Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sayathirai
Sayathirai
Sayathirai
Ebook316 pages1 hour

Sayathirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘சாயத்திரை’ திருப்பூர் வாழ்க்கையைச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார்.அதன் சீரழிவு முரண் அழகோடு இதில் பின்னப்பட்டுள்ளது. சாயத் தொழிற்சாலை நகர நவீன நாகரிகத்தின் ஒரு விஷக் கொடுக்கு. இதுபோல் ஏராளமானவை இன்று நமது சுற்றுச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதனை நமக்கு நயம்பட உணர்த்தும் இந்நாவல் சமூக அக்கறையுடன் 'சாயத்திரையில் தீட்டப்பட்டுள்ளது.
Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115101935
Sayathirai

Read more from Subrabharathi Manian

Related to Sayathirai

Related ebooks

Reviews for Sayathirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sayathirai - Subrabharathi Manian

    http://www.pustaka.co.in

    சாயத்திரை

    Sayathirai

    Author:

    சுப்ரபாரதிமணியன்

    Subrabharathi Manian

    For other books

    http://www.pustaka.co.in/home/author/subrabharathi-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    சாயத்திரை

    1

    வானத்தில் தெரிந்த விமானம் இன்னும் தரையிறங்காமல் வட்டமடித்துக் கொண்டிருப்பதாய் பட்டது பக்தவச்சலத்திற்கு. வானம் வெளிறிக் கிடந்தது. விமானத்தின் ஆகிருதியை உணர்கிற அளவில் மிகையான தூரத்தில் அது பறந்து கொண்டிருக்கவில்லை. அது ஏனோ ஆறுதலான ஒரு விஷயம் போல்பட்டது அவனுக்கு.

    கண்களை மூடி புல்துரையில் படுத்துக்கிடந்தவனுக்கு சட்டெனத் தூக்கம் வந்திருக்க வேண்டும். சில நிமிடங்களாக தூக்கம். கண் விழித்தபோது வானத்தில்பட்ட விமானம் முன்னதுதானா என்பதை நினைத்துப் பார்த்தான். இரண்டும் ஒன்று என்றால் ஏதோ அசாதாரணத் தன்மையுடன் அது வட்டமடித்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற நினைப்பு வந்தது.

    புரண்டு இடதுபுறம் பார்த்த போது தனக்கு நெருக்கமாக உட்கார்ந்தபடி இரண்டு பேர் தாயக்கட்டை உருட்டலில் இருந்தனர். உள் சட்டை தெரிய காக்கி உடைகளை அணிந்திருந்தவன் பீடியை புல்லின் மேல் அழுத்திச் சிதைத்தான். அவனின் தோளில் இறங்கியக் கூந்தல் ஒரு சாண் நீளத்திற்கு வரிவரியாய் மினுங்கிக் கிடந்தது. மேம் சாப் பாம்பே பிளைட் வந்திருச்சா. பீடியை நசுக்கியவன் நீலம் பரவின வானத்தை ஒரு நிமிடம் பார்த்தான். இன்னம் வர்லியப்பா. வானத்தில் பட்ட விமானம் இப்பொழுது

    காணாமல் போயிருந்தது. வெளிச்சக் கதிர்களின் பிரதிபலிப்பில் வானம் வெளிறியிருந்தது. இப்ப வந்தது என்ன பிளைட் சார்' தாயத்தை உருட்டிவிட்டவன் பக்தவச்சலத்தைப் பார்த்தான்.அது என்இபிசி. வந்துட்டு கெளம்பிப்போகுது."

    அப்போ பாம்பே பிளைட்.

    அது இன்னமும் வர்லே.

    வானத்தைப் பார்த்தபடி மீண்டும் உடம்பைச் சாய்த்தான். சின்னதான வேப்பமரம் பரப்பின நிழல் அவனுக்கும், தாய ஆட்டக்காரர்களுக்கும் நூல் பிடித்து அவர்களுக்கு மட்டுமானது என்பது போல் புல்தரை மேல் கிடந்தது. வேப்பமரத்தையொட்டி இருந்த சிறு புற்று மஞ்சளால் நிரம்பி இருந்தது. கலைந்திருந்த குங்குமப் பொட்டு புல்தரையிலும் பரவியிருந்தது. மஞ்சளும், குங்குமமும் கலந்து தொனித்தது அவன் இடது காலை மெல்ல இழுத்துக் கொள்ளச் செய்தது. இரண்டு தரம் அவனைப் புரட்டிவிடும் தூரத்தில் கிடந்த காய்ந்த மல உருண்டையை அவன் புல்தரையில் சாய்வதற்கு முன்பாகவே உதைத்து தூரம் தள்ளிவிட எண்ணியிருந்தான். அது அப்படியேக் கிடப்பது அருவருப்பளித்தது. இவ்வளவு பேர் நடமாடும் இடத்தில் அதுபற்றி யாரும் அக்கறை கொள்ளாதது அவனுக்கு ஆச்சரியமளித்தது.

