Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pullikal... Thagavalgal
Pullikal... Thagavalgal
Pullikal... Thagavalgal
Ebook234 pages56 minutes

Pullikal... Thagavalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கன் புத்தகசாலையில் ‘சாட்டர்டே ரிவியூ” என்ற இதழில், வாரா வாரம் எட்மண்ட் ஃபுல்லர் என்ற எழுத்தாளர் ஒரு பத்தி எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து படித்து வந்தேன்.

அதில் அவர் பல சுவையான துணுக்குகளை எழுதுவார். இந்த துணுக்குகளின் சிறப்பு என்னவென்றால், எல்லாம் பல பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ANECDOTES என்பார்கள்.

சில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பத்தியை நிறுத்திவிட்டார். அதே சமயம் அந்த பதிவில் எழுதிய பல தகவல்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளிவர இருப்பதாகவும் எழுதியிருந்தார். சில வாரங்கள் கழித்து அந்த புத்தகம் வெளிவந்த தகவல் தெரிந்தது. எனக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த எழுத்தாளரின் முகவரியைக் கண்டுபிடித்து, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “அவருடைய பத்தி மிகவும் சுவையாக இருந்தது என்றும், நான் இடையிலிருந்து படித்ததால் அதற்கு முந்திய வாரங்களில் எழுதியவற்றை நான் படிக்க இயலவில்லை என்றும் எழுதிவிட்டு, இப்போது புத்தகமாக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் எனக்கு அந்த புத்தகத்தை இங்கு வாங்க முடியாது; ஆகவே எனக்கு ஒரு பிரதி அனுப்ப முடியுமா?” என்றும் கேட்டு எழுதி இருந்தேன்.

”உங்கள் முகவரியை தெளிவாகப் பெரிய எழுத்தில் எழுதி அனுப்புங்கள், நான் அனுப்புகிறேன்” என்று எழுதி இருந்தார். நான் அதன்படி எழுதி அனுப்பினேன். சில நாள் கழித்து அவர் கையெழுத்திட்ட புத்தகம் எனக்கு வந்தது . அதை மிகவும் ரசித்துப் படித்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பல பிரமுகர்கள் எனக்கு அறிமுகமான பெயராக இல்லை. ஆனாலும் தகவல்கள் சுவையாக இருந்தன.

முதன் முதலில் அமெரிக்காவில் அட்லான்டாவில் உள்ள ஒரு சர்வகலாசாலை புத்தகசாலைக்குச் சென்றபோது அங்கு என்னை பிரமிக்க வைத்தது அங்குள்ள பல ஷெல்ஃப்களில் நகைச்சுவைப் புத்தகங்கள், வரிசையாகப் இருந்துதான். அடுத்தது, வாழ்க்கை வரலாறு புத்தகங்கள். சுமார் 500, 600 இருந்தன. அவைகளைப் படித்து, அவற்றிலிருந்து சுவையானtஹ் தகவல்களை எடுக்க எனக்கு ஆர்வம் இருந்தாலும், அந்த பிரமுகர்களின் பெயர்கள் சிறிதும் அறிமுகமானதாக இல்லாததும், நான் அமெரிக்காவில் தங்கும் காலத்திற்குள் ஒன்றிரண்டு புத்தகத்தைக் கூட படிக்க முடியாது என்பதாலும் அவற்றைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை.

ஆனால், பல பிரமுகர்களைப் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களைக் குறித்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, வாழ்க்கை வரலாற்று நூல்களை வெறுமனே புரட்டும்போது சில துணுக்குச் சம்பவங்கள் கண்ணில் படும். அவற்றைக் குறித்து வைத்துக் கொள்வேன்.

பார்க்கப்போனால் இந்த மாதிரி சின்ன தகவல்களில்தான் அந்த பிரமுகரின் உண்மையான குணமும், சிறப்பும் தெரிய வருகின்றன என்று நான் கருதுகிறேன். ஒரு பிரமுகரைப் பற்றிய இது மாதிரித் துணுக்குத் தகவல் ஒரு சோறு பதம் மாதிரி அமைகிறது என்று நான் கருதுகிறேன். படித்துவிட்டு நீங்களும் அப்படிக் கருதுவீர்கள் என்றும் எண்ணுகிறேன்.

