Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chirithu Chirithai... Perithu Perithai...
Chirithu Chirithai... Perithu Perithai...
Chirithu Chirithai... Perithu Perithai...
Ebook240 pages1 hour

Chirithu Chirithai... Perithu Perithai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘சிறிது சிறிதாய் பெரிது பெரிதாய்’ என்ற என்னுடைய இந்நூல் ஒரு தொகுப்பு நூலாகும். ஆம், சில நூல்கள் எழுதியுள்ள நான் தொகுப்பு நூல் ஒன்று எழுதலாம் என்று எண்ணி இதைத் தொடங்கினேன். தொடங்கியபின் தான் அறிய முடிந்தது. ‘எதையுமே தொடங்குவது எளிது; அதைத் தொடர்வதுதான் சிரமம்’ என்று.

ஆம், இந்த நூலுக்காக ஏறத்தாழ நூலில் உள்ள பெரும்பாலான செய்திகள் என்னுடைய நினைவகத்திலிருந்தே வெளிக்கொணர்ந்தேன். எழுத, எழுத நிறைய செய்திகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது. ஆம், தொடர்ந்து பல நூல்களைத் தேடிப்பிடித்து, பல செய்தித் தாள்களை ஆராய்ந்து, பல செய்திகளை சேர்த்தேன். இதில் உள்ள செய்திகள் எதுவும் நான் புதிதாக எழுதியது இல்லை. எல்லா செய்திகளும், எல்லா வாசகர்களும் அறிந்ததுதான். ஆனால் நீங்கள் இதைப் படிக்கும்போது, சில செய்திகள் புதிதாக தோன்றலாம்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580147707742
Chirithu Chirithai... Perithu Perithai...

Read more from Thanjai Ezhilan

Related to Chirithu Chirithai... Perithu Perithai...

Related ebooks

Reviews for Chirithu Chirithai... Perithu Perithai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chirithu Chirithai... Perithu Perithai... - Thanjai Ezhilan

    https://www.pustaka.co.in

    சிறிது சிறிதாய்... பெரிது பெரிதாய்...

    Chirithu Chirithai... Perithu Perithai...

    Author:

    தஞ்சை எழிலன்

    Thanjai Ezhilan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-ezhilan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    கிழவி கொடுத்த நிழல்

    அணுகுமுறை

    புத்தரும் கேள்விகளும்

    கூச்சம் - மரணம்

    பெரியார் – பிசாசும் பூதமும்

    கங்காதேவி

    பக்தி

    இடமறிந்து பேச வேண்டும்

    நாய்க்கு வந்த சோதனை

    நேர்மறைச் சிந்தனை

    மர்மப் புத்தகம்

    விசுவாமித்திரரும் வசிட்டரும்

    யானையின் 60 பெயர்கள்

    கடலின் 200 பெயர்கள்

    தமிழில் ஓரெழுத்து ஒரு சொல்

    தந்திரம் பலிக்கவில்லை

    இந்தியரால் முதன்முதலில் எழுதப்பட்ட ஆங்கிலப் புத்தகம்

    சாம்பார்

    நாயும் தலை முடியும்

    ஆயிரம் ரூபாய்

    இந்தியும் - செருப்பும்

    மாலையும் - துண்டும்

    ஆதிசங்கரர்

    இராமகிருஷ்ண பரமஹம்சர்

    காலத்தால் செய்த உதவி

    ஆபிரகாம் லிங்கன்

    மன்னனும் - விறகு வியாபாரியும்

    பச்சத்தண்ணி ஆகாது

    ஞானியும் - மன்னனும்

    முனிவரும் ஆசையும்

    பாவலர் செய்குத்தம்பி - சிலேடை

    புலவரின் சிலேடை

    சிலேடை - அண்டங்காக்கை

    கி.வா.ஜ. சிலேடை நயம்

    புத்தரின் அறிவுரை

    வீடு

    சேவல் கூவுதல் - சூரியன் உதித்தல்

    தீர்ப்பு - இரண்டுக்கும் சரி

    கோழி ‘65’ (Chicken 65)

