Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Angeekaram
Angeekaram
Angeekaram
Ebook349 pages2 hours

Angeekaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அங்கீகாரம், இந்த நூலைப் பற்றி திரைப்படக் கலைஞர் சிவகுமார் அவர்கள் கூறியவை: என் கலையுலக சகோதரன், தம்பி, பி.ஆர். துரை எழுதியுள்ள "அங்கீகாரம்" எனும் நூலை படித்தேன், மிகவும் ரசித்தேன். இது அவரின் வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்டுள்ளது. அதில் துரையின் 55 ஆண்டுகாலக் கலையுலக அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங், டி.வி. தொடர், வானொலி நாடகம், கதை வசனம், தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன் பணியைச் செவ்வனே செய்த சிறப்புக்குரியவர் துரை என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன். 1945ல் இருந்து 'பிளாஷ்பேக்காக' வரலாற்றை துவங்கியிருப்பதும், பிறப்பதற்கு முன்பே தன் வரலாற்றைச் சொல்லத் துவங்கியிருப்பதும் ஒரு புதுமை. எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட துரை, பள்ளிப் படிப்பைக்கூட ஒண்ணாவதோடு நிறுத்திக் கொண்டார். இவரைப் பற்றிய இன்னும் பல சுவாரசியமான தகவல்களை படித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580158609170
Angeekaram

Related to Angeekaram

Related ebooks

Reviews for Angeekaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Angeekaram - Kalaimamani P.R. Durai

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அங்கீகாரம்

    (எனது வாழ்க்கை வரலாறு)

    Angeekaram

    Author:

    கலைமாமணி பி.ஆர். துரை

    Kalaimamani P.R. Durai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-pr-durai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    கலைமகள் ஆசிரியரின் நட்பு உரை

    என்னுரை

    முன்னுரை

    1. அமராவதி நதிக்கரையில்

    2. எங்கள் ராமையர் டிபன் கடையில் எம்.கே. தியாகராஜ பாகவதர்

    3. எனக்குத் தாய்ப்பால் தர மறுக்கப்பட்டது

    4. தத்துப்பிள்ளையான நான்

    5. ஆஸ்பத்திரியில் என் தாய்

    6. எதிர்பாராதது

    7. ஸ்ரீதேவி நாடக சபா

    8. பாத பூஜை

    9. நூறு ரூபாய் நோட்டு தந்த அதிர்ச்சி

    10. சிவாஜி கண்டுபிடித்த ரகசியம்

    11. மேடையிலிருந்து வெள்ளித்திரைக்கு

    12. இங்கிலீஷ் படம்

    13. சகஸ்ரநாமம் அவர்களின் சந்திப்பு

    14. தேவர் பிலிம்ஸ் வரவேற்பு

    15. மீண்டும் மைலாப்பூர்

    16. ‘கூப்பிடு அந்தக் குடிகாரனை’: எம்.ஜி.ஆர்

    17. எனது திருமணம் ஒரு திருப்புமுனை

    18. நாடகக் குழுக்களின் சரித்திரம்

    சமர்ப்பணம்

    தம்பியை ஒரு தரமான நடிகனாக்க

    தான் நாளெல்லாம் மெழுகுவர்த்தியா – உருகி

    லட்சியத்தை நிறைவேற்றத் தன் இடைவிடாத முயற்சியினால்

    கலையுலகில் எனக்கு நிலையான ஒரு இடத்தைப்

    பெற்றுத்தந்து

    நாடக, திரைப்பட உலகின் அங்கீகாரம் எனக்குக் கிடைக்கக்

    காரணமாக இருந்த என் சகோதரர்

    பாடலாசிரியர் அமரர் தமிழ்மணி அவர்களுக்கு

    இந்த நூல் சமர்ப்பணம்!

