Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Thavam Seitheno!
Enna Thavam Seitheno!
Enna Thavam Seitheno!
Ebook216 pages1 hour

Enna Thavam Seitheno!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தப் புத்தகம் என் கட்டுரைகளின் தொகுப்பு. மிகச் சமீபத்தில் எழுதியவைகளும், பல வருஷங்களுக்கு முன்பு எழுதியவைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

இசை விமரிசகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசகம் உண்டு: "பாடத் தெரிந்தவன் பாடுகிறான்; பாடத் தெரியாதவன் விமரிசகனாகிறான்!" இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சிறிது மாற்றிச் சொல்கிறார்கள்: "எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான்; எழுதத் தெரியாதவன் 'பிளாக்'கைத் துவங்கி, தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான்." (தானே பாராட்டிக் கொள்ளவும் செய்கிறான்!)

நானும் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'கடுகு தளிப்பு' என்ற பெயரில் ஒரு 'பிளாக்'கைத் துவங்கி இந்த மூன்றையும்… இல்லை, இல்லை, முதல் இரண்டையும் செய்துவந்து கொண்டிருக்கிறேன்!

நான் பார்த்தது, படித்தது, கேட்டது, ரசித்தது, 'சுட்டது' எல்லாவற்றையும் போட்டு வருகிறேன். என் அனுபவங்களையும், பல கற்பனைக் கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறேன். அதில் வரும் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. (இதைக் கற்பனை என்று நீங்கள் கருதினாலும் தப்பில்லை!)

ஐம்பது வருஷங்களுக்கு மேலாக புத்தகசாலைகளை விடாமல் படையெடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான, சுவையான விஷயங்களை நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கிறேன்.

எண்பதாவது வயதில் (முட்டியைப் பிடித்துக்கொள்ளாமல்!) காலெடுத்து வைக்கும் தருணத்தில், இப்படியொரு தொகுப்பை வாசகர்களுக்கு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நான் பெறுகிறேன்.

என் வாழ்க்கையில், என் தகுதிக்கு மீறிய பலரை அணுகவும், அவர்களுடன் சிறிது பழகவும், கடவள் வாய்ப்பளித்தற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. ஆண்டவனுக்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பேன்!

இந்த கட்டுரைகளுக்கு ஜீவன் ஊட்டுபவை இவற்றில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள். குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாகப் படம் வரைந்து தந்த நண்பர் ஓவியர் 'சுமன்’ அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை, சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!.

- பி. எஸ். ரங்கநாதன் (என்னும்) அகஸ்தியன் (என்னும்) கடுகு

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580120703755
Enna Thavam Seitheno!

Read more from Kadugu

Related to Enna Thavam Seitheno!

Related ebooks

Reviews for Enna Thavam Seitheno!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Thavam Seitheno! - Kadugu

    http://www.pustaka.co.in

    என்ன தவம் செய்தேனோ!

    Enna Thavam Seitheno!

    Author:

    ‘கடுகு’

    Kadugu

    For more books

    http://www.pustaka.co.in/home/author//kadugu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்ன தவம் செய்தேனோ! - சில வரிகள்

    ரா. கி. ரங்கராஜன் அணிந்துரை

    அமரர் கல்கி அவர்களும் (பக்தியுடன்) நானும்

    ஆசிரியர் எஸ். ஏ. பி.யும் (வணக்கத்துடன்) நானும்

    ஆசிரியர் சாவியும் (நன்றியுடன்) நானும்

    ஆசிரியர் தேவனும் (நட்புடன்) நானும்

    ராஜாஜியும் நானும்

    டைரக்டர் ஸ்ரீதரும் நானும்

    சித்ராலயா கோபுவும் நானும்

    சுப்புடுவும் நானும்

    டில்லி கணேஷும் நானும்

    எம். எஸ். அவர்களும் நானும்

    சிவாஜி கணேசன் அவர்களும் நானும்

    பித்துக்குளி முருகதாஸ் அவர்களும் நானும்

    சோவின் அப்பாவும் நானும்!

    ஆர். கே. நாராயணனும் நானும்!

    டைரக்டர் பாலசந்தரும் நானும்

    பாரதிராஜாவும் நானும்

    சுஜாதாவும் நானும்!

    நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் நானும்

    எழுத்துருக்களும் நானும்.

    ஆவிகளும் நானும்!

    டயரியும் நானும்

    நகைச்சுவையும் நானும்!

    குஷ்வந்த் சிங்கும் நானும்!

    என்ன தவம் செய்தேனோ! - சில வரிகள்

    இந்தப் புத்தகம் என் கட்டுரைகளின் தொகுப்பு. மிகச் சமீபத்தில் எழுதியவைகளும், பல வருஷங்களுக்கு முன்பு எழுதியவைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இசை விமரிசகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசகம் உண்டு: பாடத் தெரிந்தவன் பாடுகிறான்; பாடத் தெரியாதவன் விமரிசகனாகிறான்! இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சிறிது மாற்றிச் சொல்கிறார்கள்: எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான்; எழுதத் தெரியாதவன் 'பிளாக்'கைத் துவங்கி, தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான். (தானே பாராட்டிக் கொள்ளவும் செய்கிறான்!)

