Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Matrum Silar
Matrum Silar
Matrum Silar
Ebook353 pages2 hours

Matrum Silar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட மொத்தம் 52 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 31 ஆண்டுகளாக வெளிவருகிறது. திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.
Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115101943
Matrum Silar

Read more from Subrabharathi Manian

Related to Matrum Silar

Related ebooks

Reviews for Matrum Silar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Matrum Silar - Subrabharathi Manian

    http://www.pustaka.co.in

    மற்றும் சிலர்

    Matrum Silar

    Author:

    சுப்ரபாரதிமணியன்

    Subrabharathi Manian

    For other books

    http://www.pustaka.co.in/home/author/subrabharathi-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    சமர்ப்பணம்

    திண்டுக்கல் அமைதி

    அறக்கட்டளை

    திரு. பால்பாஸ்கர்

    அவர்களுக்கு

    அன்பு RPS,

    'மற்றும் சிலர்' படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது.

    எனக்கு முதன் முதலாகப் பயமும் பொறாமையும் வந்துவிட்டது. இந்த இளைய தலைமுறை ரொம்ப ஆபத்தானது. சத்தம் போடாமல் மேலே வந்துவிடும். வந்துவிட்டது - சுப்ரபாரதிமணியனாக, இனி நான் தூக்கத்தைக் கலைத்து எழுந்து உட்காரவேண்டும். இருக்கிற சரக்குகளை எடுத்துவிட வேண்டும். இல்லையேல் தொலைந்தேன் என்று முடிவு கட்டிக் கொண்டு விட்டேன்.

    நாவல் ஆதவனின் 'காகித மலர்கள்'க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சரியமாக இருக்கிறது எனது பிரதியில் பக்கத்திற்குப் பக்கம் சிறப்பினைக் குறிக்கும் கோடுகள் விழுந்திருக்கின்றன.

    நீங்கள் நிறைய எழுதப் போகறீர்கள் என்பதற்கு ஆதாரமான விஷயம். இந்த நாவலின் நாயக பாத்திரமே. இந்த அம்சத்தை உங்கள் சிறுகதைகளிலேயே பார்த்திருக்கிறேன். இன்றைக்கு எல்லாரும் தத்தம் சொந்த அனுபவங்களையே சொந்த அனுபவமாகத் தந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சீக்கிரம் தாங்கள் தீர்ந்து போய்விட்டதாக உணருகிறார்கள். உதாரணமாக சுரேஷ்குமார் இந்திரஜித், முதல் தொகுப்பிற்குப் பின் தான் தீர்ந்து போனதாக உணர்வதாகச் சொன்னார்.

    பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுதமுடியும். ஆனால் இது சாதாரண விஷயம் அல்லவே. கொஞ்சம் புரண்டாலும் இவன் வேறு அவன் வேறு என்றாகிவிடும். இது ஒரு திறமை. டெலிபதிபோல் பிறனில் இருக்கிற 'தன்னை' வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது. இந்தத் திறமை உங்களுக்கு அபாரமாக வாய்ந்திருக்கிறது. அதிலும் உங்களை நேரிலும் அறிந்திருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு மேலும் ஆச்சரியமான விஷயம். இந்த நாவலின் நாயகன் நீங்கள் அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் அல்ல. இந்த நாவலின் நடப்புக் காலங்களின் ஆரம்பத்தில் நீங்கள் ஒரு பள்ளிமாணவன் (1968-70) இருந்தாலும் அந்த நேரத்தில் அசலான ஹைதராபாத் - செகந்திராபாத் வாழ்க்கையையும் நாயகன் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகளையும் அச்சு அசலாகத் தந்திருக்கிறீர்கள். நீங்களே சொன்னது போல, அப்படிப்பட்டதொரு குடும்பத்துடன் கொண்ட நெருக்கம் 1987ல் இப்படியொரு நாவலை எழுத வைத்துவிடுமானால் அது ஆச்சரியமே.

    அத்தனை பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறார்கள். சரித்திரச் சான்றுகள் இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம். ரஜாக்கர்கள்… கிரிஜண்… தெலுங்கானா போராட்டம் என்று அது மொபட்டின் (1980) வருகைவரை நிற்கிறது. மொபட், நாயகனின் தொழிலோடும், இயலாமையோடும் எப்படி இணைந்துவிடுகிறது!

