Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - February 2019
Kanaiyazhi - February 2019
Kanaiyazhi - February 2019
Ebook210 pages1 hour

Kanaiyazhi - February 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

February 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109504194
Kanaiyazhi - February 2019

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - February 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - February 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - February 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, பிப்ரவரி 2019

    மலர்: 53 இதழ்: 11 பிப்ரவரி 2019

    Kanaiyazhi February 2019

    Malar: 53 Idhazh: 11 February 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தகுதிக்கான ஒதுக்கீட்டைத் தடுமாற விடலாமா?

    கொடநாடு கொள்ளை

    கூட்டணி வேலை

    வாக்கு எந்திர மோசடி

    அஜித் / ரஜினி அரசியல் எனும்

    பரபரப்புக்கு இடையே

    புதிய இட ஒதுக்கீடு!

    ஒதுக்கீடு!

    சம நீதி மறுக்கப்படுகிறவர்களுக்கான

    சமூகநீதி!

    மறுப்பவர்கள்

    செல்வாக்கு உடையவர்கள்.

    செல்வாக்கின் அடிப்படை

    அதிகாரம்.

    அதிகாரத்தின் ஆதாரம்

    ஒருகாலத்தில் படைபலம்

    அரசர்கள் ஜமீன்தார்கள்

    பாளையப்பட்டுக்கள்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்

    நில உடைமை.

    ஆயிரம் வேலிக்கு மேல் நிலம்

    விவசாய வேலை செய்யும் மக்கள்

    மக்கள் வசிக்கும் ஊர்கள்.

    விடுதலைக்குப் பின்

    கல்வி; விழிப்புணர்வு.

    மக்களை நிலம் பெயரச் செய்தன

    விவசாயக் கருவிகள்!

    மக்களின் உழைப்பைக்

    கருவிகள் ஈடு செய்தன.

    ஆனால்

    மக்கள் தந்த அதிகாரத்தைக்

    கருவிகளால் தர முடியவில்லை

    நில உடைமையாளரின்

    அதிகாரக் கட்டுகள் உடைந்தன.

    கிராம இளைஞர்கள்

    நகருக்குள் போனார்கள்

    மனதைக் கட்டிப் போட்டிருந்த

    பண்ணைக் கயிறுகளும்

    ஆலைத் தொழில்களில்

    அறுபடத் தொடங்கின.

    கல்வி, வேலை வாய்ப்பில்

    எல்லோருடனும் போட்டியிட

    இயலாதவர்களின் உரிமை தேடலில்

    அரசமைப்புச் சட்டத்தில்

    பட்டியல் சாதி- பழங்குடியினருக்கு

    இட ஒதுக்கீடு!

    மற்ற சாதியினர்க்கு மண்டல் கமிஷன்!

    இப்போது

    உயர் சாதியினருக்கும்

    இட ஒதுக்கீடு!

    பொது ஒதுக்கீட்டில் பெரும் பங்கு

    கிடைத்த போதும்

    உயர் சாதிக்கு இடம் ஒதுக்கீடு!

    அப்படியானால் இந்தியாவில்

    எல்லாச் சாதிக்கும் இப்போது

    இட ஒதுக்கீடு என்பதில்

    ஒதுக்கீட்டின் நியாயம்

    தலைமறைவாகிறது..

    இந்தியா, குடியரசாகி

    எழுபது ஆண்டுகளில்

    உயர் சாதிகளில் மட்டுமே

    ஏழைகள் இருப்பதை

    மோடி அரசு கண்டுபிடித்திருக்கிறது!

    இல்லையேல்

    எல்லாச் சாதியிலும் ஏழைகள் இருப்பது

    உண்மையெனில்

    எந்தச் சாதியில் இருந்தாலும்

    ஏழைகள் பயன்பெறும் வகையில்

    பொருளாதார ஒதுக்கீடு

    பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கலாம்.

    ஏனெனில்

    சமநீதி மறுக்கப்படுகிறவர்கள்

    எல்லாச் சாதியிலும்

    ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

    பணக்காரர்கள்

    எல்லாக் காலத்திலும்

    எல்லாச் சாதியிலும்

    எப்படியேனும்

    உரிமைகளைப் பெற்று விடுகிறார்கள்!

    ஆனாலும் அவர்களுக்கும்

    சாதி, இப்போதும்

    சமூக நீதியில் சமநீதியை மறுக்கிறது.

    அதனால் ஒதுக்கீடு என்பது

    சமூக நீதி வழங்கத்தானே தவிர -

    சம உடைமைத் திறவுகோல் இல்லை.

    ஏனெனில் ஒரே இரவில்

    ஏழை, பணக்காரர் ஆகலாம்.

    ஆனால் ஒருவர்

    செத்தபிறகும் சாதியை

    மாற்றிக் கொள்ள முடியாது.

    ஏழை என்பதை எப்படி அளப்பது?

    வருமானச் சான்றிதழை வைத்தா?