    எழுந்து உட்கார்ந்தபோது அவனைக் கடந்து சென்ற நாயை யாரோ எட்டி உதைக்க அது வள்ளென்றபடி மறைந்தது. டாக்சிகள் பாதியாய் குறைந்திருந்தன. இடையில் வந்த விமானம் ஒன்று டாக்சிகளை அள்ளிக் கொண்டு போயிருக்க வேண்டும் என நினைத்தான். வெற்று ட்ராலிகள் வரிசையாய் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன. கறுத்த நிறத்தைக் காட்டினக் கண்ணாடிக் கதவுகள் பெரிய தடுப்பு போல நின்றிருந்தன.

    பிளாஸ்டிக்பை ஞாபகம் வந்ததும் திக்கென்றது. இடது கையை பின்புறம் துழாவ விட்டபோது அது தட்டுப்பட்டு சரசரவென்றச் சப்தம் உண்டாக்கியது. அதனுள் இருந்த துண்டை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தான். வரிக் கோடுகளாய் அழுக்கு அதில் படிந்தது. பரபரவென்று பையினுள் இருந்த அட்டையைத் தேடினான். வெல்கம் மிஸ் மரிய ரோசா என்று எழுதப்பட்ட எழுத்துக்கள் நீல மையில் மினுங்கியது. இது யாராவது கையில் கிடைத்திருந்தால் விளையாட்டுப் பொருளாகி இருக்கும். அல்லது யாரையோ வரவேற்பதற்கானது என்பதைப் புரிந்து கொண்டு ஏதாவது விமானம் வரும் வேளையில் இந்த அட்டையுடன் நிற்க மரிய ரோசா அகப்பட்டுவிடக் கூடும். எங்காவது கூட்டிக் கொண்டுப் போய் கடத்திக் கொண்டு போய் விடக்கூடும் என்ற கற்பனை திக்கென்றது.

    எழுந்து மண் துகள்கள் ஒட்டியிருந்த சட்டையை படபடவென்று தட்டி விட்டுக் கொண்டான். பெரிய பெட்டிகள் நிரம்பக் கிடந்த இடத்தில் சைக்கிளில் இன்னெரு பெட்டியைக் கொண்டு வந்தவன் மூச்சிரைப்பினுாடே இறக்கி வைத்தான். அடுத்த வந்த சைக்கிளிலும் இன்னொரு பெட்டி இருந்தது. அந்த சைக்கிள்காரனும் முகத்தில் பொங்கி வழிந்த வியர்வையோடு சைக்கிளைப் பிடித்திருந்தான். விமானத்தில் பயணம் போகப்போகிற இந்த பெட்டிகள் ஒவ்வொன்றாக சைக்கிளில் கொண்டு வரப்படுவது வினோதமாகத் தோன்றியது.

    வந்து நின்ற சிவப்பு வேனிலிருந்து இறக்கப்பட்ட சரக்குகளின் ஈரத்தோடு, மல்லிகை வாசமும் மெல்ல பரவ ஆரம்பித்தது. சாக்குகள் எவ்வித சப்தமின்றி தரையில் விழுந்தன. வேன் இவ்வளவு சாக்குகளை அடைத்திருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது. வேன் டிரைவர் தனது அகலமான சட்டைப் பாக்கெட்டிலிருந்து சில ரோஜாக்களை எடுத்தான். பெரும்பாலும் கசங்கியிருந்தன. சாக்குகளை இறக்கியவர்களுக்கு ஒவ்வொன்றாக நீட்டினான். பக்தவச்சலமும் கையை நீட்ட டிரைவர் ஒரு நிமிடம் தயங்கியவாறே ஒன்றைக் கொடுத்தான். அது கசங்காததாக இருந்தது ஆறுதலை தந்தது அவனுக்கு.