    நாவல் முடிய ஒரு 50 பக்கம் இருக்கும் போது என்னுள் பயம். இவர் எப்படி முடிக்கப் போகிறார்? இதுவே இந்த நாவலின் பலவீனமாய் போய்விடுமோ? எல்லாரும் இந்த நாவல் பற்றிப் பேசாமல் இருக்கிறார்களே! அதன் காரணம் இந்தப் பக்கங்களில் இருந்து விடுமோ என்று

    ஆனால், அழகாக முடித்திருக்கிறீர்கள். வேண்டுமானால், ‘சரிந்து விழுந்தான்’ என்றில்லாமல் படிகளில் உட்கார்ந்து கொண்டான்’ என்று மட்டும் முடித்திருக்கலாம். நாவல்கள் முடியவேண்டும் என்ற அவசியமில்லை. வாழ்க்கை முடியாதபோது நாவல் மட்டும் எப்படி முடிய முடியும்? நாவலில் நமது வசதியின் காரணமாக ஒரு இடத்தில் நின்று கொள்கிறது. அவ்வளவுதானே.

    செங்கல்கார பால்கள்.... Of How much details and punches! Congradulations my dear rival!

    - ஜெயந்தன்

    7-7-1988

    முன்னுரை

    கணித மாணவன் என்ற வகையில் ஒரு கணிதவியலாளரின் வாசகம்

    முன்னெல்லாம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அது பின்னால் அகன்று விட்டது.. சிந்திக்கிறேன் எனவே நானாக இருக்கிறேன் என்ற புகழ் பெற்ற வாசகம்தான் அது. கணித மேதை டெஸ்கார்ட்டஸ் அவர்களின் வாசகம் அது. அவர் இராணுவ முகாமில் வாட்ச் மேனாக வேலை பார்த்தவர் என்பது கூடுதல் தகவல். வாட்ச் மேனாக வேலைக்கு பதிலாக ஒரு அரசாங்க உத்யோக வேலை எனக்கு. கணித மேதை டெஸ்கார்ட்டஸ் இறந்த போது நியூட்டன் எட்டு வயதுப் பையனாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தாராம். நியூட்டன் பாராளுமன்ற உறுப்பினராகிப் பேசிய ஒரே பேச்சு ஜன்னலைத் தொறந்து வைங்கப்பா என்பதாம். செகந்திராபாத் வாழக்கையின் ஆரம்ப கால கட்டத்தில் கொஞ்சம் சிறுகதைகள் எழுதி அலுத்திருந்த போது நாவல் எழுத தெலுங்கானா போராட்டத்தை மையமாக எடுத்தேன்.சிறுகதைகள் போதும். கொஞ்சம் பெரிய ஜன்னலைத் திறந்து பார்த்தேன். இப்போது தெலுங்கானா தனி மாநிலமாகிவிட்டது. அப்போது அம் மையம் மிக முக்கியமானதாகத் தோன்றியது. இப்போதும். அப்போது முதுமை நண்பர்கள் ராமநாதன், போஜராஜனின் நிறைய ஆலோசனைகள் உதவின. ஜன்னல் திறந்து நாவல் பிறந்தது,

    இதன் மறுபதிப்புக்காக நண்பர்கள் விஜயமகேந்திரன் (இதன் மறுபதிப்பிற்காக தொடர்ந்து என்னை வலியுறுத்தி வந்தார்), வேடியப்பன் ஆகியோருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

    படைப்பிலக்கியவாதியாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து அரசியல்பணிகளுடே இலக்கிய முயற்சிகள், கூட்டங்கள் என்று தன் நேரத்தையும், உழைப்பையும் செலவிடும் கோவை நண்பர் ப.பா.இரமணி அவர்களுக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன்.

