Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Thirumanam
Tamil Thirumanam
Tamil Thirumanam
Ebook159 pages57 minutes

Tamil Thirumanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை என்பது வெறும் ஒரு வரி வார்த்தையல்ல. ஓராயிரம் புதிர்களும், சிக்கல்களும், சந்தேகங்களும் பொதிந்து கிடக்கிற அர்த்தம் நிறைந்தது வாழ்க்கை.

எளிய மொழியியல், அனைவரும் நூலைப் படிக்கவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு, சுருக்கமாகவும் சுவைபடவும், பொழுதுபோக்கிற்காக படிக்கிற நூலாக இல்லாமல், நம் வாழ்வின் பழுதுகளை நீக்கி, சிறந்த வாழ்க்கை அமைய வழிகாட்டுகின்ற நூலை வாசிக்கலாம்

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580147707465
Tamil Thirumanam

Read more from Thanjai Ezhilan

Related to Tamil Thirumanam

Related ebooks

Reviews for Tamil Thirumanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Thirumanam - Thanjai Ezhilan

    https://www.pustaka.co.in

    தமிழ்த் திருமணம்

    Tamil Thirumanam

    Author:

    தஞ்சை எழிலன்

    Thanjai Ezhilan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-ezhilan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இந்நூலாசிரியரின் ‘வாழ்க்கைப் பயணத்திலே’ என்ற நூலைப் பற்றி

    வாழ்க்கை என்பது வெறும் ஒரு வரி வார்த்தையல்ல. ஓராயிரம் புதிர்களும், சிக்கல்களும், சந்தேகங்களும் பொதிந்து கிடக்கிற அர்த்தம் நிறைந்தது வாழ்க்கை.

    எளிய மொழியியல், அனைவரும் நூலைப் படிக்கவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு, சுருக்கமாகவும் சுவைபடவும் எழுதியுள்ளார் தஞ்சை எழிலன்.

    பொழுதுபோக்கிற்காக படிக்கிற நூலாக இல்லாமல், நம் வாழ்வின் பழுதுகளை நீக்கி, சிறந்த வாழ்க்கை அமைய வழிகாட்டுகின்ற நூலைப் படைத்துள்ள தஞ்சை எழிலனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    டாக்டர் மு. ராஜேந்திரன், இ.ஆ.ப.

    வேளாண்மை இயக்குநர், தமிழக அரசு.

    அழகிய பட்டுத்துணி ஒன்றை நெய்வது போன்று மிகத் திறமையாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஒரு சிறந்த உளவியல் நிபுணருடன் அருகமர்ந்து உரையாடிய உணர்வினை நல்குகிறது. இதனை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடிகிறது. தன்னம்பிக்கை நூல்கள் என்னும் பூஞ்சோலையில் பூத்திருக்கும் இந்தப் புதிய மலர் எல்லோர் மனத்தையும் கவரும். இதன் நறுமணம், வாசிப்பவர்களுக்கு இதமான சுக நலன்களை வாரிவழங்கும் என்பது உறுதி.

    கௌதம நீலாம்பரன்

    எழுத்தாளர்.

    வாழ்வில் சோர்வடைந்தவர்கள், தோல்விகளால் துவண்டு போகிறவர்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இந்நூலைப் படித்தாலே போதும் தங்களின் வாழ்க்கைப் பயணம் இன்னும் தொடர்கிறது என்பதை உணர்ந்து தற்கொலை முடிவை மாற்றிக் கொள்வார்கள்.

    வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், அவர்களின் பிரச்சினைகள் என்று அலசி ஆராய்ந்து உளவியல் நோக்கில் தீர்வும் வழங்கும், இந்நூல் படிப்போரை தன்னம்பிக்கைகொள்ள வைக்கிறது.

