Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muganoolil Mugam Paarkirean
Muganoolil Mugam Paarkirean
Muganoolil Mugam Paarkirean
Ebook392 pages2 hours

Muganoolil Mugam Paarkirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விளையாட்டாய் முகநூலில் எழுத ஆரம்பித்தபோது... வெட்டியாய் அதில் நேரம் கழிக்கிறேன் என்று சிறு உறுத்தல் இருந்தது. என் நலம் விரும்பிகள் பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.
என் பதிவுகள் (எதனால் என்றே தெரியவில்லை!!) பலருக்கும் பிடித்துப்போயின. லைக்குகள் ஷேர்கள் என்று வரவர ஒருவித நாட்டம் அதிகமாயிற்று.
சில சமயங்களில் வேலைகள் தடைப்பட்டதாலும்... இரவுகளில் கண்விழித்து முகநூலில் செலவழிப்பதாக உறுத்தல் ஏற்பட்டதாலும்... அடிக்கடி deactivate செய்ய ஆரம்பித்தேன்.
அது பலருக்கு மிகுந்த வருத்தமளித்தது.
ஒரு சமயத்தில் நம் புஸ்தகா டாட்காமில் என் நூல்கள் தொடர்ந்த வெளியாகும்போது அது தந்த உந்துதல்+ உற்சாகம்+ ஊக்குவிப்பு காரணமாக என் பதிவுகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை நூலாகத் தொகுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்...
மிகுந்த ஆர்வத்துடன் யெஸ் சொன்னார் புஸ்தகா நிறுவன ராஜேஷ் தேவதாஸ்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் முகநூலில் இருக்கிறீர்கள் என்றால் இது பற்றிய விமர்சனத்தை அங்கே எழுதலாம்.
எனக்கே எழுத நினைத்தீர்கள் என்றால் vedhagopalan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கும் எழுதலாம்.
மீண்டும் ராஜேஷ்ஜிக்கு நன்றி சொல்லி, நூல் தொகுப்புக்குள் உங்களை வரவேற்கும்
வேதா கோபாலன்
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580128405289
Muganoolil Mugam Paarkirean

Read more from Vedha Gopalan

Related to Muganoolil Mugam Paarkirean

Related ebooks

Reviews for Muganoolil Mugam Paarkirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muganoolil Mugam Paarkirean - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    முகநூலில் முகம் பார்க்கிறேன்

    Muganoolil Mugam Paarkirean

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. சுஜாதாவை நேரில் சந்தித்தேன்

    2. என்னைக் கவர்ந்த ஆண்கள்

    3. அப்துல்கலாம் வீடு

    4. தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

    5. எனது வாழ்க்கைப்பாதையில்…

    6. எனது வாழ்க்கைப்பாதையில் சு(ரேஷ்) பா(லா)

    7. எனது வாழ்க்கைப்பாதையில் Singer ஸ்ரீராம் பார்த்த சாரதியும் நானும்

    8. கே பி சார்

    9. எனது வாழ்க்கைப்பாதையில் ஆஸ்பத்திரிகளும் நானும்

    10. பஹரைன் ஸ்ரீதர்

    11. நரசிம்மா சித்ராலயா கோபு

    12. பாமா கோபாலனும் நானும்

    13. T.A. நரசிம்மன் காதலிக்க நேரமில்லை

    14. இவரும் வெல்லலாம்…

    15. நினைவிருக்கிறதா… குனேகா சென்ட்

    16. வி எஸ் வி ரமணனின் காற்றினிலே வரும் கீதம்

    17. கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மகாலட்சுமி

    18. மஞ்சுளா ரமேஷ் பிறந்தநாள்

    19. புதுமையான கேலண்டர்

    20. ஜ.ரா. சுந்தரேசன் நினைவு நாள் கூட்டம்.

