Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkai Thedum Idhayangal
Ilakkai Thedum Idhayangal
Ilakkai Thedum Idhayangal
Ebook179 pages1 hour

Ilakkai Thedum Idhayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கியம் என்பது எது இலக்கு எனத் தேடுவது என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் அப்படி இந்த சமுதாயத்தின் முன்னேற நமக்கு ஒரு இலக்கு தேவை அந்த இலக்கை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்க வேண்டும் அப்படி பெறவே இந்த நூல் உங்களுக்கு வழிகாட்டியாய் அமையும் என எழுதி இருக்கிறேன்.

ஒவ்வொரு இதயமும் தனக்கான இலக்கை தேட வேண்டும் அதற்கு மூளைக்கும் முயற்சிக்கும் முடிச்சு போட வேண்டும் அந்த முடிச்சு தான் நாம் முன்னேறுவதற்கான இலக்கு என்பதை உலக அரங்குக்கு சொல்வதற்கான நோக்கம் தான் இந்த நூல்.

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580170610298
Ilakkai Thedum Idhayangal

Read more from Munaivar Idayageetham Ramanujam

Related to Ilakkai Thedum Idhayangal

Related ebooks

Reviews for Ilakkai Thedum Idhayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkai Thedum Idhayangal - Munaivar Idayageetham Ramanujam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலக்கைத் தேடும் இதயங்கள்

    (உளவியல் உயர்வுக் கட்டுரைகள்)

    Ilakkai Thedum Idhayangal

    Author:

    முனைவர் இதயகீதம் இராமானுஜம்

    Munaivar Idayageetham Ramanujam
    For more books

    https://www.pustaka.co.in/home/author/munaivar-idayageetham-ramanujam

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    என்னுரை

    1. மாற்றமே ஏற்றம் தரும்!

    2. திருக்குறளில் முயற்சி

    3. பூமியின் பொலிவும், பூகோள அழிவும்

    4. பெண்ணுக்கு காவல் எங்கே?

    5. நீதித் துறையின் சிக்கல்களும் தீர்வுகளும்

    6. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களும் - தீர்வுகளும்

    7. சங்க இலக்கியத்தில் மகளிர்

    8. மலேசியத் தமிழ் அறிஞர்களின் தமிழ்த் தொண்டு

    9. மலேசியத் தமிழ் இலக்கியங்கள்

    10. திருக்குறளில் பண்புடைமை

    11. பாவேந்தரின் தேசிய சிந்தனைகள்

    12. ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி காட்டும் மேம்பாடு

    13. ‘தரம்’ என்னும் ஓட்டத்திற்கு முடிவே இல்லை

    14. உலகச் சந்தைக்கு வடம் பிடி

    15. தரமே நமக்கு வரம்

    16. பாரதி சொன்ன பயன்தரும் வழிகள்...