    பம்பாய் பிளைட் என்னாச்சாமா..

    இன்னமும் ஒரு மணி நேரம் லேட்டுன்னு சொல்றாங்க.

    இந்தப் பூவெல்லாம் வெயில்ல கெடந்து வாடாம இருந்தாச்செரி. என்னமோ பிரச்சனையாமா. பம்பாயிலிருந்து கெளம்பின பிளைட் கோவாவில எறக்கியிருக்காங்களாம். அங்கிருந்து வர லேட்டாகும்கறாங்க.

    கறுப்புக் கண்ணாடித் தடுப்புகள் விமான நிலையத்துள் இருப்பதை எதையும் தட்டுப்பட வைக்க வில்லை. உள்ளே நுழைய டிக்கெட் தனியாக வாங்க வேண்டியது அலுப்பூட்டியது. விமான நிலையத்தின் மேல் தளத்திற்கு செல்வதற்காக வாங்கியிருந்த டிக்கெட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

    ஏகதேசம் எல்லா நாற்காலிகளும் அடைப்பட்டுக் கிடந்தன. வலது, இடது புறங்களில் இரு விமானங்கள் நின்றிருந்தன. கண்ணாடித் தடுப்பு மங்கலாக இருந்தது. தூரத்தில் தெரிந்த வெற்று வெளி பயமூட்டுவதாக இருந்தது. பார்வைக்கு மரங்களே இல்லை. எல்லாம் வெயிலில் காய்ந்து, விமானங்களின் மிரட்டுகிறச் சப்தங்களில் ஒடுங்கித் தீய்ந்து விட்டிருந்தன. கோரைப்புல் பாயை விரிந்து வைத்தது போல விமானம் இறங்கும் தளம் கிடந்தது.

    காலியான பிளாஸ்டிக் நாற்காலி அவன் கண்களில் பட்டது. அதிலிருந்து எழுந்த பெண் குழந்தையை மார்பில் சார்த்தியபடி நடக்க ஆரம்பித்தாள். அவளின் நெடிய உயரமும், சிவந்த உடம்பும் திரும்பத் திரும்ப வெறிக்கச் செய்தது. அவள் அணிந்திருந்த நகைகளின் அபரிமிதம் இன்னும் அவளுக்கு அழகூட்டிக் கொண்டிருந்தது. முதுகின் பெரும்பகுதி மறைக்கப்படாமல் கவர்ச்சியாக இருந்தது. அந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொள்ளலாமா என நினைத்தான். அந்தப் பெண் மறுபடியும் நாற்காலியை ஆக்கிரமிப்பாள் என்ற எண்ணம் அங்கேயே நிற்கச் செய்தது. குழந்தையின் அழுகுரல் சற்று அதிகரிக்கவே முதிய பெண்ணெருத்தி ஓடிச் சென்று குழந்தையை வாங்கிக் கொண்டாள். கணுக்கால் தெரியக் கட்டியிருந்த வெள்ளைப் புடவையும், முகத்தில் இடப்பட்டிருந்த சந்தனக்கீற்றுகளும், குள்ள உருவமும் விநோதமாய் இருந்தன. முன் நாற்காலி வரிசையில் இருந்த பெண்கள் ஏதோவொருவகை ஆச்சரியங்களுடன் காத்திருந்தனர். முகத்தில் கொப்பளித்த குதூகலம் ஒவ்வொருவரையும் ஒட்டிக் கொண்டிருந்தது.

    இடது பக்க மூலையில் ஒரு நாற்காலி காலியாகத் தென்பட்டது. விறுவிறுவென்று சென்றவன் உட்கார்ந்தான். தளத்தின் ஒரு பகுதியை மட்டுமே அது காட்டுவதாக இருந்தது. தனித்து நின்றிருந்த விமானத்தின் அடிபகுதியில் இருவர் தென்பட்டனர். ஏணி மூலம் ஏறிக்கொண்டிருந்தவன் ஒரு படியில் சொகுசு போல் உட்கார்ந்தான். பக்தவச்சலம் நாற்காலியை இறுகப் பிடித்தான். கண்களை மூடிக்கொள்ள சரசரவென்று வந்த காற்று சுவரில் மோதித் திரும்பியது.