    20. டைப்ரைட்டிங் கற்றேன்

    21. எனது வாழ்க்கைப் பாதையில் ஆங்கிலமும் நானும்

    22. என் புருஷரும் அமெரிக்க அழகியும்

    23. சுதாங்கனுக்கு இனிய பிறந்த நாள்

    24. எனது வாழ்க்கைப் பாதையில் சாவி சாரும் நானும்

    25. எழுத்தாளர் உஷா சுப்ரமணியன்

    26. எனது வாழ்க்கைப்பாதையில் ‘இலக்கியச் சிந்தனையும்’ நானும்

    27. எனது வாழ்க்கைப்பாதையில் நானும் முதலாம் ரங்கராஜனும்

    28. எனது வாழ்க்கைப்பாதையில் நானும் என் அம்மாவும்

    29. இயக்குனர் பரத்

    30. சுஜாதா தேசிகன்

    31. எனது வாழ்க்கைப் பாதையில் ராஜேஷ் குமார்

    32. எனது வாழ்க்கைப் பாதையில் என் கல்லூரியும் நானும்

    33. எனது வாழ்க்கை என் தெய்வம் ஷீர்டி பாபாவும் நானும்.

    34. நாங்கள் சாவியில் எழுதிய தொடர்கதை

    35. எனது வாழ்க்கைப் பாதையில் பட்டுக்கோட்டை பிரபாகரும் நானும்

    36. எனது வாழ்க்கைப்பாதையில் நானும் ஸ்ரீனிவாசனும்

    37. தினகரனில் வாரபலன் பை வேதா

    38. குமுதம் ஐந்து வாரத் தொடர்கதை …

    39. இது போல் மனைவி வேண்டும்

    40. நடிக்க வருகிறார் ஒவியர் ஷ்யாம்

    41. சுமி ரத்தினம்

    42. காயத்ரி....

    43. என்ன பரிசு கொண்டு போனார்?

    44. நாம் விரும்பும் மிக்கியும் டோனால்டும்!

    45. உரக்கச் சிரிச்ச சத்தம்

    46. பெறுக… பெருக…

    47. திணறத் திணறப் பால்பாயசம்!!

    48. ஷெல்ஃப் முழுவதும் நம்...

    49. இந்திராஜிக்கு எத்தனை முகங்கள்…!

    50. அடுத்த நொடியே போஸ்ட் கார்ட்

    51. சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து

    52. எடிட்டராயிருப்பது என்பது எளிய பணியா?

    53. பின்னால் யாரோ துப்பாக்கியுடன் துரத்துவது போல்…

    54. இவர் குரு யார் தெரியுமா?

    55. மகளுக்கு ஒரு கடிதம்...

    56. சிவாஜி படம்... ஜெமினி படம்... நாகேஷ் படம்... சோ படம்…

    57. ராஜேஷ்குமார் என்னும் சகாப்தம்.

    58. நாளைக்கு முடிவு சொல்றேன் ஜி..."

    59. ரகசியம் பரம ரகசியம்...

    60. ஹிந்திப் படங்கள் பார்ப்பது ஒரு பந்தா

    61. ஆஆஆ... இப்படி ஒரு திரை அரங்கா!!

    62. சலிக்காமலும் வலிக்காமலும் கற்றுக்கொடுத்து

    63. அழகிய பிரம்பு நாற்காலி....

    64. சாக்லேட் தின்ன சர்ட்டிபிகேட்...!!

    65. என்றும் இளைஞர்…

    66. பிரம்பு ஊஞ்சலில் மேடம் ஜெயலலிதா...

    67. கண்ணதாசனின் தவப்புதல்வர்கள்...

    68. மீண்டும் வசந்த மாளிகை…

    69. ஒருத்தி மட்டும் விதி வழியே…

    70. இவரின் தமிழ் விளையாட்டுக்கு நான் ரசிகை!

    71. அந்த மரம் பூத்துக்குலுங்குகிறது...

    72. கடற்கரையில் ஒரு கச்சேரி...

    73. ஏழு வருட இடைவெளி ஏன்?

    74. கவர்னருடன் கைகுலுக்கினோம்...

    75. சாவித்ரி முதல் மனோரமா வரை...