    குமுதம் வார இதழ் 23.4.2014

    முன்னுரை

    இக்காலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் திருமணங்களில் கலந்துகொள்ளும்போது ஆங்காங்கே காணப்பெறும் சடங்குகளும், சம்பிரதாயங்களும், அதுவும் பல சாதியினர் திருமணங்கள் எப்படி மாற்றம் கொள்கின்றன என்பதை நான் பார்க்க நேருங்கால், இதெல்லாம் பழங்காலத்தில் நம் பழக்கவழக்கமாக எப்படி ஏற்பட்டன? என்று நான் வியந்ததுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில், என்னிடம் குடிகொண்டுள்ள ஓயாமல் வாசிக்கும், தன்மையால் திருமணம் சம்பந்தமாக சில நூல்களை வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட உந்துதல் காரணமாக திருமணம், சடங்குகள், சம்பிரதாயங்கள் சாதியத் திருமணங்கள் போன்ற பொருள் கொண்ட நூல்களையும், பெரியார், அண்ணா, புரட்சிக்கவிஞர் போன்றோர் ஆற்றிய தமிழ் தொண்டினையும் அறிந்த என் மனம் தொடர்ந்து அவர்களது நூல்களையும், மேலும் ம.போ.சி., கி. வீரமணி மற்றும் சிலரது நூல்களையும் படிக்க நேர்ந்தது. தொடர்ந்து இந்நூலுக்கான கருப்பொருளை என் இதயத்தில் கருவாக்கம் செய்து கொண்டேன்.

    தொடர்ந்து உதித்தெழுந்த ஒரு சிறுபொறியே இந்நூல் உருவாக்கத்தில் என்னை ஈடுபட வைத்தது. எனக்கு கிடைத்த விபரங்கள், என்னால் அறியப்பட்ட கருத்துக்கள், நான் வாசித்து பல்வேறு நூல்களில் மூலம் என் மூளையில் பதிந்த சில கருத்துக்களை ஒரு அழகிய பூமாலையாகத் தொகுத்துள்ளேன். இது ஆய்வு நூலும் அல்ல. ஆய்வுக்குரிய நூலும் அல்ல. தமிழ்மக்கள் இம்மாலையை வாங்கி, தங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் ‘வாசித்தல்’ என்னும் இறைவனுக்கு சூட்டி மகிழ வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

    அன்பிலே,

    தஞ்சை எழிலன்.

    பொருளடக்கம்

    1. திருமணம்

    2. குடும்பம்

    3. பலவித திருமணங்கள்

    4. சாதிய அமைப்பு திருமணங்கள்

    5. தொல்காப்பியர் கால திருமணம்

    6. ஆரியர் திருமண முறைகள்

    7. இலக்கியங்களில் திருமணம்

    8. தமிழ்த் திருமணம்

    9. திருமண முறைகள்

    10. சடங்குகள்

    11. தாலி - மங்கலச் சின்னம்

    12. சீர்திருத்தத் திருமணங்கள்

    13. சுயமரியாதை திருமணம்

    14. பதிவுத் திருமணம்

    15. திருமண முறை அன்றும் இன்றும்

    16. பிந்தைய இலக்கியங்களில் திருமண முறை

    17. சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி

    18. பரிசம் போட்ட நிகழ்ச்சி

    19. பெண் கேட்டல் நிகழ்வு

    20. இக்காலத் திருமணங்கள்

    1. திருமணம்

    தோற்றம்

    ‘கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றியவன் தமிழன்’ இயற்கையிலேயே மூன்று பக்கம் கடலும் ஒரு பக்கம் மலையும் தனது வாழ்வெல்லையாகக் கொண்டு வாழ்ந்தவன் தமிழன். ஆதியிலிருந்தே தனது தற்காப்பை மட்டுமே முதல் கடமையாகக் கொண்டு தனித்து வாழ்ந்து வந்தவன் தமிழன். இப்படி தனித்து வாழ்ந்து வருவதுதான் தமிழர்களின் வழக்கமாக அன்று முதல் இருந்து வந்துள்ளது. காலப்போக்கில்தான் கூடி வாழ்தலின் அருமையை உணர்ந்து வாழ முற்பட்டான். அப்படி ஒரு கூட்டு வாழ்க்கை வாழ விரும்பியவன், அதற்கென ஓர் ஆணும் ஓர் பெண்ணும் தேவை என்பதை உணரத் தலைப்பட்டான். அதன்வழித் தொடர்ந்து ஆணும் பெண்ணும் கூடிவாழும் கூட்டு வாழ்க்கைமுறை உருவாயிற்று. சமூகத்தின் அடிப்படை நிலைக்கு நம்மை கொண்டு செல்வது குடும்பம் என்ற அமைப்பு. இந்த வாழ்க்கை வாழ மனமொத்தவர் ஒன்று கூடினர். மனமொத்தவர் ஒன்றுகூடி வாழ்ந்த வாழ்க்கை முறைக்குத்தான், அதன் நடைமுறை வடிவங்களின் வழிவழியாக ‘திருமணம்’ என்று பேர் உண்டாயிற்று. இப்படியாக வழிவழியாக வந்த திருமணம் முறையில் சில பண்பாட்டுக் கூறுகளை வகுத்துக் கொண்டு வாழ முற்பட்டான் தமிழன்.