    சுப்ரபாரதிமணியன்,

    திருப்பூர் 94861O1OO3

    subrabharathi@gmail.com

    1

    வேறு வழியில்லை. நடந்துதான் தீரவேண்டும் என்றிருந்தது சுந்தரராஜனுக்கு. எதையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டு நடையைத் தொடர்ந்து விடலாம். வெயில் உக்கிரமாக இருந்தது. கழுத்தில் கை வைத்த போதெல்லாம் ஒட்டிக் கொண்டுவிட்டது. லக்கிடிக்காபூலிலிருந்து சிகிந்திராபாத் வரை இப்படியே வெயிலில் நடக்க முடியுமா என்று தீர்மானிக்க முடியவில்லை. அவனால் டாங்க்பண்ட், ராணிகஞ்ச், எம்.ஜி ரோடு கிளாக்டவர் என்று சிகிந்திராபாத் போகிற பாதை கற்பனையில் அவனுள் அடைபட்டும் போயிற்று. போட் கிளப்பிலிருந்து கிங்ஸ்வே வழியாகக் கொஞ்சம் எளிதாக போய்விடலாம்.

    செக்ரெட்டேரியட் கண்ணில்பட ஆரம்பித்தது. வாசல் முகப்புக் கேட்டுகளை பார்வையில் அளந்து கொண்டான். பனை உயர அளவிற்கான கேட்டுகளின் வேலைப்பாடும் திடமும் நினைக்க நினைக்க ஆச்சரியம் கொள்ள வைத்தன. அது தன் தலைமுறைக்கு முந்தினது என்பதை அவன் மனது மீண்டும் மீண்டும் சொல்லிற்று.

    வாசலின் உட்புறத்திலிருந்து ஒரு முகம் கேட்டின் வலிமையான கம்பிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதாய் தோன்றும் ஒரு காட்சி அப்போதைக்கு மனசில பட்டது. அப்படியொரு காட்சி ரொம்ப நாளாய் சுந்தரராஜனின் மனசிலிருந்து கம்பிகளுக்குள் அடைபட்ட அந்த முகம் பற்றினக் கற்பனை தெளிவற்றதாக இருந்தது.

    பொட்டி ஸ்ரீராமுலு சிலை தென்பட்ட நேரத்திலேயே ஸ்ரீராமுலு சிலையைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் நிற்பது தெரிந்தது. வழுக்கை தலையுடன், ஒரு காலை முன் வைத்து நடக்கிற தோரணையிலான ஸ்ரீராமுலுவின் கால்களுக்குக் கீழ் போலீஸ்காரர்கள் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் தங்களுக்குள் வெகுவாக முரண்பட்டவர்கள் என்பது போல் வெவ்வேறு திக்குகளை நோக்கி இருந்தனர். பார்த்த கணத்திலேயே அந்தக் கும்பல் லேசான பயம் விளைவித்தது.

    ஸ்ரீராமுலுவின் முகம் காக்கைகள் எச்சமிட்டு வழிந்த கோடுகளாய் இருந்தது. ஸ்ரீராமுலுவின் பிறப்புதினமோ, தனி ஆந்திரா கோரி உண்ணாவிரதம் இருந்து இறந்த தினமோ சமீபத்தில் வந்திருக்காது. வந்திருந்தால் ஸ்ரீராமுலு சிலை வர்ணம் பூசப்பட்டு தெளிவான உருவமாக பார்வைக்குப் பட்டிருக்கும் என நினைத்தான் சுந்தரராஜன்.

    வழக்கமான நாட்களில் வாகனங்களின் இயக்கமும், இரைச்சலும் எந்த விஷயத்தையும் யோசிக்க விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும். இப்படி நடுரோட்டில் நடப்பது கூட ஹைதராபாத்தின் மோசமான நவம்பரின் ஒரு குளிர் இரவில் சாத்தியமாகலாம். ஆனால் இது இப்போது சாதகமாயிருந்தது. வாகனங்கள் திசை திருப்பப்பட்டு உசேன் சாகர் டாங்க் பண்ட் செக்ரெட்டேரியட், லக்கிடிக்காபூல் வரைக்கும் ஜனங்கள் நடமாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    இன்னும் நெரிசல் தீவிரமாகவில்லை. நடக்கும் ஜனங்களுக்கு இடையில் இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில் நடக்கிறவர்கள் பக்கவாட்டில் நடந்தால் இடிபடும் நெரிசலை கொஞ்சம் தவிர்க்கலாம் என்று நினைக்கிற அளவு கூட்டம் அதிகரித்து விடும். அதற்கு முன் சிகிந்திராபாத் போய் விட வேண்டும்.