    76. அச்சோ... அவளுக்கு என்ன ஆயிற்று?

    77. கவலை கவலை கவலை.

    78. கடைசி சில ஒவர்களில்...

    79. இனிமையாய் ஒரு குற்றம்…

    80. நிறையச் சம்பாதித்திருக்கிறார் ஷேக்

    81. சிக்ஸர் சிக்ஸராய் பதில்!

    82. பேனாவைத் தொட்டு இருபது வருஷமாகிறது

    83. அண்ணா வாழ்க…

    84. செல்லமே செல்லம்...

    85. பாதி இங்கே... மீதி எங்கே?

    86. நான் உன் கல்லூரி சிநேகிதி...?

    87. பெருவெள்ளத்தில் என்ன செய்தான்?

    88. சிக்ஸரும் ஃபோரும் கரும்பும் வெல்லமும்...

    89. எம் எஸ் அம்மா பற்றி அறியாத விவரங்கள்…

    90. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள்!

    91. டக்கென்று பதில் சொல்வார்

    92. சுருட்டிய பத்து ரூபாய்த்தாள்

    93. இன்னொஸன்ஸ் நிரம்பிய பெண்(மணி)

    94. கல்கி சிம்மாசனத்தை அலங்கரித்தவர்...

    95. நிழலை நிஜமாக்கிய கே,பி

    96. மிரட்டிய திரைப்படம்

    97. சிவாஜி என்னும் மேதை

    98. கோடீஸ்வரன் எடுத்த பிச்சை...

    99. ரோமன் ஹாலிடே (ஆங்கிலப்படம்)

    100. என்றைக்கும் இந்தப் பறவை புதிது...

    101. டாக்டர்களின் பங்கு மகத்தானது

    102. மாதவன்... சிம்ரன்... நந்திதா தாஸ்...

    103. ஜானி…ஜானி... எஸ் ரஜினி/ ஸ்ரீதேவி...

    104. நிச்சயதார்த்தத்துக்குத் தேதி குறிச்சாச்சு

    என்னுரை

    விளையாட்டாய் முகநூலில் எழுத ஆரம்பித்தபோது... வெட்டியாய் அதில் நேரம் கழிக்கிறேன் என்று சிறு உறுத்தல் இருந்தது. என் நலம் விரும்பிகள் பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.

    என் பதிவுகள் (எதனால் என்றே தெரியவில்லை!!) பலருக்கும் பிடித்துப்போயின. லைக்குகள் ஷேர்கள் என்று வரவர ஒருவித நாட்டம் அதிகமாயிற்று.

    சில சமயங்களில் வேலைகள் தடைப்பட்டதாலும்... இரவுகளில் கண்விழித்து முகநூலில் செலவழிப்பதாக உறுத்தல் ஏற்பட்டதாலும்... அடிக்கடி deactivate செய்ய ஆரம்பித்தேன்.

    அது பலருக்கு மிகுந்த வருத்தமளித்தது.

    ஒரு சமயத்தில் நம் புஸ்தகா டாட்காமில் என் நூல்கள் தொடர்ந்த வெளியாகும்போது அது தந்த உந்துதல்+ உற்சாகம்+ ஊக்குவிப்பு காரணமாக என் பதிவுகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை நூலாகத் தொகுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்...

    மிகுந்த ஆர்வத்துடன் யெஸ் சொன்னார் புஸ்தகா நிறுவன ராஜேஷ் தேவதாஸ்.

    அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நீங்கள் முகநூலில் இருக்கிறீர்கள் என்றால் இது பற்றிய விமர்சனத்தை அங்கே எழுதலாம்.

    எனக்கே எழுத நினைத்தீர்கள் என்றால் vedhagopalan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கும் எழுதலாம்.

