Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maavadu Ramudu
Maavadu Ramudu
Maavadu Ramudu
Ebook206 pages1 hour

Maavadu Ramudu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மாவடு பிடிக்குமா?' என்று கேட்டால், ‘பிடிக்குமாவா? என்ற துடுக்கான பதில் வெடுக்கென்று பலரிடமிருந்து வரும். பளபள பீங்கான்ஜாடியில், உப்பு மற்றும் காரப்பொடி கலந்த சாகரத்தில் பதமாக ஊறி, அவ்வப்போது குலுக்கிவிடப்பட்டு, பிரத்யேகக் கரண்டியால் பரிமாறப்பட்டகாம்புடன் பரிமளிக்கும் ஒரு நத்தம் அல்லது சேலம் மாவடு, நானிருக்க பயமேன் என்று உறுதி அளித்தால், சரியாக உறையாத தயிர்விட்டுப் பிசைந்த சாதம்கூட சுவையாக அமைந்துவிடும். தயிர் புளிக்காமல், கெட்டியாக அமைந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். பிரும்மானந்தம்.

நகைச்சுவையும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அவ்வப்போது சவசவ என்று அமைந்துவிடும் வாழ்க்கையையும் அது ருசிகரமாக ஆக்கிவிடுகிறது. தொட்டுக்கொள்ள நகைச்சுவைக் காட்சிகள் இல்லாவிட்டால், சினிமாக்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாகாமல், ஃபிலிம் பெட்டிக்குள் பாம்பாக முடங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு.

கல்கி, தேவன், நாடோடி போன்ற வித்தகர்கள், எழுத்தில் கொண்டு வந்த நகைச்சுவைக்கு ஈடு இணை இல்லை. நாற்பது, ஐம்பதுகளை பலருக்கு இன்றும் மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொண்டுவரும் அவர்களுடைய படைப்புகள், பொக்கிஷங்கள், கணினி, ஏசி போன்று தற்காலத்தில் மலிந்து இருக்கும் பல வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில், உடல் உபாதைகளையும் மீறி, அவர்கள் செய்தது சாதனை அல்ல. தவம்.

தங்கள் பங்கிற்கு, அவ்வாறு பேணப்பட்ட நகைச்சுவைக்காக, வாராவாரம் வட்டார ஏடுகளில் ஒதுக்கப்பட்ட இடத்தில், 'தமாஷா வரிகள்’ என்கிற தலைப்பில் நான் ஒரு சிறிய முயற்சியாக எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று உங்கள் கைகளில் தவழ்கிறது. மெல்லிய நகைச்சுவையில், மாவடுவாக நன்றாக ஊறியிருக்கும் என்று நம்புகிறேன்.

விரைவில், ஐநூற்றி ஐம்பது வாரங்களைத் தாண்ட இருக்கும் இக்கட்டுரைகளைப் படித்து, அவ்வப்போது மெயிலிலும், நேரிலும், தொலைபேசியிலும் பாராட்டிவரும் வாசகர்களுக்கு என் நன்றிகள். இதற்கு வித்திட்ட, வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கட்டுரைகளுக்கான படங்களைத் தீட்டி, காலம் தவறாது அளித்துவரும் ஓவியர் நடனம் மற்றும் சிறந்த முறையில் புத்தகத்தை பதிப்பித்திருக்கும் அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் தான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜாடியை குலுக்கி, அகப்பையில் சிக்கும் எந்த மாவடுவையும் சுவைக்கலாம் என்பதுபோல், புத்தகத்தைப் பிரித்து, எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் படிக்கலாம். சுவைக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
ஜே.எஸ்.ராகவன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204464
Maavadu Ramudu

Read more from J.S. Raghavan

Related to Maavadu Ramudu

Related ebooks

Related categories

Reviews for Maavadu Ramudu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maavadu Ramudu - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    மாவடு ராமுடு

    Maavadu Ramudu

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    முன்னுரை

    1. முழம் இருபது ரூபா!

    2. விசாரணை கமிஷன்

    3. மேனேஜர் இஷ்டம் போல்!

    4. கல்யாணத்தை நிறுத்திப் பார்!

    5. ராஜராஜேஸ்வரி!

    6. கொலம் புஸ்!

    7. 'அமைதிக்கா!

    8. சபேசா!

    9. குழந்தை ஹிட்லர்!

    10. மாவடு ராமுடு!

    11. இந்திய உண்டியில் அமெரிக்க டாலர்கள்

    12. மஞ்சள் கலர் பஸ்!