    உசேன் சாகர் ஏரியின் கீழ் புறத்தில் வெள்ளைக் களிமண்ணால் செய்யப்பட்ட விக்ரகங்களை நீரில் போடுகிற விநாயகர் சதுர்த்தியின் இறுதி விஷயம் ஆரம்பமாகி விட்டது. வண்டிகளிலும், லாரிகளிலும், டிரக்குகளிலும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் விக்கிரகங்கள் வர ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இப்படி வருஷா வருஷம் விநாயகர் சிலைகளைப் போட்டு உசேன் சாகர் ஏரியே தூர்ந்து போய் தரையாகி ஹைதராபாத்திற்கும், சிகிந்திராபாதிற்கும் இடையில் டாங்க்பண்ட் ஒரு மைல் நீளத்திற்கு இருந்து மறைந்து போவதை நினைத்து பார்ப்பது வெகு சுலபமானதாக இருந்தது. வருத்தமும் எழுந்தது.

    சரோவர் ஓட்டல் ஒரத்தில் போலீஸ் கும்பல் வெகு அடர்த்தியாக இருந்தது. ரிசர்வு போலீஸ்காரர்களின் கைகளிலிருந்து தடியும், துப்பாக்கிகளும் விலகி நிற்க வைத்தன சுந்தரராஜனை. போலீஸ் கும்பலைக் கடந்து செக்ரெட்டேரியட்டின் கடைசி முனையை அடைந்தான். அங்கும் போலீஸ் வேலிபோல் சுற்றிலும் நின்று கொள்ள முன்னால் நகர்ந்து போய் கூட்டத்தோடு நின்றான். எதுவும் தென்படவில்லை. ஒலிபெருக்கிகளின் சப்தம் ஒழுங்கற்றதாய் கேட்டுக் கொண்டே இருந்தது. சினிமாப் பாடல்களும் கேட்டன.

    "ஜெய் போலோ கணேஷ் மகராஜ்கீ

    ஜெய் ஜெய் கணேஷ்

    கணபதி பாப்பா மோரியா

    கணபதி பாப்பா மோரியா"

    கோஷங்களால் காற்று நிறைந்தது. நகர்ந்து போனால் ஏதாவது தெரியலாம். வர்ணத் துணிப்பந்தலின் கீழ் போலீஸ் அதிகாரிகள் என்று தோரணையிலும், வெளிப் பார்வையிலும், தெரிவிக்கும் சிலர் டிரான்ஸ்மீட்டர்களுடன் உட்கார்ந்திருந்தனர். டிரான்ஸ்மீட்டர்களின் இரைச்சலை சரியாகக் கேட்கிற அளவில் பந்தலை நெருங்கினான் சுந்தரராஜன். ஒரு கான்ஸ்டபிள் பந்தலை சுற்றி இருந்தவர்களை விலக்கிக் கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த தடி தரையில் டக் டக்கென்று மோதி இரைச்சலில் அமிழ்ந்து கொண்டிருந்தது. ஜாவ்... ஜாவ்... என்ற படி எதிரிலிருந்து வந்த இன்னொரு போலீஸ்காரரை வேடிக்கை பார்த்தபடி இயந்திர ரீதியில் சொல்லிக் கொண்டிருந்தான்.

    விநாயகர் சிலைகளை நீரில் மூழ்கடிக்கும் விசர்ஜனவிழாவை ஆரம்பிக்கவென்று மந்திரி வந்ததை காலையில் சுந்தரராஜன் மேதிப்பட்டிணம் போகையில் பேருந்திலிருந்தபடி பார்த்தான். அப்போது பெரிய கிரேன் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. பெரிய விநாயகர் சிலைகளை நீரில் மூழ்கடிக்க இந்த ஆண்டு கார்ப்பரேஷனே கிரேனைத் தந்திருந்தது. தொடர்ச்சியாக விநாயகர் சிலைகள் வந்து கொண்டிருந்தன. விநாயகர் சிலைகளைச் சுற்றி கும்பல் கும்பலாய் மக்கள் எல்லா வாகனங்களிலும் இருந்தனர். அவர்கள் பெருத்த சப்தங்களை ஒழுங்கற்று வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த வெவ்வேறு வகையான இசைக்கருவிகளின் சப்தம் அவர்களின் வாய்வழி கோஷங்களில் அமுங்கிப் போயிற்று. ஒவ்வொரு வாகனத்தில் இருந்தவர்களும் தாங்கள் எந்த கும்பலுக்கும் சரிசமமானவர்கள் என்ற தர்க்கத்தை நிலைநாட்டுவதற்காக சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். ஜெய்... போலோ கணேஷ்... ஜெய் ஜெய்... கணேஷ் விநாயகர் சதுர்த்திக்காகவே தயாரிக்கப்பட்ட உடைகள் போன்று ஒரே மாதிரியான நிறத்தில் உடைகளை அணிந்திருந்தனர். அந்த நிறங்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறு வேறாய் இருந்தன. அந்த வர்ண உடைகளை கூர்ந்து பார்த்தான் சுந்தரராஜன். அவைகள் பிரபல அரசியல் கட்சிக் கொடிகளின் நிறங்களை ஜாக்கிரதையாகத் தவிர்த்து தேர்வு செய்த மாதிரிப்பட்டது. அநேகமாக சட்டை இருக்கும் கலரிலேயே குல்லாயும் அணிந்திருந்தனர்.