    ‘குடும்பம்’ அமைவதற்கான பல அமைப்பு முறைகளில், தலையாய இடத்தில் நின்றது ‘திருமணம்’ என்ற அமைப்பு முறையே. ‘குடும்பம்’ என்பது ‘ஒரே கூரையின் கீழ் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு’ என்று நமது குடும்ப அமைப்பு முறைக்கு, ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கொடுக்கின்றது. ஐ.நா. அமைப்புக் கூறும் ‘குடும்பம் வழங்கும் கூரை’ குறித்து எந்த ஐயமும் ஏற்படுவதில்லை. ஆனால் குடும்பம் அந்தக் கூரையோடு மட்டும் அமைந்ததல்ல. அதற்கு மேலும் சுற்றிலும் அமைக்கப்பட்ட எல்லைக் கோடுகளும், மறித்துக் கட்டப்பட்டச் ‘சுவர்’ என்ற அமைப்பும் அடங்கியுள்ளன. இப்படி விளக்கம் பெறுகின்ற குடும்பத்தின் உள்ளார்ந்த அமைப்பாகத்தான் திருமணம் விளங்குகின்றது.

    கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டக் காலத்திலிருந்தே திருமணம் தோன்றியதாகத்தான் தெரிய வருகின்றது. இப்படி ஏற்பட்ட திருமணமோ அல்லது திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்பமோ தற்காலத்தில் காணப்படுகின்ற வடிவ நிலைகளில் இருந்ததாக காணமுடியவில்லை. பாலியல் ஒழுக்கத்தின் தேவை திருமணத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. தமது சந்ததி வழிவழியாக உருப்பெற வேண்டும் என்ற தன் சொந்த நலனே நாளாக நாளாக மேலோங்கி நின்று வந்துள்ளது. மேலும் ‘மணத்துணைப் பரிமாற்றம்’ என்ற பெயரில், திருமணத்திற்கான சில விதிமுறைகளையும், சமூக சம்பிரதாயங்களையும் உருவாக்கிக் கொண்டனர் பண்டைய மக்கள். இப்படி உருவாக்கம் பெற்றவைகளுக்கு எதிர்மறையாக, முரண்படுதல், கட்டுமீறல், உடைத்தெறிதல் மற்றும் ஒத்துப்போதல் என்ற மனித ஆளுமைகள் நிமிர்ந்து நின்று நிலைபெறத் தொடங்கின. இப்படி ஏற்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறை பரிமாணங்களைத்தான் நமது பண்டைய கலை இலக்கியங்கள் கருப்பொருளாக கையாள வழி ஏற்பட்டது.

    வளர்ச்சி

    ஆணும் பெண்ணும் தங்களுக்குள் ஏற்பட்ட உறவின் உந்துதலாக திருமணம் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. பிறகு சமூகத்தின் வளர்ச்சி நிலையின் மூலமாகத்தான் குடும்பம் என்று உருவானது. ஆண் பெண் உறவிலும், குடும்ப உற்பத்தி முறையிலும், உற்பத்தி சக்திகளும் கொண்ட உறவும் இப்படிப்பட்ட சமூகத்தின் அடிப்படை நிலைமையைத் தீர்மானித்து திருமணம் என்பது ஆண் பெண் ஆகியோரது உணர்ச்சிகளின் வடிகால்களாக இல்லாமல் குடும்பத்தின் அமைப்புக்கும், சமூகத்தின் பிணைப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒரே பாலமாக ‘இனவிருத்தி’ என்ற பொருளாதார தளத்திலும் வளர்ந்து வந்துள்ளது.

    ‘இருமணங்களின் இணைப்புதான் திருமணம். இதுதான் சமூகத்தின் முதல் உறவு’ என்று கூறுகின்றார் லிஸரோ என்ற அறிஞர். மேலும் திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற முதல் சமூக பிணைப்பாகும். இது பற்றித்தான், நமது முன்னாள் குடியரசுத்தலைவர், டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் ‘திருமணம்’ என்பது வெறும் இயல்பூக்க விவகாரமன்று, ஆனால் இயல்பூக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நிறுவப்பெற்ற ஓர் ஒழுங்குமுறை. இருவேறு உள்ளங்களின் ஆளுமையும் ஆற்றல்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1