Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mandhira Chimizh
Mandhira Chimizh
Mandhira Chimizh
Ebook129 pages22 minutes

Mandhira Chimizh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட மொத்தம் 52 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 31 ஆண்டுகளாக வெளிவருகிறது. திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580115101869
Mandhira Chimizh

Read more from Subrabharathi Manian

Related to Mandhira Chimizh

Related ebooks

Reviews for Mandhira Chimizh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mandhira Chimizh - Subrabharathi Manian

    http://www.pustaka.co.in

    மந்திரச் சிமிழ் கவிதைகள்

    Mandhira Chimizh Kavithaigal

    Author:

    சுப்ரபாரதி மணியன்

    Subrabharathi Manian

    For more books
    http://www.pustaka.co.in/home/author/subrabharathi-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குளிர்காலம் விடைபெறுகிறது

    அறைக்குளிரூட்டுவான்

    திருவனந்தபுரம் (5.2.2010)

    வேலி

    ஆற்றுக்கால் ஸ்திரிகளின் சபரிமலை

    ஹிசேன் சாகர்

    இயற்கையோடு ஓர் உரையாடல்

    பண்டிகை தினத்தின் பிளாஸ்டிக் குடங்கள்

    வெளுப்பு

    ஹரித்துவாரில் மணிகள் முழங்குகின்றன

    கல்லாறு

    பழனி

    நீர் விரிப்பு - தூரத்திற்கும்.

    இரங்கல்

    வெளி

    தடம்

    நகரம்

    சுனை

    பேசி

    திரும்புதல்

    மந்திரச் சிமிழ் கவிதைகள்

    சுப்ரபாரதி மணியன்

    பங்கரிலிருந்து வந்த மனிதனை

    வரவேற்றேன்.

    தேநீரும், சாப்பாடும் வாங்கித் தந்தேன்

    ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்

    அலுவலக நேரத்தில்

    அலுவலகக் கழிப்பறையில் குளியலுக்கு என்று தனியே இல்லை

    ஒரு மனிதனைக் குளிக்க வைப்பது

    சாமான்யக் காரியமல்ல

    (மெமோ-விளக்கம் தரவேண்டியிருக்கும்

    அலுவலகத் தண்ணிர் குழாயிலிருந்து

    இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை

    என்மேல் இன்னும் கோப்பில் இருக்கிறது)

    பங்கரில் கடவுளையும், சாத்தானையும்

    சந்திந்ததாகச் சொன்னார்

    கடவுள் நீங்குகையில் சாத்தானும்

    சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாக

    கற்பனை செய்து கேட்டேன்

    இருவரும் ஒரே நேரத்தில்

    பங்கர் குழிக்குள்

    அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.

    எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்ந்திருந்தது

    கடவுளும், சாத்தானும் ‘பங்கரிலும்’ தூங்குவதில்லை என்பது

    வருத்தமாக இருந்தது.

    முடிகிறபோது வாருங்கள் என்றார்.

    அவரின் அழைப்பு அபரிமிதமாகத் தோன்றியது.

    ஆனாலும் தலையசைத்தேன்.

    எனது அலுவலக பகுதியோ

    எனது வீடுள்ள பகுதியோ

    நான் காலை நடை போகும் பகுதியோ

    இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்

    சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது

    வருத்தம் தருகிற விஷயமாக இருந்தது

    கடவுளும், சாத்தானும்

    என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி

    அவ்வப்போது மனதில் வந்து போகிறது.

    எங்களுர் தொழிலாளர்களில்

    நோபாளிகள், ஒரியர்கள், இலங்கையினர் கூட

    இருக்கிறார்கள்.

    வெளுத்த உடல்கள்

    அவர்களை வேறுபடுத்துகின்றன.

    ரொட்டியும், வெங்காயமும், பிரட்டும்

    அதிகம் வாங்குகிறார்கள்.

    வாரச் சம்பளம் வாங்குகிறார்கள்.

    எங்களூரில் எல்லோரும் சிரிப்புடனே

    அவர்களைப் பார்க்கிறார்கள்.