    சேவல் தண்ணீர் குடிப்பது

    எழுத்தாளரும் திருடனும்

    மடமும் சீடனும்

    அரசும் வேம்பும்

    மன்னனும் கொள்ளைக்காரனும்

    ஆண்டவனை வாழ்த்துதல்

    புலவரும் ஜமீன்தாரும்

    குருநானக் சொற்பொழிவு

    எமன் - மகன் - ராசகுமாரி நாட்டை அடைதல்

    நம்பிக்கை வைத்தல்

    சமூக உளவியல்

    பழி வாங்கல்

    கணக்கு வாத்தியார்

    காதல்

    உறுதிகொள்ள வேண்டும்

    கவிராஜர் செகவீர பாண்டியன்

    கி.ஆ.பெ.யின் நகைச்சுவை

    தண்ணீர் தண்ணீர்

    அலெக்சாண்டர் பார்த்த அழகு

    ஆழ்மனம்

    புகழ்ச்சி

    காலம் கடந்த சிரிப்பு

    நமது உள்ளம்தான் நமது உலகம்

    நகைச்சுவை தேவை

    ஆச்சரியம்

    சமயோசிதச் செயல்

    பாராட்டு

    அலெக்சாண்டர்

    துணிச்சல்

    காமராசர்

    மன்னிப்பு

    புத்தர்

    மனம் செய்யும் மாயம்

    பால்

    மூங்கில்

    நட்சத்திரம்

    காளான்

    டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்

    அதிக வயது

    புத்தக வெளியீடு

    முடிச்சு

    தாமஸ் ஆல்வா எடிசன்

    அண்ணா

    குருவும், சீடனும் - மகிழ்ச்சியும்

    மான்

    மீன்

    குபேரன்

    மன்னனின் மேன்மை

    பிலிப்ஸ்

    சும்மா

    மூவேழு வள்ளல்கள்

    இராசாசி

    விருதுகள்

    தானியம்

    லண்டன் கோபுரம்

    ஒரு ஊரில் ஒரு மனிதர்

    பேராசை - சீனக்கதை

    இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்

    அரிசி

    முல்லாவும் மனைவியும்

    உலகில் பொருளாதார ரீதியில் தலைசிறந்த நகரங்கள்

    மிக நீளமான ஆங்கில வாக்கியம்

    தங்க ஆணிகள்

    சுருக்கங்கள் ஏன்?

    சொல்லித் தெரிவதில்லை திருட்டுக் கலை

    இலைச் சறுகுகள்

    மனம் ஒன்றிவிடுதல்

    எமனும் எழுத்தாளனும்

    செல்வம் சீரழிக்கும் சிறு நிகழ்வு

    என்னுரை

    ‘சிறிது சிறிதாய் பெரிது பெரிதாய்’ என்ற என்னுடைய இந்நூல் ஒரு தொகுப்பு நூலாகும். ஆம், சில நூல்கள் எழுதியுள்ள நான் தொகுப்பு நூல் ஒன்று எழுதலாம் என்று எண்ணி இதைத் தொடங்கினேன். தொடங்கியபின் தான் அறிய முடிந்தது. ‘எதையுமே தொடங்குவது எளிது; அதைத் தொடர்வதுதான் சிரமம்’ என்று.

    ஆம், இந்த நூலுக்காக ஏறத்தாழ நூலில் உள்ள பெரும்பாலான செய்திகள் என்னுடைய நினைவகத்திலிருந்தே வெளிக்கொணர்ந்தேன். எழுத, எழுத நிறைய செய்திகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது. ஆம், தொடர்ந்து பல நூல்களைத் தேடிப்பிடித்து, பல செய்தித் தாள்களை ஆராய்ந்து, பல செய்திகளை சேர்த்தேன். இதில் உள்ள செய்திகள் எதுவும் நான் புதிதாக எழுதியது இல்லை. எல்லா செய்திகளும், எல்லா வாசகர்களும் அறிந்ததுதான். ஆனால் நீங்கள் இதைப் படிக்கும்போது, சில செய்திகள் புதிதாக தோன்றலாம். சில தேவையில்லாத செய்திகளாகவும் உங்களுக்குத் தெரியலாம். இன்னும் இவை போன்ற நிறைய செய்திகள் உள்ளன. முடிந்தால் அடுத்த தொகுப்பு வெளியிட முயற்சிக்கின்றேன், தங்களின் இந்த நூலுக்கான வரவேற்பைப் பொறுத்து.

    இந்த நூலில், நிறைய ஆன்மீகச் செய்திகள், அரிய செய்திகள், அறிவியல் செய்திகள், அறியப்படாத செய்திகள் என நிறைய உள்ளன. இந்த நூலை நன்றாக ஊன்றிப் படியுங்கள். உங்கள் உள்ளம் உவகை பெறும். உணர்ச்சி கொந்தளிக்கும். உயர வழி காண முடியும். இந்த செய்திகளை எல்லாம் அறிந்ததுதானே என்று அலட்சியப்படுத்தினால், அதனால் பேரிழப்பு உங்களுக்குத்தான்.

    இந்த நூல் பெரும்பாலும் எழுத்தாளர்கள், மாணவர்கள், பேச்சாளர்கள், வெற்றியாளர்கள் எனப் பன்முகம் கொண்டவர்களுக்கு பயன்படும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்ளுகின்றேன்.