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

    வருமானக் கணக்கில் நடந்த

    குளறுபடிகளை நாடே அறியுமே.

    தனியாகத் தொழில் செய்பவர்களுக்கும்

    மாதாமாதம் வருமானம் வேறுபடுமே!

    பொருளாதாரப் பேராசிரியர்

    முனைவர் சீனிவாசன் சொல்கிறார் -

    பொருளியல் வல்லுநர்களுக்கு

    வறுமையின் அளவுகோல்

    வருமானம் இல்லையாம்.

    பிறகு

    எவ்வளவு செலவு செய்கிறார்கள்

    என்பதே அளவுகோலாம்.

    அதுவும் கூட முழுமை இல்லையாம்

    நுகர்வு மட்டும்

    வறுமைக்கு அளவுகோல் இல்லையாம்

    பிறகு

    படிப்பு, பார்க்கும் வேலை,

    வசிக்கும் இடம், வாழ்க்கை முறை

    ஆகியவையும் கணக்கில் வருமாம்.

    எப்போதும் ஒரே அளவுகோல்

    எதற்குமே சாத்தியமில்லையாம்

    வறுமைக்கும் அப்படித்தானாம்.

    அதுசரி

    ஓசி என்றால்

    எல்லாச் சாதியினரும்

    போட்டியிட்டுப் பெறும்

    தகுதிக்கான

    பொதுவகை ஒதுக்கீடா? (Open Categary)

    அல்லது

    ஒதுக்கீடு பெறாத

    உயர் சாதியினருக்கு மட்டுமானதா? (Other Community)

    எல்லாச் சாதியினருக்குமான

    பொதுவகை என்றால்

    அந்த ஒதுக்கீட்டில்

    பத்து சதவீதம் எடுத்தால்

    எல்லாச் சாதி ஏழைகளுக்கும் தானே

    வழங்கப்பட வேண்டும்?

    உயர் சாதி ஏழைக்கு மட்டும்

    ஒதுக்க வேண்டி,

    பொதுவகை ஒதுக்கீட்டைக் குறைத்துத்

    தேர்தல் நெருக்கடியில்

    தகுதிக்கான ஒதுக்கீட்டைத்

    தடுமாற விடலாமா?

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - கண்ணன் ராமசாமி

    நினைக்கப்படும் - மரன்

    கவிதை வத்ஸலா

    சிறுகதை - வல்லபி

    கட்டுரை - புதுவை யுகபாரதி

    சிறுகதை - பத்மநாபன்

    கவிதை - ஸிந்துஜா

    கட்டுரை - சமீரா, தமிழில் - டாக்டர் சாந்தி சித்ரா

    சிறுகதை - சித்துராஜ் பொன்ராஜ்

    டோட்டோ கவிதைகள்

    கட்டுரை - பா. செயப்பிரகாசம்

    குறுநாவல் - ந. அனுராதா

    கட்டுரை - வளவ. துரையன்

    கவிதை - அருணா சுப்ரமணியன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - கண்ணன் ராமசாமி

    பழைய ரஜினியும்...

    ரசிகனின் நாயக மோகமும்...

    பேட்ட திரைப்படத்தைப் பார்த்த கையோடு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலில் ஒரு முதியவர் விழுந்தார் என்பதைக் காட்சி ஊடகங்கள் மெய் சிலிர்ப்போடு எழுதி வருகின்றன. இத்தகைய ஒரு நிகழ்வு வயது வித்தியாசம் பார்க்காமல் மனிதர்கள் எந்த அளவிற்கு ஒரு நாயக பிம்பத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றது. இந்தக் கருத்து ஏதோ கமல் ரசிகனால் எழுதப்பட்டது என்று முடிவுக்கு வருவதற்கு முன்னால் இதையும் குறிப்பிட விரும்புகிறேன். கமல் கடவுள் இல்லை என்பவர். ஆனால் அவரையும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று அழைக்கும் ஒரு பக்தர் கூட்டம் உள்ளதே ஏன்? முதிர்ந்த வயதில் ஒருவர் இத்தகைய நாயக மோகத்தில் இருந்து வெளிவந்து தன் வாழ்க்கையில் அத்தகைய நாயகத் தன்மையை உணரும் வகையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற ஒரு முடிவை எடுப்பதற்கு இத்தகைய நாயக மோகம் வழி வகுக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இந்த விவகாரத்தை ரசிகர்கள் வெறிப் பிடித்தவர்கள் தான்; அவர்களைத் திருத்த முடியாது என்று கடந்து விடுவது சுலபம். அல்லது நாயகத் தன்மை மீதான மோகத்தின் அடிப்படை இயல்பு மனிதனிடம் உருவாக காரணம் என்ன என்று சற்று ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