    மீண்டும் ராஜேஷ்ஜிக்கு நன்றி சொல்லி, நூல் தொகுப்புக்குள் உங்களை வரவேற்கும்

    வேதா கோபாலன்

    1. சுஜாதாவை நேரில் சந்தித்தேன்

    முன் குறிப்பு: வேதாவின் அலப்பறை பிடிக்காதவர்கள் தயவு செய்து இதைப் படிக்காதீங்க. சே சே... இது 100 பர்சன்ட் அக்மார்க் அலப்பறை போஸ்ட்டெல்லாம் இல்லை. சுயப் பிரதாபம்... தற்பெருமை... அலட்டல்... உதார் எல்லாம் அங்கங்கே தூவி டைல்யூட் பண்ணிட்டேன்.(ஓ... இதெல்லாமும் அலப்பறைதானோ?)

    கல்லூரிக் காலத்திலிருந்து வெறியாய்ப் படித்த சுஜாதாவை நேரில் சந்திக்க வாய்ப்பு வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றால் அவருக்குக் கீழே ஓரிரு வருடங்கள் வேலை பார்க்க வாய்ப்பு வரும் என்று நினைச்சா பார்த்திருப்பேன்?

    குமுதத்தில் அவர் இதழ் தயாரித்தபோது என் கணவர் பாமாகோபாலன் உதவியாளராக இருந்தார். அவர் ஆர் கே நாராயணை பேட்டி கண்ட உரையாடலை சுஜாதாவே எழுதினார் என்றாலும் அந்த கேஸட்டைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

    அவர் குமுதம் ஆசிரியரானபோது என்னையும் ஒரு பொருட்டாக மதித்து (எல் கே ஜி மாணவியை ரிஸர்ச் ஸ்காலர் பாராட்டுவதுபோல்) நடத்தியவிதம் பிரமிக்கத் தக்கது. என் கணவர் செம அதிருஷ்டசாலி. பல சந்தர்ப்பங்களில் அவருடன் பயணித்ததும்… அலுவலகத்தில் ஒன்றாய் அரட்டையடித்துச் சிரித்ததும்... மச்சம்...

    சட் சட்டென்று சிறந்த தீர்மானங்கள் செய்யும் திறமையும்... தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாக அறிந்து அதன்படி கதைகளையும் கட்டுரைகளையும் தீர்மானித்த பாங்கும்… அவர் ஒரு நடமாடும் கல்லூரி. அவரிடமிருந்து மற்றவர்கள் கற்றதும் பெற்றதும் ஏ….ராளம்.

    குமுதம் லைப்ரெரி மீட்டிங்கில் சுஜாதா உரையாடியதும் அதை நான் டைப் செய்து கொடுத்ததும்... அதை அவர் நேரடியாகப் பாராட்டியதும்... அதை சமீபத்தில் திரு பிரியா கல்யாணராமன் குமுதத்தில் தொடராகப் பிரசுரித்ததும் அனைவரும் அறிந்த உண்மை என்பதால் அந்த ஏரியாவில் இன்றைக்கு அலப்பரை கிடையாது என்ற நல்ல செய்தியைச் சொல்லிக்கொள்கிறேன்

    குமுதத்திலிருந்து மலர் மல்லிகை என்ற பெண்கள் பத்திரிகை மலர்ந்தது. எடிட்டர் என்று திருமதி சுஜாதாவின் பெயர் இருந்தாலும் மிஸ்டர் சுஜாதாதான் அதன் முழுப்பொறுப்பு. ஒரு புகழ் பெற்ற பழைய எழுத்தாளரின் தொடர்கதை மறு பிரசுரம் செய்து கொண்டிருந்தார்கள். ஏதோ காரணத்திற்காக அதைத் திடீரென்று நிறுத்த வேண்டி வந்தது. அது 3 பாக நாவல்.

    கோபாலன் உங்க ஒய்ஃப் கிட்ட இந்த நாவல்களைக் கொடுத்து ஒரு பின் கதைச் சுருக்கம் இன்றைக்கு ராத்திரிக்குள்ள எழுதச் சொல்லி நாளைக்காலை கொண்டு வாங்க என்று கேஷுவலாய்ச் சொல்லிவிட்டார். விடிய விடிய இரண்டரை பாகத்தைச் சுருக்கி 20 பக்கங்களாக எழுதினேன். அவர் போன் செய்து பாராட்டினார் என்பதைப் பெருமையுடன் சொல்லாமல் இருக்க முடியலை. சாரி. (பின் கதைச் சுருக்கம் என்ற புதுமை இது வரை அவரைத் தவிர யாருக்காவது தோன்றியதுண்டா?)

