Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arivippu
Arivippu
Arivippu
Ebook201 pages1 hour

Arivippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிநாட்டுப் பயணங்களையும், அங்கு கண்ட புதிய மண்ணையும், அதில் வாழும் அல்லது வாடும் ஈழத்தமிழர்களின் அவலங்களையும் கதைகளாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் நிஜம் நெருப்பாகச் சுடுகிறது. இப்பதினான்கு சிறுகதைகளில் பல பத்திரிகைகளில் வெளிவந்தவை; சில இதற்காகவே எழுதப்பட்டவை.

எழுத்து என்பது சுயப்பிரதாபமோ சுத்தமான உத்திகளின் வடிகட்டல்களோ அல்ல. அது மனித உறவுக்கான மந்திர வலை. இவ்வலை பின்னும் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளுள் சுப்ரபாரதி மணியனும் ஒருவர்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115101936
Arivippu

Read more from Subrabharathi Manian

Related to Arivippu

Related ebooks

Reviews for Arivippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arivippu - Subrabharathi Manian

    http://www.pustaka.co.in

    அறிவிப்பு

    Arivippu

    Author:

    சுப்ரபாரதிமணியன்

    Subrabharathi Manian

    For more books
    http://www.pustaka.co.in/home/author/subrabharathi-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நேர்காணலிலிருந்து…

    விமோசனம்

    அறிவிப்பு

    திகில்

    அது மட்டுமல்ல

    இடைவெளிகள்

    கெளரவ சாவு

    புதைந்த காற்று

    தகனம்

    கூரிய நாடா

    மீட்சி

    கரு

    சேதாரம்

    மிதிபடல்

    எண்களுடன் சில எழுத்துக்கள்

    அறிவிப்பு

    சமர்ப்பணம்

    கனவின் இலக்கிய முயற்சிகளிலும்
திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின்
வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்ட
யுவராஜ் சம்பத் அவர்களுக்கு.

    நேர்காணலிலிருந்து…

    தனிமைப்படாத உலகத்திற்கு இட்டுச் செல்லும் இலக்கியங்கள்

    மிக இளம் வயதிலேயே இலக்கியத்தின் முப்பரிமாணங்களிலும் பிரதிபலித்தவர். தம் எழுத்துக்களால் பல களங்களைச் சுவாசிக்க வைத்தவர். சர்ச்சைக்கும், சமரசத்திற்கும் ஆட்படாதவர். சிற்றிதழா கட்டும், சிறப்பிதழாகட்டும், விருதுகள் கவரும் வெளிவட்டார அரங்குகளாகட்டும் - தன் தனித்துவம் கெடாது, தன்னுணர்வு அகலாது அழகியல் ததும்ப படைப்புகளை வடித்து வருபவர்.

    சிறுகதைகளுக்கான ஜனாதிபதி அளித்த’கதா விருது’, தமிழக அரசு விருது, இலக்கியச் சிந்தனை, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், லில்லி தெய்வசிகாமணி விருதுகளெல்லாம்
இவர் எதிர்பாராத காலத்திலேயே சென்றடைந்தவை.

    8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், பயண நூல்களுக்குச் சொந்தக்காரர். இலக்கிய விருதுகள், இலக்கியப் பணி நிமித்தம் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர் என அயல்நாடுகள் சுற்றி வந்தவர். தமிழ் எழுத்தாளர்களின் பல்வேறுபட்ட அமைப்பு களுடன் மட்டுமின்றி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு இயக்கம், சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய சமூக அமைப்புகளுடனும் நெருங்கின தொடர்பு கொண்டவர். கனவு பத்திரிக்கையின் ஆசிரியர்...

    இலக்கியம் படைக்காத இளமைக்காலம் பற்றி…?

    கோவை மாவட்டத்திலுள்ள செகடந்தாளி என்ற குக்கிராமம் என் ஒன்பது வயது வரையிலான வாழ்க்கைக்களமாக இருந்தது. அது கவுண்டர்களின் ஜாதிய அடக்குமுறையும், நிலப்பிரபுத்துவ வன்முறையின் மிச்சமும் கொண்ட கிராமம். எங்கள் குடும்பத்தவர் நெசவுத் தொழிலாளிகள். முந்தைய தலைமுறையினர் மைசூரிலிருந்து வந்து குடியேறியவர்கள். பல்வேறு அழுத்தங்கள்,ஜாதீய வன்முறைகளுக்கு மத்தியில் பல ஜாதிகளின் ஒருங்கிணைப்பாக அந்த கிராமம். எனது மூன்றாவது நான்காவது வகுப்பு பிராயத்தில் அந்தக் கிராமத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம். எல்லோரும் குடும்பம் குடும்பமாக வீடுகளைக் காலி செய்து கொண்டு அருகிலுள்ள திருப்பூருக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். தண்ணீர் பஞ்சம் மட்டுமல்லாது கவுண்டர்களின் ஜாதீய வன்முறையே பிற ஜாதியினரை இடம் பெயரச் செய்து கொண்டிருந்தது எனச் சொல்லலாம். எங்கள் குடும்பத்தவர் நெசவுத் தொழிலினூடே பல தலைமுறைகளாய் செளண்டியம்மன் கோயிலில் பூஜை செய்வதை ஒரு கெளரவமாகக் கொண்டிருந்தார்கள். தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவும், ஜாதீயக் கொடுமையாலும் கிராமமே காலியாகிக் கொண்டிருந்த போதும் எங்கள் குடும்பம் இடம் பெயர விரும்பவில்லை.

