Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - September 2018
Kanaiyazhi - September 2018
Kanaiyazhi - September 2018
Ebook206 pages1 hour

Kanaiyazhi - September 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

September month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109503409
Kanaiyazhi - September 2018

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - September 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - September 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - September 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, செப்டம்பர் 2018

    மலர்: 53 இதழ்: 04 செப்டம்பர் 2018

    Kanaiyazhi September 2018

    Malar: 53 Idhazh: 04 September 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, செப்டம்பர் 2018

    தலையங்கம் - ம.ரா.

    பிரிந்தே இருந்தாலும்பூமியை விட்டுவிடுவதில்லைசூரியன்!நம்பியிருந்த சூரியன்கிழக்கில் அடக்கமான பின்னரும்பயணம் தொடரத்தந்திருக்கிறது வெளிச்சம்!கலைஞர் அவர்களின் மறைவுஉருவாக்கியிருப்பது வெற்றிடத்தையல்ல.தலைமை என்பதுமனதளவிலும் சமுதாய அளவிலும்மாற்றம் தரும் நம்பிக்கை!தலைமை என்பதுஉருவாக்கப்படுவதுதான்.ஆம்! நம்பிக்கையால் உருவாக்கப்படுவது..மாற்றங்களை மக்கள் மனதில்ஏற்கச் செய்வது!.மக்களின் வாழ்க்கைப் போக்குக்குவாழ்த்துப்பா இசைக்காமல்அவர்கள்வாழ்க்கையை மாற்றும்வழியைக் காட்டுவது.ஒருவகையில் அது சர்வாதிகாரம்தான்.கலைஞர்பெரியாரைப்போலக்கொள்கையில் சர்வாதிகாரிஅறிஞர் அண்ணாவைப் போலநடைமுறையில் ஜனநாயக வாதி!1952 இல் பராசக்திவிடுதலை அடைந்து ஐந்தே ஆண்டுகள்மக்கள் மனதில் அணைந்து கொண்டிருந்தசுதந்திர நெருப்பிலிருந்தேபகுத்தறிவு வெளிச்சத்தைப் பற்ற வைக்கிறார்.பெரும்பாலான மக்களை நம்பிஎடுக்கப்படும் திரைப்படத்தில்பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைமாற்றும் விதத்தில் வசனங்கள்!

    அரசமைப்புச் சட்டம் ஆதரவாக இருந்தும்அனைத்து இந்தியாவும் அமைதி காத்த போதும்இந்திக்குத் தமிழ் நாட்டில் இடமில்லை என்றுஇந்தி எதிர்ப்பில் இவர் காட்டியதீவிர நெருப்புக்குப் பயந்து கிடக்கிறதுஇப்போதும் இந்தி ஆதிக்கம்!

    சிந்தனையை மட்டும் நம்பிமக்கள் ஆதரவைப் பொருட்டாக நினைக்காதகருத்துலகச் சர்வாதிகாரியாக இல்லாமல்கொள்கைச் சர்வாதிகாரியாக நின்றுஜனநாயகம் வழங்கிய உரிமைகளில்நடைமுறைப்படுத்திக் காட்டியவர்!ஜனநாயகத்தைக் காப்பாற்றும்சர்வாதிகாரியாக இருந்தவர்!கலைஞரின்கொள்கைச் சர்வாதிகாரத்துக்கும்நடைமுறை ஜனநாயகத்துக்கும்இந்திய மக்களும் உலகத் தமிழர்களும்தலைவணங்கி இருக்கிறார்கள்!பேச்சை நிறுத்திக் கொண்டுவிமரிசித்தவர்களையும்கலங்க வைத்திருக்கிறார்.திருவாரூர்ப் பள்ளியில்தொடங்கிய போராட்டத்தைஅண்ணா நினைவிடத்தில்முடித்துக் கொண்டிருக்கிறார்.!சாதி, மதம், அரசியல் கடந்துநேசிக்கத் தக்கஒரு தலைவர் இருந்ததையும்அப்படி நேசிக்கும்மக்கள் இருப்பதையும்மறைவின் மூலம் காட்டியிருக்கிறார்.

    தலைமை என்பதுமறைவுக்குப் பின்னரும்வழிகாட்ட வேண்டும்!அறிஞர் அண்ணா மறைந்ததும்அரசின் அறிவிப்பில்தற்காலிக முதல்வராக நாவலர்.துக்கத்துக்குப் பிறகுசட்டமன்ற உறுப்பினர்கள் கூடிதற்காலிக முதல்வரைத் தலைவராகத்தேர்ந்தெடுப்பார்கள் என்றும்அவரையே கட்சியும் மக்களும்அங்கீகரிப்பார்கள் என்றும்தமிழகம் எதிர்பார்த்திருந்தது.இராசாசி அரங்கில்அண்ணாவின் உடல்!சோகத்தில் கிடந்த மக்களின் மனதில்கலைஞரின் கண்ணீரோடுஎம் அண்ணா! இதய மன்னா! கவிதாஞ்சலி!வானொலி கேட்டுக்கண்ணீரில் மிதந்தது தமிழகம்!அந்த நிமிடங்களில்தான்கட்சி கடந்து மக்கள் மனதில்கலைஞர் தலைவராகியஇரசவாதம் நடந்தது.