    2000 ஆம் வருடம்... மின்னம்பலம் இணைய இதழின் (பிறகு அது அம்பலம் டாட் காம்) ஆண்டுவிழா மலருக்காக உதவி செய்ய திருப்பூர் கிருஷ்ணன் சார் என்னை அழைத்தபோது அங்கு அடிக்கடி சுஜாதா வருவார் என்றும் அவர்தான் அதை கவனித்துக் கொண்டார் என்றும்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை (அப்போதே நான் அப்பாவிதான்). புயல் மாதிரி வருவார். அத்தனை கம்ப்யூட்டர்களிலும் பெண்கள் சுறுசுறுவென்று வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். சர்ரென்று தன் கேபினுக்குள் உட்கார்ந்து தன் காதலியுடன் பேச ஆரம்பித்துவிடுவார். (அதேதான், கம்ப்யூட்டர்)

    அப்போது மின்னம்பலத்தில் திரு ஏ எம் ஆர் ஜோதிடம் எழுதிக்கொண்டிருந்தார். அதாவது ஏ எம் ராஜகோபாலன் சார் வருவார். டிக்டேக் செய்வார். யாராவது ஒரு பெண் தமிழில் டைப் செய்துகொள்வார்.

    அவர் அமெரிக்கா போயிருந்தபோது அந்த வாய்ப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. என் திறமையைக் காட்ட ஒரு சந்தர்ப்பம்(!) என்று அகமகிழ்ந்து போய் ஏழாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் திருமணமாகும் என்றெல்லாம் ஜமாய்த்து (ஹிஹி) எழுதினேன்.

    மேம். சார் உங்க கிட்ட பேசணுமாம்

    அப்படியே வானில் பறந்ந்ந்தவாறு இன்டர்காம் போனை வாங்கினேன்.

    ‘ஒரு வேளை வாழ்த்து சொல்லப் போறாரோ? தன் குடும்பத்துக்கு ஜோதிடம் பார்க்கப்போறாரோ?‘

    கிகி.

    செம மொக்கை கொடுத்துவிட்டார். லாஜிக்கெல்லாம் வேண்டாம் வேதா. யாருக்கும் அது பற்றியெல்லாம் சுவாரஸ்யம் இருக்காது ஜஸ்ட் ஜோதிட பலன்கள் கொடுங்க போதும்.

    முதலில் அதிர்ச்சி ஏற்பட்டது உண்மைதான் என்றாலும் யோசித்தபோது அது பொது மக்களின் குரல் என்று புரிந்தது. இன்று வரை பயன்படும் அட்வைஸ் அது. (பத்திரிகை லாஜிக் வேண்டும் என்று கண்டிஷன் போட்டால் மட்டுமே எழுதுவேன்)

    அம்பலம் ஆண்டுவிழாவை அவர் வழிகாட்டுதலில் நடத்தினோம். வேதா நீங்க நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குங்க என்றார். (கதை விடலைங்க. முகநூலிலேயே சாட்சிகள் இருக்கிறார்கள்) மறக்க முடியாத நாள் அது. (அந்த நிகழ்ச்சிக்கு ஜஸ்ட் முன்னால் எடுத்த போட்டோதான் இது)

    சுஜாதா இறந்தபிறகு அவருக்கான இரங்கல் கூட்டத்தில் பேசச் சொன்னார்கள். அவரைப் பற்றி யார் பேசினாலுமே அவர் பிரதாபங்களுடன் சுயப் பிரதாபங்கள் கலக்காமல் பேசவே முடியாது. ஏனெனில் எல்லோரையுமே பாராட்டிப் பாராட்டி ஊக்குவிப்பவர் என்றேன். அதையேதான் உங்களிடமும் சொல்லிக்கொள்கிறேன்.