    17. அறிவியல் பார்வையில் அருள்மிகு வீரபத்திரர்

    18. தமிழ் மணக்கும் மலேசியா

    19. சிந்தனையைத் தூண்டும் சிற்றிலக்கியங்கள்

    20. இனியொரு விதி செய்வோம்

    21. 2020 - இந்தியா

    22. இயற்கையும் இலக்கியமும்

    23. ஓலைச்சுவடிகள் வழங்கிய இலக்கியங்கள்

    வாழ்த்துரை

    முனைவர் இதயகீதம் இராமானுஜம் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பான இலக்கைத் தேடும் இதயங்கள் எனும் நூல். எளிய நடையில், எண்ணத்தின் உந்து சக்தி, முயற்சியுடனான நம்பிக்கை, சுற்றுச்சூழல், பாதுகாத்தல் போன்ற மேலாண்மைத் தத்துவக் கருத்துகளுடன். சமூகச் சிந்தனையுடனான பெண்மையைப் போற்றுதல், பெண்டிர் போற்ற வேண்டிய மாண்புகள், நீதியும் காவலும் ஒருங்கிணைந்திருத்தலின் அவசியம் பற்றியும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    மேலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் அவலநிலை. மலேசியத் தமிழரின் மொழி போற்றும் மாண்பு. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தரமிகு உற்பத்தியின் அவசியம். ஓலைச்சுவடிகள் அளித்த ஓங்கு தமிழ்ச் செல்வம் மற்றும் பாவேந்தர் முதல் கண்ணதாசன் வரை அவரை ஈர்த்த உன்னதத் தமிழர்களின் படைப்புகளைப் பற்றிய உவப்பு எனப் பல்வேறு கருத்துகளும் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் அறநெறி, அரசியல், ஆன்மிகம். இலக்கியம், ஈழம் உள்ளிட்ட உலகத் தமிழரின் ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து ஆசிரியரின் எண்ணங்கள் மற்றும் ஏக்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பு படிப்போர்க்கு நற்சிந்தனையைத் தூண்டும் என்பது திண்ணம்.

    மைதிலி க. ராஜேந்திரன், இ.ஆ.ப.

    அணிந்துரை

    கௌதம நீலாம்பரன்

    தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்ற எழுத்தாளர்

    கட்டுரை நூல்களைப் பொதுவாகக் கனிச்சாற்றுடனோ, கன்னல் சுவைத் தேனுடனோ ஒப்பிடுவது மரபு. பல்வேறு கனிகளிலிருந்து பிழிந்து எடுக்கப்பெற்ற பிழிவு எவ்வளவு சுவையானதோ, எவ்வளவு உயர்வான வலிமையை நமக்கு நல்குமோ அவ்வாறான சுவை தந்து, நம் அறிவை வலிவூட்டுவது கட்டுரை நூல்கள்.

    தேன் எவ்வாறு எண்ணற்ற மலர்களினின்று சேகரிக்க பெற்றதாகத் திகழ்கிறதோ, அவ்வாறே ஒவ்வொரு கட்டுரையும் பல்வேறு இலக்கிய நூல்களின் சாராம்சமாகத் திகழ்கிறது. அத்துடன் அதை எழுதுபவனின் பட்டறிவும், வாழ்வியல் அனுபவங்களும் நுண்மாண் நுழைபுல ஆற்றலும் ஒருங்கமையப் பெற்று, அக்கட்டுரை பொருட்செறிவு மிக்கதாக வடிவம் கொள்கின்றது. எனவே இலக்கிய உத்திகளில் கட்டுரை நூல்கள் படைப்பது என்பது தனிச் சிறப்பு மிக்க இடம் பெற்று ஒளிர்கின்றது.

    ‘இதயகீதம்’ இராமானுஜம் முயன்று கற்று, முனைவர் பட்டம் பெற்றவர். தாம் கற்ற இலக்கிய நூல்களின் பிழிவைத் தமது அலுவலகப் பணியின் அனுபவச் சிறப்புகளுடன் குழைத்து, ‘இலக்கைத் தேடும் இதயங்கள்’ என்னும் இக்கட்டுரை நூலை எழுதியுள்ளார். இதன்கண் இருபத்து மூன்று எழிலார்ந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் கற்கண்டாய், தேன்பாகாய் இனிப்பதுடன், இலக்கிய நயம் சிறப்பதாகவும் அமைந்துள்ளன.

    ‘இலக்கு’ என்பதை அடித்தளமாகக் கொண்டே ‘இலக்கியம்’ என்னும் சொல் பிறந்தது என்பர் ஆன்றோர். வாழ்வை வெற்றிகரமானதாக அமைத்துக் கொள்ள எண்ணும் எந்த மனிதனுக்கும் ஓர் இலக்கு குறிக்கோள் இருந்தாக வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். அந்த இலக்கு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதைப் பலருடைய வாழ்க்கை நிகழ்வுகளின் அடித்தள அடையாளங்களுடன் எடுத்துரைப்பதே இலக்கியமாக உருப்பெற்று விடுகிறது.