    காவேரி மருத்துவமனையில்கலைஞரின் இறுதி நிமிடங்கள்!அப்பா என்று இப்போதாவது ஒருமுறைஅழைக்கட்டுமா தலைவரே என்றவர்முதலமைச்சர் வீட்டுக்கேகுடும்பத்தோடு போகிறார்.அறிஞர் அண்ணா நினைவிடத்தில்கலைஞருக்கு இடம் கேட்கிறார்;போயிருக்கக் கூடாது என்றுபொதுமக்களும் வருத்தப்படுகிறார்கள்.ஆனாலும் அவர் போனார்..

    கலைஞர் மறைகிறார்.சோகத்தில் உறைந்து கிடக்கிறது தமிழகம்.ஊடகங்களில் அரசின் செய்திக் குறிப்பு.அண்ணா நினைவிடம்கலைஞருக்கு மறுக்கப்படுகிறது.கட்சி கடந்து பொதுமக்களும்ஆளும் கட்சியின் அரசியல் பார்த்துஅருவருப்பு அடைகிறார்கள்.தி.மு.க.வின் கோபம்வெறுப்பாகி விரக்திக்குப் போகிறது.எப்போது பற்றிக் கொள்ளலாம் எனும்கொந்தளிப்பின் கொதிநிலையில்ஒரு தீப்பொறிக்காகக்காத்துக் கிடக்கிறது தமிழகம்!ஒருவேளை கலைஞருக்குஇடம் பெறமுடியாமல் போயிருந்தால்அப்பாவிப் பொதுமக்கள் திண்டாடி இருப்பார்கள்!கட்டுப்படுத்த முடியாதவர்கள்தூண்டி விட்டார்கள் என்று தி.மு.க. மீதுகுற்றம் சாட்டி இருக்கலாம்.!.நல்ல வேளைநீதிமன்றத் தீர்ப்பு வருகிறது!வெறுப்பும் விரக்தியும் சோகமும்குழம்பிய மனதில் வெற்றிப் பெருமிதம்!போராட்ட வியர்வைகண்களில் வெடிக்கிறது!கட்டுப்படுத்த முடியாமல்கைகளைக் கூப்பிக் கும்பிட்டுக் கதறுகிறார்.பார்த்தவர்கள் மனதில்கண்ணீரில் நிமிடங்கள் கரைகின்றன!அப்போதும்ஒரு இரசவாதம் நடக்கிறது!அதுவரை தி.மு.க.வின்செயல்தலைவராக இருந்தவர்அந்த நிமிடங்களில்தலைவராகிறார்.

    கலைஞர் மறைந்ததிகைப்பின் பெருவெளியில்திசைகாட்டும் சூரியனைவாழ்த்துகிறது கணையாழி!

    அன்புடன் ம.ரா

    ***

    பொருளடக்கம்

    கலைஞர் உரை

    கட்டுரை - கலாப்ரியா

    கட்டுரை - உல்ரிக் நிக்லஸ்

    கவிதை - இலக்கியா நடராஜன்

    கட்டுரை-வ.ஜெயதேவன்

    எதிர்வினை-பொன்மணி

    கட்டுரை - சா.கந்தசாமி

    சிறுகதை - சி.எம்.முத்து

    கட்டுரை - ஓவியர் சந்ரு

    கவிதை - ஹரணி

    சிறுகதை - வைதீஸ்வரன்

    கவிதை - பாவலர் கருமலை பழம் நீ

    ஏன் எழுதினேன்?- ஆத்மார்த்தி

    கட்டுரை- சுனில் கிருஷ்ணன்

    சிறுகதை - ஸிந்துஜா

    கவிதை - காரைகுடி சாதிக்

    எதிர்வினை-பேராசிரியர் க.நெடுஞ்செழியன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    கலைஞர் உரை

    ஆய்வரங்கத் தொடக்கவிழாச் சிறப்புரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்

    மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் நேற்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டம் இன்று தொடங்குகிறது. இது வெறும் அடுத்த கட்டம் மட்டுமல்ல; அவசியமான கட்டம்; அன்னைத் தமிழுக்கு அரிய பயன்தரும் கட்டம்; மாநாட்டின் ஆருயிர் போன்ற கட்டமாகும். இன்றிலிருந்து தொடங்கி, நான்கு நாட்களுக்கு நடைபெறப்போகும் ஆய்வரங்கங்களின் மூலம்தான் – தமிழ்மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும்; அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து, 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துரைகளையும் நாம் பெற இருக்கின்றோம்.