    (அவர் பிரதாபம் எங்கே பேசினாய்? சுய பிரதாபம் மட்டும்தானே பேசினாய்? அதானே அதானே)

    2. என்னைக் கவர்ந்த ஆண்கள்

    என்னைப்பற்றி

    1979 ல் முதல் சிறுகதை குமுதத்தில் வந்தது. கணவர் கோபாலனும் எழுத்தாளர். இதுவரை சுமார்900 +900 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

    குமுதம், கல்கி, ஆனந்ந்தவிகடன், தினமணிக்கதிர், சாவி. இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய எல்லாப் பத்திரிகைகளிலும் சிறுகதைகளும், மாலைமதி போன்ற இதழ்களில் 25 நாவல்களும் மற்றும் பல குறுநாவல்களும் பிரசுரமாகியுள்ளன!

    தொலைக்காட்சியில் நான் எழுதிய நாடகம் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து ஒளிபரப்பானது.

    சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய அனுபவம் உண்டு

    ‘என்னைக் கவர்ந்த ஆண்கள் என்ற தலைப்பில் கட்டுரையா!

    இப்படி ஒரு ஐடியா யாருடைய பிரெயின் சைல்ட் என்று தெரியவில்லை! அற்புதமான ஐடியா! முதலில் ஒரு சாதாரணப் பேட்டியாகத்தான் இதை நினைத்தேன். என் நடையிலே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் பேட்டியாகக் கொடுக்காமல் கட்டுரையாக எழுத உட்கார்ந்தபோதுதான் இந்த ஐடியாவின் வீச்சுப் புரிந்தத. என்னைக் கவர்ந்த ஆண்கள் யார் யார்? யம்மாடீ! என் லிஸ்ட் மிகப் பெரியதாயிற்றே! எவ்வளவு நல்லவர்கள்...வல்லவர்கள் என்னைச் சுற்றி! என்னனைக் கவர்ந்தவர்களில் முதன்மையாகக் கிருஷ்ணபரமாத்மாவும் நபிகள் நாயகமும் இருக்கிறார்களே!!

    சரி... அப்புறம் ஹெர்குலஸ்... ஆப்ரஹாம் லிங்கன் என்று போய்க் கொண்டிருக்கும்! எனில் சமகாலத்துக்கு வருவோம்!

    பிரச்சினை என்ன தெரியுமா! அவ்வளவு ஈசியாக ஒரு ஆண் எந்தப் பெண்ணையும் கவர்வது சாத்தியமில்லை! அழகு... ஆளையடிக்கும் உருவம்.... எதை வைத்தும் என்னைக் கவர்வது சாத்தியமில்லை. சில சமயங்களில் அபரிமித புத்திசாலித்தனமும் சாதுர்யமும்கூட சலிப்பேற்படுத்தக்கூடும். வெறும் ஐந்து பேரை மட்டுமே குறிப்பிடுங்கள் என்று பத்திரிகையின் சார்பில் மதுமிதா ராஜா கேட்டபோதுதான் சாலஞ்ச் ஆரம்பமானது!

    சரி...முயன்று பார்ப்போம்...

    லிஸ்ட்டில் முதலில் வருபவர் என் ஆன்மா! என் கணவர்! என் தோழர். திரு கோபாலன். தன் வீட்டின் பெயர் 'பாமா' என்றிருந்ததால் 'பாமா கோபாலன்' என்ற புனை பெயரில் எழுதுபவர். 13 வருடங்கள் குமுதத்தில் எஸ் ஏ பி ஐயா மற்றும் சுஜாதா சார் கீழ்ப் பணி புரிந்தவர். திருமணத்திற்கு முன் நண்பராக அறிமுகமாகி என்னை எழுதத் தூண்டியவர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் படித்த கதைகள், எழுதிய கதைகள், எழுப்போகும் கதைகள் என எல்லாக் கதைகளையும் இன்று வரை விவாதிக்கிறோம். நண்பராய், மந்திரியாய், நல்லாசிரியராய், பண்பிலே தெய்வமாய் என்னை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். என்னை ஊக்குவிப்பதில் இவருக்கு டாக்டரேட்தான்.

    நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்' இந்தப்பாடல் வரி எனக்குத்தான் மிகப் பொருத்தம். ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று இவரிடம்தான் வகுப்பு எடுக்க வேண்டும். எல்லோருமே பயந்து ஒதுங்கும்/ ஒதுக்கும் நபர்கள்கூட இவரிடம் உயிராகப் பழகுவார்கள். இவரும் அவர்களை மனிதராய் மதித்துப் போற்றுவார். எப்படிப்பட்டவர்களையும் மன்னித்துவிடுவார்! மன்னிக்கக் கற்றும் கொடுத்துவிட்டார். மனிதர்களை மில்லிகிராம் சுத்தமாக எடைபோட்டுவிடுவார். மனசுக்குள் புகுந்து கண்டறியும் ஸ்கான் இயந்திரம்! மனைவியை எப்போதும் யார் முன்னிலையிலும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். இன்னும் கேட்டால் அப்படியே ஆப்போஸிட்! உயர்திப்புகழ்ந்து அய்யோ போதுமே! நிறுத்துங்கள்! என்று நானே நெளியும் அளவுக்குச் சொல்வார். இல்லம்மா! நிஜத்தைத்தானே சொல்றேன்!' என்பார். யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று தானும் உணர்ந்தவர். எனக்கும் உணர்த்துவார்.

    எனக்குத் தெரிந்த ஒரு பெண் மனம் வெதும்பிச் சொன்னாள். மேம் என் கணவருக்கு நான் எழுதுவது பார்த்துப் பொறாமை. எங்கே நான் புகழ் பெற்றுவிடுவேனோஎன்று பயப்படுகிறார், எழுதக்கூடாது என்று தடுக்கிறார் என்பாள். என்னால் நம்பவே முடியவில்லை! அப்படியும் ஓர் ஆண் இருப்பாரா என்ன! இப்படியும் சிந்திக்கத் தோன்றுமா என்ன! மனைவி வேறு தான் வேறு என்று நினைத்தால் அல்லவா அந்தப் பிரச்சினை!! ஆக! அவள் பிரச்சினையை என்னால் ஊகிக்கவும் புரிந்து கொள்ளவும்கூட முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

    அடுத்து....

    குமுதம் என்ற பத்திரிகையின் பொற்காலம் என்றால் அது எஸ் ஏ பி அண்ணாமலை ஐயாவின் காலம் என்பது பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. அந்த நபர் என்னை மட்டுமில்லை கிட்டத்தட்ட 10... 12 லட்சம் பேரைக் கவர்ந்தவர். குமுதம் ஒருவரைக் கவர்ந்தது என்றால் அவரை எஸ் ஏ பி கவர்ந்தார் என்பதுதான் உள்ளார்ந்த அர்த்தம். குமுதத்தில் பலகாலம் நிருபராகப் பணி புரிந்தவர்களும் குமுதத்திற்காகப் புகைப்படம் எடுத்தவர்களும்கூட அவரை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் என் கணவர் குமுதத்தில் பணி புரிந்தபோது அவருடன் எளிதாய்ப் பல முறைகள் பேசியிருக்கிறார்! அதைவிடப் பெரிய விஷயம்... எஸ் ஏ பி சார் என்னிடம் பேசியிருக்கிறார்!!