    இந்தக் கும்பல் கூட சந்தோஷம்தான். இரைச்சலை மீறி தனக்குக் கேட்கிற பாடல்களின் ஓரிரண்டு வார்த்தைகளும் கூட சந்தோஷம் கொடுக்க இந்தக் கும்பலே காரணம். ஏதோ சமாஜம் என்று பேனரில் பெயரிட்டு போடப்பட்டிருந்த மேடையில் யாரோ பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கேட்கக் கூட சின்ன கும்பல் மழைக்கு ஒதுங்குகிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தது.

    மாதர்சோத்... சாலே மாகேகத் முஸல்மான் லோகு தேகேதோ மர்ஜாத்தா...

    (இந்தக் கூட்டத்தெ துலுக்கன் பாத்தான்னா செத்திருப்பான்.)

    சுந்தரராஜனின் அருகில் நின்று கொண்டிருந்தவன் சிரித்தபடி இதைச் சொன்னான். சுந்தரராஜன் எதுவும் பேசாமல் கும்பலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்தி புரியவில்லை என்ற நினைப்புடனோ என்னவோ அவனே அதை தெலுங்கில் சொன்னான். சொல்லிவிட்டு மறுபடியும் பதிலுக்காகக் காத்திருக்கிறவன் மாதிரி சுந்தரராஜனைப் பார்த்தான். பாதி தெலுங்கிலும், பாதி இந்தியிலுமாக பேசிக் கொள்வது நகரவாசிகளுக்கு இயல்பாகி விட்டது. இன்னொருவன் மஞ்சிக் செப்பினாவு (சரியாகச் சொன்னாய்) என்றான். அவன் மேலும் பேச ஆசைப்படுவது தெரிந்தது. இந்த கும்பலும், ஆரவாரமும் பிறரிடம் சொல்லி சந்தோஷப்பட வேண்டிய விஷயங்கள் என்பதை உணர்பவன் போல் சொன்னான்.

    என்ன நான் சொல்றது சரிதானே

    சுந்தரராஜனுக்கு இனிமேலும் சும்மா இருப்பது சரியென்று படவில்லை. மெளனமாக இருப்பது தவறான எண்ணங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்லலாம்.

    அவுனு... அவுனு... சரிக செப்பேரு...

    இது என்ன கூட்டம்... சாயங்காலம் ஆறு மணிக்குப் பாரு ஊரே தெரன்டு வந்துரும்...

    பதிலைப் பெற்ற திருப்தியில் மீண்டும் பேச ஆரம்பித்து விட்டான். நெஞ்சிலிருந்து வந்த இருமலை அடக்க முடியாமல் காறிக்காறி வாயுள் அடக்கினான். அவன் மீண்டும் வந்துவிடுவானோ என்று பயமாக இருந்தது. இந்தக் கும்பல் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒருவன் பேச்சு கொடுக்கும் போது பயமா என்றிருந்தது. இதே ரீதியில் பேச்சை ஆரம்பித்து முஸ்லீம்களைத் திட்டி பின் ஏதோ காரணத்தால் அவன் தன்னை தாக்க ஆரம்பிக்கக் கூடும் என்ற வலுவற்ற கற்பனை குறித்து சங்கடப்பட்டுக் கொண்டான். அவன் எந்த மத விஷயத்திலும் வெறியும், பிடிப்பும் கொண்டவன் என்பதை வெளிப்படுத்த முகத்தில் விபூதிக்கீற்றோ... நாமமோ... சிவப்பாய் புருவங்களுக்கிடையில் அடர்த்தியான குங்குமமோ உடைகளில் வேறுபாடோ இல்லை. ஆனால் கலவரங்களுக்கு மூலமாய் இது மாதிரி நாலு வார்த்தை போதும் என்று நினைத்த போது அவன் நகர்ந்து போய் விட்டது ஆறுதலாக இருந்தது. இந்தப் பெரியக் கூட்டத்தில் ஒரு முஸ்லீம் கூட வேடிக்கைப் பார்த்தபடி தென்படாதது சுந்தரராஜனுக்கு அதிசயமானதாக இல்லை. ஒரு முஸ்லீமும், இவன் சொன்ன நாலு வார்த்தைகளும் போதும், நகரம் கலவரம் பட்டுவிடும்.