    கலைமாமணி P.R. துரை

    அணிந்துரை

    திரைப்படக் கலைஞர் சிவகுமார்

    என் கலையுலக சகோதரன், தம்பி, பி.ஆர். துரை எழுதியுள்ள அங்கீகாரம் எனும் நூலைப் படித்தேன். மிகவும் ரசித்தேன். இது அவரின் வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்டுள்ளது. அதில் துரையின் ஐம்பத்தி ஐந்தாண்டுகாலக் கலையுலக அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

    மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங், டி.வி. தொடர், வானொலி நாடகம், கதை வசனம், தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன் பணியைச் செவ்வனே செய்த சிறப்பிற்குரியவர் துரை என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்.

    ஒரு ஏழ்மை பிராமணக் குடும்பத்தில், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராமய்யர் - கனகம்மாள் தம்பதியின் கடைக்குட்டியாக பழனியில் 1948 (5.11.48) நவம்பர் 5-ம் தேதி பிறந்திருக்கிறார். ஆனால் 1945ல் இருந்து ‘பிளாஷ்பேக்காக’ வரலாற்றை துவங்கியிருப்பதும், பிறப்பதற்கு முன்பே தன் வரலாற்றைச் சொல்லத் துவங்கியிருப்பதும் ஒரு புதுமை. எதிலும் நெம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட துரை, பள்ளிப் படிப்பைக்கூட ஒண்ணாவதோடு நிறுத்திக்கொண்டார்.

    பள்ளியில் ஒண்ணாம் கிளாஸ் மட்டுமே படித்த துரையால் இவ்வளவு செம்மையாக, இப்படி ஒரு சுவையான வரலாற்றை எப்படி எழுத முடிந்தது? அதுவும் எவ்விதக் குறிப்பும் இல்லாமல்? அதற்கும் விளக்கமாக நூலில் ஒரு நல்ல வரியை, எழுதியிருக்கிறார். என் மனம் ஒரு வெள்ளைப் பேப்பர் அதனால் எதையுமே அதில் பதிவு செய்துகொள்ள முடிந்தது என்று.

    ‘மனோகரா’ படத்தைப் பத்து முறை பார்த்ததின் விளைவுதான், துரை நடிகர் ஆகக் காரணம். கலைஞரின் கனல் தெறிக்கும் வசனமும் சிவாஜியின் நடிப்பும்தான் என்னை நடிகனாக உருவாக்கியிருக்கிறது என்றும் எழுதியுள்ளார்.

    நூலைப் படித்த பிறகுதான் தெரிந்தது. தம்பி பி.ஆர். துரை எனது மாவட்டத்தைச் சார்ந்தவர் என்று. தாராபுரம்தான் அவருக்குச் சொந்த ஊர். எனது மதிப்பிற்குரிய சகோதரர் நாகேஷ் அவர்களுக்கும் தாராபுரம்தான் சொந்த ஊர். ‘மனோகராவில்’ வில்லனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் அவர்களும் தாராபுரத்தைச் சேர்ந்தவர்தான். அவரிடமே துரை ‘மனோகரா’ படத்தில் சிவாஜி பேசும் வசனத்தைப் பேசிக் காட்டியபோது சிவாஜி மாதிரியே நடிக்கிறானே என்று ஆச்சர்யத்தில் மூழ்கிப்போய்ப் பாராட்ட வார்த்தைகள் வெளிவராமல் அவர் தவித்திருக்கிறார். அப்போது துரையின் மூத்த சகோதரி எஸ்.ஏ. நடராஜன் வீட்டிற்கு வந்து துரையின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாராம். வீட்டிற்குப் போனதும்தான் துரைக்குத் தெரிந்திருக்கிறது, தன் தாய் இறந்துவிட்டார் என்று. அந்தச் சூழ்நிலையில் நடிகன் ஆனவர்தான் தம்பி துரை. அவர் குடும்பம் வறுமையில் தவித்தபோது குழந்தை இல்லாத ஒரு தம்பதி துரையை தத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டபோது ஒரு குழந்தையாவது சௌரியமாக இருக்கட்டுமே என்று மனப்பூர்வமாகச் சம்மதித்து இருக்கிறார் துரையின் தாய். ‘இந்தக் குழந்தையை நாங்கள் தத்து எடுப்பதால் உங்கள் வறுமை கொஞ்சம் குறையும் அல்லவா?’ என்று வந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்ல எப்போது என் வறுமையைச் சுட்டிக்காட்டினாயோ உனக்கு என் குழந்தையை தத்துக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று அந்த ஏழ்மையிலும் மறுத்திருக்கிறார். இப்படி வீராப்புப் பேசிய என் தாய் ஒரு காலகட்டத்தில் என்னை தத்துக் குடுக்கத்தான் செய்தாள். யாருக்கு? கலைமகள் குடியிருக்கும் நாடக உலகிற்கு! இப்படி ஒவ்வொரு சம்பவமும் இந்த நூலில் மனதை உலுக்குகிறது. துரையின் நடிப்பு ஆசையைப் பூர்த்தி செய்ய அவரது மூத்த சகோதரர் தமிழ்மணி, கே.என். ரத்தினம் அவர்களின் தேவி நாடக சபாவில் சேர்த்து நடிகனாகப் பரிமளிக்கச் செய்தார். எட்டு வயதிலேயே பிரபல காமெடியனாக தேவி நாடக சபாவில் வலம் வந்த துரை முதன்முதலில் பாராட்டுப் பெற்றதே பேரறிஞர் அண்ணாவிடம்தான்.

    ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘புதுவெள்ளம்’, ‘கண்காட்சி’ போன்ற நான் நடித்த படங்களில் எல்லாம் துரையும் நடித்திருக்கிறார். ஒண்ணாவது மட்டுமே படித்த துரை முதன்முதலில் நடித்த படம் ‘எபிசல்’ என்ற ஆங்கிலப் படம். அதில் நமது இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான் கதாநாயகி. தம்பி துரை திரைப்பட உலகில் என்னைப் பின் தொடர்ந்தே வந்திருக்கிறார் என் நிழல்போல.

    குரு பக்தி என்றால் நாம் எல்லோருமே துரோணருக்குக் கட்டைக் விரலைக் காணிக்கையாக கொடுத்த ஏகலைவனை மறக்கமாட்டோம். துரையும் குரு பக்தியில் சளைத்தவர் அல்ல.

    பாரதி கலைஞரும் நாடக திரைப்பட நடிகருமான எஸ்.வி. சகஸ்ரநாமம் என்ற தன் குருநாதருக்காக, ஓராண்டு காலமாக உழைத்து, திறமைமிக்க சேவாஸ்டேஜ் நடிகர்கள், எழுத்தாளர்கள் எல்லோரையும் கௌரவித்து விழாவை நிறைவு செய்திருக்கிறார். அங்கீகாரம் என்ற இந்த நூல் நடிப்புக் கலையில் கால்பதிக்க ஆசைப்படும் இளைய தலைமுறையினருக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. தம்பி துரையின் கலைப் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    திரைப்படக் கலைஞர்

    சிவகுமார்

    அணிந்துரை

    முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் எம்.ஏ., பிஎச்.டி.,

    ஆசிரியர், அமுதசுரபி. 57. பி.பத்மாவதி நகர்,

    விருகம்பாக்கம், சென்னை - 600 092.

    கைபேசி : 92822 34525

    மின்னஞ்சல்: thiruppurkrishnan@hotmail.com

    கடந்துவந்த கலையுலகப் பொற்காலம்!

    திருப்பூர் கிருஷ்ணன்

    கலைமாமணி பி.ஆர். துரை என்ற பெயரில் இன்று பிரபலமாக இருக்கும் என் நெருங்கிய நண்பர் துரையை நான் எப்போது முதலில் சந்தித்தேன் என்று நினைவில்லை. அவர் பிறப்பதற்கு முன் அவரைச் சந்தித்திருக்க இயலாது என்பதால் அவர் பிறந்த பின்தான் அவரைச் சந்தித்தேன் என்று நினைக்கிறேன்!

