Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kanavugal... Un Kaaladiyil...
En Kanavugal... Un Kaaladiyil...
En Kanavugal... Un Kaaladiyil...
Ebook111 pages36 minutes

En Kanavugal... Un Kaaladiyil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தவனத்தில் மரங்களும் செடிகளும் பல வண்ணப் பூக்களுடன் திகழும் பூஞ்சோலையை காணலாம். அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடும்; மயில்கள் ஆடும்; மான்கள் துள்ளி ஓடும்; கிளிகள் மழலை பேசும்; புறாக்கள் கொஞ்சி முத்தமிடும் கட்சிகளைக் காணலாம்.

ஆசிரியர் அவர்கள் தமிழன்னையின் காலடியில் அவர் காணும் கனாக்களின்கட்டுரை நந்தவனத்தில் அழகு தமிழ் மொழியின் தொன்மையை, உலகின் மூத்த மொழியென விளங்கி தான்பெற்ற திராவிடமொழிகளின் தாய்மையை, பெருமையை, ஆற்றலை, செம்மொழியால் விளையும் கருத்து கருவூலங்களை, அறிவுறுத்தும் அறிவியல் சிந்தனைச் செல்வங்களை, வாழ்வியல் பகுத்தறிவுபோன்ற பலவற்றை நாம் உணரலாம்.தேனருவியை பருகலாம்.

”வாழும் வரை போராடு”, ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”, ”வாழ்க்கை”, ”சிகரங்கள்….சாதனைகள்”….போன்ற கட்டுரைகள் உணர்த்துவதும் அதுவே. "நிலையற்ற வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும், நிலையான புகழையும் தேடு" என்பதையே கவியரசு கண்ணதாசன் உணர்த்துகிறார்.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580178311025
En Kanavugal... Un Kaaladiyil...

Read more from Rajakai Nilavan

Related to En Kanavugal... Un Kaaladiyil...

Related ebooks

Reviews for En Kanavugal... Un Kaaladiyil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kanavugal... Un Kaaladiyil... - Rajakai Nilavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என் கனவுகள்... உன் காலடியில்...

    (கட்டுரைகளின் நந்தவனம்)

    En Kanavugal... Un Kaaladiyil...

    Author:

    இரஜகை நிலவன்

    Rajakai Nilavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajakai-nilavan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை!!!

    நூலை எழுதியவரைப்பற்றி...

    தேவ நேய பாவணர் எழுதிய மொழி நூற்கட்டுரைகள்

    வான் சிறப்பு!

    உன் காலடியில் என் கனவுகள்

    சித்தர் இலக்கியங்கள்

    தீவிரவாதம் தேவையா?

    பெருந்தலைவர் காமராஜரும் அவருடைய ஆட்சியும்...

    அழகு என்பது?...

    வாழும் வரை போராடு

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...

    வாழ்க்கை!?

    சிகரங்கள்... சாதனைகள்... !!!

    உயிர்த்தெழுந்தார் தேவ மைந்தன்

    என் வாசிப்பின் நேசத்திற்கு...

    என் கட்டுரைகளை வாசிப்பதற்காக...

    என் நூலைத் (என் கனாக்கள்... உன் காலடியில் என்னும் கட்டுரைகளின் நந்தவனம்)

    தேடிய அன்பு வாசகருக்கு...

    என் கனவுகளைத் தேடிய நேசத்திற்கு...

    கட்டுரை என்பது என்ன? கருத்துக்களின் உரையா? உரையின் கட்டுக்களா? கட்டுக் கட்டான உரைகளின் வெளிப்பாடா? என்று எனக்குள் தேடிக்கொண்டிருக்கும் போது, தான்...

    "பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.

    கா. சிவத்தம்பி என்பவர் கட்டுரை ( ஒலிப்பு (உதவி·தகவல்)) பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம் என்றும், விவாதித்து விபரிப்பதே அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார்.

    க. சொக்கலிங்கம் என்பவர் ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.

    கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் கட்டுரை கோவை என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல் (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும்."

    என்பதைப் புரிந்து கொண்டு அதன் வழியாக, என் கட்டுரைகளை

    உங்களுக்குத் தந்துள்ளேன்.

    இக்கட்டுரை (விதை) களை வாசித்து விட்டு எனக்கு கடும் விமர்சனம் தந்தாலும்... இல்லையெனில் எனக்கு முதுகில் ஒரு தட்டு தந்தாலும்... அல்லது எனக்கு சாமரம் வீசும் வாழ்த்து தந்திடினும்... இல்லையெனில் தலை மீது வீங்குமளவிற்கு குட்டுக்

    கொடுத்தாலும்... கண்டிப்பாக... மிகக்கண்டிப்பாக... மகிழ்வே

    ஆம்... நாமெல்லாம் முதலில் வாழக்கற்றுக்கொள்வோம்...