    13. லேடி ரியால்டர்!

    14. ஒரு காக்காய்-டோ நட்கதை!

    15. சட்டம் போட்ட கோட்!

    16. நடராஜா சர்வீஸ்!

    17. நோ ஸ்மைல் ப்ளீஸ்!

    18. அன்புள்ள டயரி

    19. ஆராய்ச்சி அரிப்பு!

    20. கனவில் வரும் ஆஞ்சநேயர்

    21. ஜாதகப் பறவைகள்!

    22. விருப்பு, வெறுப்பு, பருப்பு!

    23. சுதந்தர தின உரை

    24. சிக்கனத்தில் சிக்கிய ராஜா!

    25. முட்டிபோட்டு உட்கார்!

    26. காக்கா... உன் பேச்சு கா… கா!

    27. பேரம் பேசி வாழ்க!

    28. உதாரண இரவு வாட்ச்மென்

    29. அழுமூஞ்சிகள் கிளப்!

    30. அம்ப்பாவா?

    31. ஊழல்விளையாட்டு

    32. அஞ்சைனா புத்திரன்!

    33. இட்லியா? தோசையா?

    34. சாப்பாட்டழகர்

    35. சுட்டக்யூடெக்ஸா? சுடாத க்யூடெக்ஸா?

    36. சுருக்கெழுத்து சுந்தரிகள்!

    முன்னுரை

    ‘மாவடு பிடிக்குமா?' என்று கேட்டால், ‘பிடிக்குமாவா? என்ற துடுக்கான பதில் வெடுக்கென்று பலரிடமிருந்து வரும். பளபள பீங்கான்ஜாடியில், உப்பு மற்றும் காரப்பொடி கலந்த சாகரத்தில் பதமாக ஊறி, அவ்வப்போது குலுக்கிவிடப்பட்டு, பிரத்யேகக் கரண்டியால் பரிமாறப்பட்டகாம்புடன் பரிமளிக்கும் ஒரு நத்தம் அல்லது சேலம் மாவடு, நானிருக்க பயமேன் என்று உறுதி அளித்தால், சரியாக உறையாத தயிர்விட்டுப் பிசைந்த சாதம்கூட சுவையாக அமைந்துவிடும். தயிர் புளிக்காமல், கெட்டியாக அமைந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். பிரும்மானந்தம்.

    நகைச்சுவையும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அவ்வப்போது சவசவ என்று அமைந்துவிடும் வாழ்க்கையையும் அது ருசிகரமாக ஆக்கிவிடுகிறது. தொட்டுக்கொள்ள நகைச்சுவைக் காட்சிகள் இல்லாவிட்டால், சினிமாக்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாகாமல், ஃபிலிம் பெட்டிக்குள் பாம்பாக முடங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு.

    கல்கி, தேவன், நாடோடி போன்ற வித்தகர்கள், எழுத்தில் கொண்டு வந்த நகைச்சுவைக்கு ஈடு இணை இல்லை. நாற்பது, ஐம்பதுகளை பலருக்கு இன்றும் மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொண்டுவரும் அவர்களுடைய படைப்புகள், பொக்கிஷங்கள், கணினி, ஏசி போன்று தற்காலத்தில் மலிந்து இருக்கும் பல வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில், உடல் உபாதைகளையும் மீறி, அவர்கள் செய்தது சாதனை அல்ல. தவம்.

    தங்கள் பங்கிற்கு, அவ்வாறு பேணப்பட்ட நகைச்சுவைக்காக, வாராவாரம் வட்டார ஏடுகளில் ஒதுக்கப்பட்ட இடத்தில், 'தமாஷா வரிகள்’ என்கிற தலைப்பில் நான் ஒரு சிறிய முயற்சியாக எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று உங்கள் கைகளில் தவழ்கிறது. மெல்லிய நகைச்சுவையில், மாவடுவாக நன்றாக ஊறியிருக்கும் என்று நம்புகிறேன்.

    விரைவில், ஐநூற்றி ஐம்பது வாரங்களைத் தாண்ட இருக்கும் இக்கட்டுரைகளைப் படித்து, அவ்வப்போது மெயிலிலும், நேரிலும், தொலைபேசியிலும் பாராட்டிவரும் வாசகர்களுக்கு என் நன்றிகள். இதற்கு வித்திட்ட, வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், கட்டுரைகளுக்கான படங்களைத் தீட்டி, காலம் தவறாது அளித்துவரும் ஓவியர் நடனம் மற்றும் சிறந்த முறையில் புத்தகத்தை பதிப்பித்திருக்கும் அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களுக்கும் தான் பெரிதும் கடமைப்பட்டிருக் கிறேன்.