    பல்லாண்டுகளாக அவரோடு எனக்கு நெருங்கிய நட்பு. நட்பு என்ற எல்லையையும் தாண்டிய சகோதர பாசம் என்றும் வைத்துக் கொள்ளலாம். ‘நாடக உலகின் கமல்’ என்று யாராவது அவரைப் புகழும்போது என்னைப் பாராட்டியதுபோல் என் மனம் மகிழும். நடிகர் சிவகுமார், நடிகை சச்சு உள்ளிட்ட ஏராளமான கலையுலகப் பிரமுகர்கள் அவர்மேல் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

    அவரது மனைவி அவருக்கு இறைவன் கொடுத்த பரிசு. கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் குழந்தையாக வாழ்ந்துவரும் அவர்கள் இருவரும் அன்பே வடிவானவர்கள். சூதுவாதற்ற இத்தகைய மனிதர்களால்தான் உலகில் மழை பெய்கிறது என்பது என் நம்பிக்கை.

    கலைத்துறை சார்ந்து யாரேனும் காலமானால் எனக்கு முதல் தகவல் துரையிடமிருந்துதான் வரும். நான் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அஞ்சலி செய்யும் பாக்கியத்தைப் பெறுவேன். அற்புதமான பாடகரும் என் நெருங்கிய நண்பருமான தேவநாராயணன் காலமானபோதுகூட, முதலில் எனக்குத் தகவல் சொல்லி உதவியவர் துரைதான். குறிப்பிட்ட குடும்பத்தினர் தொடர்பு கொள்வதற்குள் துரை என்னைத் தொடர்பு கொண்டுவிடுவார்.

    பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை விரும்பியே தவறவிட்டு நானும் துரையும் பழைய பொற்காலங்கள் குறித்துப் பேசிப்பேசி மகிழ்வோம். அவர் சொல்லும் பல தகவல்கள் மிக சுவாரஸ்யமானதாகவும் பலர் அறியாததாகவும் இருக்கும்.

    துரையின் வாழ்வு பல அரிய அனுபவங்கள் நிறைந்த கலை வாழ்வு. ‘பழைய காலத்துப் - பாக்கி’ என்பதைப் ‘பழைய காலத் - துப்பாக்கி’ என்று ஒருவர் வசனம் பேசியதால் விளைந்த நகைச்சுவை உள்பட எத்தனையோ விஷயங்களைச் சிரிக்கச்சிரிக்க, ஆனால் தான் சிரிக்காமல் சொல்வார் அவர்.

    கருணாநிதியின் கனல்பறக்கும் வசனங்களை மேடையில் கடகடவெனப் பேசிக் காட்டுவார். சில கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக அவர் இயங்கும்போது அவரது கம்பீரமான குரல் அவரைப் பெருமளவில் முன்னிலைப்படுத்தும். தொடக்கத்திலேயே ஒலிக்கும் அந்தக் குரலின் காத்திரத்திற்குக் கட்டுண்டு பார்வையாளர்கள் அமைதிகாத்து அடுத்த நிகழ்வுக்குத் தயாராவார்கள்.

    அவர் தம் கலையுலக வாழ்வைப் பதிவு செய்ய வேண்டும் என்று பலமுறை நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஒருவர் தன் வரலாறு எழுதுவது என்பது ஏதோ அவரைப் பற்றிப் பேசுவதற்கு மட்டுமல்ல. அது அந்த நூலில் ஒரு பகுதிதான். ஆனால் தன் வரலாறு எழுதும் நபரோடு சம்பந்தப்பட்ட ஏராளமான பிரமுகர்கள் குறித்த செய்திகள். அந்தப் பிரமுகர்களின் பண்பு நலங்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் என அந்த நூல் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றுப் பொக்கிஷமாய் அமைய வாய்ப்புண்டு.

    இதோ துரை என்னையும் உள்ளிட்டு ஏராளமான பேரின் வேண்டுகோளை ஏற்றுத் தன் வரலாறு எழுதியிருக்கிறார். இதை எழுதத் தொடங்கியபோதும் எழுதிக் கொண்டிருக்கும்போதும் எவ்விதமெல்லாம் இந்த நூலை வடிவமைத்திருக்கிறார் என்பதை என்னிடம் பேசி மகிழ்ந்திருக்கிறார். இது பல பரிமாணங்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது.