என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற் பாதகமலங்களைச் சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு, இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி இப்போதுபோல் என்றும் எனக்குக் கிடைப்பதாக!

- கடுகு

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580120704199
Pullikal... Thagavalgal

Read more from Kadugu

Related to Pullikal... Thagavalgal

Related ebooks

Reviews for Pullikal... Thagavalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pullikal... Thagavalgal - Kadugu

    http://www.pustaka.co.in

    புள்ளிகள்… தகவல்கள்

    Pullikal… Thagavalgal

    Author:

    கடுகு

    Kadugu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kadugu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அப்துல் கலாம்: கண்காட்சிக்கு என்னோட வாங்க!

    ஸ்ரீஸ்ரீ பிரகாசா: இனி இது மாதிரி எற்படாது.

    கல்கி: அதிக விலை அரிசி

    சாவி-1: ’பழைய கணக்கு’

    லால்குடி: நான்தான் லால்!

    லால் பகதூர் சாஸ்திரி: மூங்கில் கட்டில்

    சாவி-2: அவன் ரொம்ப கெட்டிக்காரன்.

    காட்டூனிஸ்ட் நடனம் – ஆசிரியர் சாவி: பிரஷ்ஷும் பேனாவும்! -

    இந்திரா காந்தி: பந்தா எதுவுமின்றி!

    நேருவும் மாப்பிள்ளையும்: அதே உறவுதான்!

    சாவி-3: மூன்று நாளைக்குள் புத்தகம் ரெடியாகணும்!

    சாவி-4: அகப்பட்டதைச் சுருட்டு

    வானதி திருநாவுக்கரசு: நான் படிச்சவன்.

    கி.வா.ஜ.: ஒட்டும் இரண்டுளம்

    ராஜ் நாராயண்: வாங்கு 500 பஸ்!

    அண்ணங்கராச்சாரியார் - நூலுக்கு வயது நூறு!

    டென்னிஸ் கிருஷ்ணன்-1- இந்திரா காந்தியின் கனிவு.

    பாட்டா: கால் ஊன்றிய பெயர்!

    டென்னிஸ் கிருஷ்ணன்-2: புகாரை என்னிடம் கொடுங்கள்.

    புருஷோத்தம் கௌசிக்: கதவைத் தட்டின மந்திரி

    புரொபசர் மது தந்தவதே: நேரே என் கிட்ட வந்துடு

    ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்-1: வரவேற்பு குமாஸ்தா

    கண்ணதாசன்: தையலுக்கு உதவும்

    மொரார்ஜி: கைத்தடியை எறிஞ்சுட்டேனே!

    லிஃப்கோ சர்மா: உயிலில் என் பெயர்!

    பாரத ரத்னா சச்சின்: ஆபீசுக்கு வந்தார்.

    லிரில் சோப் மாடல்: ஓஹோ விளம்பரம்

    சகுந்தலா தேவி: கூட்டாமலேயே விடைதெரியும்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ்-2: போய் பார்த்து விட்டு வாருங்கள்.

    சர். சி. வி. ராமன்: நான் விளக்கமா சொல்றேன்!

    சாவி-5: 85 வயதில் கைப்பட எழுதியது.

    அரியக்குடி: என்னமோ கனம் ராகம்!

    செம்பை: உன்னையே நம்பி இருக்கேன்!

    ராஜேஷ் கன்னாக்களுக்கு அறிவிப்பு!

    தமிழ்ச் சங்க செயலர் ராஜன்: அங்கே என்ன குப்பை கொட்டறானோ!

    சின்ன அண்ணமலை: சாஷ்டாங்கமாக விழுந்து..

    ஜே. ஆர். டி டாட்டாவும், தமிழ்ச்சங்க கந்தசாமியும்!

    ஜார்ஜ் பெர்னாட்ஷா- Better Never than Late!

    மோனா லிசா: திருடு போன பிறகுதான் பிரபலம்!

    ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: எப்படி வாசித்தேன் வயலின்?

    டாக்டர் கிரிஸ்டியான் பர்னார்ட்: இருதயம் மாற்றினார்

    எல்லா வீலர் வில்காக்ஸ்: ஏழ்மையில் மலர்ந்த திறமை

    ஸ்டீவ் ஜாப்ஸ்: புவியை ஈர்த்த ஆப்பிள்

    ரே பிராட்பரி: ஆகா! புத்தகங்கள்!