    ஜாடியை குலுக்கி, அகப்பையில் சிக்கும் எந்த மாவடுவையும் சுவைக்கலாம் என்பதுபோல், புத்தகத்தைப் பிரித்து, எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் படிக்கலாம். சுவைக்கும் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,

    ஜே.எஸ்.ராகவன்

    1. முழம் இருபது ரூபா!

    (பூக்கடை வாசலில் சூரி நிற்கிறார்)

    சூரி: முல்லை என்ன விலைம்மா?

    பூக்காரி: இது முல்லை இல்லீங்க. மல்லி! மொளம் இருபது ரூபா.

    சூரி: (திகைத்து), அம்மாடி! இருபது ரூபாயா?

    பூக்காரி: முகூர்த்த நாளாச்சே. அதான் விலை.

    சூரி: (சுதாரித்து), முப்பது பைசா மூணு முழம், முல்லை மல்லிகை, கனகாம்பரம்னு ஒரு பாட்டு உண்டு தெரியுமா?

    பூக்காரி: வரவு எட்டணா செலவு பத்தணான்னும்கூடத்தான் பாட்டு இருந்திச்சி.

    சூரி: (மனசுக்குள்), பூக்காரின்னா நாக்கு நாலு முழம் இருக்கணுமா என்ன!

    பூக்காரி: அம்மா வரலியா? அதிசயமா நீ வந்திருக்கே? பூ வேணும்னா அம்மாவை ஸெல்லிலே என்னைக் கூப்பிடச் சொல்லு. பையன் கிட்டே குடுத்து அனுப்பறேன். கோடி வீடுதானே? வெள்ளிக்கிழமை வாடிக்கை ஆச்சே.

    சூரி: உங்கிட்டே செல்கூட இருக்கா? (முணுமுணுக்கிறார்). ஐ ஃபோனா இருந்தாலும் இருக்கும். யார் கண்டா? (நகர்கிறார்).

    ***

    (அருகில் இருக்கும் 'பழனி கனி அங்காடி' அருகில் தயங்கி நிற்கிறார்)

    சூரி: ஆப்பிள் எப்படிம்மா?

    பழக்காரி: எந்த ஆப்பிள்சார்? ஆஸ்திரேலியாவா? வாஷிங்டனா? கலிஃபோர்னியாவா? சிம்லாவா? ஊட்டியா? காஷ்மீரா?

    சூரி: (தனக்குள்), உலகமயமாக்குதல்ங்கிறது இதான் போலிருக்கு. (உரக்க) அதோ அந்த ஸ்டிக்கர் ஒட்டின ஆப்பிள்.

    பழக்காரி: சூப்பரா இருக்கும் சார். இருபத்தி அஞ்சு ரூபா. சும்மா பஞ்சு மிட்டாயா கரையும்.

    சூரி: ஒரு கிலோ விலைதானே? கிலோக்கு எவ்வளவு வரும்?

    பழக்காரி: நல்லா டமாஷ் பண்றியே? ஒரு ஆப்பிள் முப்பது ரூபா.

    சூரி: என்னது? இவ்வளூண்டு ஆப்பிளா?

    பழக்காரி: தம்மாத்தூண்டு மாத்திரைக்கு அம்பது ரூபா குடுக்கறதில்லே? அதை விடு. உங்கிட்ட பப்பாளியை குடுத்து அனுப்புன்னு, அம்மா இப்போதான் ஃபோன்லே சொல்லிச்சு. இந்தா.

    சூரி: (பையை வாங்கிக்கொண்டு), உங்கிட்டயும் செல்ஃபோன் இருக்கா? (முணுமுணுக்கிறார்). பழக்காரி இல்லையா? பிளாக்பெர்ரியா இருந்தாலும் இருக்கும்.

    பழக்காரி: பிளாக்பெர்ரி ல்லாம் நமக்கு எதுக்கு? வாங்கித் தாரேன்னு அது சொல்லிச்சு. அடப்போய்யா வேஷ்ட், பேசிக் மாடல் போறும்னுட்டேன்.

    சூரி: ரிங் டோனா, பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா போட்டிருக்கியா?

    பழக்காரி: ஆ! அதெல்லாம் ஓல்டு. நம்ம ட்யூனு மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம்தான், டக்கரான பாட்டு.