    நாயகத் தன்மைக்கான தேடல் அனைத்து துறைகளிலும் நிலவுகிறது

    சினிமா என்கிற ஒற்றைச் சொல்லை மட்டும் சுற்றி இந்தத் தலைப்பை முடித்து வைக்க முடியாது. நாயகத் தன்மைக்கான தேடல் அனைத்து துறைகளிலும் நிலவுகிறது. உதாரணத்திற்கு, புத்தகச் சந்தைகளில் அதிகமாக வாங்கப்படுவது புகழ்பெற்ற மனிதர்களின் சாதனைகளை விளக்கும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள். Steve jobs, Ratan Tata, Mark Zuckerberg போன்ற செல்வந்தர்கள் தங்களுடைய வாழ்க்கையின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்கிற ஆவல் அனைவருக்கும் உள்ளது. சினிமாவில் ஹீரோயிசம் காட்டுவது, வியாபாரத்தில் முன்னணியில் இருப்பது, குறுகிய காலத்தில்/சிறு வயதில் மிகப் பெரிய சாதனையாளராக மாறுவது, தன்னுடைய தனித்தன்மையை சரியாக பயன்படுத்தி அறுவடை செய்வது என ஏதோ ஒரு அம்சத்தால் கவரப்பட்டு தனி நபர்களைத் தன்னுடைய ஹீரோவாக கருதுவதை மனிதர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

    இந்த இயல்பு அத்தகைய மனிதர்களிடமிருந்து நல்ல பண்புகளை உள்வாங்கிக் கொள்வதற்காக மட்டுமானால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அத்தகைய மனிதர்களைத் தன்னுடைய கடவுளாக, ஹீரோவாக, காட் பாதராக கருதிக் கொண்டு, அவர் மீதான எத்தகைய விமர்சனமானாலும் அதனை எதிர்ப்பது, விமர்சனம் செய்பவர்களை தரக்குறைவாகப் பேசுவது என்கிற அளவிற்கு வெறியாக மாறி விடும் இயல்பு ஆபத்தானதாக உள்ளது. எந்த ஒரு மனிதரும் வெற்றி தோல்விகளைச் சமமான அளவில் தான் எதிர்கொள்ள வேண்டும். அவருடைய முடிவுகளும் பண்புகளும் கூட எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் இத்தகைய அதீத அன்பினால் தொடர்புடைய நாயகனுக்கு ஆதரவான கருத்துக்களைப் பரப்புவது, அவற்றை அறிவதில் அளவுக்கு மீறி நேரத்தை விரயம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுவது பொதுச் சமுதாயத்தை சரியான பாதையில் இருந்து விலகச் செய்கிறது. முன்னுதாரணங்கள் சுய மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பயன்பட வேண்டும். ஆனால் அவை தொழுதலுக்கான பிம்பங்களாக மாறி விடுவது அந்தப் பிம்பத்தை மட்டுமே வளர்க்கிறது என்பதே இங்கு பிரச்சினை.

    நாயக பிம்பத்தை கட்டமைப்பது யார்? ரசிகனா? நாயகனா?

    நாயக பிம்பம் சினிமாவில் உருவாக்கப் படுகிறது. நாயகனாக உருவாகும் கலைஞரின் தனித்தன்மையைத் தகவமைத்துக் கொண்டு அந்தப் பிம்பம் வடிவமைக்கப் படுகிறது. அது அக்கால சூழலுக்கு ஏற்றபடியும், மக்களுடைய ரசனைக்கு ஏற்றபடியும் தானாகவும், திட்டமிட்டும் உருவாக்கப் படுகிறது. நாயகனாகக் கருதப் படுபவரின் தோல், நிறம், நடை, உடை, பாவனை போன்ற வெளிக் காரணிகளால் சில மனிதர்கள் ஈர்க்கப்படுகின்றனர். ஒருவரை பார்த்தவுடனேயே அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதை காரணமாகப் பலர் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இத்தகைய ஈர்ப்பும் கூட சமூகத்தில் நிலவி வரும் அழகியல் சார்ந்த புரிதலால் அந்த மனிதர் மறைமுகமாக பாதிக்கப்பட்டதன் விளைவே.

    அழகியல் சார்ந்து ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டி அழகுசாதன பொருட்களையும், உடல் பருமன் சார்ந்த பொருட்களையும் விற்பதற்கு அடிப்படை மனிதர்களிடம் நிலவும் எது அழகானதோ அது நல்லது என்கிற மேலோட்ட புரிதலே ஆகும். மேலும் அழகியல் சார்ந்த வரையறைகளுக்குள் வராத சிலர் நாயகர்களாக மாறுவதற்கு காரணம் அத்தகைய முகங்கள் தனக்கு மிகவும் தெரிந்த ஒரு முகமாக இருப்பதாக மனிதர்களின் ஆழ் மனது நினைப்பதே ஆகும் என ஆய்வறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய மாயையான ஈர்ப்பில் இருந்து விடுபட இது குறித்த அறிவியல்

    Enjoying the preview?
    Page 1 of 1