    நாற்காலி பறந்து கொண்டிருந்தது. அவன் கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக போட்டுப் பிணைத்துக் கொண்டான். கைகளை இருபுறமும் வீசிப் பார்த்து கொண்டான். அவன் மேகங்களைத் தொட்டு குளிர்ச்சியை உணர்ந்தான். உக்கிரமான வெயில் அவனின் கால்களை மட்டும் சுட்டெரித்தது. எதிரில் இரண்டாய் பிளவுபட்டபடி வந்த நாற்காலியொன்று அவனை மோதச் செய்தது. அதன் ஒரு பகுதி கழன்று விழுந்தது. சட்டென அவன் உட்கார்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலி இரும்பாய் மாறி கனக்கத் தொடங்கியது. அதன் எடை அதிகரிப்பில் அது கீழிறங்கத் துவங்கியது. அது தரையில் பட்டதும் லேசாய் தீப்பொறிகள் கிளம்பின. அது காய்ந்து போனச் சருகுகளை எட்டிப் பிடித்தன. இளம் சிவப்பாய் தீ பரவியது. அவனின் நாற்காலி அபரிமிதமானச் சூட்டில் இளக ஆரம்பித்தது. வெயிலில் வைக்கப்பட்ட சாக்லெட்டைப் போல அது இளகியது. அவனும் உருகி கரைந்து போகிற தசைத் துணுக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    தடதடத்து இறங்கின விமானச் சப்தத்தில் அவன் உடம்பு அதிர்ந்தது. ட வடிவத்தில் அது தளத்தைச் சுற்றிவிட்டு நின்றது. நகர்த்தப்படும் ஏணிகளும், துணைக்கான வாகனங்களும் தெளிவில்லாமல் கண்ணில் பட்டது. கண்களைக் கசக்கி கொண்டான். அந்த விமானத்தின் மஞ்சள் நிறமும், இறக்கைகளின் ஒரத்தில் வரையப்பட்ட பட்டுச் சேலையின் பார்டரும் அவனுக்குப் பிடித்திருந்தன.

    2

    கண்ணிற்கு எட்டிய தூரம் வரைக்கும் கறுப்பாய் சாக்கடை மினுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் பார்வையை அவன் எட்டிப்போட்டபோது சாயப்பட்டறை கழிவுகள் பல்வேறு வர்ணங்களுடன் வந்து கலந்து நின்றிருந்தது. ரோசா கூசினபடி மெதுவாக நடந்தாள். வறண்ட கழிவுகளும், முட்களின் சிதலங்களும் வழியை நிறைத்திருந்தது. டில்லி முட்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஒற்றையடிப்பாதை குறுகலாய் சென்று நொய்யலில் மறைந்தது. ஆறு கறுத்த நிறத்துடன் கழிவுகளாய் நிரம்பியிருந்தது. இடையில் நாலைந்து இடங்களில் திட்டுகள் தென்பட்டன. அவற்றின் மேல் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் விகாரத்தைச் சகித்துக் கொள்ளாதவள் போல் உடம்பைக் குலுக்கினாள் ரோசா. இவையெல்லாம் என்ன, அசாதாரணமானத் திட்டுகள் போல் இருக்கின்றனவே என்றாள் ஆங்கிலத்தில். ஒருவகை விரக்தியானப் புன்னகையை உதிர்த்தான் பக்தவச்சலம்.

    இந்த பகுதி மக்களின் கல்லறைகள்

    கல்லறைகளா..

    ஆமாம். சவக்குழிகள். கல்லறைத் தோட்டத்திற்கு ரொம்ப தூரம் போக வேண்டும். அவர்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் எங்காவது இடம் கிடைத்தால் அங்கேயே சவங்களைப் புதைத்துவிடுகிறார்கள். அப்புறம் கல்லறைத் தோட்டங்களில் இது போன்ற கீழ் ஜாதிகளை அனுமதிப்பதில்லை. அவமானப்பட வேண்டியிருக்கிறது. இடம் கிடைக்கிற இடம் கல்லறைதான்.