    திருப்பூர் அப்போது சிறிய டவுன்தான். டவுன் என்பது என் அப்பாவின் பார்வையில் பல ஜாதிகள் குறிப்பாக அது கீழ் ஜாதிக்காரர்கள் இடம். அதை ஒரு வசவு மாதிரிதான் சொல்லுவார். செகடந்தாளியில் நாங்கள் ஒரு கவுண்டர்தோட்டத்தில்தான் போய்நீர் கொண்டு வர வேண்டும். ஒரு குடம் தண்ணீர் எங்கள் வீட்டிற்கு நாங்கள் எடுத்துவர வேண்டும் என்றால், இன்னொரு குடம் தண்ணீரை இரண்டு பர்லாங் தொலைவில் இருக்கும் கவுண்டரின் வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டுத்தான் வர வேண்டும். இது ஜாதி அடக்குமுறையின் ஒரு வடிவ உதாரணம். இதைவிட கீழ் ஜாதிக்காரர்கள் படும் அவமானங்கள் மிகக் கொடுமையானவை. என் அப்பாவிற்குப் பிறகு ஒரு அண்ணன் செளண்டியம்மன் கோயில் பூஜை வேலையைப் பகுதி நேர வேலையாகவும், தலைமுறையானக் கோயில் பணியாகவும் செய்து வந்தார். அவர் ஒர் அமாவாசை நாளில் கோவிலுக்கென்று தண்ணீர் எடுக்கப் போயிருக்கிறார். குறிப்பிட்ட அந்தத் தோட்டத்துக் கவுண்டச்சி வீட்டிற்கு வழக்கம் போல் ஒருகுடம் தண்ணீரை எடுத்துச் சென்று விட்டு வந்த பின்பும், இன்னொரு குடம் தண்ணீரை அவள் வீட்டிற்கு எடுத்துப் போகச் சொல்லி இருக்கிறாள். என் அண்ணன் கோயிலுக்காக, கோயில் விக்ரகங்களைக் கழுவுவதற்காக தண்ணீர் எடுத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார். அந்தக் கவுண்டச்சி ‘செளண்டியம்மனுக்காக இருந்தால் என்ன - இதுதான் நடைமுறை’ என்றிருக்கிறாள். இதில் அவர் மனமுடைந்து போய்விட்டார். இனி இந்தக் கிராமத்தில் வாழ்வது கெளரவமற்றது என்று தீர்மானமாக முடிவு செய்தது வீட்டில் அனைவரையும் பாதித்தது. அப்படி நாங்கள் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தபோது என் வயது ஒன்பது.

    இடம் பெயர்ந்ததற்குக் காரணம் தண்ணீர் பஞ்சம் மட்டும்தானா?

    அது ஒரு காரணம். ஜாதிய வன்முறைகள். அதன்அழுத்தத்தின் காரணமாய் பல விஷயங்கள், சம்பவங்கள் அதற்கு முன்னரே கிராமத்தில் நடந்து முடிந்திருந்தன. பக்கத்திலிருந்த செம்மாண்டம் பாளையம், எளச்சிபாளையம் போன்ற கிராமங்களில் செளண்டியம்மன் விக்ரகங்களைத் திருடியது (கீழ் ஜாதி மக்களை விட்டு அவ்வாறு செய்த கவுண்டர்களின் ஆதிக்கம்), பாலியல் ரீதியான இம்சைகள் என்று நிறைய…

    இவற்றையெல்லாம் தங்கள் படைப்புகளில் எங்காவது பதிவு செய்திருக்கிறீர்களா..?