    இங்கு நடைபெறவுள்ள ஆய்வரங்கிலும், இணையத் தமிழ் மாநாட்டிலும் பங்கு கொள்ள வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்பையும், நன்றியையும், வரவேற்பையும், பாராட்டையும் முதற்கண் தெரிவித்துக் கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.

    தமிழ்மொழி – தமிழர் பண்பாடு – நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் என்னாலே காண முடிகிறது. ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது எனக்குப் புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

    ஆய்வரங்குகளில், கட்டுரையாளர்கள் யாராயினும் தாங்கள் எடுத்த முடிவுகளே முடிந்த முடிவுகள் என்று எதிர்பார்ப்பதும், வலியுறுத்துவதும் எவ்வித நன்மையும் பயக்காது என்பது என் கருத்து. ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச் சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின் பணியாகும். தங்களையொத்த அறிஞர்களின் முன்னிலையில் தாங்கள் அறிந்தவற்றை எடுத்துக்கூறி, எந்த அளவு தங்கள் கருத்து அவர்கள் கருத்தோடு ஒத்துப்போகிறது – எந்த அளவு வேறுபடுகிறது என்று அறிந்து, மேலும் அது குறித்த விவாதத்திற்கும், சிந்தனைக்கும் வழிவகுத்திட வேண்டும். இத்தகைய ஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன், ஆய்வறிஞர்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை வழங்கிட வேண்டும். ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

    கொல்கத்தாவில் ஆசியக் கழகம் வழி 1786இல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816இல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856இல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர். இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம், அக்குடும்பத்தின் முதன்மை மொழி தமிழ் என்னும் உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.

    1972இல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது. அதன்பின், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும், அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள். இவற்றின் காரணமாக உலக அறிஞர்கள் செம்மொழி எனத் தமிழை மதிக்கத் தொடங்கினர்.

    உலக அறிஞர்களால் செம்மொழியென மதித்துப் போற்றப்பட்ட தமிழ்மொழி, ஒரு நூற்றாண்டுக் காலத் தொடர் போராட்டத்திற்குப் பிறகே, அதன் தாயகத்தில் செம்மொழி என அங்கீகாரப் பிரகடனம் பெற முடிந்தது. தமிழ்மொழிக்கு, செம்மொழித் தகுதி கோரி முயற்சியெடுத்த ஒவ்வொருவருக்கும், செம்மொழியென அறிவிக்கை செய்ய நடவடிக்கை எடுத்த ஒவ்வொருவருக்கும் இந்த மாநாட்டின் வாயிலாக எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிரேக்கம், இலத்தீன், தமிழ், ஹீப்ரு, அரபு, சீனம், சமஸ்கிருதம் ஆகிய ஏழும் இவ்வரிசை முறையிலேயே உலகப் பெருஞ்செம்மொழிகளாக மதிக்கப்படுகின்றன. ஆயினும் அவற்றுள் தமிழ் தனிப்பெருஞ்சிறப்புடையது.

    உலகத்தின் மிகத் தொன்மையான இனம் தமிழ் இனம். தமிழர் நாகரிகம் உலகளாவிய சிறந்த நாகரிகம். தமிழ் இலக்கியத்தின் வரலாறு மறைந்த குமரிக் கண்டத்திலிருந்து தொடங்குகிறது. குமரிக் கண்டத்தில் முதல் தமிழ்ச் சங்கம் இருந்ததென்றும், அதன் காலம் கி.மு.8000 என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். குமரிக் கண்டத்தின் மறைவு பற்றிக் கலித்தொகையும், சிலப்பதிகாரமும் குறிப்பிட்டுள்ளன. திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

    இரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார்.

    சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்தியத் திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர் தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வன்மையாக வாதிட்டு நிலை நாட்டுகிறார்.

    காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிடமொழிப் பிரிவின் கிளைமொழியைப் பேசுகின்றனர்.

    பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் ‘குருக்கர்’ என்போர் திராவிட மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.

    இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்கே.சட்டர்ஜி இந்தோ-ஆரியன்-இந்து என்ற நூலில் எழுதியுள்ளார்.

    அரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு திராவிட வழிபாடேயாகும்.

    அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.

    ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.

    சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமைமிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத்

    Enjoying the preview?
    Page 1 of 1