    (சூரி அவசரமாக நகர்கிறார்).

    ***

    (ஜானகி கொடுத்த காபியை, சூரி சத்தத்துடன் உறிஞ்சுகிறார்)

    சூரி: என்ன அநியாயாம்? பூ, பழம், காய்கறியெல்லாம் இவ்வளவு விலையா? வெள்ளை யானையை வாங்கப்போறா மாதிரி, கஜானாவோட போகணும்போலேருக்கு.

    ஜானகி: அப்பப்போ கடை கண்ணிக்குப் போயிட்டு வந்தா விலைவாசி விவரமெல்லாம் புரியும்!

    சூரி: ஜானகி, மாசக் கடைசிலே என்னோட காண்ட்ராக்ட் முடியறது. கேட்டா, எம்.டி. ஒரு வருஷம் எக்ஸ்டென்ஷன் குடுப்பார். விலைவாசியை சமாளிக்கணுமே! கன்டினயூ பண்ணறேன்னு சொல்லப்போறேன்.

    ஜானகி: (அவசரமாக), வேணாம் வேணாம் வேணாம்! ஆபீஸ் தலைவலி போறும். சின்னவங்களெல்லாம் படிச்சுட்டு வேலையில்லாம், ப்ரமோஷன் இல்லாம் பிங்க் ஸ்லிப்போட அவஸ்தைப்படறாங்க. நகர்ந்து அவங்களுக்கு இடத்தை விடுங்க, வயசானாலும், வீட்டிலே ரிவீட் அடிச்சா மாதிரி அகலாம இருக்கிறதுக்கு நீங்க கொள்ளுத்தாத்தா அரசியல் வாதியா?

    சூரி: அப்படீங்கறே? நன்னா யோசிச்சுச் சொல்லு. என்னோட வருமானம் நின்னு போனா, இருபத்தி அஞ்சு ரூபா குடுத்து ஸ்டிக்கர் ஒட்டின ஆப்பிள் வாங்க முடியுமா?

    ஜானகி: அதுக்கு பதிலா, சீப்பான வாழைப்பழம் வாங்கித் திங்கிறது.

    சூரி: (கேலியாக), கோபுர வஸ்துன்னு சொல்ற குரங்குக்குதான் வாழைப் பழம் ரொம்பப் பிடிக்கும்.

    ஜானகி: குரங்கா இருந்துட்டுப்போறது. சர்ருசர்ருன்னு மரத்துக்கு மரம் தாவறா மாதிரி, அங்கேயும் இங்கேயும் சுறுசுறுப்பா போய் வந்திண்டிருக்கலாம். ஆப்பிள், டாக்டரை அண்டவிடாம பாத்துக்கும். ஆனா வாழைப்பழம், சோம்பலே அண்டவிடாம பாத்துக்குமே!

    2. விசாரணை கமிஷன்

    (பணி யிருந்து ஓய்வு பெற்ற சங்கரன், சீனு - நந்து இடையே நடந்த மோதல் குறித்து தன்னுடைய விசாரணையைத் தொடங்குகிறார்)

    சங்கரன்: சீனு, நீ சொல்ல நினைக்கிறதை தயங்காம சொல்லு. இதோ பார்! என் எதிரிலேயே நந்துவைப் பாத்து, வெளியே வா பாத்துக்கறேன்னு சைகை பண்றது நல்லா இல்லே, ரொம்ப தப்பு.

    சீனு: கமிஷன் அங்கிள், கமிஷன் அங்கிள்! இந்த நந்து இருக்கானே...

    சங்கரன்: சீனு! கமிஷன் அங்கிள்னு என்னைக் கூப்பிடாதே. நான் ரெக்ஸின் யையை கக்கத்திலே அடக்கிண்டு அல்லாடற கமிஷன் ஏஜென்ட் இல்லை. அங்கிள்னு கூப்பிட்டா போறும். சம்பவம் நடந்த அன்னிக்கு, என்ன நடந்ததுன்னு சொல்லு.

    சீனு: அங்கிள், அன்னிக்கு ஜாயின்ட் ஸ்டடியின்போது என் தங்கை ராதா, நந்துவோட தங்கை உமா மேலே ஸ்கேல் கட்டையதூக்கி அடிச்சுட்டா, ராதா ரொம்ப ஒல்லி. உமா குண்டு. அதனாலே அவளால திரும்பி

    Enjoying the preview?
    Page 1 of 1