    தாராபுரம் தன் சொந்த ஊர் என்று சேதி சொல்லும்போதே தாராபுரத்தில் பிறந்த மற்ற கலையுலகப் பிரமுகர்கள் தாராபுரம் சுந்தரராஜன், நாகேஷ் உள்ளிட்டு யார் யார் எனப் பட்டியல் தருகிறார். எம்.கே. தியாகராஜ பாகவதர் இவர்களது ராமையர் டிபன் கடையில் சிற்றுண்டி சாப்பிட்டதைச் சொல்லும்போது தியாகராஜ பாகவதர் இவர் வரலாற்றோடு இணைந்துவிடுகிறார். பாகவதர் முன்னிலையில் துரையின் தாயார் பாட்டுப் பாடியதை விவரிக்கும்போது அது ஒரு நாடகக் காட்சியாய் நம் கண்முன் விரிகிறது.

    நூலில் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. ‘என் தாய்க்கு நான் கடைக்குட்டியாம். இதில் பெருமை வேறு. அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் யார்? எனது தாய் தந்தை தானே?’ என்பன போன்ற வரிகளைப் படிக்கும்போது நம் முகத்தில் ஒரு மெல்லிய முறுவல் ஓடுகிறது.

    பொருத்தமான இடங்களில் பொருத்தமான உவமைகள் அணிசெய்கின்றன. ஒரு வருடம் பிரிந்திருந்த மகளும் தாயும் இணைந்தபோது தாய்க்கு ஏற்பட்ட அபரிமிதமான மகிழ்ச்சியைச் சொல்பவர், கானகத்திலிருந்து திரும்பி வந்த ராமனைக் கண்ட கோசலையின் மகிழ்ச்சியோடு அதை ஒப்பிடும் இடம் ஓர் உதாரணம்.

    இவரின் எழுத்தாற்றல் பல இடங்களில் பளிச்சிடுகிறது. இவரை யாருக்கும் தத்துக் கொடுக்க மறுத்த இவரின் தாய் கடைசியில் தத்துக் கொடுத்தேவிட்டாராம். யாருக்கு? கலைமகள் கொலுவீற்றிருக்கும் நாடக உலகிற்கு என்கிறார் துரை.

    இன்னும் இப்படி இந்த நூலின் சிறப்பைப்பற்றி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். நான் சொல்வதைவிட இந்த நூலை நீங்கள் முழுமையாகப் படித்துவிடுவதே நல்லது. தமிழில் அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள ஒரு சிறந்த தன்வரலாற்று நூலைப் படித்த மகிழ்ச்சி உங்களுக்குக் கிட்டும்.

    என் இனிய நண்பர் கலைமாமணி பி.ஆர். துரையின் எழுத்தாற்றல் மேலும் வளர வாழ்த்துகள்.

    கலைமகள் ஆசிரியரின் நட்பு உரை

    பதினைந்து வருடங்களுக்கு முன்பாகக் கலைமகள் அலுவலகத்திற்கு என்னைத் தேடி ஒரு நடிகர் வந்தார். பேண்ட் ஷர்ட் இன் செய்தபடி காட்சியளித்த அவர் இரண்டு வாக்கியங்கள்தான் பேசினார்.

    ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அதில் தலைமை தாங்க முடியுமா? - என்று கேட்டார். என்னால் அந்தத் தேதியில் கலந்துகொள்ள முடியாது என்று சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு அவர் ஏற்பாடு செய்த எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் இருந்தேன். அந்த நடிகர்தான் கலைமாமணி துரை.

    பார்ப்பதற்கு எளியவர். பழகுவதற்கு (அன்பில்) இமயமலை. உதவுவதற்கு நவீன பாரி. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் பற்றி இலக்கியத்தில் கேள்விப்பட்டுள்ளோம். இவரோ தனக்குக்கூட உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை தன்னைத் தேடி வந்த சாது சாப்பிடவேண்டும் என்று எண்ணியவர். அதற்குத்தான் சாப்பிட வைத்திருந்த இரண்டு இட்லியைக்கூட வேதம் சொன்னவருக்கு வழங்கியவர்.

    தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் சச்சு அவர்கள் இவரை இன்னொரு கமலஹாசன் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். நடிகர், தயாரிப்பு நிர்வாகி, ஒருங்கிணைப்பாளர், வசனப் பயிற்சியாளர் இப்படிப் பல அவதாரங்கள் திரைப்படத்தில் எடுத்தவர். நாடகத்திலிருந்து திரையுலகிற்கு வந்தவர். அந்தக் கதையைத்தான் இந்த நூலில் கலைமாமணி துரை தனது நடையில் சொல்லியுள்ளார்.

    வறுமை கொடுமையானது என்பது தெரியும். அதிலும் இளமையில் வறுமை நினைத்தாலே அடி வயிறு கலங்கும். இவர் நாடகக் குழுவில் இருந்தபோது பஞ்சத்தினால் தேசமே அல்லோலப்பட்டபோது, கஞ்சி எப்படிக் குடித்தார் என்பதையும் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். நடிப்பின் சிறப்பைப் பாராட்டி ஒருவர் வழங்கிய 100 ரூபாயை எப்படி வைத்துக் கொள்வது? - அதற்காகப்பட்ட பாட்டையும் பாங்குடன் பகிர்ந்துள்ளார் இந்த நூலில்!

    ஏணி பல பேரை ஏற்றிவிடும். ஆனால் ஞாபகமாக அவ் ஏணியை பலர் மறந்துவிடுவார்கள். இதற்கு முற்றிலும் மாறுபட்ட மனிதர் துரை. எஸ்.வி. சகஸ்ர நாமம் மீது இவர் கொண்ட பக்தி அளவிட முடியாதது. ஆசானுக்கு இவர் நூற்றாண்டு விழா (2013) கண்டபோது நாடகம், திரையுலகமே இவரைப் பாராட்டியது.

    தனது பழைய நாடக முதலாளியை இவர் மறந்தது இல்லை. தன்னை உருவாக்கிய அண்ணன் தமிழ்மணியை நெஞ்சார நினைப்பவர். அன்போடு துரை என்று அழைக்கும் அக்கா செல்லத்தையும் அவர் கணவரையும் இவர் சொல்லிச்சொல்லிப் பூரித்துப் போவார். துரையின் வாழ்க்கையில் ஒரு சில மாற்றங்களைச் செய்தவன் நான். அவர் என்னுடன் வெளிநாடு (மலேசியா) வந்தார். அவருக்கு மத்திய அரசின் உபகாரச் சம்பளம் கிடைத்தது. இதற்கெல்லாம் என் முயற்சியைவிட துரை என்கிற மாபெரும் ஈரமுள்ள மனிதனுக்கு இறைவன் காட்டிய வெளிச்சம்தான் என்று நம்புகிறவன். சீனன் படையெடுத்தபோது நாட்டு மக்களிடம் தேசபக்தியை வளர்க்க எஸ்.டி. சுந்தரம் எழுதிய நாடகத்தை இவர் ஓரங்க நாடகமாக நடித்தார். இதனைக் கேட்டால் நம்மை அறியாமல் உத்வேகம் பிறக்கும்.

    என்னுடன் அடிக்கடி கோபப்படுவார். நான் அவரைக் கடிந்துகொள்வேன். ஆனால் இதெல்லாம் க்ஷணநேர சமாச்சாரங்கள்தான். அடுத்த நாள் என் கலைமகள் அலுவலத்தில் ஆஜராகி அடுத்த வேலைக்கு என்னுடன் தயாராகிவிடுவார் துரை.

    சில மனிதர்களை முற்றிலும் நமக்குப் பிடிக்கிறது. ஏன் என்று தெரியாது? அப்படி ஏன் என்று விடை கிடைக்காத கேள்விதான் துரையின் நட்பு.

    ய : ஸர்வஜ்ஓ ஸர்வவித் யஸ்ய ஜ்ஞானமயம் தப:!

    தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூபமன்னம் சஜாயதே!!