    "அவங்கூர்லே வேலை இல்லை

    வந்துட்டானுக."

    அவர்கள் பார்க்க திரைப் படங்கள் இங்கில்லை.

    அவர்கள் சுற்றி திரிய

    இடங்கள் இங்கில்லை.

    ஆனால் அவர்கள் ஜோடிகளாய் திரிகிறார்கள்

    (பெரும்பாலும் திருமணமாகாதவர்கள்)

    அவர்களின் குளிர்காலம் ஏகதேசம் நம்முடையது போன்றது.

    அவர்களின் மழைகாலம் ஏகதேசம் நம்முடையது போன்றது.

    அவர்களின் வெயில்காலம் ஏகதேசம் நம்முடையது போன்றது.

    அல்லது கொஞ்சம் வேறுபடலாம்.

    அவர்களில் சிலபேர் (சிலரே)

    தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டும்.

    வீதிகளில் பிணங்களாய் கிடத்திருக்கிறார்கள்.

    வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    அவர்கள் சாப்பிடும் பழங்கள் பற்றி சரியாகத் தெரியவில்லை

    அவர்கள் சாப்பிடும் உணவு பற்றியும் சரியாகத் தெரியவில்லை

    ஆனால் அழுவதில் மட்டும் வித்யாசமில்லை

    (சிரிப்பது: கண்கள் நடுங்க

    இமைகள் மூடி)

    அழுகிறபோது மட்டும்

    பற்றிக் கொள்ள தோள் தேவைப்படுகிறது.

    அழுகிறபோது முணுமுணுக்கும் பாடல்கள்

    அர்த்தம் தெரிந்தால்

    நாமும் கண்ணிர் சிந்தி

    தோளில் சாய்ந்து ஆறுதல் சொல்லலாம்

    எனது மொழிக்கு

    சம்பந்தமில்லாமல் இருக்கிறது

    அப்பாடல்கள்

    ஒவியங்களில் வரையப்பட்டவை

    தூரிகைகளின் கோடுகள் மட்டுமல்ல.

    விரலிலிருந்து ஒழுகும்

    அனுபவ ரத்தம் கிறுக்கியிருக்கிறது.

    நிரப்பப்படும் வர்ணங்களில்

    படித்த புத்தகங்கள் அடங்கியிருக்கின்றன

    பயணப் பட்ட அனுபவங்களின்

    கீறல்கள் உள் அடங்கியிருக்கின்றன.

    விழுந்தும் எழுந்தும் காயம்பட்டு

    சீழ்பிடித்து வேதனை தந்தவை

    கைகளிலிருந்து வடிந்திருக்கின்றன

    என்ன வர்ணத்தை தேர்வு செய்வது என்பதைக்கூட

    தேர்வுசெய்ய பலகாலம்.

    பின்நோக்கிப் போய் சரித்திரப் பக்கங்களைத்

    தேட வேண்டியிருக்கிறது.

    ஒவியங்களில் வரையப்பட்டவை

    முகங்களின் கீற்றாகவும்.

    ஒவியத்திற்கே இக்கதியென்றால்

    என் உடம்பில் விழும் உனது அடிகளின்

    தழும்பு வரிகளில் ஆணின் வலிமை

    எத்தனை நூற்றாண்டிற்கானதாக இருக்கும்?

    நினைக்கையில் வரிகளின் வலிகள் சாதாரணமாகிறது.

    உள் அறையின் இருட்டில் உட்கார்ந்து

    வரைந்த ஒவியங்களை

    அம்மா பலரிடம் காட்டிவிட்டாள்

    வெகு இயல்பாய் விரிந்திருக்கிறது வாழ்க்கை

    இருட்டு என்றாலும் தனிமை இருக்கும்

    விரிந்த மைதானம்

    ஒவியப் போட்டிக்கு ஆயிரக்கணக்கானோர்.

    தலைப்பும் தந்தாகிவிட்டது.

    வெளிவெளிச்சம் கண்களைக் கூச வைக்கிறது.

    விரிந்த ஒவியத்தாள் வெறுமையாகவே இருக்கிறது.

    ஒருகோடும் விழவில்லை.

    எந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1