    ஐன்ஸ்டீன் : சுவரில் கிறுக்கிய கணித சூத்திரங்கள்!

    நடிகர் சிட் சீஸர்: அதிர்ச்சித் தகவல்.

    பென்குரியனும் பில் கேட்ஸும்: வீட்டு வேலை

    சிட்னி ஹாரிஸ்: 40 வருஷ சாதனை

    ஸ்காட் ஃபிட்ஜெரால்ட்: அபாரமான விற்பனை

    ராணி விக்டோரியா: எழுத்துக்கு மரியாதை

    பிரின்ஸ் ஃபிலிப்: ஓரங்கட்டுங்க, சார்!

    பிரதம மந்திரி தாட்சர்: சவ சவ தலைப்பு

    ஜோக்கர் மிஸ்டர் பீன்: ஜெயந்தி யார் என்று தெரியாது.

    ராபர்ட் ஃப்ராஸ்ட்: MILES TO GO

    எலிசபெத் ராணி: ராணியின் வாழ்த்து

    ஜான் கன்தர் (John Gunther): சல்டன்லி!

    பாப் டோல்: குழந்தை மாதிரி தூங்கினேன்!

    ரிச்சர்ட் நிக்ஸன்: உங்களுக்கு ஏழாவது பிரச்னை!

    கோர்பசேவ்: குருஷ்சேவின் மனைவி

    ஆர்ட் லிங்க்லேட்டர்: போய்க் கேளு, சொல்லுவாங்க!

    புள்ளிகள்: மேரி கியூரியின் இல்லம்

    பிரஞ்சு அதிபர் டி கால்: எழுப்புவதற்கு ஒரு உத்தரவு!

    பீட்டர் உஸ்டினாவ்: சிங்கத்திற்கு நடுவில்

    ஜீனா லோல்லா பிரிகிடா: அகராதியில் பெயர்

    எச். ஜி. வெல்ஸ்: வீட்டுப் பணிப்பெண் என் அம்மா

    ப்ரூக் ஷீல்ட்: விளையாட்டுப் பிள்ளை1

    மிஸ்டர் விப்பிள் - 32 வருட சாதனை!

    கென்னடி:அம்மாவுக்கு அட்வைஸ்!

    ஆர்ட் பச்வால்ட்: 500 தினசரிகளில் கட்டுரை

    சர். ஐஸக் நியூட்டன்: என் தோழன் உண்மை!

    வின்ஸ்டன் சர்ச்சில் பரிசுக்கு தகுதி இல்லாதவன் நான்!

    மேரி க்யூரி: இரண்டு நோபல் பரிசு

    கவர்னர் கூலிட்ஜ்: போக வேண்டியக் கட்டாயமில்லை!

    மார்லின் டியட்ரிச்: கேள்வியும் பதிலும்!

    முன்னுரை

    வணக்கம்.

    சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கன் புத்தகசாலையில் ‘சாட்டர்டே ரிவியூ" என்ற இதழில், வாரா வாரம் எட்மண்ட் ஃபுல்லர் என்ற எழுத்தாளர் ஒரு பத்தி எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து படித்து வந்தேன்.

    அதில் அவர் பல சுவையான துணுக்குகளை எழுதுவார். இந்த துணுக்குகளின் சிறப்பு என்னவென்றால், எல்லாம் பல பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ANECDOTES என்பார்கள்.

    சில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பத்தியை நிறுத்திவிட்டார். அதே சமயம் அந்த பதிவில் எழுதிய பல தகவல்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளிவர இருப்பதாகவும் எழுதியிருந்தார். சில வாரங்கள் கழித்து அந்த புத்தகம் வெளிவந்த தகவல் தெரிந்தது. எனக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த எழுத்தாளரின் முகவரியைக் கண்டுபிடித்து, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய பத்தி மிகவும் சுவையாக இருந்தது என்றும், நான் இடையிலிருந்து படித்ததால் அதற்கு முந்திய வாரங்களில் எழுதியவற்றை நான் படிக்க இயலவில்லை என்றும் எழுதிவிட்டு, இப்போது புத்தகமாக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் எனக்கு அந்த புத்தகத்தை இங்கு வாங்க முடியாது; ஆகவே எனக்கு ஒரு பிரதி அனுப்ப முடியுமா? என்றும் கேட்டு எழுதி இருந்தேன்.