    செத்தபின்னும் நிம்மதியில்லாமல் தான் உறங்குவார்கள் இவர்கள் என நினைக்கிறேன். இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது இவர்கள் எழுந்து ஒடிவிடக்கூடும். எலும்புக் கூடுகள் எழுந்து ஒடுவதைப் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ரோசா வாய்விட்டும் சிரித்தாள். முகத்தில் விழுந்த மயிர்கற்றையை விசிறி பின்னால் போட்டுக் கொண்டாள். வெவ்வேறு வர்ணங்களால் வரும் சாயப்பட்டறைத் தண்ணீர் சங்கமமாகும் இடத்தில் புகைப்படங்களை எடுத்தாள். சாயங்கள் கலந்து காய்ந்திருந்த மண்ணை கையில் தொட்டுப் பார்த்தாள். அவளின் விரங்களில் பட்ட நிறம் காண முடியாத புதுவகை வர்ணத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். முட்செடிகளும், புதர்களுமாய் ஆறு நிறைந்து கிடந்தது.

    இதை ஆறு என்றுதான் சொல்வீர்களா..

    ஆமாம் என்ன சந்தேகம்

    எங்கள் ஊர்களில் ஆறுகள் என்றால் வருடம் பூராவும் தண்ணீர் ஒடிக் கொண்டிருக்கும். ஆற்றையொட்டின பகுதிகளும் திட்டமிடப்பட்டு அழகாக இருக்கும். பனிக்காலம் என்றால் பனிக்கட்டிகளால் மேல்பாகம் நிறைந்திருக்கும். ஆறு என்று அர்த்தம் தொனிக்கவும் உணர்ந்து கொள்ளவும் என்று நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்துவிட்டிருக்கும். ஆனால் இதையும் நீங்கள் ஆறு என்றுதான் சொல்கிறீர்கள்.

    சரி... மறைந்துபோன நதி என்று வைத்துக் கொள்ளலாம்.

    அதுதான் சரியாக இருக்கும். ஆமாம் இதை ஆறு என்பதை உணர்வதற்கான அனுபங்கள் உங்கள் வாழ்கையில் ஏற்பட்டிருக்கிறதா.

    ஆமாம். எல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பு..

    நொய்யல் வெள்ளமாய் பெருக்கெடுத்த நாட்கள் அவனின் மனதில் இன்னும் பசுமையாய் இருந்தன. மில்லர் நிட்டிங் பக்கத்து சேற்று மண்ணில், மண்புழுவைச் சேகரித்துக் கொண்டு மண்ணரைக்கு நண்பர்களுடன் மீன் பிடிக்க சைக்கிளில் சென்றகாலத்தில் நொய்யல் கரை பரவினபடி தண்ணீர் ஓடி இருக்கிறது. அடைமழை காலம் வருகிறபோதெல்லாம் பாலம் ததும்ப தண்ணீர் நுரையைக் கிளப்பியபடி எல்லா அழுக்குகளையும் துடைத்தெறிந்து விட்டு ஒடியிருக்கிறது. டவுனுக்கு அமாவாசையன்று சினிமாவிற்கு போகிறபோதெல்லாம் பாலத்தில் நின்று ஏதோவகையான உள்ளுணர்வு பயத்துடன் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டிப்பார்த்து நேரம் கழிப்பது நிகழ்ந்திருக்கிறது. அம்மாவுடன் கல்லறைத் திருநாளை வேடிக்கை பார்க்கச் செல்கின்றபோது கரும்புச் சாறு போன்று ஓடும் வெள்ளத்தை நெடு நேரம் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அப்பாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு நொய்யல் ஆற்று மணலில் நடக்கிறக் கூட்டங்களை ரசிக்க எத்தனையோ வாய்ப்பு அமைந்திருக்கிறது. பூப்பொறிப்பு நோம்பிகளில் கரும்பும், பொரியும், எண்ணெய்ப் பலகாரங்களுமாய் இறைந்து கிடக்க மணலின் நிறமே மாறிப் போயிருப்பதை வேடிக்கையாய் பார்க்க நேர்ந்திருக்கிறது. சாக்கடையாய் மாற ஆரம்பித்த போது கூட சாக்கடை நாற்றத்தை சகித்துக் கொண்டு நொய்யலைப் பார்ப்பது ஆறுதலாக இருந்திருக்கிறது. சாக்கடை என்பது வேறுபடும் வர்ணங்களால் சாயப்பட்டறைத் தண்ணீர் கழிவுகளுக்கென்றான போது சங்கடமாக பக்தவச்சலம் உணர்ந்திருக்கிறான்.