    ஆனால் நான் கற்றுத்தர வரவில்லை...

    உங்களுக்குத் தெரிந்த நதியின் கரை வழியே... முதலில் வாழ்க்கற்றுக்கொள்ளுங்கள்... எனச்சொல்லி்க்கொண்டே...

    இந்த நூலுக்கு அழகிய அட்டை பட அமைப்பினை அமைத்து தந்த

    அன்பர் திரு. வே. சதானந்திற்கும், ஆருயிர் நண்பர் திரு. அ. வேலையா, சகோதரி திருமதி. கீதாவேலையா, திரு. கார்த்திக் வேலையா அவர்களுக்கும், பல கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும் பலகோடி நன்றிகள்.

    மேலும் உங்கள் கைகளில் இப்புத்தகம் இத்துணை அழகாக தவழ, நட்புடன் உதவிய என் மூத்த தலைமுறை

    திரு.பிலிப் வினிங்ஸ்டன் (பொறியாளர்) அவர்களுக்கும் கோடி கோடி நன்றிகள்.

    உங்கள் நாள் நல்ல நாளாக மாறிட...

    வாழ்த்துக்கள்... மகிழ்ச்சிகள்... சிறப்புக்கள்... இறைவனுக்கு நன்றிகள்...

    என்றென்றும் நேசங்களுடன்,

    உங்கள்

    தமிழ் முகில்

    இரஜகை நிலவன்

    (பிலிப் ஜார்ஜ் சந்திரன்)

    உதவித்தலைவர்.,

    மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்.

    அலைபேசி : +91 9920454827

    ஈ மெயில்: George.chandran@nilavanlpl.com

    George.chandran1@gmail.com

    அணிந்துரை

    கவிச்சிகரம் ஐயா இரஜகை நிலவன் எழுதிய கட்டுரைகளின் நந்தவனத் தொகுப்பில் முதல் மலராக மலர்ந்து மணம் வீசிக் கொணடிருப்பது, ஆசான் தேவநேய பாவாணர் எழுதிய மொழி நூற்கட்டுரைகள். ஏறத்தாழ கிமு9-ம் நூற்றாண்டிலிருந்து தமிழ்ச் சங்கங்கள் அமைத்து, தொடர்ந்து தமிழ் இலக்கியங்களை படைத்து வந்தவர்கள் மூத்தகுடி திராவிடத் தமிழர்கள். கடற்கோள்களால் அடுத்தடுத்து தமிழ் இலக்கியங்கள் அழிந்தும், மனந்தளராது, தமிழ்தாய்மீது கொண்ட பற்றினால் தொடர்ந்து சேவைசெய்து வந்தார்கள் என்பது சரித்திரம். நம் மூத்த குடிகளின் மூத்த மொழியின் வேர்கள் உலகெங்கும் காணக் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சொல்லின் குறி, பொருள், செயல் சார்ந்து ஒலிக்கப்படுதல் அம்மொழியின் ஆழமான வேர்களை உணர்ந்து கண்டறிய உதவும் சிறப்பம்ச மாகும். இதற்காண ஆராய்ச்சியில் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர்தான் நமது தாத்தா தேவநேயப் பாவாணர்.

    நமது சங்க இலக்கியங்கள் பல்லாயிர மாண்டுகள் முன்பிருந்தே, திராவிடரின் கல்விச் செழிப்பை, நாகரீகத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. காகிதம் கண்டறியா அந்த நாட்களில் தமது மொழிச் செழிப்பை, இலக்கிய வளத்தை ஓலையில் காத்து வந்தார்கள். அன்று அவர்படைத்த இலக்கிய வரைமுறைதான் இன்றும் மாறாமல் செழிப்பேற்றிக் கொண்டிருக்கிற தென்றால், அதுநம் மொழியின் தொன்மையையும், வளத்தையும், நாகரீக வளர்ச்சியையும் தெளிவுபடச் சொல்கிறது. இலக்கணம் பாக்களின் அடிகளில் இசையின் ஓசை அலைகளைப் பாய்ச்சி இனிமை சேர்க்கிற தென்றால், அவை எத்தனை மேன்மையான கட்டமைப்புக்களைக் கொண்டதாக இந்திரு க்க வேண்டும். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட நமது தாய்த்தமிழை அறியாது கிடந்த உலகத்தை, தமது ஒப்பியல் கட்டுரைகள் வழியாக, அதன் உறக்கத்திலிருந்து தட்டி யெழுப்பி, தனித்தமிழை அரங்கேற்றம்

    Enjoying the preview?
    Page 1 of 1