ன ஆசையா?’ என்கிற இந்தக் கூடையில் உள்ள மூனு டஜன் மாம்பழங்களும், பிரபலவட்டார ஏடுகளாக சக்கைபோடு போட்டுவரும் இதழ்களில், வாரத்திற்கு ஒன்றாக வெளிவந்த ‘தமாஷா வரிகள்’ கட்டுரைகளின் குவியல் வண்டு புகாதவை. அப்படியே சாப்பிடலாம்.

    இப்பழங்களின் விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்த வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கண்களில் ஒற்றிக்கொள்ளும் வகையில் ஓவியங்களைத் தீட்டிய நடனம், அம்சமாக அச்சிட்டு வெளியிட்ட அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் கூடை கூடையாக நன்றிகள்.

    வாரம்தோறும் வாசித்து என்னைப் பாராட்டிய பல வாசகர்கள். இந்தத் தொகுப்பை வாங்கிப் படித்து மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விப்பார்கள் என்கிற பழமான நம்பிக்கையுடன்,

    ஜே.எஸ். ராகவன்

    1. வெந்தயத்தேவன்

    சர்க்கரை நோய், பணக்காரர்களுக்குத்தான் வரும், உடலுழைக்கும் சாமானியர்களுக்கு வராது என்று கருதப்பட்ட காலத்தில், பூந்தமல்லி மளிகை வியாபாரி சுப்பையாவிடம் அபரிமித ஐஸ்வரியம் வந்து சேராவிட்டாலும், டயாபடீஸ் வந்தடைந்து சிக்கென்று பிடித்துக் கொண்டுவிட்டது.

    நாள் முழுவதும் மூன்று பட்டை பால்வெள்ளை விபூதி அணிந்து காட்சி அளிக்கும், தேரடித் தெரு மருத்துவர் லோகநாதன் பிள்ளை, ‘சுப்பையா உங்களை வாட்டத் துவங்கி இருப்பது நீரிழிவு வியாதி’ என்று தூய தமிழில் செப்பிய தினத்திலிருந்து, சுப்பையா எண்ணி பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டித்தார். தனிக்கொடி இருந்திருந்தால், அரைக் கம்பத்தில் பறக்கவிட்டிருப்பார்.

    இந்த இந்தப் பண்டிகைக்கு, இந்த இந்த இனிப்பு என்று அட்டவணை போட்டு, பித்தளைத் தூக்கில் காபந்து செய்யப்பட்டு வைத்திருக்கும் பட்சணங்களை ஒரு கை பார்க்கும் சுப்பையாவைப் பார்த்து, அவர் மனைவி ராஜேஸ்வரி கண்டிப்பது வழக்கம். நோய் பீடிக்கப்பட்ட தலைப்புச் செய்தியைக் கேட்ட அவள், ‘இம்புட்டு இனிப்புப் பலகாரங்களைச் சாப்பிடாதீங்கன்னு அடிச்சிண்டேனோ, கேட்டியேளா?’ என்று நீட்டி முழக்கி, சீனி போடாத காப்பித் தண்ணியை அவரிடம் நீட்டினாள். மனத்தில் தோன்றியதை சிதறு தேங்காயாகப் போட்டு உடைத்துவிடும் குணவதி அவள்.

    மகாபாரதத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜேஸ்வரிக்கு காந்தாரியின்பால் ஒரு ‘இது’, ‘இது’ என்றால், ஈர்ப்பு. கணவன் திருதிராஷ்டிரனுக்குக் கண் பார்வை இல்லை என்பதால், அவர் அனுபவிக்காத விழித்திறனை தான் அனுபவிப்பது சுயநலம் என்று கருதி, கண்களைக் கட்டிக் கொண்ட தியாகத்துக்கு ஈடாக தானும் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பூரித்து, இனிப்பு உண்ணா நோன்பை மனம் உவந்து தானும் மேற்கொண்டாள்.

    மருத்துவர் லோகநாதம் பிள்ளை பரிந்துரைத்தபடி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வெந்தயத்தை, சாமி அறையில் வைத்துப் பூசிக்கும் நிலைக்கு அடுத்தபடியாக உயர்த்தி, சமையலில் பாவிக்கத் தொடங்கினாள்.

    இதன் விளைவாக, சுப்பையா வீட்டில் வெந்தயத்தால் தயாரிக்கப்படும் வெந்தய சாதம், வெந்தய இட்லி, வெந்தய

    அடை, வெந்தயக் கீரை, வெந்தய ரொட்டி , வெந்தயத்துகையல், வெந்தய மாங்காய், வெந்தயக் கீரை புலவு, சர்வம் சிவமயம் என்பது போல், சர்வமும் வெந்தயம் தால், சுப்பையாவின் அன்றாடப் பேச்சிலும், வெந்தயம் இடறுபட ஆரம்பித்தது. ஒருநாள், நீண்ட இடைவெளிக்குப் வீட்டுக்கு வந்த தன் மைத்துனனை அன்பு நெகிழ, 'அப்பா.. வழியா வந்தயா வா!' என்று வரவேற்பதற்குப் பால், நம் புரண்டு, 'அப்பா ஒரு வழியா வெந்தயா வா' என்று அவனை திகைக்கவைத்தார்.

    மனைவி ராஜேஸ்வரி, வீட்டில் என்று மட்டும் இல்லாமல், கணவனுடைய கடையிலும் வெந்தய ஆதிக்கத்தை நி நாட்டி, சர்க்கரை மட்டங்களை பின்வாங்கச் சொன்னார். முனையில் சுருட்டப்பட்ட சர்க்கரை சாக்குகள், கடையின் பின்ன தள்ளப்பட்டன. குண்டு வெல்ல, அச்சு வெல்ல மூட்டைகட… அவ்வாறே புறம் போயின. கடையின் முகப்பில், கல்லாவில் மிக அருகில், வெந்தய மூட்டை தஞ்சை பெரிய கோயில் நந்தியாக வீற்றிருந்தது.

    கடைவாசலில் கடை போட்டிருந்த கறிகாய்க்காரி அன்னம்மாவை தினம் விரட்டி அடித்திருந்து சுப்பையா, மனைவியின் பரிந்துரையின்பேரில், தொடர்ந்து கடைபோட ஒரு நிபந்தனையுடன் அனுமதித்தார். அதாவது. சர்க்கரை வியாதிக்கு மருந்தான நெல்லிக்காய், பாகற்காய். கோவைக்காய், கொத்தவரங்காய் போன்ற ஐட்டங்கள், விரிப்பில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே.

    தன்கடை எதிரில் இருந்த அவருடைய சிறு வீட்டில் குடியிருந்த வக்கீலையும் நல்ல வார்த்தை சொல்லி, மாற்று வீடு அளித்து, காலிபண்ண வைத்ததன் காரணம், வேறு ஏதோ என்று வெளிப்படையாகப் பேசப்பட்டாலும், மூல காரணம், அவர் பெயர் சக்கரை என்பதால்தான்.

    ஒரு ஞாயிறு அன்று, மருத்துவர் லோகநாதம் பிள்ளையின் வாசலில், கம்மென்று மணக்கும் மகிழம் பூ மரத்தின் கீழுள்ள சாருமணையில் கூடும் சிவனடியார் திருக்கூட்டத்தில், மளிகை சுப்பையாவின் சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் விவரத்தை சிலாகித்துக்கூறி, பின் வருமாறு தொடர்ந்தார்.

    ‘இன்று ஒரு முக்கியமான

    Enjoying the preview?
    Page 1 of 1