    காலியான இடத்தில் வேறு யாரோ வயதானவன் ஒருவன் வந்து நின்று கொண்டது ஆறுதலாக இருந்தது. முன்னே நின்ற கும்பல் பின் தள்ள சுந்தரராஜன் ரோட்டின் மையத்திற்கு வர நேர்ந்தது. நகர ஆரம்பித்தான்.

    இவ்வளவு பெரிய கூட்டத்தில் தனக்குத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமாக இருந்தது. இருந்தால் பேசவாவது துணையாக இருக்கும். இந்த இரைச்சலிலும் தன் பெயரைத் தெளிவாகக் கேட்கும்படி ஒருவன் அழைத்தால் நன்றாக இருக்கும். அப்படிப் பெயரைத் தெளிவாகவும் சந்தோஷத்துடனும் அழைக்கிற நபர்கள் ஒரு கைவிரல் எண்ணிக்கையில் கூட இல்லாததில் அவன் நகரின் கும்பலில் தன்னை இழந்து போனதாகவே எண்ணினான். அப்படி அழைக்கிறவர்களில் வெங்கட்டும் ஒருவர். இந்த கும்பலோடு எந்த விதத்திலும் (சம்பந்தப்படாதவர்) ஜனங்கள் இப்படி சந்தோஷப்படத்தான் வேண்டும். ஆனால் இந்த மதவெறித்தனமான சந்தோஷம் குரூரமானது என்கிறதில் தீர்மானமாக இருப்பார். இந்த மாதிரி கும்பலைக் காண்கிற போதெல்லாம் எரிச்சலுடனே பேசியிருப்பது ஞாபகம் வந்தது.

    மீண்டும் மீண்டும் கூட்டத்தின் பலம் பற்றியே பலர் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள். கடைகளெல்லாம் அடைக்கப்பட்ட நிலையில் இரண்டு மணிக்கு மேல் எல்லா பேருந்துகளும் ஓடின. ஒன்றிரண்டு நிறுத்தப்பட்ட நிலையில், சிகிந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் ஊர்வலம் உசேன் சாகர் ஏரியை அடைய இரவு பத்தோ, பனிரெண்டோ ஆகலாம் என்றார் ஒருவர். ராணிகஞ் ச் போய்விட்டால் சிகிந்தாராபாத் வரைக்கும் பேருந்து பிடித்து போய்விடலாம் என்கிற எண்ணம் இந்தப் பேச்சால் தடைபட்டது.

    ராணிகஞ்சிலிருந்துகூடபஸ் இல்லியா?பக்கத்திலிருந்தவரிடம் கேட்டான்.

    "என்ன சாப்... விநாயகர் சதுர்த்தியன்னைக்கு பஸ் ஓடறதப் பத்திகேக்கறியே... பஸ் ஓடினா சும்மா விட்டு வெச்சிருப்பாங்களா. கவர்மெண்ட்லே எந்தக் கட்சி இருந்தா என்ன... காலையிலே நாலுமணி நேரம் ஓடினதே அதிகம். இந்த ஜனசமுத்ரத்திலே பஸ் ஓடுமா.