    முண்டக உபநிஷத்தின் 9 ஆவது ஸ்லோகம். இறைவன் எல்லாம் அறிந்தவர். எல்லாம் தெரிந்தவர் கடவுள். அவரது தலம் ஞானமயமானது. அவரிலிருந்தே பிரம்மதேவனும் பெயர்களும் உருவங்களும் உணவும் தோன்றின. இது சுமாரான தமிழ் அர்த்தம்.

    கடவுளால் இப்படித் தோன்றிய நடிகர் துரை பல சோதனைகளைக் கடந்து சாதனைகளைத் தொட்ட மனிதர். சந்திரா என்னும் பெண்மணியைக் கைபிடித்துப் பாசப்பிணைப்புடன் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வரும் நிஜமான மனிதர். இவருடைய இந்த நூல் பல நாடக நடிகர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். கலைமாமணி துரையின் முயற்சி வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    அன்பன்

    கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

    ஆசிரியர் – கலைமகள்

    என்னுரை

    கலைமாமணி பி.ஆர். துரை

    ஒவ்வொரு நாளும், நிமிடமும், என் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது என் வழக்கம். சிலந்திக்கு வலுவில்லையென்றாலும் அது ஒரு கூட்டையே கட்டுகிறது. நானும் சிலந்தி மாதிரிதான். பாயில் படுத்தவனை நாயும் பார்க்காது. ஆனால் வீதியில் செல்பவனை நாடே பார்க்கும் என ஒரு படைப்பாளி தன் எழுத்தில் குறிப்பிட்டிருந்தார். அதைப்படித்து ரஸித்த நான்கூடப் பெரும்பாலும் வீட்டில் இருக்காமல் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்பேன். அதன் பலன் கலைத்துறையைச் சார்ந்த பல மேதைகளின் அறிமுகம் கிடைத்தது.

    வரிசையில் உனக்கு முன்னால் நிற்பவர்களைப் பார்த்து பயப்படாதே. உனக்குப் பின்னால் வந்து நிற்கும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்து, தைரியமாக இரு. லட்சுமி கடாக்ஷம் முட்டாளுக்கும் கிடைக்கும். ஆனால் சரஸ்வதி கடாக்ஷம் அறிவாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும். இது போன்று பலர் எழுதிய கருத்துக்கள் என் மனதைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்த நான், என் மூத்த சகோதரர் தமிழ்மணியால் வளர்க்கப்பட்டேன். எதிலும் நெம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நான், பள்ளிப் படிப்பையும் ஒண்ணாவதோடு நிறுத்திக்கொண்டேன். 1956ல் மனோகரா திரைப்படம் என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கலைஞரின் உரையாடலாலும் சிவாஜி கணேசனின் நடிப்பாலும் ஈர்க்கப்பட்டு, நடிகர் ஆக ஆசைப்பட்டேன். என் தாய் மறைந்த பிறகு, சகோதரர் தமிழ்மணியின் முயற்சியினால் குரு கே.என். ரத்தினம் அவர்களை உரிமையாளராகக் கொண்ட ஸ்ரீதேவி நாடக சபாவில் சேர்ந்து முதன்முதலில் கலைஞர் எழுதிய ஒரே முத்தம் என்ற நாடகத்தில் நடித்தேன். ஒரு ஆண்டிற்குள் முதல் தர நகைச்சுவை நடிகன் என்ற அந்தஸ்தைப் பெற்று நாடக மேடையில் வலம்வரத் தொடங்கினேன். ஐந்தாண்டிற்குள் சுமார் இரண்டாயிரம் நாடகம்வரை நடிக்கும் பாக்யம் பெற்றேன். நடிப்பிலே ஹீரோ, படிப்பிலோ ஜீரோ என விமர்சிக்கப்பட்டேன். ஆனாலும் நடிகன் என்பதால் அறிவுப்பூர்வமான காவியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் எல்லாவற்றையும் நடித்தே தெரிந்துகொள்ளும் பாக்யம் கிடைத்தது. பேரறிஞர் அண்ணா, கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி போன்ற நான்கு முதலமைச்சர்களும் என் வரலாற்றில் இடம் பெற்றிருப்பது என் பாக்யமே. என் நாடக குருநாதர் ஆகிய கே.என். ரத்தினம் அவர்களாலும் பாரதி கலைஞரும் நடிகருமான எனது குருநாதர் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களாலும் நாடக உலகின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றேன். மாமேதை ஜெமினி எஸ்.எஸ். வாசன் அவர்களின் பேராதரவினால் திரைப்பட அங்கீகாரம் கிடைக்கப் பெற்றேன்.