    திரு எஸ் ஏ பி யை அனைவருமே எடிட்டர் என்றுதான் குறிப்பிடுவார்கள். தன் புகைப்படம் தான் நடத்திய குமுதத்தில் வரக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்ததில் வியப்பில்லை. மற்ற எந்தப் பத்திரிகையிலும் நாளிதழிலும் வரக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்! இது எதனால்?? அவர் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று வர முடிந்தது! சினிமா தியேட்டர்களில் கியூவில் நின்று டிக்கெட் வாங்கித்தான் செல்வார்.சுதந்திரமாக ரயிலிலும் பஸஸிலும் செல்வார். ஒரு தனி மனிதர் தன் மூன்றே மூன்று உதவியாசிரியர்களைக் கொண்டு ஆறு லட்சம் பிரதிகள் தாண்டக்கூடிய பத்திரிகையை நடத்திக்காட்டினால் என்றால் மக்களின் நாடித்துடிப்பு எந்த அளவு தெரிந்திருக்கிறது. பெண்களுக்கே அனுமதியில்லாத அந்த அலுவலகத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. நிறையப் புத்தகங்கள் வாங்கி.... அவற்றை வைக்க இடமின்றி அதற்காகவே ஒரு பங்களாவை வாங்கிறார் எஸ் ஏ பி ஐயா! குமுதம் சம்பந்தமான மீட்டிங் ஒன்று அவருடைய லைப்ரரி பங்களாவில் நடந்தது. அங்கே அவருடன் பேசும்பாக்கியம் கிடைத்தது. மிக மென்மையான மனிதர். எளிமையானவரும்கூட!

    சுஜாதா! இந்த மூன்றெழுத்து வசீகரம் பல லட்சம் பேரைக் கவர்ந்த ஒன்று! என்னைக் கவர்ந்ததில் வியப்பில்லை. அவர் அம்பலம் டாட காம் என்ற மின்னிதழில் வேலை பார்த்தபோது நான் அவரிடம் வேலை பார்த்தேன். அவர் குமுதம் எடிட்டராகப் பணியாற்றியபோது நானும் என் கணவரும் அவருக்குக் கீழ்ப் பணிபுரிந்திருக்கிறோம். ஒரு முறை குமுதம் மலர் மல்லிகையில் ஒரு பிரபல எழுத்தாளரின் பிரபல சரித்திரத் தொடரை மறு பிரசுரம் செய்தனர். அந்தத் தொடரை ஏதோ காரணத்திற்காக நிறுத்த வேண்டி வந்தது. எனவே அவர் ஒரு புதுமையான ஐடியா செய்தார். இந்தக் கதை நின்று போனால் பலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். எனவே பின் கதைச் சுருக்கம் என்று ஒன்று எழுத வேண்டும். அதிக அவகாசம் இல்லை! எனவே அந்தப் பெரிய சரித்திர நாவலின் சுருக்கத்தை ஒரே இரவில் செய்து கொடுக்க வேண்டும் என்று பணித்தார்.அன்றிரவு சிவராத்திரிதான். சாதாரணமாக ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கும் கதைச்சுருக்கம் எழுதுவதற்காகப் படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அன்றுதான் உணர்ந்தேன். அண்ணாதுரை ஒரே இரவில் ஓர் இரவு நாடகம் எழுதி முடித்தாராமே!! நான் அது போல் 1000 பக்கம் படித்து 25 பக்கத்தில் அதை எழுதி முடித்தது பற்றி அன்று அவர் என் கணவரிடம் வாயாரா மனசாரப் புகழ்ந்தது எனக்கு வாழ்நாள பெருமிதம்!

    குமுதம் லைப்ரரி மீட்டிங்கில் அவர் ஒரு மணி நேரம் "எப்படி எழுதக்கூடாது' என்ற தலைப்பில் பேசியதை நான் அறுபது பக்கங்களுக்கு டைப் செய்து கொடுத்தபோது அவர் பாராட்டியதும் அம்பலம் என்னும் மின்னிதழில் அவருக்குக் கீழே பணி புரிந்தபோது சின்னச்சின்னப் பாராட்டுக்கள் தெரிவித்ததும் மறக்க முடியாத விருதுகள். அவருடைய கதைகளை உலகமே வியந்து பாராட்ட... நானெல்லாம் எம்மாத்திரம்!

    தொலைக்காட்சியில் நான் எழுதிய நாடகம் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து ஒளிபரப்பானது.

    சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம்

    Enjoying the preview?
    Page 1 of 1