    அன்புடன்,

    தஞ்சை எழிலன்

    9884144575

    கிழவி கொடுத்த நிழல்

    மாமன்னன் இராசராசன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி முடித்து, குடமுழுக்கும் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடந்துள்ளது ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகு நடத்தப்பட்ட கும்பாபிஷேகமாகும். அன்று முதலில் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் மனதில் தோன்றிய அசதியிலும், பெருமிதத்திலும் மன்னன் உறங்கச் சென்றான். ஆனால் அந்த உறக்கம் ஓர் ஆழ்ந்த உறக்கமாக இருக்கவில்லை. அப்போது மன்னன் கனவில் தோன்றிய சிவன் மன்னனுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து மன்னனின் நலம், மக்கள் நலம் விசாரித்த இறைவன், தொடர்ந்து நல்லாட்சி நடத்த தனது மனம் நிறைந்த வாழ்த்தை தெரிவித்தார். சிவனின் வாழ்த்துக்கு நன்றி கூறிய இராசராசன், தங்களின் ஆசி என்றும் தேவை. தாங்கள் விரும்பியபடி நல்லாட்சி தருவேன். தங்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் கூறுங்கள். அவற்றைக் களைய முற்படுகின்றேன். இப்போது தாங்கள் உறையுமிடமும், நடக்கும் நிகழ்வுகளும் தங்களுக்குத் திருப்திதானே? எனக் கேட்டான். அதற்கு சிவபெருமான், ஏதோ உன் மறைவிலும், கிழவி கொடுத்த நிழலிலும் நான் ஒதுங்கி இருக்கின்றேன். மேலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம் என்று சிவன் கூறினார்.

    திடீரென்று கண்விழித்த மன்னன், இறைவன் கூறியதை எண்ணிப் பார்த்தான். ‘உன் மறைவில்’ என்று கூறியது தாம் கட்டிய கோபுரம் என்று உணர்ந்து கொண்டான். ஆனால் ‘கிழவியின் நிழல்’ என்று எதைக் கூறினார் என்று எண்ணி கலக்கமுற்று, இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் தவித்து, பொழுது புலர்ந்ததும், அரசவையைக்கூட்டி, தான் அன்றிரவு கண்ட கனவையும், இறைவன் கூறிச்சென்ற செய்தியையும் கூறினான். ‘கிழவி கொடுத்த நிழல்’, ‘பொன்மணித் தட்டார் இதயம்’ என்ற இரண்டின் விளக்கத்தைக் கேட்டான் இராசராசன். அங்கே குழுமியிருந்த அனைவரும், கருவூர்த் தேவர் உட்பட ஆச்சரியமடைந்தனர். அப்போது அக்கோயிலை வடிவமைத்த சிற்பி எழுந்து விளக்கமளிக்க முன்வந்தான்.

    அரசே, தான் எழுந்து பேசுவதற்கு மன்னியுங்கள். ‘கிழவி கொடுத்த நிழல்’ என்று இறைவன் கூறியது உண்மைதான். நமது மக்களும், தொழிலாளர்களும் இக்கோயில் திருப்பணியைச் செய்யும்போது, பக்கத்தில் உள்ள அரச மரத்தடியில் ஒரு கிழவி, தினசரி வேலையாட்களுக்கும், வீரர்களுக்கும் மோர் கொடுத்து உதவினாள். கோயில் திருப்பணிக்காக மக்களிடம் வரிப்பணம் வசூலித்தபோது இந்தக் கிழவி, ‘என்னிடம் ஏதய்யா பணம்? இதோ நான் உட்கார்ந்திருக்கும் இந்தக் கல்லை வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறினாள். யோசனை செய்த வீரர்கள், தங்கள் பக்கத்தில் இருந்த சிற்பியிடம், ‘இந்தக் கல் நமது திருப்பணி வேலைக்குப் பயன்படுமா?’ என்று கேட்டனர். உடனே அந்த சிற்பி, அந்தக் கல்லை நன்றாக ஆராய்ந்து அதன் நீள அகலங்களை அளந்து, ‘ஆ! இதுபோன்ற ஒரு கல்லைத்தான் இவ்வளவு நாட்களாகத் தேடிக்கொண்டு இருந்தேன்’ என்று சிற்பி கூறியதும், எல்லோரும் வியந்தனர். ‘திருப்பணிகள் ஏறத்தாழ முடிவடைய இருக்கின்ற நிலையில் கருவறையின் மேல் பகுதியை மூடுவதற்கு, ஒரே கல்லால் ஆன இம்மாதிரி கிடைக்கவில்லையே என நான் கலங்கிக் கொண்டிருக்கின்றேன். நமக்கு இது ஓர் அருமையான வரப்பிரசாதமாகும். எதற்கும் நாம் ஒரு வார்த்தைக் கருவூர்த் தேவரைக் கேட்டு பிறகு முடிவு செய்யலாம்’ என்றார். பிறகென்ன, தேவர் வந்தார். கல்லைப் பார்த்தார். சிற்பியைப் பார்த்தார். கிழவியைப் பார்த்தார். வேலை முடிந்தது. சிவபெருமான் தனது கருவறையில் கிழவியின் கல்லின் கீழே அக்கல்லின் நிழலில் இன்றுவரை அமர்ந்திருக்கின்றார். இதைத்தான் ‘கிழவியின் நிழலில்’ தான் இருப்பதாக இறைவன் மன்னனுக்கு உணர்த்தியது.

