Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arusuvai
Arusuvai
Arusuvai
Ebook133 pages43 minutes

Arusuvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நகைச்சுவை எழுத்து என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும், யாரையும் கேலியும், கிண்டலும் செய்யாமல், மனம் நோகடிக்காமல் எழுதுவது என்பது ஒரு கலை. 'வெறும் துணுக்குத் தோரணமல்ல. ஒரு சிறிய முடிச்சு, அதைச்சுற்றிய இயல்பான நகைச்சுவை, ஒரு எதிர்பாராதமுடிவு எல்லாம் சேர்ந்திருந்தால்தான் அந்த எழுத்துக்கு சுவைகூடும்.' அந்தச் சுவையை, நாமும் வாசித்து தெரிந்து கெள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580139810052
Arusuvai

Related to Arusuvai

Related ebooks

Related categories

Reviews for Arusuvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arusuvai - Madipakkam Venkat

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறுசுவை

    (சிறுகதைகள்)

    Arusuvai

    (Sirukathaigal)

    Author:

    மடிப்பாக்கம் வெங்கட்

    Madipakkam Venkat

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madipakkam-venkat

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    1. ஏக தந்தாய வித்மஹே...

    2. களைகட்ட ஆரம்ப்ச்சாச் தீபாவளி...

    3. நயன்தாரா போண்டா

    4. பாஸ்மதி ரைஸ் பாயசமும், வாழத்தண்டு ஜூஸும்...

    5. அது அந்தக் காலம்

    6. லாக்டவுனில் ராகவன்...

    7. வாழக்காவ சுடனும்

    8. தப்பிச்சேன்டா சாமி...

    9. நம்பிக்கேக்

    10. முந்திரி விசாகம்...

    11. ஆடி வெள்ளியும் அரிசி பாயசமும்...

    12. பீச் காத்துல சுண்டல்

    13. அம்பது ரூபாய் அண்டா

    14. சப்பாத்தியும் நெய் பிரதட்சணமும்

    15. வெண்டக்காயும் பாதுஷாவும்...

    16. பாச்சா பலிக்கல

    17. ஒரு சிரிப்பு அடங்கியது...

    18. கொரோனா வளையல்

    19. செவ்வாழைப்பழ அல்வாவும் கரும்பு

    பக்கோடாவும்

    20. மாளய அலப்பறையும்...

    21. ஞானப் பூனை

    22. வனப்பிரஸ்தமும் சன்னியாசமும்

    23. கொடமொளகா அல்வாவும் கொடமொளகா பக்கோடாவும்...

    24. சாமர்த்யம்

    25. வாட்ஸ்அப் மஹானுபாவர்

    26. பன்னீர் பஜ்ஜியும் பின்னே ஞானும்...

    27. ஞாபகங்கள்

    28. துலாம்/உத்தமம்

    29. அமாவாசையும், முரட்டு வாழக்காவும்...

    30. ஜோடி சர்யா இல்லேன்னா

    31. வந்ததே மாளயம்

    32. புக்ஃபேர்

    33. சங்கீதமும் பின்னே...

    34. போட்டுன்டாச்...

    35. கண்ணாடிக் குருவி

    36. மடிப்பாக்கம்

    37. வலிய விதி

    38. வெயிலோடு மல்லுக்கட்டி

    39. காயத்ரி

    40. அன்பு அம்மாவும் அனல் கொடூரனும்...

    அணிந்துரை

    1-min

    1. அறுசுவை அரசு

    மிக்ஸர் சாப்பிடுவது குஷி. மிக்ஸரில் இருக்கும் முந்திரிங்களை சாப்பிடுவது ருசி. சாம்பாரைவிட சாம்பாரில் மிதக்கும் தான்கள் பஹூருசி. தானோடு சேர்ந்து சாம்பாரின் ரசமும் சுவையும் இறங்கி நாவு எனும் எஸ்கலேட்டரில் தொண்டைக்குள் இறங்கும் சுகமே சுகம். அதில் நான் என் ஒன்பது வயதில் எழுத்தை சுவைருசிக்க ஆரம்பித்துவிட்டேன் எடுத்ததுமே ‘லா.ச.ராவின் புத்ர’ தான்.

    பிறகு ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள், தி.ஜா, ஜெயகாந்தன், சுஜாதா. இவ்வளவு பெரிய மலைகளை ஏற சின்னசின்னப் படிக்கட்டுகளாய் இருந்தவைகள் மடிப்பாக்கம் வெங்கட், சங்கரி புத்ரன், அகுமார் திசையன் விளை முத்து போன்றவர்களின் துணுக்குகள்தாம்.

    திருப்பத்தூர் திருத்தளியான், அதிரைபுகாரி அனிதாராமச்சந்திரன், கீதாபஞ்சு, யாரோ போன்றவர்களுக்கு நடுவே சிவாஜி எம்.ஜியார் போல ஜொலித்தவர்கள் மடிப்பாக்கம் வெங்கட்டும், அயன்புரம் சத்தியநாராயணணும் (பிற்காலத்தில் அயன்புரம் கேள்விபதில் பகுதிக்குப் போய்விட்டார்).

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போல

    எங்கும் மடிப்பாக்கம் எதிலும் வெங்கட்தான்.

    2. அதுவும் சாவி சம்பந்தப்பட்ட பூவாளி, சுஜாதா, சாவியில் இவரது துணுக்குகள் ஆங்காங்கே மிக்ஸரில் முந்திரிபோல முழித்தபடி இருக்கும். லாசரா படிப்பதைப்போல மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம், நேரம் குறைவு. சின்னசின்ன விஷயங்கள் பார்ட் ஹ கேள்விபதிலீபோல சட்டென மனதில் பதியும். நிறைய கொசுறு விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம்.