    நெடுநேரம் சாயக் கழிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரோசா பெருமூச்சு விட்டவாறு அவனைப் பார்த்து உடம்பைக் குலுக்கினாள். அவளின் மார்பு குலுங்கி நின்றது. தலைமயிர் காற்றில் அலைக்கழிந்து தாறுமாறாகியது. மரங்களைக் கொண்டிருந்த அவளின்

    மார்பக பனியன் சுருக்கங்களுடன் இருந்தது. உங்கள் பெருமூச்சு ஏதேதோ அதிருப்தியை சொல்வது போல் படுகிறது. அவள் தூரத்து பூங்கா வை காமராவில் படம்பிடித்துபடிச் சொன்னாள். அதை விட எங்களின் பெருமூச்சுதான் இவ்வளவு வெப்பத்தையும், புழுதியையும் இந்த ஊருக்குத் தந்திருக்கிறது. அவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். அவள் தோளைக் குலுக்கி பூங்காவை நோக்கி கை நீட்டினாள்.

    அது ஒரு பூங்கா. நகரத்து மக்கள் இந்தக் கழிவுகளையும் மீறி உட்கார்ந்து கொள்ள ஒரு இடம். எல்லாம் செயற்கையாக இருக்கும். அங்கு நீரூற்றில் விழும் தண்ணீர் கூட லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டதாய் இருக்கும். எல்லாச் செடிகளும் குட்டையாகவே இருக்கச் சபிக்கப்பட்டவை. கொஞ்சம் மனிதர்கள் நடமாடுவர் என்பதுதான் இயல்பான இயற்கை. அவள் ஏனோ ஓவென்று சிரித்தாள். அருகிலிருந்த பாறையைத் தொட்டவள் ஏனோ வெறுப்படைந்தவள் போல் கைகளை எடுத்தாள். கைகளைத் தட்டினபோது வெளிச்சத்தில் தூசி பறந்தது. வெயிலின் ரேகைகளில் தூசி அடைபட்டது போல ஒரு நிமிடம் பறந்து நின்றது. காக்கையொன்றின் நீண்ட கரைதல் வாகனங்கள் இடிபட்டுக் கொண்டது போலிருந்தது. வெயிலின் வெம்மை தகதகத்து சூரியனைச் சென்றடைந்து கொண்டிருந்தது.

    இந்த நதி எதுவரை செல்கிறது..

    நதியா..

    நதி அல்லது சாயப்பட்டறை கழிவுகள்..

    பத்து கிலோமீட்டருக்கு அப்பால் ஒரு அணைக்கட்டு. அதுவரைக்கும்.. தூரத்தில் தெரிந்த பனைமரங்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். வானத்தின் சூட்டு கோலாய் அவை நின்று கொண்டிருந்தன. வானத்தின் நீலத்தை சூட்டு கோல்கள் கரைத்து வெளுப்பாக்கிக் கொண்டிருந்தன. வானம் தீவிர வெளுப்பில் அக்கறை கொண்டிருந்தது.

    உங்களூரில் இளநி குடிக்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.

    விபரீத ஆசைதான்.

    ஏன் விபரீதம் என்கிறாய்..

    ''சாயப்பட்டறைத் தண்ணீர் இளநிக்குள்ளும் இருக்கும். தோண்டப்படும் போர்வெல்களிலிருந்து சாயத்தண்ணீர் சாதாரணமாகப் பீச்சியடிக்கும். சிலசமயம் இளநி தண்ணீரில் பல வர்ணங்களைப் பார்க்கலாம்."

    ரொம்பவும் துயரம் கொண்டவன் போல் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தாள். மேட்டின் மீது நடப்பது சாகசம் என்பது போல் மெல்ல நடந்தாள். கால்களில் புழுதி அப்பியிருந்தது. பருத்த கொக்குவிற்கு வர்ணங்களைப் பூசிவிட்டது போல் அவளின் உடை இருந்தது.

    மேட்டிலிருந்து கீழிறங்கியவுடன் கனத்த வாகன இரைச்சல்களுடன் வீதி ஆரம்பமானது. வீதியின் ஒரத்திலிருந்து கிளம்பிய கறுப்பு பைப்புகள் பனைமரங்களை கீழே வீழ்த்தி கறுப்பு வர்ணமிட்டது போல் இருந்தன. வலது முனையில் ஒரு சிறு

    Enjoying the preview?
    Page 1 of 1