    நானும் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'கடுகு தளிப்பு' என்ற பெயரில் ஒரு 'பிளாக்'கைத் துவங்கி இந்த மூன்றையும்… இல்லை, இல்லை, முதல் இரண்டையும் செய்துவந்து கொண்டிருக்கிறேன்!

    நான் பார்த்தது, படித்தது, கேட்டது, ரசித்தது, 'சுட்டது' எல்லாவற்றையும் போட்டு வருகிறேன். என் அனுபவங்களையும், பல கற்பனைக் கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறேன். அதில் வரும் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. (இதைக் கற்பனை என்று நீங்கள் கருதினாலும் தப்பில்லை!)

    ஐம்பது வருஷங்களுக்கு மேலாக புத்தகசாலைகளை விடாமல் படையெடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான, சுவையான விஷயங்களை நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கிறேன்.

    எண்பதாவது வயதில் (முட்டியைப் பிடித்துக்கொள்ளாமல்!) காலெடுத்து வைக்கும் தருணத்தில், இப்படியொரு தொகுப்பை வாசகர்களுக்கு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நான் பெறுகிறேன்.

    என் வாழ்க்கையில், என் தகுதிக்கு மீறிய பலரை அணுகவும், அவர்களுடன் சிறிது பழகவும், கடவள் வாய்ப்பளித்தற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. ஆண்டவனுக்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பேன்!

    இந்த கட்டுரைகளுக்கு ஜீவன் ஊட்டுபவை இவற்றில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள். குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாகப் படம் வரைந்து தந்த நண்பர் ஓவியர் 'சுமன்’ அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

    என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை, சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!.

    - பி. எஸ். ரங்கநாதன் (என்னும்) அகஸ்தியன் (என்னும்) கடுகு

    *****

    ரா. கி. ரங்கராஜன் அணிந்துரை

    (ரா. கி. ரங்கராஜன் அவர்கள், என்னைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைச் சற்று சுருக்கி அணிந்துரையாகப் போடுகிறேன்.)

    சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக்கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்து விட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ். ரங்கநாதன்.

    சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிலிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டு பிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.

    டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. 'அரே டெல்லி வாலா' என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க 'டைம்' பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால், அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்து விட்டது. டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியையும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். ‘கடுகுச் செய்திகள்’ என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே ‘கடுகு’ என்ற புனைபெயரே நிரந்தரமாகி விட்டது.

    குமுதத்தில் எவ்வளவு கட்டுரைகளை எழுதினார் என்று இவருக்கும் கணக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மணைப் பற்றி எழுதினார். லால்பகதூர் சாஸ்திரி காலமான போது அவருக்குப் பி.ஏ.வாக இருந்த வெங்கடராமன் என்ற தமிழரைப் பேட்டி கண்டு எழுதினார். வேலூர் ஆஸ்பத்திரியில், இடுப்புக்குக் கீழே இயங்காதவராக இருந்த மேரி வர்கீஸ் என்ற பெண் சர்ஜன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஆபரேஷன் செய்ததைப் பற்றி எழுதினார். ஆண்களால் நிட்டிங் செய்ய முடியுமா என்று போட்டி வைத்த போது, தன்னால் முடியும் என்று சொல்லி, அதை விவரித்துக் கட்டுரை எழுதிப் பரிசையும் பெற்றார். இதெல்லாம் 64-ம் வருட வாக்கில்.

    அப்போது ரங்கநாதன் தபால் துறையில் பணியாற்றி வந்தார். சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது என்று யாரோ கிளப்பி விட்டார்கள். தான் எழுதுவது இலக்கியப் பணியே தவிர, அரசியல் அல்ல என்று பதிலளித்த ரங்கநாதன், குமுதத்திலிருந்து ஒரு சர்டிபிகேட்டையும் இணைத்தார். அவர் எழுதியவை நல்ல இலக்கியக் கட்டுரைகள் என்று அமரர் எஸ்.ஏ.பி. அப்போது எழுதித் தந்த நற்சான்றை இன்றைக்கும் பிரியத்துடன் பாதுகாத்து வருகிறார் கடுகு.

    அஞ்சல் துறையை விட்டு விலகிய பின், ஹிந்துஸ்தான் தாம்ஸன் என்ற பிரபலமான விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து, பல வருடம் பயிற்சி பெற்றதால், ஹாஸ்யச் சுவையிலிருந்து கணினிச் சுவையில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். விரும்பிக் கேட்போருக்கு 'எழுத்துரு' செய்து தருகிறார்.

    கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதால் ரங்கநாதனும் அவருடைய மனைவி கமலாவும் சேர்ந்து பல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, பதம் பிரித்துப் பதிப்பித்துள்ள 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்'

    இரண்டு மூன்று தடவைகள் பி.எஸ்.ஆரின் டெல்லி வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். முதல் முறை, தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராக இருந்த கவிஞர் தங்கவேலு ('சுரபி') என்னை டெல்லிக்குப் போய், பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார். விமானப் பயணமும் புதிது. டெல்லியும் புதிது. அப்போது பி.எஸ்.ஆர். தான் கை கொடுத்தார். அவருடைய மகள் ஆனந்தி - அன்று உயர்நிலைப்பள்ளி மாணவி -அறை நிறைய அலமாரி அலமாரியாக ஆங்கில நாவல்களை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவர் நியூ ஜெர்ஸியில், புகழ் பெற்ற ஒரு மருந்து நிறுவனத்தில், புற்று நோய்க்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

    நானும் ரங்கநாதனும் நண்பர்களாயிருப்பது போல, என் மனைவியும் ரங்கநாதனுடைய மனைவியும் நெருங்கிய சினேகிதிகள். பீங்கான் கிண்ணம், நூதன் திரி ஸ்டவ், மோடா என்று இவள் எது கேட்டாலும் அவர் டெல்லியிலிருந்து அனுப்பிக் கொண்டேயிருப்பார். என் குடும்பத்தில் பிரச்னையும் வேதனையும் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் இருவரும் ஆறுதலும் தேறுதலும் தந்ததை எங்களால் மறக்க முடியாது.

    கடைசியாக ஒரு கடுகுச் செய்தி: பி.எஸ்.ஆர். எனக்குத் தூரத்து உறவு. என் மருமகளின் தங்கைக்கு இவர் பெரிய மாமனார். (புரிந்து கொண்டால் சரி.)

    (2008-ல் ‘அண்ணாநகர் டைம்ஸி’ல் எழுதியதிலிருந்து சில பகுதிகள்)

    *****

    அமரர் கல்கி அவர்களும் (பக்தியுடன்) நானும்

    ஒரு சிறிய முன்னுரை

    என்னுடைய தாளிப்புப் பதிவை 2009 டிசம்பர் 5ம் தேதி துவக்கினேன். காரணம் அது கல்கி என்னும் அரிய தமிழனின் நினைவு தினம்.

    நான் எழுதிய எல்லா புத்தகங்களின் முன்னுரைகளிலும் கீழ்க்கண்ட வாசகம் இருக்கும். ஏதோ ஒப்புக்கோ, என்னைப் பற்றி உயர்வான எண்ணம் படிப்பவர்களின் மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காகவோ எழுதப்பட்டதல்ல இது!

    என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை, சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!

    கல்கி அவர்கள்தான் எழுத்தார்வத்தை எனக்குள் விதைத்தார். முதல் முதலில் 1952-ல் 'பொன் விளையும் பூமி' என்ற கட்டுரையை கல்கியில் வெளியிட்டார். (இந்தக் கட்டுரையை எழுத எனக்கு எப்படி வாய்ப்பு வந்தது என்பதைப் பின்னால் சொல்லுகிறேன்.)

    தம்பி உனக்கு எழுத்துத் திறமை இருக்கிறது என்பதை பேஷ் என்று ஒரே வார்த்தையில் சொல்லி எனக்கு ஊக்கமளித்தவர் அவர். என் பூஜையில் உள்ள அவரது படம். 12.12.1954. தேதியிட்ட (கல்கி அவர்கள் மறைந்த அடுத்த வாரம்) விகடனில் வெளியான அட்டைப்படம், அந்தப் படம், அந்த காந்த சக்தி அவ்வப்போது அசரீரி மாதிரி 'பேஷ்' என்று சொல்லி, என் ஆர்வத்திற்கு உரமிட்டு வந்து கொண்டிருக்கிறது.

    கல்கி அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு இரண்டு வருடங்களே தான் கிடைத்தது. 1952-ல் கீழ்ப்பாக்கம் குருசாமி ரோடில் கல்கி அலுவலகத்தில் அவரை முதல் முதலாகச் சந்தித்தேன். அதற்குப் பிறகு பல முறை சந்திக்க வாய்ப்புகள் கிடைத்தன. அந்த இரண்டு வருடங்களை எப்படி நான் மறக்க முடியும்! புத்தி தெரியும் பருவத்திலிருந்த எனக்கு அந்த சந்திப்புகள் போதித்த பாடங்கள் ஏராளமானவை!

    அவரது எழுத்துகள் மிகவும் எளிமையானவை. மிகவும் வலிமையானவை. அவை தான் பாரதி மணி மண்டபத்திற்கு நிதி திரட்டித் தந்தவை; மகாபலிபுரத்தின் மகோன்னதத்தையும், அஜந்தாவின் அற்புதத்தையும் எடுத்துக் காட்டியவை; நாமக்கல் கவிஞருக்கு நிதி வசூலித்துத் தந்தவை; தமிழ் இசை இயக்கத்திற்கு அசுர பலம் ஈந்தவை; சோழனையும் பல்லவனையும் சாதாரண மக்களுக்கும் அறிமுகப்படுத்தியவை. எல்லாவற்றிற்கும் மேலாக சமூகசேவையில் ஈடுபட்டிருந்த அமைப்புக்களுக்கும் இளைஞர் சங்கங்களுக்கும் உற்ற தோழனாக அமைந்தவை. இச்சங்கங்களில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கமும், எங்களுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1