    சலிப்பாக இருந்தது. பசியுடனும் லேசாய் வலிக்கும் முதுகுடனும் நடக்க வேண்டும். கால் வெடிப்புகள் ஞாபகம் வந்தன. பாளம் பாளமாய் சில சமயம் வெடிக்க ஆரம்பிக்கும். இப்போது தான் ஆரம்பம் என்கிற மாதிரி தோல் உரிந்து உரிந்து வந்தது. தேய்ந்த செருப்பைப் பார்த்துக் கொண்டான். பேண்ட்டிலும், கால்களிலும் புழுதி அப்பிக் கிடந்தது. என்ன சாப்... என் பேசறே... ஊருக்கு புதுசா நீ... புதுசா கேள்வி கேட்டுட்டு...

    இங்கு வந்து பல வருஷங்களாகி விட்டன. இதையெல்லாம் வேடிக்கை பார்க்க ஒரு நாள் கூட டாங்க் பண்ட் வந்ததில்லை. வரத் தோன்றியதில்லை. இன்றைக்கு இதையெல்லாம் எதிர் பார்க்காமல் மேதிப்பட்டணம் வந்து திரும்புகையில் பார்க்க நேரிட்டு விட்டது சுந்தரராஜனுக்கு. இந்த தினங்களில் பழைய வருஷங்களில் எங்கெங்கு இருந்திருக்கிறான் என்பது பற்றின எண்ணத்திற்கு சரியான நினைவுகள் அகப்படவில்லை. ஆறேழு வருஷமாய் குமாரகுடாவில், பின் மல்காஜ்கிரியில். பின் கொஞ்சநாள் செகண்ட்பஜாரில். நாடோடி வாழ்க்கையாகவே நகரத்தில் சைக்கிளுடன் வாழ்க்கை ஓடி விட்டது என்றிருந்தது. இந்த நாலைந்து ஆண்டாகத்தான் இப்படி பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தியும், ஊர்வலங்களாயும் ஊர் கலவரப்படுத்துகிறது. இங்கு வந்த புதிதில் இதெல்லாம் இல்லை.

    கால்கள் வலிஎடுக்க ஆரம்பித்து விட்டன. முதுகுவலியும் வழக்கம் போல் இவ்வளவு அலைச்சலில் உச்சமாகிவிடலாம். நிழல் எங்குமில்லை. ஜனங்கள் இருந்தார்கள். லாரிகளிலும், வேன்களிலும் விநாயகர் சிலைகள் வரிசையாக வந்து கொண்டிருந்தன. சிவன் தலையில் விசுவரூபமாய் உட்கார்ந்திருக்கிற விநாயகர், பூமியை கையில் தாங்கின விநாயகர், பூமிக்குள் விநாயகர், பாரத விநாயகர், காந்தி விநாயகர், அஷ்ட விநாயகர், ஷோடசி விநாயகர், நேரு விநாயகர், என்று வகை வகையாய் வந்து கொண்டிருந்தன. சில வினோதமாகப் பட்டன. ஒவ்வொரு விநாயகருக்கும் தனித்தனியே வரலாறும், தல புராணமும் இருக்குமா? பக்கத்தில் இருப்பவனைக் கேட்டால் இன்றைய மீதிப் பொழுதும் போய்விடலாம். அவனுக்குத் தெரிந்திருக்காதா? கேட்டு என்ன செய்ய என்று அலுப்பாக இருந்தது. நேரு விநாயகர், காந்தி விநாயகர் என்று இப்போதிருப்பவை சீக்கிரமாய் இப்போது உயிர் வாழ்கிற அரசியல் தலைவர்களுடனான விநாயகர் வரைக்கும் விடுமா? விநாயகருக்கும் அரசியலில் ஆர்வமும், பரஸ்பர நட்பும் வந்து விட்டதா? அடுத்த வருடம் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் விநாயகர் வரலாம். விநாயகரின் அந்த புதிய அவதாரத்தை பாக்கவாவது அடுத்த வருஷம் வர வேண்டும்.

    விநாயகர் சிலைகளைச் சுற்ற கோஷமிட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். வர்ணப் பொடிகளை வேடிக்கை பார்க்கிறவர்கள் மேல் வீசினார்கள். அப்படி வீசத் தகுதியானவர்கள் என்பது போல் அவர்களின் உடைகளும், தொப்பிகளும் பல வர்ணப் பொடிகளின் சாயைகளைக் கொண்டிருந்தன. முகம், தலை என்று உடம்பெங்கும் வர்ணப் பொடிகள். விநோதமான

    Enjoying the preview?
    Page 1 of 1