    இல்லை. அவற்றையெல்லாம் உறுத்தலாகத்தான் உணர்கிறேன். எனது கிராம வாழ்க்கை சார்ந்த அனுபவங்களையும், நெசவாளர்களின் வாழ்க்கையையும் இன்னும் பதிவு செய்ய காலம் உதவவில்லை. பழைய கிராம வாழ்க்கையை மற்றவர்களைப் போல் சொல்வது என்பது அலுப்பாகவும், என்னைப் பிரித்துக் காட்டாத தன்மையில் இருப்பது போலவும் இருந்ததால் எழுதாமலே விட்டுவிட்டேன். ஆனால் சரித்திரப் பூர்வமான மிக முக்கியமான பதிவுகளை அது உள்ளடக்கினதாக இருப்பதை இப்போது நான் உணர்கிறேன். எனது எழுத்தின் ஆரம்பகாலத்தில் கிராமவாழ்க்கை என்னை வெகுவாய் ஆகர்ஷித்ததில்லை. நகர வாழ்க்கை, காதல் போன்ற மலினப்பட்ட அனுபவங்கள் கவனத்திற்குரியது என்று அப்போது மனதில் தவறாக ஒர் எண்ணம் விழுந்திருந்தது. எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ, தொ.மு.சி.யின் பஞ்சும் பசியும் போன்றவை நெசவாளர்களின் பிரச்சனைகளில் மூன்றாம் நபரின் பார்வையையேக், கொண்டிருந்திருக்கின்றன. அந்த வகையில் அவர்களின் வாழ்க்கையைப் பிரம்மாண்டமானத் தளத்தில் பதிவு செய்யாத உறுத்தல் எனக்குள்ளது. இதை செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

    இலக்கியப் பரிச்சயம் முதன்முதலில் ஏற்பட்டது எப்படி?

    எனது நான்கு சகோதரர்களில் ஒருவர் மட்டுமே எட்டாவது படித்தவர். செகடந்தாளியிலிருந்து அமாவாசை, விடுமுறை நாட்களில் சோமனூருக்குச் சென்று சினிமாப் பார்ப்பது, ஒட்டலில் சாப்பிடுவது வழக்கம். அப்போது காகித மணம் கப்பென்று பற்றிக் கொண்டது. தினத்தந்தி, ராணியை வாங்கி வரும் சகோதரர்கள். அப்போது எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு ஜெயிலுக்குப் போன பின்பு அவரின் அனுபவங்கள் குமுதத்தில் தொடராக வந்தது. எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு ஒருவன் உலகத்தில் உயிரோடு இருப்பது என்பது எனக்கு அப்போது பெரிய அதிசயமாகத் தோன்றியது. அதிலும் ஜெயிலுக்குள் போய்விட்டு அதை தைரியமாக வேறு பத்திரிகையில் எழுதுகிறாரே... அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம். மூன்று கி.மீ. அப்பால் உள்ள மின்சாரக் கட்டணம் கட்டும் அலவலகம் செல்லும்போது, பில் கட்ட சில்லரை இல்லை என்று ஒரிரு பத்திரிகைகள் வாங்க ஆரம்பித்தேன். சிலசமயம் பில் தொகைகளை மாற்றி எழுதி அதற்கு வரும் தொகையில் சில பத்திரிக்கைகள் வாங்குவேன். அப்போதெல்லாம் வாரப் பத்திரிக்கை வாசிப்புதான்.

    வீட்டில் அம்மா சொல்லுகிற நாட்டுப்புறக் கதைகள். அம்மாவின் சொந்த வாழ்க்கைக்கதைகள். இவற்றை மீறி நான் படித்த ஞாபகம் உள்ள முதல் எழுத்து ஜெயகாந்தனுடையது. அதுவும் கல்லூரியின் முதலாண்டில்தான். கீழ்த்தட்டு மனிதர்கள், சேரி மனிதர்களைப் பற்றியே எழுதுகிறாரே என்று ஒருவகை கோபம் அவர் மீது ஆரம்பத்தில், பிறகு அவர் கதைகளில் காட்டின விசித்திரமான மனிதர்கள் அதிர்ச்சி தந்தனர். வாழ்க்கை இவ்வளவு குரூரமாய் உள்ளதா என்று யோசிப்பதைக் காட்டிலும் அதை ஒரு வாழ்க்கை அனுபவம், இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை மனம் ஒப்புக்கொள்ள நீண்டகாலம் மறுத்தது. நான்கு சகோதரர்களின் நெசவுத் தொழில் தந்த பாதுகாப்பானவருமானம் வறுமையை உணர வைத்திருக்கவில்லை. அம்மாவோ மற்றவர்களோ வறுமை கால அனுபவங்களைச் சொல்லுகிற போது கதை மாதிரி கேட்பேன். உணர்ந்து உள்வாங்கிக் கொண்டதில்லை. திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் திருக்குறள் பேழை இருக்கும். வாரம் ஒரு திருக்குறள் அத்தியாயம் பேழைக் கண்ணாடியில் இருக்கும். அதுபற்றி ஏதாவது எழுதி அந்தப் பேழையில் போட்டால் பரிசு.