    என் நண்பர் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தபோது திரு. செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களைச் சந்தித்தேன். அவர், துரை உங்கள் நாடக அனுபவங்களை ஒரு நூலாக எழுதலாமே என்று என் உள்ளத்திலே ஒரு விதையைத் தூவினார். கீழாம்பூர் அவர்களும் துரையால் அதை நிச்சயமாகச் செய்யமுடியும் என்று பரிந்துரைத்தார். யோசித்தேன். நான் வெறும் நாடக நடிகன் மட்டுமல்ல. திரைப்படம், டி.வி. நாடகம் தொடர், வானொலி டப்பிங், டாக்குமென்டரி குறும்படம் எனப் பல பரிமாணங்களில் வலம் வந்துகொண்டு இருப்பவன். அதனால் எனது கலையுலக அனுபவங்களை, வாழ்க்கை வரலாறாகவே எழுதிவிடுவது என்று உறுதி செய்தேன். அதே சமயம் வாழ்க்கையில் உண்மைச் சம்பவங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதுவது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டும் எழுதுங்கள். நூல் உருவாகிவிடும் என்றார். இடையில் எனது குருநாதர் சகஸ்ரநாமம் அவர்களின் நூற்றாண்டு வந்ததால் தாமதமாக இலக்கிய உலகிற்கு வந்து சேர்ந்து இருக்கிறது எனது நூல். அங்கீகாரம் என்று பெயருள்ள என் நூலைப் படியுங்கள். என் நாடக அனுபவங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். ராமகாவிய அணிலைப்போல் கலையுலகிற்கு நான் செய்துள்ள இந்த சின்னப் பணியைக் குறித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

    இந்த நூலிற்காக நான் எடுத்துக்கொண்ட ஒரே தகவல் கலைமாமணி நா.அ. முத்துக்கூத்தன் அவர்கள் எழுதியுள்ள துணை நடிகர் துரைக்கண்ணு என்ற நூலில் இருந்து, நாடக சம்பந்தமான நான்கு பக்க செய்திகள் மட்டும்தான். இது, எதிர்காலத்தில் கலையுலகிற்குள் பிரவேசிக்கும் சந்ததிகளுக்குப் பயன் அளிக்கும் என உளமார நம்புவதால்.

    நன்றி

    கலைமாமணி பி.ஆர். துரை

    முன்னுரை

    எல்லோருக்கும் வணக்கம் எனது வாழ்க்கை வரலாற்று நூலாகிய அங்கீகாரம் 2014 மே மாதம் 29ம் தேதி வாணிமஹால் வளாகத்தில் உள்ள ஓபுல் ரெட்டி அரங்கத்தில் வெளியிடப்பட்டது. நூலை பத்மஸ்ரீ நல்லி குப்புசுவாமி செட்டியார் அவர்கள் தலைமை ஏற்று வெளியிட, மூன்றுமுறை ஊர்வசி விருது பெற்ற எனது அன்பு சகோதரி முனைவர் ஊர்வசி சாரதா அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் விழாவிற்கு முன்னிலை வகிக்க, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற செயலாளர் கலைமாமணி P.S. சச்சு, எடிட்டர் B. லெனின், இயக்குநர் SP முத்துராமன், நடிகர் ராஜேஷ், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், மக்கள் குரல் ராம்ஜி, காரைக்குடி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

    இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இப்பொழுது, என்னிடம் எஞ்சியுள்ளது ஒரே ஒரு பிரதி மட்டும்தான். அதனால், இரண்டாம் பதிப்பு வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்

    Enjoying the preview?
    Page 1 of 1