    நல்ல வாழ்வை அடைய விரும்புகிற ஒரு மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை விவரிக்கவே நீதி நூல்களும், இலக்கியங்களும் எழுதப் பெற்றிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் கற்கிறானா, கற்கும் வாய்ப்பு வாழ்வில் அமைகிறதா என்பது ‘தவுசன் டாலர் கேள்விக்குறி’ என்பார்களே, அவ்வகையிலான ஒரு கேள்விக் குறியாகவே இருக்கிறது. அதே சமயம், நம்மிடம் எத்தகு சிறப்புமிக்க இலக்கியநூல்கள் எல்லாம் இருக்கின்றன என்கிற செய்தியையாவது ஒவ்வொருவரும் அறிந்தாக வேண்டியது அவசியம். இந்த ஊரில் இந்தச் சிறப்புகள் இருக்கின்றன என்று தெரிந்தால் தானே நாம் அந்த ஊருக்குச் சுற்றுலா சென்று வரமுடியும்? அதே போன்று இன்னின்ன நூல்களில் இன்னின்ன சிறப்புகள் உள்ளன என்பதை நாம் அறிந்தால்தானே அந்த நூல் பற்றிய தேடலையாவது தொடங்க முடியும்? அப்படிப்பட்ட தேடலை நம்முள் விதைப்பதுதான் இதுபோன்ற அறிஞர்களின் கட்டுரை நூல்கள் செய்கின்ற உயரிய பணியாக இருக்கின்றது.

    இதயகீதம் இராமானுஜம், அப்படிப்பட்ட ஓர் அறிஞர் என்பது மிகையல்ல, இவர் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர். ‘முனைவர்’ என்கிற ‘டாக்டர்’ பட்டம் ‘அறிஞர்’ என்னும் பொருளை உடையதே. இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திலும் பொதுச்செயலாளர் என்னும் முக்கியப் பொறுப்பை வகிப்பவர்.

    சிறந்த கவிஞராகவும், உயரிய பேச்சாளராகவும் திகழ்பவர். பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இவர் ஆற்றிய உரைகளை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பரோபகார உள்ளமுடையவர். ஒரு கவிஞரையோ, ஓர் எழுத்தாளரையோ மேடைகளில் அறிமுகம் செய்கிறபோது, வஞ்சனையின்றி வாயார, மனமார வாழ்த்திப் பேசுவதில் இவருடைய பரந்த மனப்பான்மை வெளிப்படும். இந்தக் கட்டுரை நூலில் கூட, ‘மலேசியத் தமிழறிஞர்களின் தமிழ்த்தொண்டு’, ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’, ‘தமிழ் மணக்கும் மலேசியா’ ஆகிய கட்டுரைகளில், அவ்வாறு புலம்பெயர்ந்து, மலேசிய மண்ணில் வாழும் பல அறிஞர் பெருமக்களையும், கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் விரிவாகச் சிலாகித்து எழுதியுள்ளார்.

    ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள், படைப்பாளர்கள், கலைஞர்கள் விஷயத்திலும் இது மிகமிகப் பொருந்தும், ‘தமிழ்ப் படைப்பாளிகள் பிற மொழிப் படைப்பாளிகளைப் போன்று, பரந்த மனத்துடன் ஒருவரையொருவர் பாராட்டுவதில்லை’ என்றொரு கருத்து, குற்றச்சாட்டு போல சிலரால் சொல்லப்படுவதுண்டு. அப்பழி அர்த்தமற்றது என நிரூபிப்பதைப் போன்று, இதயகீதம் இராமானுஜம் இந்நூலில் மலையகத் தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அடேயப்பா! அங்கு இவ்வளவு பேர், இவ்வளவு தமிழ்ச் சாதனைகள் புரிந்துள்ளனரா? என்றெண்ணிப் பெருமைப்பட வைக்கிறது இக்கட்டுரைகள்.

    சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை என்பார்களே, அவ்வகையில் மாந்தரினத்தை ஊக்கமூட்டும் வகையில் சிலகட்டுரைகள் அமைந்துள்ளன. நிர்வாகவியல், வணிகநோக்கில் வெற்றிபெறும் வழிகள், நேர நிர்வாகம், பொருள்களின் தரநிர்ணயம், தொழிலாளர் ஒற்றுமை, பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்பு பற்றிய நுட்பங்கள் என அருமையான தகவல் திரட்டாக மிளிர்கின்றன சில கட்டுரைகள். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘வளையாபதி’ பற்றி மிகச்சிறப்பாக ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கிய மேம்பாடுகள் பற்றிப் பேசுகிறார். திருக்குறள் மேற்கோள்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகிறார். சிற்றிலக்கியங்கள் பற்றியும், பாரதி, பாவேந்தர் பெருமைகள் பற்றியும் பரவலாக எடுத்துரைக்கிறார். குறவஞ்சி, பள்ளு, பரணி இலக்கியங்களைப் பேசுகிறார். தாராபாரதி போன்ற நம் சமகாலப் படைப்பாளிகளின் ஒப்பரிய கருத்துகளையும் ஆங்காங்கே எடுத்துப் பதித்துள்ளார். இவையெல்லாம் இவரது வாசிப்பின் நேசிப்பை - ஆழமான உலகப் பார்வையை நமக்கு வெளிச்சமிடுவதாக இருக்கின்றன.

    பவராக இருப்பினும் தமிழன் எழுத்தாளனாக இருப்பினும் சரி, அன்றி யாதேனும் தொழில் புரி சரி, அவனுக்காக ஆயிரமாயிரம் நற்செய்திகளைக் கூறி, நம்பிக்கைத் தூணை நிலைநாட்டுகிறார். இந்தியத்தேரை உலகச் சந்தையெல்லாம் இழுத்துச் செல்ல புதிய சபதத்தை மந்திரமாக உச்சரியுங்கள். நேற்றுவரை சோம்பித் திரிந்தவர்கள் எல்லாம் உங்கள் மந்திர முழக்கம் கேட்டு விழித்து எழட்டும்’ என இளைஞர் உலகுக்கு அழைப்புக் குரலை அறை கூவல் குரலாக விடுக்கிறார். 2020-ல் இந்திய தேசம் உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ உழைப்பால் உயர்ந்த தேசமாகத் திகழ, அறிஞர் அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேற இக்கட்டுரை நூல் எண்ணற்ற வழிமுறைகளைச் சொல்லும் வழிகாட்டு நூலாக அமைந்துள்ளது. அரசு நூலகங்களில் மட்டுமல்லாது, தனியார் நூலகங்களிலும் இடம் பெற வேண்டிய அரிய நூல் இது. வளரும் தலைமுறை இளைஞர் ஒவ்வொருவர் கையிலும் தவழ வேண்டிய நூலும் கூட என்பதை நான் உறுதிபட முன்மொழிகின்றேன்.

    - கௌதம நீலாம்பரன்

    (தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்ற எழுத்தாளர்)

    என்னுரை

    இசையில்லாத ராகங்களை யாரும் ரசிப்பதில்லை;

    உயிரில்லாத உடலை யாரும் நேசிப்பதில்லை;

    சுவாசம் இல்லாத இதயங்கள் என்றும் இயங்குவதில்லை.

    மானுட வாழ்க்கை என்பது, பிறப்போடும், இறப்போடும் மட்டும் முடிவதில்லை. இதற்கு இரண்டுக்கும் நடுவில் சிறப்போடு வாழ்வதில்தான் இருக்கிறது.

    அதற்காகத்தான் ஒவ்வொரு இதயமும் இலக்கைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது.

    நதிகள் ஓடினால் நாட்டுக்கு நல்லது. அது நின்று விட்டால் சாக்கடையாய்ச் சலனமின்றி மாறி விடுகிறது. அதைப் போலத்தான், ஒவ்வொரு மனிதனும் இலக்கைத் தேடி ஓடுகிறபோது, அவன் வலிமையும் ஆற்றலும், வீரமும், விவேகமும், நேயமும், சமூகதாகமும் மிக்கவனாக இருக்கிறான். அதிலிருந்து அவன் மாறுபடுகிறபோதுதான் தோல்வியின் மடியில் துவண்டு போகிறான். ஏமாற்றத்தின் சிக்கலில் அடங்கிப்போகிறான்.

    Enjoying the preview?
    Page 1 of 1