    திருக்குறளைப் படித்துவிட்டு அந்த பொழிப்புரையையே வேறு வார்த்தைகளில் எழுதிப் போடுவேன். அதற்கு வேறு யாரும் எழுதின மாதிரி தெரியவில்லை. வருடாவருடம் எனக்கு திருக்குறள் பேழை பரிசாகக் கனமான புத்தகங்கள் கிடைக்கும். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். கல்லூரி மலருக்காக ஒரு கவிதை எழுதி தமிழ்ப் பேராசிரியர் ஞானபூபதியிடம் தந்தேன். அவர் உனக்கு மரபு வராது. ஏன் நீ புதுக்கவிதை எழுதக்கூடாது…? என்றார். அப்போது காமராஜர் மறைவை ஒட்டி மு.மேத்தா எழுதி இருந்த ஒரு கவிதையைப் பாடிக்காட்டி இததான் புதுக்கவிதை என்றார். ஆச்சர்யமாக இருந்தது. பேராசிரியர் முப்பால் மணிதாமரை போன்ற இதழ்கள் பற்றி தமிழ் வகுப்பில் சொல்லுவார். க. மீனாட்சிசுந்தரம் முதல்வராய் இருந்தபோது கல்லூரியில் நடந்த தமிழ் விழாக்களில் நவீன நாடகங்கள் பற்றி புவியரசு, கவிதைகளில் மேத்தா, சிற்பி மற்றும் வானம்பாடி கவிஞர்கள் பங்கேற்பு ஒரு வகை ஈர்ப்பை ஏற்படுத்தியது.

    எழுத்து அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்…?

    கையில் காசு வைத்து செலவு செய்து கொண்டிருக்கும் மாணவன் அல்ல நான். பொழுது போக்குக்கு நூலகம்தான். ஜெயகாந்தன் தொடக்கமே. பாலகிருஷ்ணன் என்றொரு நண்பர் ‘குறிஞ்சி' என்று பத்திரிகை நடத்துவதைப் பார்த்து அதில் எழுத ஆசை. புதுக்கவிதைகள் அதில் எழுதினேன். மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ நகலெடுக்கிற விதமாய். நா. காமராஜன் எட்டமுடியாத தூரத்தில் இருந்தார். சிற்பி மரபும் எளிமையுமாய் இருந்தார். 'குறிஞ்சியில் காதல்ரசம் சொட்டக் கவிதைகள், கதைகள் எழுதினேன். பொதுவுடைமைத் தோழர் ஒருவர் குறிஞ்சி இதழ்களைப் படித்துவிட்டு, நிஜவாழ்க்கை உங்களுக்கு வெகுதூரத்தில் உள்ளது என்று கூறி ரஷ்ய நூல்களை அறிமுகப்படுத்தினார். ஜெயந்தனின் கதைகளைத் தீவிரமாகப் படித்துவிட்டு, ஜெயகாந்தன்தான் வேறு பெயரில் எழுதுகிறார் என்று தீவிரமாக நம்பினேன். அவரின் சமூக அக்கறை, அதை மேடைத் தொனியில் வெளிப்படுத்தும் உத்திகள் என்னை உலுக்கின. கி.ரா.வின் கரிசல் அனுபவங்கள் நுணுக்கமானவைகளாக என்னுள் விழுந்தன. சுஜாதா, அசோகமித்திரன், சா. கந்தசாமி, வண்ணதாசன்... என வாசிப்புத் தொடர்ந்தது.

    முதல்கதை எப்போது … எப்படி... எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது?

    திருப்பூரிலிருந்து ‘விழிப்பு’ என்ற பத்திரிகை மார்க்ஸிஸ்ட்டுகள் நடத்தினது. செம்மலரிலிருந்து மாறுபட வேண்டும் என்று பிரயாசைப்பட்டனர். பூமணி, புவியரசு, சி.ஆர். ரவீந்திரன், அஸ்வகோஸ் போன்றோரின் படைப்புக்கள் அதில் வந்து கொண்டிருந்தன. எமர்ஜென்சியில் ஒரு கால்பந்தாட்ட வீரனுக்கு ஏற்பட்ட போலீஸ் சித்ரவதையைப் பற்றின கதை ஒன்றை 'வேலியை மீறும் பயிர்கள்’ என்றுதலைப்பிட்டு அனுப்பினேன். அவர்கள் அதை ‘சுதந்திர வீதிகள்’ என்று தலைப்பு மாற்றி பிரசுரித்தனர். அதில் நாலைந்து கதைகள்... திருப்பூர் கிருஷ்ணன் ‘தீபம் வாசகர் வட்டம்’ என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1