    மடிப்பாக்கம் போல நம்ம பேரும் அச்சில் பார்க்க மாட்டமா என்று நானும் முப்பது நாற்பது துணுக்குகள் விகடன், சாவி, குமுதம், இதயம் பேசுகிறது அமுதசுரபியில் எழுதியிருக்கிறேன்.

    இவ்வளவு பீடிகையும் மடிப்பாக்கத்தின் அறுசுவை அப்போதே ஆரம்பித்துவிட்டது என்பதை சொல்லத்தான்.

    துணுக்குகளை குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. கிரேசி, எஸ்.வி. சேகர் நாடகங்களை துணுக்குத்தோரணங்கள் என்பார்கள். மனோகர் நாடகத்தைவிட அதிகம் கல்லாகட்டியவை அவைகள்தாம். வெறும் துணுக்குகளுக்காகவே கல்கண்டு, முத்தாரம், பூவாளி வெளிவந்து ஜமாய்த்தது வரலாறு. அதே சுவையுடன் ‘அறுசுவை’யை படைத்திருக்கிறார்.

    3. ஞாபகங்கள்:

    சாவியின் ஆலோசனைபடி செம்மங்குடியை பேட்டி எடுத்துள்ளார். கிரேசி மோகனை (நாடகம் நடக்கும்போதே நடுநடுவில்) பேட்டி கண்டார். பீச்காற்றும் சுண்டலும், என்.கே. திருமலாச்சுர்யா கலாமண்டபம், ப்ரெட் கம்பெனியில் நைட்ஷிப்ட், பூனைவளர்ப்பு, புத்தகக்கண்காட்சி விவரங்கள்.

    அந்தக்கால மடிப்பாக்கம் விவரிப்பில் குதிரைவண்டி பயணம், கண்ணாடி பீரோவில் குருவி கொத்தல், கோவாக்ஸின் வைபவம்.

    பண்டிகைகள்: நகைச்சுவை, பிள்ளையார் சதுர்த்தி, ஆடிவெள்ளி, குழந்தையின் பிறந்தநாள், வைகாசிவிளக்கம், மாளயபட்ஷம், அமாவாசை, தீபாவளி, பிள்ளையார் குடையை சொருக, பிள்ளையாருக்குப் பின்னாடி உங்க மண்டையில் இருக்கறதை கொஞ்சம் எடுத்துவைங்கனு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன்.

    4. தகவல்கள்:

    நீடாமங்கலம் V.V. சுப்ரமணியம் ஸ்ரீசாரதி ஸங்கீத வித்யாலயம் என்கிற பேரில் ஒரு இசைப்பள்ளியை 26 வருடங்களுக்கு மேலாக நடத்தி பலருக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்தவர்.

    சங்கீத மும்மூர்த்திகளில் தீட்சதர் ஒருத்தர்தான் ஒரு ஷேத்திரம் பாக்கி இல்லாமல் எல்லா இடத்துக்கும் நேரில்போய் பாடியவர். சியாமா சாஸ்திரி தஞ்சாவூரைவிட்டு வெளியே வந்ததில்லை. தியாகராஜர் ஒரே ஒரு முறை திருப்பதிக்கு வந்துபோனதைத் தவிர திருவையாற்றை விட்டு வெளியே வந்ததில்லை.

    நவம்பர் இருபத்திமூன்று முந்திரிகள் தினம். உலக இதய நாள் + உலக காஃபி தினமும் ஒரே நாள் செப்டம்பர் 26.

    சமையல் டிப்ஸ்: மைசூர்பாகை கிளறி முடிச்சதும் தட்டுல கொட்டிவிட்டு அந்த சூட்டோடயே அந்த கலவை மேல கொஞ்சம் சர்க்கரையை அப்படியே பரவலாக மழைச்சாரல் மாதிரி தூவிவிட்டிருந்தா பார்க்கறதுக்கும் கண்கொள்ளாகாட்சி, கூடவே டேஸ்ட் தூக்கிடும்.

    வாழைக்காயை வெளியில் வைத்தால் பழுத்துவிடும். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் கருக்கும். தண்ணியில போட்டுவைக்கணும் ரெண்டுமே ஆகாது. சிதம்பரத்துல தக்காளிகொஸ்து பேமஸாமே.

    5. அட்ஷய திதிம்போது நகைவாங்கினா நல்லதாமே...?

    ஆமா நல்லதுதான், ஜீவல்லரி ஷாப்காராளுக்கு. அண்டா வாங்கணும்னு அம்பது ரூபா அட்வான்ஸ் வாங்கிட்டுப் போனாங்க. அம்பது ரூபாய்க்கு சின்ன கிண்ணம்தானே கிடைக்கும்னு குழம்பினேன். நான் என்னத்த கண்டேன், ஹிந்தில அண்டான்னா முட்டைனு...!

    பூனையைக் கொண்டுபோய் ரொம்ப தூரம் தள்ளி விட்டுட்டுவந்தா அதே பூனை நம்மவூட்டு வாசல்கேட்டுல அபூர்வ ராகங்கள் ரஜனி கணக்கா வந்து நின்று நம்மள பாத்து சிரிக்கும்.

    முன்ன ஒருதரம் குமுதம் 38-ம் பக்கமூலையில் ஒண்ணு போட்டிருந்தாங்க.

    என்னனு, மாளயம் சமயத்துல வெங்காய வஸ்து சேத்துக்கலாம்ன்னா?

    அச்சு அசல் விவரிப்பு: பிச்சுல அலுமினிய

    Enjoying the preview?
    Page 1 of 1