    உங்கள் முகவரியை தெளிவாகப் பெரிய எழுத்தில் எழுதி அனுப்புங்கள், நான் அனுப்புகிறேன் என்று எழுதி இருந்தார். நான் அதன்படி எழுதி அனுப்பினேன். சில நாள் கழித்து அவர் கையெழுத்திட்ட புத்தகம் எனக்கு வந்தது. அதை மிகவும் ரசித்துப் படித்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பல பிரமுகர்கள் எனக்கு அறிமுகமான பெயராக இல்லை. ஆனாலும் தகவல்கள் சுவையாக இருந்தன

    முதன் முதலில் அமெரிக்காவில் அட்லான்டாவில் உள்ள ஒரு சர்வகலாசாலை புத்தகசாலைக்குச் சென்றபோது அங்கு என்னை பிரமிக்க வைத்தது அங்குள்ள பல ஷெல்ஃப்களில் நகைச்சுவைப் புத்தகங்கள், வரிசையாகப் இருந்துதான். அடுத்தது, வாழ்க்கை வரலாறு புத்தகங்கள். சுமார் 500, 600 இருந்தன. அவைகளைப் படித்து, அவற்றிலிருந்து சுவையானtஹ் தகவல்களை எடுக்க எனக்கு ஆர்வம் இருந்தாலும், அந்த பிரமுகர்களின் பெயர்கள் சிறிதும் அறிமுகமானதாக இல்லாததும், நான் அமெரிக்காவில் தங்கும் காலத்திற்குள் ஒன்றிரண்டு புத்தகத்தைக் கூட படிக்க முடியாது என்பதாலும் அவற்றைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை.

    ஆனால், பல பிரமுகர்களைப் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களைக் குறித்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, வாழ்க்கை வரலாற்று நூல்களை வெறுமனே புரட்டும்போது சில துணுக்குச் சம்பவங்கள் கண்ணில் படும். அவற்றைக் குறித்து வைத்துக் கொள்வேன்.

    பார்க்கப்போனால் இந்த மாதிரி சின்ன தகவல்களில்தான் அந்த பிரமுகரின் உண்மையான குணமும், சிறப்பும் தெரிய வருகின்றன என்று நான் கருதுகிறேன். ஒரு பிரமுகரைப் பற்றிய இது மாதிரித் துணுக்குத் தகவல் ஒரு சோறு பதம் மாதிரி அமைகிறது என்று நான் கருதுகிறேன். படித்துவிட்டு நீங்களும் அப்படிக் கருதுவீர்கள் என்றும் எண்ணுகிறேன்.

    என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற் பாதகமலங்களைச் சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு, இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி இப்போதுபோல் என்றும் எனக்குக் கிடைப்பதாக!

    -கடுகு

    அப்துல் கலாம்: கண்காட்சிக்கு என்னோட வாங்க!.

    தும்பா ராக்கெட் நிலையத்தில் பணி புரிபவர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டியது இருக்கும். கிட்டத்தட்ட 70 விஞ்ஞானிகள் அங்கு பணிபுரிந்து கொண்டு இருந்தார்கள். வேலை கடுமையாகவும் அதிக கவனத்துடன் செய்ய வேண்டி இருந்ததாலும் நேரம் போவதுகூட தெரியாமல் பணி புரிவது மாமூலாகிவிட்டது.

    ஒரு நாள் ஒரு விஞ்ஞானி, தும்பா நிலைய உயர் அதிகாரியிடம் சென்று ஒரு சின்ன கோரிக்கை வைத்தார். என்னுடைய குழந்தைகளுக்கு, நம் ஊரில் நடைபெறும் விஞ்ஞான கண்காட்சி அழைத்துப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். ஆகவே இன்று சாயங்காலம் ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கென்ன, நீங்கள் தாராளமாகப் போகலாம்" என்று

    Enjoying the preview?
    Page 1 of 1