    தொடர்ந்து, ‘பொன்மணித் தட்டாரின் இதயத்தில்’ என்பதின் பொருள்தேட முனைந்த மன்னன், அந்த ஊரில் உள்ள பொன்மணித் தட்டாரை அழைத்து வருமாறு தனது வீரர்களுக்குப் பணித்தான். ஆனால், வீரர்கள் அழைத்தபோது அந்த பொன்மணித் தட்டார், நானோ மிக எளியவன். அரசரிடம் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை. மேலும் அரசருக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் எனக்கில்லை என்று கூறினான். பொன்மணித் தட்டார் வராததைக் கேள்வியுற்ற மன்னன், தானே தனது பரிவாரங்களுடன் அவரை நேரில் கண்டு, தான் கேட்ட வார்த்தைகளைக் கூறி விபரம் கேட்டார். அதற்குப் பொன்மணித் தட்டார் அரசனை நோக்கி, நம் ஆலயத்திற்கு நேர் வடக்குத் திசையில் ஒரு குளம் வெட்டி, அக்குளத்தின் நடுவில் ஒரு சிறு கோயில் ஒன்று கட்டி, அங்கிருந்து பார்த்தால் பெரிய கோயில் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னான். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றார். அப்படியே மன்னனும் ‘சிவகங்கைத் தீர்த்தம்’ என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித் தட்டார் மொழிந்தவாறு கட்டி முடித்த எட்டாம்நாள் மன்னர் அவர் வீட்டிற்குச் சென்று பொன்மணித் தட்டாரை அழைத்து வந்தார்.

    திருக்கோயிலுக்குச் செல்ல தெப்பம் உள்ளதென அரசன்கூற, அவரோ தண்ணீரின் மேல் நடந்தே சென்று கோயிலினுள் அமர்ந்து அவரின் இதயத்தில் இறைக் காட்சியை எல்லோருக்கும் நல்கி, அக்காட்சியோடு ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரது சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதைக் கண்ட மன்னனும், மற்றவர்களும் வணங்கி இறைவனைக் காணும் பாக்கியத்தை எண்ணி வியந்தனர்.

    இன்றும்கூட பொன்மணித் தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னரே, பெரிய கோயில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இந்த பரம்பரை பழக்கம் ஆயிரம் ஆண்டுகட்கும் மேலாக இன்றுவரை தொடர்கின்றது.

    இச்சிறப்பினை ‘விஸ்வகர்ம பக்தோ பாக்கியானம்’ என்ற பழைய நூலிலும், ‘பொன்மணித் தட்டார் சரித்திரம்’ என்ற நூலிலும் ‘இப்படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்’ என்ற நூல்களிலும் காணலாம்.

    அணுகுமுறை

    ஓர் சிறந்த கட்டிடக் கலைஞர் பல ஆண்டுகளாக ஒரு ஒப்பந்தக்காரரிடம் வேலை செய்து பல கட்டிடங்களை நேர்த்தியாகக் கட்டி முடித்தார். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் தனக்கு வயதாவதை உணர்ந்த அவர், வேலை செய்தது போதும், ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என எண்ணினார். பிறகு தனது கட்டிட முதலாளியிடம் சென்று, தான் வேலையிலிருந்து நிற்க விரும்புவதாகத் தெரிவித்தார். முதலாளியும், அக்கலைஞரின் நிலையை உணர்ந்து அவருக்கு சம்மதம் அளித்தார்.

    ஆனால் முதலாளி அவரிடம், உங்கள் கட்டிடத் திறமையை மதிக்கிறேன். அதனால் கடைசியாக ஒரே ஒரு கட்டிடத்தை மட்டும் கட்டிவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறினார். கட்டிடக் கலைஞரும் ஒப்புக்கொண்டு, ‘நாம் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1